Wednesday, August 24, 2016



பேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்..


பேஸ்புக் பிரபலங்களே உங்களுக்கு நண்பர்களும் அதிகம், பாலோவர்களும் அதிகம், அதனால் உங்களுக்கு கிடைக்கும் லைக்ஸும் அதிகம். இப்படி நீங்கள் அதிகமாக எல்லாம் கிடைக்க மிக அதிகமாக மெனக்கெடுகிறீர்கள். காலையில் குட்மார்னிங்க் சொல்வதில் ஆரம்பித்து அதன் பின் உங்களின் தத்துவங்களை ,உங்கள் குழந்தைகள் செய்வதை உலகமகா அதிசயமாக சொல்லி, எவனால் நமக்கு காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் எழுதும் மொக்கைகளுக்கு சிரித்து வைத்து லைக்ஸ் போட்டு ஆயிரக் கணக்கில் பாலோவர்கள் இருந்தாலும் அப்படிபட்டவர்களுக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இப்படி பல ஜகதாலங்கள் பல பண்ணி ,நூற்றுகணக்கில் லைக்ஸ் வாங்கி  நீங்கள் பிரபலமாகி இருக்கிறீர்கள். இப்படி பல முகம் தெரியாத  மனம் அறியாத பலரின் லைக்ஸை பெறும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறு சின்ன காரியம் உங்களால் பண்ண முடியுமா?



உங்களின் மனைவியோ/கணவனோ நீங்கள் செய்யும் செயல்களால் அல்லது உங்களின் சொல்களால் தினமும் மனம் மகிழ்ந்து  ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமாவது ஐ லைக் யூ என்று அவர்களை சொல்ல வைக்க உங்களால் முடியுமா?அப்படி உங்களுடன் வாழ்பவர்களை உங்களால் சொல்ல வைக்க முடிந்தால்  யூ ஆர் கிரேட் பெர்சன். உங்களுக்கு எனது சல்யூஅட் மட்டுமல்ல நம் சமுகத்தின்  அனைத்து மக்களின் சல்யூட்டும் உங்களுக்குதான். அப்படி எல்லாம் செய்ய இயலாமல் இந்த முகம் தெரியாத பேஸ்புக் லைக்ஸை பெறும் பிரபலமாக நீங்கள் இருந்தால் நீங்கள் ஒரு சிறந்த வேடதாரி என்றுதான் கருத வேண்டும்..

# என்ன நான் சொல்வது சரிதானே?

அன்புடன்
மதுரைத்தமிழன்
24 Aug 2016

5 comments:

  1. நல்ல போடுபோட்டீர்கள்
    முக நூலிலும் வ்லைத்தளத்திலும்
    பிரபலமாக பிறபலங்கள் இருந்தால் போதும்

    மனைவியிடமும் மக்களிடமும்
    முகம் தெரிந்தவர்களிடமும்
    லைக் வாங்க சுயபலமில்லவா வேண்டும்
    அதற்கெங்கே போவது
    கஷ்டம்தான்....

    ReplyDelete
  2. ஹா..ஹா...சரிதான்..

    ReplyDelete
  3. அதானே! வீட்டில ஒரு லைக் கூட வாங்க முடியலயே.

    ReplyDelete
  4. இதெல்லாம் ரொம்ப கஷ்டமப்பா....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.