உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 8, 2016

அப்பா.....திரை விமர்சனம் (சூப்பரப்பா )அப்பா.......சூப்பரப்பா திரை விமர்சனம்

ரஜினி நடித்து வசூலில் அதிகம் சாதித்த படம் கபாலி என்று பலரும் சொன்ன போதிலும் அந்த படம் மிக சிறந்த படம் என்று யாரும் சொல்லவில்லை அவர்கள் சொல்லுவதெல்லாம் ரஜினிக்காக பார்க்கலாம் என்றுதான். இப்போது வரும் ரஜினியின் படங்கள் ரஜினி நடிப்பதால் மட்டுமே பார்க்க கூடிய படமாக இருக்கிறது.

அது போல கமலஹாசன் நடித்த படம் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வெளி வரும் போது மக்கள் பேசுவதெல்லாம் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து தமிழில் எடுக்கப்பட்ட படம் என்றுதான்.


அதுபோலவே பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் பிரபலங்கள் நடித்த படம் என்பதால் மட்டுமே வசூலை அள்ளிக் கொடுக்கின்றனவே தவிர அது நல்ல படம் என்பதற்காக ஒடியது என்று யாராலும் பேசப்படவில்லை.

ஆனால் சமுத்திர கனி நடித்து அவரால்  அதிக செலவில்லாமல் இயக்கப்பட்ட படம் அப்பா.... மிக அருமையாக இருக்கிறது யாவரும் பார்க்க வேண்டிய படம் என்று பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்/

பெரிய பெரிய நடிகர்கள் இப்படி கருத்துள்ள படத்தை எடுத்து வெளியிட துணிச்சல் இல்லாமல் பிரமாண்டமாக ஆனால் கதையில் எந்த கருத்துமில்லாமல் ஆபாசம் வன்முறையை மட்டும் திணித்து படம் எடுத்து வரும் வேளையில் சமுத்திரக்கனி  ஆபாசம் வன்முறையை நாடாமல் நல்ல ஒரு காவியம் படைத்திருக்கிறார்.

உண்மைமையில் இப்படி ஒரு படம் செய்வதற்க்கு துணிச்சல் வேண்டும். சமுத்திரக் கனி இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட அப்பாவாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று சொல்லாம் சிங்கப் பெருமாளும் பின்னி இருக்கிறார் மனதை நெகிழ வைத்து கண்களில் கண்ணிரை வரவழைத்தப்படம்  இது

Best scenes from film APPA | Samutharakani
இந்த காலப் பெற்றோர்கள் கற்று அறிய வேண்டியது இந்த படத்தில் உள்ளது. பெரிய ஸ்டார் படங்களுக்கு அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கும் மக்கள் இந்த அருமையான படத்திற்கு குறைவான விலையில் டிக்கெட் எடுத்து பார்த்து இருப்பீர்கள்...

மக்களே அப்பா படத்தை குறைந்த விலைக்கு டிக்கெட் எடுத்து பாருங்கள். பார்த்த  பின் அந்த படம் உங்கள் மனதை தொட்டு இருந்தால் சமுத்திரகனியின் விலாசத்திற்கு உங்களால் முடிந்த ஒரு தொகையை அனுப்புங்கள். முடியுமா உங்களால்?????


#Appa | Best Scene HD | Samuthirakani
அன்புடன்
மதுரைதமிழன்.

ஒரு நல்ல படம் என மக்களால் பேசப்படும் அப்பா திரைப்படத்திற்கு தமிழ் ஹிந்து நாளிதழில் வந்த விமர்சனத்தை பாருங்கள் இவர்கள் எல்லாம் ஒன்றும் இல்லாத பெரிய ஸ்டார் படங்களைத்தான் ஆஹா ஓகோ என்று பாராட்டுவார்கள்
9 comments :

