உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, March 17, 2016

இணையத்தில் இப்படியும் ஒரு வசதி : நீங்கள் இறந்த பின் உங்கள் இமெயிலை அனுப்பலாம்.இணையத்தில் இப்படியும் ஒரு வசதி :  நீங்கள் இறந்த பின்  உங்கள் இமெயிலை அனுப்பலாம். Send emails when you are dead

Dead Man's Switch
இணையம் ஒரு பெரும கடல்  அதில்  நீந்தினால் பல அபூர்வ செய்திகள் அங்கு கிடைக்கும். அப்படி நான் இணையத்தில் நீச்சல் அடித்த போது இந்த தகவல் எனக்கு கிடைத்தது. 


இதை மிகவும் பயன் உள்ளதாக நான் கருதுகிறேன்.காரணம் சமீபத்தில் எனக்கு சில பிரச்சனைகள் காரணமாக நான் மூன்று வாரகாலமக பதிவுகள் எழுதவில்லை.எனது இணைய நட்புக்கள் யாருக்கும் எனது போன் நம்பர் தெரியாததால் அவர்களாலும் என்னை தொடர்பு கொள்ள இயலவில்லை . அதனால் எனக்கு என்ன ஆச்சு என்று தெரியாமல் பலரும் கவலைக்குள்ளானர்கள் ஒருவரை ஒருவர் உனக்கு ஏதும் தெரியுமா என்று விசாரித்து கொண்டிருந்து இருக்கிறார்கள். ஆனால் நான் இணையபக்கமே வராததால் இதை அறிந்து கொள்ள முடியவில்லை அதுமட்டுமல்லாமல் நம்மை எல்லாம் யார் தேடப் போகிறார்கள் என்று அசால்ட்டாக இருந்துவிட்டேன், ஆனால் அதன் பிந்தான் தெரிந்தது என்னையும் பலர் நட்புடன் பலர் நேசிக்கின்றனர் என்று தெரியவந்தது. இனி இவர்களுக்கு இந்த மாதிரி கவலை வந்து விடக் கூடாது என்று நினைத்து இணையத்தில் உலா வந்த போது என் கண்ணில் இந்த Dead Man's Switch என்ற இணைய தளம் என் கண்ணில் பட்டது. அது பயன் உள்ளதாக இருக்கிறது என நான் நினைத்ததால் அதை உங்களுடன் பகிர்கிறேன்.

இந்த தளம் மூலம் நாம் இறந்த பின் யார் யாருக்கு என்ன தகவல் தர வேண்டும் என்பதை  நாம் பதிவு செய்து இருந்தால் நாம் இறந்த பின் அந்த தகவல்கள் நாம் அனுப்ப நினைக்கும் நபரின் இமெயிலுக்கு ஆட்டோமேட்டிக்காக சென்று விடும்.

இது எப்படி செயல்படுகிறது என்பதை இங்கே பார்ப்போம்.


நம்மில் பலர் பலவிஷயங்களை நாம் உயிர் வாழும் போது யாரிடமும் பகிராமல் ரகசியம் காப்போம். ஆனால் அந்த இரகசியங்கள் நாம் இறந்த பின் சில நபர்களுக்காகவது தெரியவேண்டும் என நினைப்போம். அதுமட்டுமல்லாமல் பெரிய தலைவர்கள் முதலாளிகள்  தாங்கள் இந்தியாவில் கொள்ள அடித்த பணத்தை சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பார்கள் வெவ்வேறு  கணக்கில் அதில் சில கணக்குகளை மட்டும் தம் குடும்பதினருக்கு  சொல்லி வைத்திருப்பார் அதே நேரத்தில் பல ரகசிய கணக்குகளை சொல்லாமல் வைத்து இருக்கலாம். ஆனால் ரகசிய கணக்குகளை பற்றி யாருக்கும் சொல்லாமல் இருக்கும் போது அவர்கள் இறக்க நேர்ந்தால் அந்த கணக்கு அப்படியே முடங்கி போய்விடும். இப்படி பல கணக்குகள் முடங்கி போய் இருப்பதை சுவிஸ் வங்கிகள் பல ஒத்துக் கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு நிகழ்வுகள் நடக்காமல் இருக்க இந்த https://www.deadmansswitch.net/ தளம் மிக உதவியாக இருக்கிறது. இந்த தளம் மூலம் நாம் சொல்ல நினைக்கும் பல விருப்பங்களை ஆசைகளை எல்லாம்  நாம் விரும்பும் நபர்களுக்கு அனுப்ப முடியும்.


அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த தளத்தில் Dead Man's Switch நாம் சொல்ல வேண்டியவைகளை பதிந்து அது யார் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவர்களின் இமெயிலையும் பதிந்து வைத்தால் அவர்களுக்கு நாம் இறந்த பின் அந்த தகவல் அனுப்பபடும்.

சரி நாம் இறந்ததை அந்த தளம் எப்படி அறிந்து கொள்ளும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அதை பற்றி இப்போது  பார்ப்போம். இந்த தளத்தில் நாம் தகவலை பதிந்த பின் அது குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு தரம் அது உங்களுக்கு ஒரு இமெயிலை அனுப்பும் அதற்கு நீங்கள் ரெஸ்பான்ஸ் பண்ணினால் அது நீங்கள் இன்னும் உயிரோட இருப்பீர்கள் என கருதும். ஆனால் அந்த மெயிலுக்கு நீங்கள் ரெஸ்பான்ஸ் பண்ணவில்லையென்றால் 60 நாட்களுக்கு அப்புறம் நீங்கள் பதிந்து வைத்திருக்கும் தகவல் நீங்கள் சொல்லிய நபருக்கு இமெயிலாக போய் சேரும். சில சமயங்களில் நீங்கள்   டூர் போகலாம அல்லது ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கலாம் அப்போது நம்மால் இணைய ஆக்சஸ் இல்லாமல் போகலாம் அந்த மாதிரி சமயங்களி இந்த தளம் சென்று அதற்கான செட்டிங்கஸை மாற்றி நாம் எத்தனை நாளைக்கு அப்புறம்  நாம் இணையத்திற்கு திரும்புவோம் என்று  பதிந்து வைத்தால் அதற்கு அப்புறம் நமக்கு  ரெஸ்பான்ஸ் தகவல் வரும் அதுக்கும்  நாம்  ரிப்ளை செய்யவில்லையென்றால் அது நாம் பதிந்த தகவலை சம்பந்த பட்டவர்களுக்கு அனுப்பிவிடும்


என்ன மக்களே இந்த தகவல் எப்படி இருக்கிறது. இந்த தளத்தில் Dead Man's Switch நான் என்னைப்பற்றிய தகவலை பதியலாம் என நினைக்கிறேன்.காரணம் எதிர்காலத்தில் நான் பதிவுகள் எழுதவில்லையென்றால் நான் உயிரோடு இருக்கிறேனா இல்லையா என்ற தகவல் உங்களை வந்து அடையும்தானே..


இந்த தளத்தை இதற்காக மட்டுமல்ல மேலும் பல காரியங்கள் செய்யவும் பயன்படுத்தலாம் என்பதை என் கிரிமனல் மனது சொல்லுகிறது அதை பலரும் தவறாக பயன்படுத்தலாம் என்பதால் அதை சொல்லாமல் செல்லுகிறேன்


அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: தமிழ் ஊடகங்களில் இதுவரை வெளிவராத தகவல்களை உங்களுக்கு தருவது அவர்கள்...உண்மைகள் வலைத்தளம் ஒன்றே

Deadmansswitch – Send emails when you are dead https://www.deadmansswitch.net/
Deadmansswitch send you emails at regular interval of 2 months or 1 month as set by you and ask for your confirmation about being alive. After not getting any response, it sends email to your selected person with your saved mail.

15 comments :

 1. இதே முறையில் சில ஹார்ஷான பின்னூட்டங்களையும் அனுப்பி வைக்கலாம்...அப்போது நமது உயிர் தப்பிவிட சாத்தியமிருக்கிறது...தகவல் அருமை

  ReplyDelete
  Replies
  1. இது பின்னூட்டம் அனுப்ப எல்லாம் பயன்படாது..... வேறு வேண்டாத வேலைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால் அதை இங்கு நான் சொல்லவிரும்பவில்ல. நல்ல செயலுக்கு பயன்படும் என்றால் சொல்வதில் தவறு இல்லை ஆனால் அதை கெட்டதற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை சொல்லுவதைவிட சொல்லாமல் இருப்பதே நல்லது. காரணம் அப்படி சொன்னால் அந்த முறையை நம்மவர்கள் பயன்படுத்த வாய்ப்புக்கள் அதிகம் அதை செய்ய நான் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க காரணமாகிவிடக் கூடாது என நினைக்கிறேன் அவ்வளவுதான் தம்பி

   Delete
 2. முக்குளித்து விட்டீர்கள் போல சகோ..
  புதிய தகவல். பகிர்விற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. முத்து குளித்து முடிக்கவில்லை குளித்து கொண்டே இருக்கிறேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 3. அட! இப்படியும் ஒரு தளமா?!!! அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது! புதிய தகவல். நிறைய தில்லுமுல்லுக்களுக்கும் வழி இருக்கு போல..

  ReplyDelete
  Replies
  1. எதை எப்படி நாம் பயன்படுத்துகிறோம் என்பதை பொருத்துதான் அதன் பயன்பாடுகளும் இருக்கிறது. நல்ல முறையிலும் பயன் படுத்தலாம் கெட்ட முறையிலும் பயன்படுத்தலாம்

   Delete
 4. இதே போல் தளம் இருப்பதை நான் முன்னரே அறிந்திருக்கின்றேன்!ஜிமெயிலிலும் கூட இம்மாதிரி பின் தேதியிட்ட மெயில்களை எழுதி சேவ் செய்து வைக்கும் வசதி உண்டல்லவா?

  இதனோடான உங்களை தேடும் இணைய நட்புக்களுக்கான தொடர்புப்பதிவாக்கியவிதம் ரசிக்க வைக்கவில்லை!யாரிடமும் தங்கள் தொலை பேசி இலக்கம் இல்லை என சொல்லும் போதே யாரையுமே நம்பாத தன்மை ஏன் என புரியவில்லை.

  ReplyDelete
  Replies
  1. நான் போனில் பேசுவதை விரும்புவதில்லை . எனது உடன் பிறந்த சகோதரர்கள் & அப்பாவிடம் வருடத்திற்கு ஒரு முறை பேசினாலே அதிசயம். மிக மிக அவசியம் என்றால்தான் பேசுவேன்...அதனால்தான் என் நம்பரை பொதுவில் போடவில்லை. இந்தியாவிற்கு சென்ற சில பதிவர்கள சந்தித்த போது நம்பர் கேட்ட சிலருக்கு மட்டும் தந்தேன் அவர்களிடமும் தெளிவாக சொல்லிவிட்டேன் அவசியம் என்றால் மட்டும் கால் பண்ணுங்கள் இல்லை என்றால் இமெயில் பண்ணுங்கள் என்று. அதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் அவ்வளவுதான் இதில் யாரையும் நம்புவது நம்பாததிற்கு இடமே இல்லை. ஹாய் குட்மார்னிங்க் என்ன சாப்பிட்டீங்க எப்படி இருக்கீங்க என்ன படம் பார்த்தீங்க என்ற போன் பேச்சிற்கு நான் ரெடி இல்லை.


   நான் இருக்கும் ஊருக்கு வருகிறீர்களா இமெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள் உடன் பதில் அளிக்கிறேன். அது போல நீங்கள் இருக்கும் நகரங்களுக்கு நான் வருகிறேன் என்றால் நானும் தகவல் சொல்லுகிறேன் நேரம் கிடைத்தால் சந்திப்போம் நன்றாக உணவு அருந்தி நீண்ட நேரம்பேசுவோம் என்பதைதான் நான் விரும்புகிறேன்

   இதை புரிந்து கொண்டு பழகும் யாரும் என்னுடன் பழகலாம் நான் யாரையும் எதற்கும் கட்டாயப் படுத்துவதில்லை காயப்படுத்துவதில்லை குறை சொல்லி பேசுவதில்லை. முடிந்த வரை மற்றவர்களை தட்டிக் கொடுத்து பாராட்டிதான் பேசுவேன் இதுதான் மதுரைத்தமிழன் இப்படிதான் நான் இருப்பேன், யாருக்கும் எதற்காகவும் வளைய மாட்டேன். அவ்வளவுதாங்க

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. வணக்கம் அவர்கள் உண்மைகள் சார்! உங்கள் நீண்ட விளக்கத்துக்கு நன்றி!

   மூன்று வாரகாலம் பதிவுகள் இடவில்லை,இணைய நட்புகள் யாருக்கும் எனது போன் நம்பர் தெரியாததால் என்னை தொடர்புகொள்ள இயலவில்லை, அதனால் எனக்கு என்ன ஆச்சு என பலரும் கவலைக்குள்ளாகினர்,,,,,/////

   உங்கள் பதிவில் இருக்கும் இந்த வரிகள் தான் என் மேலே இருக்கும் கருத்துக்கு காரணம். போன் இலக்கம் என்பது இணையம் வராத சூழலில் அல்லது இல்லாத சூழலில் தொடர்பு கொள்வதற்கு தான், நீங்கள் சொல்வது போல் தினம் பேசி நேரத்தினை வேஸ்ட் செய்வதற்காக இல்லை.

   நானும் பதிவுகளை சும்மா மேலோட்டமாக படித்து ஆகா ஒஹோ அருமை என மட்டும் சொல்லி செல்வதில்லை, பதிவை நன்கு படித்து உள் வாங்கி தான் பின்னூட்டம் தருவேன், உங்களை யாரும் வளையவும் சொல்லவில்லை,நிமிரவும்சொல்லவில்லை சார்!

   எங்களுக்கு இந்த இணையம், அதன் மூலமாம நட்புகள் அவர்கள் இணைந்து செய்யும் சேவைகளின் பயன்பாடுகள் நன்கறிவேன்! குவைத்திலிருந்து விடுமுறைக்கு இந்தியா சென்ற தம்பி ஒருவர் தன் ஊரல்லாத வேறு இடம் போன போது மாடிப்படியில் சறுக்கி உணர்வற்ற நிலையில் கிடந்ததை கண்டு வைத்தியசாலை கொண்டு சென்றால் மிக ஆபத்தான சூழலில் தலையில் அடிபட்டு மயங்கிய நிலையில் அவர் குறித்த எந்த விபரமும் தெரியாமல் அவர் குவைத்தில் வேலை செய்யும் ஐடி காட் வைத்து தொடர்பு கொண்டால் முதலுதவி செய்யகூட பணம் கட்ட வேண்டிய சூழலில் நட்புக்களின் போன் இலக்கங்கள் எத்தனை உதவியாய் இருந்தது என்பதை நான் அறிவேன். போனிலேயே மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசி பணத்துக்கு நாங்கள் கேரண்டி தருகின்றோம் என பேசி வைத்தியம் செய்ததும் என் தங்கை கணவர் இறந்தார் எனும் செய்தி வந்தடைந்த போது அது குறித்து மேலதிக விபரம் அறிய எப்போதோ சேமித்து வைத்திருந்த ஒரு அண்ணாவின் போன் இலக்கம் உதவியாய் இருந்ததும்..இன்னும் இன்னும் பற்பல அனுபவங்கள் எமக்குண்டு, அதற்காக தங்கள் தொடர்பிலக்கம் கேட்கவில்லை சார், போன் இலக்கம் நமக்கு நம்பிக்கையானவர்களிடம் கொடுப்பது என்பது தொல்லையாக அல்ல! அவசரம்,அவசியம் ஏற்படும் போது தொடர்பு கொள்ளத்தானே தவிர அரட்டைக்கல்ல என்பது என் புரிதல்!

   அமெரிக்காவில் இருக்கும் உங்களுடன் என்ன அவசரம் அவசியம் வரும் என நீங்கள் நினைக்கலாம்.மெயில் தொடர்புகள் எல்லா நேரமும் கை கொடுப்பதில்லை என்பதை நான் அனுபவபூர்வமாய் உணர்ந்திருக்கின்றேன்.அத்தோடு பலருக்கு ஆபத்து நேரம் இரத்ததானம் முதற் பண உதவி வரை இணைய நட்புகள் நாங்கள் இணைந்து செயலாற்ற அவசரத்தொடர்பாடல் கொள்ள தொலை பேசி இலங்கங்களை பகிர்ந்து கொள்வது பயனுடையதாய் தான் இருந்திருக்கின்றது. இதிலும் இரத்த உறவுகள், சொந்தங்களை விட முகமறியா இணைய் நட்புக்களின் உதவி அளப்பரியதாய் இருந்திருக்கின்றது.

   எதையும் நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயன் படுத்தலாம் என நீங்கள் சொல்வது போல் நாங்கள் இணைய நட்பின் தொடர்பை நல்லதுக்கு மட்டும் பல வருடங்களாக பயன் படுத்துகின்றோம்.

   என் கருத்து எனக்கானது மட்டுமே.என் புரிதல் மட்டுமே. உங்களை எங்கேயும் வளையச்சொல்லவில்லை சார்!உங்கள் போன் இலக்கம் கேட்கவும் இல்லை.யாரும் தொடர்பு கொள்ளும் படியாய் இல்லை என சொன்ன உங்கள் பதிவிற்காக பதிலாய் தான் என் கருத்தினை இட்டேன்.

   Delete
  5. அத்தோடு முக்கியமான விடயம் இங்கே யாரெல்லாம் பொதுவில் போன் இலக்கம் போட்டிருக்கின்றார்கள் என தெரியவில்லை, நானும் பொதுவில் போன் இலக்கம் போட சொல்லவும் இல்லை.

   Delete
 5. விகடன் அந்தப் பேச்சை ஏன் வெளியிடவில்லை என்று கேட்டீர்கள். எல்லோருக்கும் அதில் என்ன பேசியிருப்பார்கள் என்ற ஆர்வம் தானாகவே வந்திருக்கும்.

  அதுபோல, உங்கள் இடுகையைப் படித்து முடித்தபின்பு, என்னவெல்லாம் குயுக்தியாக மதுரைத்தமிழன் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தலாம் என்று எண்ணியிருப்பார் என்று யோசிப்பதிலேயே நேரம் போகிறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog