Tuesday, March 22, 2016



இசை ஆர்வலர்களை ஏமாற்றிய விஜய்டிவியின் தற்போதைய விளக்கம்


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 5 – ன் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. விஜய் டிவியில் வெளிவந்த சிறந்த குரல் தேடலுக்கான போட்டியின் இறுதிச் சுற்றில் ஆனந்த் அரவிந்தாக் ஷன் முதலிடம் பெற்றார். இவர் இந்தப்போட்டியில் கலந்துகொள்வதற்கு முன்பே ‘ஆரோகணம்’, ‘நீர்ப்பறவை’, ‘பத்து எண்றதுக்குள்ள’ போன்ற பல திரைப்படங்களில் பாடியவர். அதை மறைத்துவிட்டு தமிழகமெங்கும் உள்ள இசை ஆர்வலர்கள் வாக்களித்து, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் முதலிடம் பெற்று வெற்றிபெற்றதாகவும் அறிவித்துள்ளது.


 .  இதை இசை ஆர்வலர்கள் ரசிக்கவில்லை என்பதோடு விஜய்டிவி தங்களை ஏமாற்றியதாக நினைத்து சமுக தளங்களில் பொங்கிவிட்டனர். அதுமட்டுமல்ல  பத்திரிக்கை ஊடகங்களிலும் இந்த கேலி கூத்தை பற்றி எழுதினார்கள்.

இதை அறிந்த விஜய்டிவியினர் தங்கள் பெயர் ரிப்பேர் ஆவதை தெரிந்து இப்போது இப்படி விளக்கம் அளித்து இருக்கின்றனர்.



இதில் எத்தனை இசை ஆர்வலர்கள் திருப்தி அடைவார்கள் என தெரியவில்லை. இந்த நிகழ்வு விஜய் டிவி தன் தலையில் தானே மண்னை அள்ளிப் போட்டது போலத்தான் இருக்கிறது..

-------------------------------------------------------------------------------------


விகடனில் வந்த செய்தி


யாராக இருந்தாலும் போட்டியில் சேர்த்துக் கொள்வோம்" ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ப்ரோகிராம் ஹெட் : பிரதீப் மில்ராய் பீட்டர் பேட்டி

''ஏர்டெல் சூப்பர் சிங்கர் - தமிழகத்தின் பிரம்மாண்ட குரல் தேடல்!' என்ற ஒரு நிகழ்ச்சியை கடந்த பத்து ஆண்டுகளாக நடத்திவருகிறது விஜய்டிவி. இந்த நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாத தமிழர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! அந்தளவுக்கு தமிழக மக்களை ஆட்கொண்ட நிகழ்ச்சி இது. சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியின் 'சீஸன் - 5'ல் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.
இவர், 'நீர்ப்பறவை', 'ஆரோகணம்', 'அன்ன்னையும் ரசூலும்', 'மதயானைக்கூட்டம்', 'பத்து எண்றதுக்குள்ள' என பல்வேறு திரைப்படங்களில் பாடல்களைப் பாடியவர் என்பதுதான், இரண்டு நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் சர்ச்சை! நிகழ்ச்சியின் சர்ச்சைகள் குறித்து, 'சூப்பர் சிங்கர் - 5' நிகழ்ச்சியின் தலைவர் (புரோகிராம் ஹெட்) பிரதீப் மில்ராய் பீட்டரிடம் பேசினேன்.

''
அரவிந்தாக்ஷன் ஏற்கெனவே திரைப்படங்களில் பாடியவர் என்ற உண்மையை ஏன் சொல்லவில்லை?"

எங்களுக்குப் போட்டியாளர்களின் பின்புலத்தைச் சொல்லவேண்டும் என்று தோன்றவில்லை. எங்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்ற பின், பல்வேறு வாய்ப்புகளைப் பெற்று பாடியிருக்கிறார் என்றால்... அதுதான் எங்கள் நிகழ்ச்சிக்கான வெற்றி. தவிர, இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பே அரவிந்தாக்ஷன் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் என்பதையெல்லாம் சொல்லத் தேவையில்லை!
''இப்படி மறைப்பதால், உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்க்கும் மக்களையும், அவர்களின் நம்பிக்கையும் ஏமாற்றுவதாக இருக்காதா?"
கண்டிப்பாக இருக்காது. இதற்குமுன் அவர்கள் செய்த சாதனைகளைப் பற்றியோ அல்லது மற்ற ரியாலிட்டி ஷோக்களில் வெற்றி பெற்றதைப் பற்றியோ நாங்கள் சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை! ஆனந்த் திரைப்படங்களில் பாடியிருக்கிறார் என்பது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடுவர்களுக்கும், போட்டியாளர்களுக்கும் தெரியும். தவிர, ஆனந்த் ஏற்கெனவே திரைப்படங்களில் பாடியவர் என்பதைச் சொன்னால், மக்களின் ஓட்டும் அபிப்ராயமும் அவருக்கே கூடுதலாக இருக்கும். அதற்கு நாங்களே வழிவகை செய்ததாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான், ஆனந்த் அரவிந்தாக்ஷன் பற்றிய பின்புலத்தைச் சொல்லவில்லை.

'' '
சூப்பர் சிங்கர்' என்றாலே, தமிழகத்தின் புதிய திறமைகளை வெளிக்கொண்டுவரக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகத்தான் மக்களால் பார்க்கப்படுக்கிறது. இதில் ஒரு பிண்ணனிப் பாடகரை கலந்துகொள்ளச்செய்வது நிகழ்ச்சியின் அடிப்படையே ஆட்டம் காணுமே?"
முதலில், நாங்கள் புதிய திறமைகளைத்தான் வெளிக்கொண்டுவருகிறோம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடவில்லையே! 'தமிழகத்தின் பிரம்மாண்டக்குரல்' என்றுதான் சொல்கிறோம். தவிர, புதிய திறமைகளோடு இங்கே யாரும் வரமாட்டார்கள். யாருக்கு எங்களுடைய 'சூப்பர் சிங்கர்' பட்டம் பெரிதாகப் படுகிறதோ, அவர்கள்தான் வருவார்கள்.

''
அடுத்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி., ஸ்ரேயா கோஷல் போன்ற பாடகர்கள் பங்கேற்க விரும்பினால்?"
எங்கள் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர்' டைட்டிலைப் பெரிதாகக் கருதி, யார்வந்தாலும், அவர் எவ்வளவு பெரிய பாடகராக இருந்தாலும், சூப்பர் சிங்கர் டைட்டிலைத் தவிர இதற்கு முன் எந்த 'டைட்டிலை' வென்றவாரக இருந்தாலும், அவர்களைப் போட்டியில் சேர்த்துக்கொள்வோம்! அது எஸ்.பி.பாலசுப்ரமணியமாக இருந்தாலும் சரி... ஸ்ரேயா கோஷலாக இருந்தாலும் சரி!
''அப்படியென்றால், ஏற்கெனவே மக்களுக்குத் தெரிந்த பாடகர்களைத்தானே நீங்கள் முன்னிலைப்படுத்துவதாக அமையும்?"
நாங்கள் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். எங்களை மதித்து, போட்டியில் கலந்துகொள்பவரை நாங்கள் சேர்த்துக்கொள்வோம். அவ்வளவுதான்! ஒரு பாடகர், தான் ஏற்கெனவே சில படங்களுக்குப் பிண்ணனி பாடிவிட்டு மீண்டும் என் நிகழ்ச்சிக்கு வந்து 'சூப்பர் சிங்கர்' டைட்டிலுக்காக மல்லுக்கட்டுகிறார் என்றால், எங்களுக்குப் பெருமைதானே? அப்படி வருகிறவர்களை நாங்கள் ஏன் தடுக்கவேண்டும்?

''
இந்த சீஸனில் வெற்றி பெற்றவர்கள்கூட அடுத்த சீஸனில் பங்கேற்கலாமா?"
ஒரு சீஸனில் டைட்டில் வென்றவர்கள் மட்டும் மீண்டும் பங்கேற்க முடியாது. மற்றபடி, யார்வேண்டுமானாலும், எத்தனை முறைவேண்டுமானாலும் பங்கேற்கலாம்!

''
உங்கள் நிகழ்ச்சியின் விதிகள்தான் என்ன?"
நாங்கள் கொடுக்கும் விண்ணப்பத்திலேயே, வயது வரம்பு தவிர மற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லி இருந்தோம். எனவே, எங்கள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, இன்றுவரை போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த விதிகளையும் மாற்றவில்லை. மக்களுக்கு வேண்டுமானால் இது ஒரு பெரிய பிரச்னையாகத் தெரியலாம். எங்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை!
- மு.சா.கெளதமன்.

 


அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. இதுக்குத்தான் இந்த நிகழ்சிகளை நான் பார்ப்பதே இல்லை மச்சி.

    ReplyDelete
  2. நாலு சீசன் முன்னாலேயே இவர்களின் ஏமாற்று வேலை (ஓட்டளிப்பதில், தேர்ந்தெடுப்பதில்) தெரிந்துவிட்டது. எதுக்கு நேரத்தை வீணடிக்கவேண்டும்? இந்த நேரத்தில் Net Geo, Discovery channels, Adhithya/Sirippoli (இந்த இரண்டிலும் முன்புள்ள நிகழ்ச்சிகளே வந்தால், "உயிருனும் மேலான" மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சி) போன்றவற்றை surf பண்ணினாலே போதும்.

    ReplyDelete
  3. விஜய் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சி தான் மற்ற தொலைக்காட்சிகளைப் பொறாமையோடு பார்க்க வைத்த வெற்றிகரமான நிகழ்ச்சி.
    இளைய தலைமுறையின் இசைத்திறமையை வெளிப்படுத்திய நிகழ்ச்சி என்பதிலும் மாற்றமில்லை. ஆனால், வரவர இதுவே வணிகமயமாகிவிட்டதை அனைவரும் அறிந்தே வந்திருக்கிறார்கள். அதுவும் கடந்த சில முறைகளில் அது வெளிப்பட்டும் விட்டது.இந்தமுறை பட்டவர்த்தனமாக வெளிவந்திருக்கிறது. ஆனந்த் அரவிந்தாக்ஷன் நன்றாகப் பாடுகிறார் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடில்லை. ஆனால் அவரைவிடவும் இயல்பாகப் பாடிவந்த ஃபரிதா வெற்றிபெறுவார் என்று பலரும் நினைத்த நிலையில் இறுதிச் சுற்றில் அந்த இளம்பெண் லக்ஷ்மி அசத்தி எடுத்தார். ஆனால் அவரை இறுதி மூவருக்குள் வைக்காமலே விரட்டியதும் என் சந்தேகம் அதிகமானது. பின்னர் ஃபரிதா, அரவிந்தாக்ஷனின் மக்கள் வாக்கு வித்தியாசம் இவ்ளோ அதிகம் (சுமார் 4லட்சம் வாக்கு வித்தியாசம்?) என்றதும் என் சந்தேகம் உறுதியானது.
    நல்ல நிகழ்ச்சி என்று நினைப்பதெல்லாம் நல்ல வணிகம் என்றாவது பெரிய சோகமே!
    இதில் உள்ள உள்விஷயங்களை அலசி எடுத்த உங்களுக்கு நன்றி மதுரைத் தமிழரே!தமவா.1

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.