Wednesday, March 9, 2016



ஜெயலலிதா  சர்வதிகாரி என்றால் இவர்கள் (எம்ஜியார் கலைஞர் ஸ்டாலின் ராமதாஸ் விஜயகாந்த் ) எல்லாம் காந்திய வாதிகளா?  

தமிழக மற்றும் இந்திய ஊடகங்கள் ஜெயலலிதா மட்டும் சர்வதிகாரி போல செயலபடுவதாக சித்திரிக்கின்றன. அப்படியென்றால் மற்ற தலைவர்கள் எல்லாம் என்ன காந்தியவாதிகள் போலவா செயல்படுகின்றனர் என்ற எண்ணம் என் மனதில் உதித்த போது தோன்றியவைகளின் சாரம்தான் இந்த பதிவு. இது ஒரு மகளிர்தின பதிவு வேறு தொடர் பதிவினால் இது தாமதமாக இன்று வருகிறது



பொதுவாக திரைபடத்துறையில் பிரபலமான பெண்கள் ஆண்களால் பாதிக்கப்படும் போது அப்படியே சுணங்கிவிடாமல் மன தைரியத்துடன் மீண்டும் எழுந்து நிற்கும் போது அவர்களை திமிர்பிடித்தவராக பார்க்கும் மனப்பான்மையை இந்த ஆண் ஆதிக்கமுள்ள சமுகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது.அதுதான் அன்று முதல் இன்றைய தேதிவரை கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு உதாரணமாக ஜெயலலிதா,குஷ்பு, நயன்தாரா போன்றவர்களை சொல்லாம். இவர்களை திமிர் பிடித்தவராகத்தான் இன்றைய சமுதாயம் பேசியும் எழுதியும் வருகிறது, அப்படி திமிர் பிடித்தவர் என்று கருதப்படும் ஒரு பெண்மணி இன்று சக்ஸஸ் புல்லாக முதல்வராக வலம் வரும் போது அதை கண்டு பொறுக்கமுடியாமல் ஜெயலலிதாவை ஒரு சர்வதிகாரியாக சித்தகரிக்க முயல்கின்றனர்.

ஜெயலலிதா சர்வதிகாரியாக சொல்லப்படுவதற்கு சில மொக்கை காரணங்களையும் கூறிவருகின்றனர். அதில் அவரின் காலில் விழுந்து வணங்குவதை சொல்லிக்காட்டுகின்றனர். ஜெயலலிதா யாரையும் தன் காலில் விழுந்து வணங்குமாறு கூறவில்லை. காலில் விழுந்தாவது தங்கள் காரியங்களை சாதித்து கொள்ள நினைக்கும் சில முதுகெலும்பு இல்லாத சுயநலவாதி ஆண்கள்தான் அவரின் காலில் விழுந்து வணங்குகின்றனர். ஆனால் எந்த பெண்களாவது அவர்காலில் விழுந்து வணங்குகிறார்களா என்ன என்று பார்த்தால் இல்லை என்றுதான் பதில் வருகிறது.  மேலும் ஜெயலலிதா சர்வதிகாரியாக செயல்படுவதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அது அவர் கட்சியின் மற்ற தலைவர்களையும் அமைச்சர்களையும் எந்த ஒரு காரணமும் சொல்லாமல் பதவி நீக்கம் செய்கிறார் இது மிக சர்வதிகாரம் என்று அழைக்கபடுகிறது. அவர் அப்படி பலரை தூக்கி அடிக்க தலைவர்கள் அல்லது அமைச்சர்கள் செய்யும் பல தவறான காரியங்கள் இருப்பதால்தான் தூக்கி அடிக்கிறார். ஆனால் அதற்கான காரணத்தை வெளியே சொல்லாமல் காத்துவருகிறார். இதனால்தான் அவர் தூக்கி அடித்தும் பலர் வாய்மூடிக் கிடக்கின்றனர். இதனால் அந்த பிரச்சனைக்கான காரணம் ஜெயலலிதாவிற்கும் அந்த தூக்கி அடிக்கப்பட்டவர்களுக்கும் இடையே அமைதியாக அடங்கி பொதுவெளியில் பேசப்படாமல் போகிறது. அதுமட்டுமல்ல தான் இருக்கும் வரை தன்னைவிட எவரும் மேல் வந்து தன்னுடைய நிலைக்கு பாதகம் வந்துவிடக் கூடாது என்பதாலும் அவர் இப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. இதை மனிதனாக பிறந்த எவனும் ,தலைவராக இருக்கட்டும்  அல்லது சின்ன கம்பெனியில் உள்ள மேனேஜராக இருக்கட்டும் அவர்களும் இப்படிதான் செய்வார்கள் & செய்கிறார்கள் அதனால்தான் தான் சகோதரியாக கருதும் சசிகலா, அவர் குடும்பதினரின் ஆலோசனைகளை கேட்டு  அவரை டேக் ஒவர் பண்ணிவிடுவார் என்று கருதிய போதுதான் தூக்கி ஏறிந்தார். அதன்பின் அவருக்கு மன்னிப்பு கொடுத்து சேர்த்து கொண்டார். தனக்கு பின் யார் வந்தாலும் அவருக்கு கவலையில்லை ஆனால் தான் இருக்கும் போது யாரும் ஒவர் டேக் பண்ணிவிடக் கூடாது என்றுதான் ஜாக்கிரதையாக இருக்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது.

எம்ஜியாரும்தான் தன்னைவிட யாரும் மிக செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்று ஜாக்கிரதையாகத்தான் செயல்பட்டு வந்தார். தனது அமைச்சர்கள் அல்லது எம்.எல்.ஏக்கள் அல்லது கட்சியின் அடுத்த வரிசையில் இருக்கும் தலைவர்கள் தவறுகள் செய்தால் ராமவர தோட்டத்திற்கு அழைத்து "தனிபட்ட' முறையில் கவனித்து அனுப்பபட்டனர் அல்லது அங்கேயே முடித்தும் வைக்கப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் உலாவியது உண்டுதான். இதை எல்லாம் பார்க்கையில் எம்ஜியாரும் ஒரு சர்வதிகாரியாகவே செயல்பட்டு வந்து இருக்கிறார் அல்லவா?

அடுத்தாக கலைஞர் அவர் மட்டும் சளைத்தவரா அவரும் இப்படிதான் சர்வதியாரியாக செயல்பட்டு வந்து இருக்கிறார் தன்னைவிட யாரும் அதிக செல்வாக்கு பெற்றுவிடக் கூடாது என்றுதான் செயல்பட்டு வந்து இருக்கிறார். அப்படி அவர் சர்வதிகாரியாக செயல்பட்டதால்தான் கட்சியில் மிக செல்வாக்கு பெற்று வந்த வைகோ போன்றவர்கள் மீது பழி சுமத்தி தூக்கி அடிக்கப்பட்டனர். ஏன் மாற்று கருத்து சொன்ன அழகிரியையே தன் பிள்ளை இல்லை என்று சொல்லி கட்சியில் இருந்தே தூக்கி அடிக்கபட்டது ஜனநாயகாமா அல்லது சர்வதிகாரமா? கலைஞர் சர்வதிகாரி இல்லையென்றால் கட்சிக்காக உயிரைக் கொடுத்த தலைவர்களுக்கு அடுத்த தலைவர் பதவியை தர வேண்டாம் ஆனால் தன் குடும்பத்தில் உள்ள தன் பிள்ளைகள் மூவருக்கும் ஜனநாயக முறையில் கட்சிக்குள்ளேயே போட்டி வைத்து அதில் ஜெயிப்பவர்களுக்கு வருங்கால வாரிசுபட்டத்தை கொடுத்திருக்காலாமே அதைவிட்டுவிட்டு சர்வதிகாரியாக ஒருவரை மட்டும் தன் வாரிசாக முன்னெடுப்பது ஏன். இப்படியெல்லாம் செய்வது சர்வாதிகாரம் இல்லையா. கட்சியின் எந்த உறுப்பினாராவது கலைஞரை அல்லது ஸ்டாலினை இப்போது எதிர்த்து குரல் கொடுத்துவிடதான் முடியுமா என்ன?

அது போல பாமக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணியை எதிர்த்து அவர்கள் கட்சியில் குரல் கொடுத்துவிட்டு அந்த கட்சியின் எந்த பதவிகளிலும் தொடர்ந்து அங்கம் வகிக்க முடியுமா?

அதுபோல விஜயகாந்த் பிரமலதா சதிஷ் அவர்களை எதிர்த்து அந்த கட்சியில் யாரவது குரல் கொடுத்துவிடதான் முடியுமா?

அது போல சோனியாவை, மோடியை யாரவது இப்போது எதிர்த்துதான் குரல் கொடுத்துவிட்டு அந்த கட்சியில்தான் இருக்க முடியுமா?

இப்படி எல்லாக் கட்சி தலைவர்களும் சர்வதிகாரிகள் போல செயல்பட்டுக் கொண்டு ஜெயலலிதாவை மட்டும் சர்வதிகாரியாக செயல்படுகிறார் என்று சொல்வது எந்த விதத்தில் நியாம் மக்களே

கொஞ்சமாவது சிந்தியுங்கள்


அன்புடன்
மதுரைத்தமிழன்

30 comments:

  1. இதைத்தான் வஞ்சக புகழ்ச்சி என்று அழகு தமிழில் சொல்வார்கள் .அருமை எம்ஜிஆர் ரஜினியை
    கூட தோட்டத்துக்கு அழைத்து தனிப்பட கவனித்து அனுப்பியதாக ஒரு கதை உண்டு .உங்கள் பதிவு மிகவும் அருமை நண்பரே .

    ReplyDelete
    Replies

    1. படித்து புரிந்து கருத்திட்டதற்கு நன்றி

      Delete
  2. நீங்கள் எழுதும் இந்த ஸ்டைலில் எழுதினால் ஹிட்லரையும் முசோலினியையும் கோட்சேவையும் கூட நல்லவர்களாக மாற்றிவிடலாம் நண்பா

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை நான் எழுதுவதை படித்தால் ஒருவேளை முசோலினும் ஸ்டாலினும் நல்லவாரக மாற வாய்ப்புகள் இருந்திருக்கலாம் ஹீஹீ

      Delete
  3. தவறான கருத்துகளைக் கொண்ட
    தரமான கட்டுரை. வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நான் விஷம் தந்தாலும் அது தரமான விஷமாகவே இருக்கும். காரணம் எனக்கு தரம் முக்கியம்.கலப்படம் கிடையாது..

      Delete
  4. Replies
    1. நான் சொல்லவந்ததை புரிந்து கொண்டு கருத்து பகிர்ந்தற்கு மிகவும் நன்றி

      Delete
  5. Replies
    1. நான் சொல்லவந்ததை புரிந்து கொண்டு கருத்து பகிர்ந்தற்கு மிகவும் நன்றி

      Delete
  6. நீங்கள் சொல்லியிருப்பது நியாயம்தான். அல்லக்கைகள் காலில் விழுவதற்கு ஜெ. எப்படிப் பொறுப்பாவார்? இது எந்தக் கட்சியில் நடக்கவில்லை? குஷ்பு கருணானிதிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்கே ஸ்டாலின் ஆட்கள் எப்படி அவர் வீட்டைத் தாக்கினர். சர்வாதிகாரம் இல்லாவிட்டால் கட்சியை நடத்துவது கடினம். (அல்லது கொள்கை என்பது தெளிவாக இருக்கவேண்டும். கம்யூனிஸ்டுகளிடம் ஓரளவு இது உள்ளது). பெண் என்பதால், மற்றவர்களைச் சற்று தூரத்தே வைக்கிறார் ஜெ. இது தவறு என்று தோன்றவில்லை. எல்லா ஆபீசுகளிலும், கட்சிகளிலும், கம்பெனிகளிலும் கூழைக்கும்பிடு ஆட்கள் உண்டு. பெண் என்பதாலும், எப்போதும் சந்திக்க இயலாது என்பதாலும், அவரைக் காணும் வாய்ப்பு வரும்போது தன் விசுவாசத்தைக் காண்பிக்க அதிமுக கட்சி ஆட்கள், கும்பிடு போடுவதை எப்படிக் குறை காண இயலும்? உண்மையிலேயே, தகுதியை மீறித்தான் அவர்களுக்குப் பதவி போன்றவை கிடைக்கின்றன. அவர்கள் நன்றி தெரிவிக்கிறார்கள். இதையே வேறு வழியில் பிற கட்சித் தொண்டர்கள்/அமைச்சர்கள் செய்கின்றனர். (சோனியாவை, மேடம் என்னைக் காப்பாற்றவும் என்று காலில் விழுந்த திமுக பிரமுகர் நினைவுக்கு வரவில்லையா?)

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொலவதைதான் நானும் சொல்லுகிறேன் அது சிலரின் கண்ணிற்கு தப்பாக படுகிறது அதற்கு நாம் என்ன செய்ய

      Delete
  7. சர்வாதிகாரம் எல்லாரிடமும் இருக்கிறது விதவிதமாக, ஆளுக்காளு மாறுபடுகிறது அவ்வளவே !

    ReplyDelete
    Replies
    1. மிக சரியாக சொன்னீர்கள்

      Delete
  8. சரியாத்தான் இருக்கு ! அவரிடம் வணங்கும் ஆண்களோ அழுது சீன் போடும் பெண்களோ உள் நோக்கத்துடனே என்பது அவரும் அறிந்துக்கொண்டுள்ளதுப்போலவே தெரிகிறது. அரசியல்வாதி என்றாலே மற்றவரை வளரவிடாதவர் என்பது எழுதாத அகராதிச்சொல் ஆச்சே ! ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியே உள்ளனர். பார்ப்போம் இந்தத்தேர்தலின் முடிவை. !

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் முடிவு தெரிந்ததுதான். ஆனால் அதை அதிகாரப் பூர்வமாக அறிவிக்க தேர்தல் முடியவேண்டும் அதுவரை காத்திருப்போம்

      Delete
  9. பாதிக்கப்பட்ட பெண் மீண்டு எழுந்து வந்தால் அவள் திமிர் பிடித்தவள் ,,,,,,,, சரி தான் சகோ,,
    அப்படிச் சொல்லுங்கள்,, எல்லோரும் அப்படித்தான்.

    ReplyDelete
  10. எல்லா தலைவர்களும் சர்வாதிகாரிகள்தான். ஹிட்லர், முசோலினி ஒரு படி மேல் என்று சொல்லல்லாம். ஜெயலலிதா பெண் என்பதால் அவரது அதிகாரம் சர்வாதிகாரமாகப் பார்க்கப்படுகிறது. நல்ல பாயின்ட் தமிழா...அதானே...அவர் கட்சியில் ஆண்கள்தான் காலில் விழுகின்றார்கள். பெண்கள் காலில் விழுவதில்லையே ஏன்????

    மற்ற தலைவர்கள் ஆண்கள் என்பதால் அது அதிகாரமாகப் பார்க்கப்படுகிறது. என்ன நடைமுறையில் ஒவ்வொருவரின் செயலும் மாறுபடுகிறது.

    இதில் கொஞ்சம் உள்சமாச்சாரமும் இலைமறைகாய் போல் தெரிகிறதே!!!!

    கீதா

    ReplyDelete
    Replies

    1. ஆண் தலைவர்கள் செய்தால் அது அதிகாரமாகவும் அதையே பெண் தலைவர்கள் செய்தால் சர்வதிகாரமாகவும் கருதப்படுகிறது

      Delete
  11. முதலில் காந்தியவாதம் என்றால் என்ன என்பதே எனக்கு புரியவில்லை..ஆனாலும் உங்க நேர்மை பிடிச்சிருக்கு...

    ReplyDelete
    Replies
    1. தவறுகளை மூடி மறைத்து நாசூக்காக செய்வதுதான் காந்தியவாதம்

      Delete
  12. எனக்குக் கிண்டலாகத் தெரியவில்லை
    சரியாக எழுதி இருப்பதைப் போலத்தான் உள்ளது
    அட நீங்கள் சொல்லித்தான் பெண் அமைச்சர்கள்
    காலில் விழாதது தெரிகிறது
    நல்லவேளை எலெக்க்ஷன் தேதி சொன்னவுடன்
    எழுதினீர்கள். இல்லையெனில் இந்தப் பொல்லாப்பு
    நமக்கெதெற்கு என்று பெண் அமைச்சர்கள்
    உடன் நடவடிக்கையில் இறங்கி இருப்பார்கள்

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை அடுத்த முறை ஆட்சி அமைத்தால் காரியம் நடக்க பெண்கள் விழுந்தாலும் விழலாம்

      Delete
  13. In other States like WB, Gujarat, Delhi and UP, there are and were women CMs. Of whom, Mamata and Maavavati are more autocratic than Jeyalalitha. Do men fall at their feet or worship the sky when the helicopters take off with the CMs?

    ReplyDelete
    Replies
    1. அந்த மாநிலத்தில் உள்ளவர்களுக்கு காரியம் நடக்க வேண்டுமென்றால் கழுதையின் காலை பிடித்தாவது காரியம் சாதித்து கொள்ள வேண்டும் என்பது தெரியவில்லை

      Delete
  14. ஜெயலலிதா சர்வாதிகாரி இல்லை என்பதன் மூலம் வரலாற்றில் அறிந்த சர்வாதிகாரிகளை எல்லாம் சர்வாதிகாரிகள் இல்லை என்று நிறுவியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஜெயலலிதா சர்வதிகாரி என்றால் மற்றவர்களும் சர்வாதிகாரிகள்தான் என்று சொல்லி இருக்கிறேன்

      Delete
  15. "asshole" பட்டத்திற்கு நன்றி காரணம் அந்த asshole நம் உடம்பில் இல்லையென்றால் நம் உடம்பு நாறிவிடும் ..ஒரு நல்ல பட்டத்தை தந்தற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  16. நல்ல பகிர்வு...
    சர்வாதிகாரம் எல்லாரிடமும் உண்டு... என்ன மனோ அண்ணா சொன்னது போல் மனங்களைப் பொறுத்து மாறும்... அவ்வளவே...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.