உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 8, 2016

மனைவி வீட்டில் இல்லாத பொழுது மனதில் உதிர்த்ததுமனைவி வீட்டில் இல்லாத பொழுது மனதில் உதிர்த்தது
 

மனைவி பக்கத்தில் இருக்கும் போது
களவி தாண்டிய
ஸ்பரிச நேசம் தேவைபடுகிறது என்று
நெருங்கி சென்றால் இறுதியில்
அது களவியில் முடிந்துவிடுகிறது.
(எனக்குமட்டுதானா இப்படி நடக்கிறது?)


எல்லைக் கோட்டில் இருக்கும்
வீரனின்  குடும்பம்
 நிற்பது வறுமைக் கோட்டில்தான்

உள்நாட்டில் அடிமைகளாக இருந்து
கஷ்டப்படுவதை விட
 வெளிநாட்டில் அடிமைகளாக இருந்து
 சுகமாக இருக்கதான்
பலரும் விரும்புகிறார்கள்

பாட்டாளி மக்கள் போகும் டீக்கடைகளில்
டம்பளருக்கும் சாதி உண்டு
ஆனால் பாமர மக்கள் போகும் பார்களில்
 சாதிகள் இல்லையடி பாப்பா

கடன் கேட்கும்  நண்பனிடம்
 கடன் அன்பை முறிக்கும் என்று
நாசூக்காக சொல்லி மறுத்தால்
அவன் நம்ப மறுக்கிறான்
அவனிடம் எப்படி சொல்வது
நானும் கடன்காரன்தான்
என்னிடமும் பணம் இல்லை என்று

கோயிலுக்கு பெண்கள் போவதோ
கற்சிலையை தரிசிக்க
ஆனால் இளைஞர்கள் போவது
உயிருள்ள சிலையை தரிசிக்க

கோவிலுக்கு உள்ளே
 கடவுள் சிலைக்கு அருகே
 வசதி படைத்த பிச்சைகாரர்களும்
கோயிலுக்கு வெளியே
வசதியற்ற பிச்சைகாரர்களும்
 கையேந்தி கொண்டிருக்கிறார்கள்மிக திறமையுள்ள
 தொழில் நுட்ப வல்லுநர்கள்
சம்பள உயர்வு கேட்கும் போதெல்லாம்
மிக நாகரிகமாக
அவன் திறமையாற்றவன்
 என்று சுட்டிக்காட்டப்படுகிறது
 என்பது கசக்கும் உண்மைதான்செவ்வாய் கிரகத்திற்கு
ராக்கெட் விட்ட இந்தியா
அதில்
மனிதர்களை அனுப்பி இருந்தால்
இந்நேரம்
செவ்வாய் கிரகத்திலும்
சாதி வெறி தலையாடி இருக்கும்


சந்திரனுக்கு முதலில் சென்ற அமெரிக்கன்
அங்கு அமெரிக்க கொடியை நாட்டினான்
ஆனால் இந்தியன் முதலில் போய் இறங்கி இருந்தால்
எந்த ஜாதியக் கொடியை அங்கு நட்டுவது
என்பதில்  குழம்பிதான் போயிருப்பான்

ஒரு காலத்துல தன் பொண்ணுக்கு
நல்ல பையனை தேடிய பெற்றோர்கள்
இந்தகாலத்துல தன் பையனுக்கு
 நல்ல பொண்ணை தேடிக் கொண்டிருக்கிறார்கள்

யாரவது பேஸ்புக்கில் வாழ்த்துகள் சொன்னால்
அவர்களிடம் இருந்து 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று
மார்க் அறிவித்தால் எத்தனை பய புள்ளைங்க இங்கே வாழ்த்து சொல்லும்
என்று பார்க்க எனக்கொரு ஆசை


விளையாட்டில் அரசியல் விளையாடுவதால்தான் இந்தியா இன்னும் ஒலிம்பிக்கில் மெடல் வாங்கவில்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : ஒவ்வொரு திங்கள் அன்றும் எனக்கு  விடுமுறை. மனைவி வேலைக்கு சென்று விடுவதால் அந் நாள் எனக்கு கிடைத்த தனிமையான நாள் அந்த தனிமையில் மனதில் உதிர்தததுதான் இது. இது புரியாமல் நான் வேறு ஏதோ சொல்ல வருகிறேன் என்று நினைத்து ஏமாந்தால் நான் பொறுப்பல்ல
 

5 comments :

 1. கிரக மொழிகள், கோயில் மொழிகள், அனத்தும் செம என்றால் டிஸ்கி ரசித்தோம்...

  ReplyDelete
 2. ஆகா.. தமிழரே எங்கே ராசா போறீங்க..
  தம +

  ReplyDelete
 3. எளிமையாகச் சொல்லப்பட்ட
  ஆழமான சிந்தனைகள்
  நல்ல வேளை மார்க்குக்கு தமிழ் தெரியாது
  தெரிந்திருந்தால் நிச்சயம் உங்கள்
  கடைசி விஷயத்தைப் பற்றி யோசிக்கத்
  துவங்கிவிடுவார்

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 4. அனைத்தும் நன்று.

  வாழ்த்துகள்.... இங்கே சொன்னால் காசு கேட்க மாட்டீங்க தானே!

  ReplyDelete
 5. களவி-கலவி என்பதுதான் சரி. மற்ற எல்லாக் கவிதைகளும் நன்றாக இருந்தன. "விளையாட்டில் அரசியல்" என்பதுதான் சரி என்று தோன்றவில்லை. இங்க விளையாடுபவர்களில் பெரும்பாலானோர் ரெயில்வேஸ், பேங்க் வேலைக்காகத்தான் விளையாட்டுத்துறையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog