Saturday, March 12, 2016



மேடையில் உளறுவதில் கெட்டிக்காரர் ஸ்டாலினா அல்லது விஜயகாந்தா?

விஜயகாந்த மேடை பேச்சை பலரும் கிண்டல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.காரணம் அவர் பேசுவது பலருக்கும் புரியவில்லையாம். அப்படி சொல்லுபவர்களிடம் ஒரு கேள்வி. அவர் பேசுவது உங்களுக்கு புரியவில்லை என்று சொல்லிக் கொண்டே அவர் பேசி முடித்ததும் அவர் இப்படி சொன்னார் அப்படி சொன்னார் என்று கிண்டல் கேலி மட்டும் பண்ண எப்படி முடிகிறது அப்படி கிண்டல் பண்ணும் போது அவர் பேசியது புரிந்துதான் கிண்டல் பண்ணுகிறீர்களா அல்லது புரியாமல் கிண்டல் பண்ணுகிறீர்களா?


 சரி விஜயகாந்த் பேசுவது மட்டும் புரியவில்லை என்று சொல்லும் உங்களுக்கு ஸ்டாலின் பேசுவதுமட்டும் நன்றாக புரிகிறதா என்ன? ஸ்டாலின் மேடையில் பேசும் போது கடந்த ஆட்சியில் இந்த ஆட்சியில் என்று சொல்லி பல புள்ளிவிபரக் கணக்குகளை சொல்லுவார் அது உங்களுக்கு உண்மையிலே புரிகிறதா? அப்படி அவர் பேசுவது புரிந்து இருந்தால் அந்த புள்ளிவிபரக் கணக்குகள் எங்கு இருந்து திரட்டப்பட்டன. அதற்கான ஆதாரத்தை ஸ்டாலின் அவர்களோ அல்லது அவர் பேசியதை புரிந்து கொண்டது போல நடிக்கும் கூட்டத்தினரோ சொல்ல முடியுமா?

மேடையில் உளறுவதில் இரண்டு பேரும் ஒன்றுதான் ஆனால் என்ன உளறுவதில்தான் சற்று வித்தியாசம் இருக்கிறது.

கொசுறு : ஸ்டாலினால் விரட்டபட்ட குஷ்பு ஒருவர் மட்டும்தான் இப்ப ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசிவருகிறார்


நெட்டில் படித்ததில் பிடித்தது

பதிந்தவர் கௌரி சங்கர்

திமுகவோடு கேப்டன் சேராததற்கு முக்கிய காரணமே ... மது ஒழிப்பு முதல் கையெழுத்துன்னு ஸ்டாலின் சொன்னதை உண்மைன்னு நம்புனதுதானாம் ... சத்தியமா அது உண்மையில்லன்னு கேப்டன சமாதானபடுத்த சபரீசன் தலைமையில ஒரு கும்பல விரைந்துருப்பதாக தகவல்.

அன்புடன்
மதுரைத்தமிழன்
12 Mar 2016

5 comments:

  1. எந்தக் கட்சியும் தலைவரும் எதுவும் உருப்படியாக, தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று ஆக்கப்பூர்வமாகப் பேசுவதைப் போல இல்லையே.

    ஹஹஹ் கௌரிசங்கர் அவர்களின் கமென்ட்...செம..

    கீதா

    ReplyDelete
  2. எல்லாருமே உளறத்தான் செய்கிறார்கள். இதில் ஸ்டாலின் விஜயகாந்த் கொஞ்சம் கூடுதல்.

    ReplyDelete
  3. ரோமாபுரியிலே... ஏதன்ஸிலே...
    முப்பாட்டன் முருகனே...
    அம்மா...அம்மம்மா...
    என பெரிய உளறல் பட்டாளமே உள்ளது.

    ReplyDelete
  4. அதிலும் விஜய்காந்த் பேச்சு..
    தேன்வந்து பாயுதுங்க?
    இப்படி ஒரு சந்தேகமா உங்களுக்கு?
    ரெண்டும் புரியலங்க?

    ReplyDelete
  5. ஸ்டாலின் ஹைடெக் ஆடகள் கூறுவதை அப்படியே உளறுவார்... வி.காந்த் அவருக்கு என்ன பேசுவது என்று தெரியாலேயே உளறுவார் ... அவ்வளவே...!!!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.