Tuesday, August 30, 2016



உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன் (ஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கையா

கலைஞர் துரைமுருகனை தம்பி ஸ்டாலினோட எப்போதும் கூட இருக்க சொல்லுவது தம்பி ஸ்டாலினுக்கு வெவரம் அவ்வளவா கிடையாது கூட இருந்து பார்த்துகோ என்பதாலா அல்லது தம்பி ரொம்ப வெவரமான ஆளு நமக்கு அல்வா கொடுத்தாலும் கொடுத்திடும் அதனால் கூட இருந்து கண் கொத்தி பாம்பா கவனித்து கொள் என்பதற்காகவா? (ஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு நம்பிக்கையா )எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்



சமுக தளத்தில் உலாவிய போது நான் அறிந்து கொண்டது இது தான் .கர்நாடககாரனுக்கு காவிரி பிரச்சனை கேரளாகாரனுக்கு சிறுவாணி தண்ணி பிரச்சனை ஆனால் நம்ம தமிழனுக்கோ அடுத்தாக ரஜினி யார் படத்தில் நடிப்பார்  என்பது பிரச்சனை # தமிழா இன்னும் நாலு தலைமுறைக்கு நீ ரொம்ப நல்லாவோ இருப்பேடா



'விஜயகாந்த் வீழ்ச்சிக்கு பிரேமலதாவே காரணம்' என, பழ.கருப்பையா பேசினார்.

ஆனால்  திமுகவின் தோல்விக்கு காரணம் ஸ்டாலின் என்று பழ.கருப்பையா பேசாமல்விட்டார். #பிழைக்க தெரிந்த மனுஷன் பழ.கருப்பையா



தமிழகத்தில் விவசாயிகள் நடத்து போராட்டத்தில் மாற்று அரசியல் கட்சிதலைவர்கள் தொண்டர்கள் போல கட்சி கொடிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டுமெயன்றி கொடிகளுடன் கலந்து கொள்ள கூடாது அப்படி செய்தால் அது அரசியல் போராட்டாமாக மாறி விவசாயிகளுக்கு எந்த வித பலனையும் கொடுக்காது,
அன்புடன்
மதுரைத்தமிழன்
30 Aug 2016

5 comments:

  1. அவ "வை "அவ்வளவுக்குப் பின்
    நகட்டிப் போடலாமா ?

    ReplyDelete
    Replies
    1. குரு சொன்ன மறுபேச்சு உண்டா என்ன?

      Delete
  2. மதுரை தமிழன், வர வர 'டௌட் தாமஸ்' ஆயிட்டீங்களே :)

    ReplyDelete
  3. kalaignar knows that stalin is a dull headed man....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.