 1. நல்ல படம் தெளிவான கருத்துக்கள்.இன்றைய தமிழனுக்கு அவசியமான ஒன்று.கல்வியில் வீண் டாம்பீகம் பார்த்து அரசு பள்ளிகளை ஒதுக்குவது தவறு என துணிந்து சொல்ற படம்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நாம் பள்ளிகளை குறை சொல்லுவதைவிட பெற்றோர்களைதான் குறை சொல்லவேண்டும் எல்லாம் அவர்களிடத்தில் இருந்துதான் ஆரம்பிக்கிறது

   Delete
 2. மிக அருமையான படம். பார்த்துவிட்டேன். கருத்துகள் செமையா இருக்கும். சாட்டை பார்த்தீங்களா தமிழா. அதுவும் மிக மிக நல்ல படம். ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சாட்டை பார்க்கவில்லை நீங்க சொன்ன பிறகு அதை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது

   Delete
 3. தல: ஹிந்துல ஏதோ விமர்ச்சி இருக்காங்க. உங்க விமர்சனத்தில் மூனு காணொளி மட்டுமே இருக்கு. நீங்களும் ஆரூர் மூனா, ஜாக்கி சேகர் மாதிரி ஆயிட்டீங்க போல.

  வலைதளத்தில் எழுதுவதை விட்டுவிட்டு எல்லாரும் காணொளிக்குத்தாவுறாங்க. காணொளியால் கமர்சியல் வருமானம் வரும் என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை. நான் உங்களை அப்படி சொல்லவில்லை!

  பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்கணும்னு தன் குடும்ப சூழல், வருமானம் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கிறுக்குப் ப்பிடிச்சு அலையும் அம்மா மார்களை யாரும் இந்த "அப்பா"வில் கடுமையாக விமர்சிச்ச மாதிரித் தெரியவில்லை. நீங்களும் பூரிக்கட்டை அடிக்கு பயந்து அடக்கி வாசிச்சுட்டீங்களா என்னனு தெரியலை..

  இந்தமாரி அப்பாக்கள் எல்லாம் நம்ம நாட்டைத் திருத்த முடியாது. சும்மா இதுவும் ஒரு சினிமாதான். அவன் அவன் படத்தைப்பார்த்துட்டு நல்ல படம்னு ட்டு போயிட்டே இருப்பான். திருந்தப் போவதில்லை.  ***“இந்த உலகம் ரொம்ப அழகானது” என்று தன் மகனிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. “இந்த உலகம் ரொம்ப மோசமானது” என்று சொல்லித் தன் மகனை வளர்க்கிறார் தம்பி ராமையா. இந்த முரண்பாடுதான் மொத்தப் படமும். குழந்தையை வளர்க்கும் முறையில் இன்று உள்ள சிக்கல்கள் பலவற்றையும் பதின் பருவத்து இனக் கவர்ச்சி உட்பட படம் அலசுகிறது. ****

  ஆமா, இந்த உலகம் அழகானதா என்ன?

  தங்கள் கருத்தென்ன?னு சொல்லுங்க!!

  ReplyDelete
  Replies
  1. //தல: ஹிந்துல ஏதோ விமர்ச்சி இருக்காங்க. உங்க விமர்சனத்தில் மூனு காணொளி மட்டுமே இருக்கு. நீங்களும் ஆரூர் மூனா, ஜாக்கி சேகர் மாதிரி ஆயிட்டீங்க போல.வலைதளத்தில் எழுதுவதை விட்டுவிட்டு எல்லாரும் காணொளிக்குத்தாவுறாங்க. காணொளியால் கமர்சியல் வருமானம் வரும் என்பதற்காகவோ என்னவோ தெரியவில்லை. நான் உங்களை அப்படி சொல்லவில்லை!

