Wednesday, March 23, 2016



நாட்டுக்குள்ள இப்படிதான் பேசிக்கிறாங்க......


ஜெயலலிதாவை தோற்கடிப்பதைவிட கலைஞரை இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் செய்த முயற்சி வெற்றி பெற்றுவிட்டது. #ஸ்டாலின்


ஆட்சியை பிடிப்பதை விட கட்சியை தன் கைக்குள் வைத்து கட்சி சொத்தை தன் சொத்தாக மாற்றுவதுதான் ஸ்டாலின் திட்டம். இது தெரியாம பல பேர் அவரை கிண்டல் கேலி பேசுகிறார்கள் # ஸ்மார்ட் ஸ்டாலின்


கூட்டணி அமைப்பதில் வெற்றி பெற முடியாத திமுக ஆட்சியை அமைப்பதில் மட்டும் வெற்றி பெற்றுவிட முடியுமா?

உடன் பிறப்புக்களே! தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்ற தேர்தலில் நீங்கள் வெற்றி பெற  வோட்டுக்கு நீங்கள் கொடுக்கப்போகும் பணத்தை ஜாக்கிரைதையாக கொடுங்கள். காரணம் நீங்கள் கொடுக்கும் பணத்தை வழி மறித்து பிடுங்கி அம்மா ஸ்டிக்கர் ஒட்டி மக்களிடம் கொடுக்க அதிமுக கட்சிகாரர்கள் ரெடியாக இருக்கிறார்களாம்.

மக்கள் நலக் கூட்டணியில்  உள்ளவர்கள் நீண்ட நாளுக்கு ஒற்றுமையாக இருக்க முடியாது என்று பேசும் கலைஞர் குடும்பத்தினர் முதலில் அவங்க குடும்பத்தில் உள்ளவர்கள் ஒற்றுமையாக இருக்க வழி பாருங்கப்பா..

திமுக ஜெயிக்க போவதில்லை என்று நிலவரம் இருக்கும் போதே, தேமுதிகவை உடைக்க நினைக்கும் திமுக தலைமை ,திமுக ஜெயித்து வந்தால் தேமுதிகவை  எரித்து சாம்பலாக்க மாட்டார்கள் என்பதை யாரால் மறுக்க முடியும்


வெற்றி கொடியை பார்த்தால் 92 வயது பலனை அடைவேன்; கருணாநிதி ஆசை
ஜெயலலிதா வெற்றி பெற்றதும் கலைஞரை அழைத்து வெற்றிக் கொடியை கண்டிப்பாக காண்பிக்கவேண்டும் ஒரு வயதானவரின் ஆசையை கண்டிப்பாக ஜெயலலிதா நிறை வேற்றுவார் என எதிர்பார்க்கலாம்

கலைஞரின் அடுத்த  திட்டம் என்னவாக இருக்கும்?
சென்ற தேர்தலில் விஜயகாந்த் திமுக கூட்டணியில் சேர எதிர்ப்பு தெரிவித்த அழகிரியை தன் பிள்ளை இல்லை என்று சொல்லி தூக்கி ஏறிந்த மாதிரி இந்த தேர்தலில் ஸ்டாலினையும் தன் பிள்ளை இல்லை என்று சொல்லி தூக்கி ஏறிந்துவிட்டு விஜயகாந்தை தன் தத்துபிள்ளையாக கலைஞர் தேர்ந்தெடுத்து இந்த தேர்தலில் போட்டி இட்டு வெற்றி பெற முயற்சிக்கலாம்

தன்னுடைய கூட்டணியில் சேர்ந்த காங்கிரஸுக்கு திமுக தொகுதியை எப்படி பிரித்து கொடுக்கும்?
சென்னை மற்றும் கடலூரில் உள்ள வெள்ளம் பாதித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு கிடையாது என்றும் மேலும் பாமக வலுவாக இருக்கும் தொகுதிகள் மட்டும் காங்கிரஸீற்கு விட்டு கொடுக்கப்படும் என்று தளபதி ஸ்டாலின் அறிவித்தாலும் அறிவிக்கலாம்

விஜயகாந்த தனித்து போட்டி இடும் என்று சொன்ன  பிறகும் பிற கட்சிகள் அவர் எங்களுடன் வந்து சேர்வார் என்று நினைப்பது எதனால்?
விஜயகாந்த் அப்படி சொன்னது ஸ்டேடியாக சொன்னதாக மற்ற தலைவர்கள் கருதாதால்தான்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி சில வார்த்தைகள் சொல்ல முடியுமா?
திரைப்படங்களில் பிண்ணணி பாடல்களை பாடும் பாடகர்களை  புதிய பாடர்களுடன் பாட வைத்து இறுதியில் பிண்ணனி பாடகரின் குரல் அந்த சிறுவர்களிடன் குரலை விட மிக நன்றாக இருக்கிறது என்று சொல்ல நடத்தும் ஒரு நிகழ்ச்சி


ஒரு பொண்ணை கட்டிக்கிட்டு  சமாளிக்கிறதே நமக்கு கஷ்டமாக இருக்கும் போது விஜய் மல்லையா நிறைய பொண்ணுங்களை வைச்சு எப்படி சமாளிப்பார் அதனால்தான் அவர் கடன் வாங்கி கஷ்டப்படுகிறார். இவர் இப்படி கடன் வாங்க காரணம் அவருடன் இருந்த பெண்களே ஆனால் பழி சுமப்பது என்னவோ விஜய்மல்லையா.ஹும்ம்ம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.