   பாஸ் நீங்க பெரியாட்களோட என்னை கம்பேர் பண்ணாதீங்க... நான் மிக சாதாரண மனிதன் வலை உலகத்தின் மூலம் ஏதும் சாதிக்க எழுதுவதில்லை. நான் எந்த பதிவுகள் எழுதினாலும் அதற்கு சம்பந்தப்பட்ட படங்களை இடுவதுண்டு அது போல பதிவு சம்பந்ததப்பட்ட காணொளிகளை ஏதும் கண்ணில் பட்டால் அதையும் பதிவில் சேர்த்து வெளியிடுவது என் வழக்கம் அது போல்த்தான் இந்த பட சம்பந்தப்பட்ட காணொளிகளை இணைத்துள்ளேன் அவ்வளவுதாங்க


   ///பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்க்கணும்னு தன் குடும்ப சூழல், வருமானம் என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் கிறுக்குப் ப்பிடிச்சு அலையும் அம்மா மார்களை யாரும் இந்த "அப்பா"வில் கடுமையாக விமர்சிச்ச மாதிரித் தெரியவில்லை. நீங்களும் பூரிக்கட்டை அடிக்கு பயந்து அடக்கி வாசிச்சுட்டீங்களா என்னனு தெரியலை..////

   அம்மாமார்களை அதிகம் விமர்சித்தால் அப்பா சொல்ல வந்த விஷயங்கள் திசை மாறி போய்விடக் கூடும் என பலர் நினைத்து இருக்கலாம் நான் ஏன் விசாரிக்கவில்லை என்றால் நான் எதையும் மிக டீப்பாக விவாதிக்க மாட்டேன் ஒரு சினிமாவோ அல்லது சம்பவமோ அல்லது ஒரு நிகழ்வோ என்னை பாதிக்கும் போது அல்லது கவரும் போது மனதில் உடனே என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே சொல்லிவிடுவேன் அது போலத்தான் இந்த படம் எனக்கு பிடித்து இருந்தது அதனால் அதை பற்றி என் மந்தில் தோன்றியதை மிக சுருக்கமாக சொல்லிவிட்டேன் அவ்வளவுதாங்க்

   இந்த பூரிக்கட்டை விவகாரம் நான் இணையத்திற்காகவிட்ட ஒரு கற்பனை பாத்திரம் உண்மையில் என்னைவிட என் மனைவி அதிகம் படித்திருக்கிறாள் மிக மிக அதிகம் சம்பாதிக்கிறாள் அவளுக்கு முழு சுதந்திரம் நான் கொடுத்திருக்கிறேன் அதை சமயத்தில் எனது விருப்பிற்கு எதிராக ஒரு செயலை அவள் செய்தால் என்றால் நான் தூக்கி ஏறிய தயங்கவும்மாட்டேன் என்பது அவளுக்கு நன்றாக தெரியும் எனக்கு பணத்தின் மீதோ அல்லது வேறு ஏதன் மீதும் அதிக பிடிப்பு கிடையாது அதனால் நான் எதற்கும் கவலைப்படுவதில்லை நான் யார் மீதும் எதையும் திணிப்பதில்லை அது போல யாரும் என் மீது திணிக்க அனுமதிப்பதும் இல்லை. அது போல வீட்டிலோ அல்லது வெளியிலோ நான் யார் கூடவும் விவாதம் புரிவதில்லை எனது கருத்து இதுதான் அதில் நான் மாற்றம் ஏதும் செய்வதில்லை அல்லது மற்றவர்கள் சொல்லும் மாற்று கருத்து எனக்கு மிகவும் சரியென்று மனதில் தோன்றினால் அதை ஏற்றுக் கொள்ளவும் தவறுவதில்லை முக்கியமாக எனது கருத்து இதுதான் என்று சொல்வேனே தவிர அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்போது வற்புறுத்துவதில்லை   ///இந்தமாரி அப்பாக்கள் எல்லாம் நம்ம நாட்டைத் திருத்த முடியாது. சும்மா இதுவும் ஒரு சினிமாதான். அவன் அவன் படத்தைப்பார்த்துட்டு நல்ல படம்னு ட்டு போயிட்டே இருப்பான். திருந்தப் போவதில்லை.///

   இந்த படம் நாட்டை திருத்திவிட போவதில்லை ஆனால் ஒரு சில மனங்களை திருத்திவிடும் என்பதில் எனக்கு நம்மபிக்கை இருக்கிறது உதாரணமாக எனது மனைவியின் மனதில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன இந்த படத்தில் வரும் அப்பாவின் செயல்பாடுகள் பல என்னுடைய செயல்பாடுகள் போல உள்ளன அதுமட்டுமல்ல மேலும் பல விஷயங்களை எனக்கு உணர்த்தி இருக்கின்றன


   ***“இந்த உலகம் ரொம்ப அழகானது” என்று தன் மகனிடம் சொல்கிறார் சமுத்திரக்கனி. “இந்த உலகம் ரொம்ப மோசமானது” என்று சொல்லித் தன் மகனை வளர்க்கிறார் தம்பி ராமையா. இந்த முரண்பாடுதான் மொத்தப் படமும். குழந்தையை வளர்க்கும் முறையில் இன்று உள்ள சிக்கல்கள் பலவற்றையும் பதின் பருவத்து இனக் கவர்ச்சி உட்பட படம் அலசுகிறது. ****

   அப்பா படத்தை மூன்று வரிகளில் மிக அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் பாஸ். யூ ஆர் கிரேட் வருண்

   ///ஆமா, இந்த உலகம் அழகானதா என்ன?///

   இதற்கு என் பதில் உலகம் அழகாக இருக்க வேண்டுமென்று நினைத்து கொண்டே உலகத்தை மிக மோசமான நிலைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்கள் இந்த கால மக்கள்

   தங்கள் கருத்தென்ன?னு சொல்லுங்க!!


   வருண் நான் நிறைய தடவை பல பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் இங்கு நான் எழுதுவது எனது பொழுது போக்கிற்காக மட்டுமே தமிழை வளர்க்கவோ அல்லது சமுதாயத்தை திருத்தவோ அல்ல இபடி நான் எழுதி பதிவதால் தமிழ் தெரிந்தவர்களோட பேசி மகிழ்வது போல ஒரு உணர்வு உண்டாக்கிறது அவ்வளவுதான் பாஸ்

   அப்ப வரட்டுமா பாஸ் நீங்க கேட்ட கேள்விகளுக்கு என் மனதில் பட்டதை அப்படியே சொல்லிட்டேன் நான் சொன்னது சரியென்று உங்களுக்கு புரிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் தவ்று என்று தெரிந்தால் இந்த மதுரைத்தமிழனுக்கு தெரிஞ்சது இவ்வளவுதான் என்று நினைத்து கொள்ளுங்கள் ஒகே வா

   Delete
 4. படம் நானும் பார்த்தேன். எனக்கு பிடித்து; நல்ல படம்; சில இடங்களில் சரியாக செய்து இருக்கலாம்' சரியில்லை. குறை சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த படத்தில். கபாலி படத்தில் பலரும் சிலாகிக்கும் "மகிழ்ச்சி" என்ற வார்த்தையை...அடிக்கடி மகிழ்ச்சி என்று ச.கனி படத்தில் சொல்வார். அப்புறம் தான் இந்த படம் கபாலிக்கு முன்பு வந்தது என்று தெரிந்த்து. நல்ல காலம் இந்த படம் கபாலிக்கு அப்புறம் ரிலீஸ் ஆகவில்லை.ச.கனி பிழைத்தார்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் குறை சொல்லுவதென்றால் குறை சொல்லிக் கொண்டே இருக்கலாம் ஆனால் அதற்கு பதிலாக இந்த படத்தில் என்ன நிறைவாக இருக்கிறது என்று பார்த்து அந்த நிறையை நாம் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து பயன்படுத்தினால் நன்றாக இரூக்கும்.

   திருக்குறளை சின்ன வயதில் இருந்து படித்து வளர்ந்த நம்மை போல பெரியவர்களும் இந்த கால சிறுவர்களும் அதில் சொல்லிய்வற்றை புரிந்து அதன்படி செயல்படாமல் இருந்து கொண்டு இந்த மாதிரி நல்ல கருத்தை சொல்லும் திரைப்படங்களை பார்த்தா மாறப் போகிறோம் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன்

   Delete
 5. பார்க்க வேண்டும்.... இங்கே தியேட்டர்களில் வெளியிடப்படவில்லை. ஊருக்குப் போனால் தான் சாத்தியம்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog