இரண்டு நாளாக பதிவு ஏதும்
போடாமல் நான் கவலையோடு இருந்ததை என் மனைவி கவனித்துவிட்டு என்னங்க என்ன ஆச்சு இரண்டு
நாளா நார்மலாக இல்லாமல் பேயறைந்தது மாதிரி
கவலையோடு இருக்கீங்க என்று கேட்டாள்.
அவள் கேட்டு நாம் பதில் சொல்லாமல்
இருக்கத்தான் முடியுமா என்ன? அதனால நான் ஒரு தவறு செய்து விட்டேன் அதை நினைச்சு எனக்கு மிக கவலையாக இருக்கிறது என சொன்னேன்.
அதை கேட்ட என் மனைவி என்னங்க
நமக்கு கல்யாணம் பல வருடங்கள் ஆகிவிட்டது இன்னமும் நான் நீ, எனக்கு உனக்கு என்கிறமாதிரி
பிரிச்சு பேசுறீங்க. நீங்க ஒரு தவறு செய்தால் அது நான் செய்தது மாதிரிதான் உங்களுக்கு
ஒரு கவலை என்றால் அது எனக்கும் வந்த கவலைதான் என்று சொல்லி இனிமேல் நான் நீ எனக்கு
உனக்கு என்று பிரித்து எல்லாம் பேசக் கூடாது என்று சொன்னாள்.
அப்படி அவள் சொல்லிவிட்டு
என்ன தவறு நடந்தது என்று கேட்டாள். அவளின் அன்பான பேச்சை கேட்டு நானும் அப்பாவிதனமாக
நாம் இருவரும் செய்த தவறால் என் கூட வேலை பார்க்கும் பெண்மணி இப்போது கர்ப்பமாக இருக்கிறால்
என்று சொன்னேன். அவ்வளவுதானுங்க தெரியும் அதுக்கு அப்புறம் என்ன நடந்ததது என்று எனக்கு
தெரியவில்லை. கண்முழித்து பார்த்த போது ஹாஸ்பிடலில் உள்ள டாகடர்கள் மிக சந்தோஷப்பட்டார்கள்.
காரணம் இப்படி ஒரு மோசமான கேஸை இது வரை அவர்கள் பார்த்ததே இல்லை என்றும் நான் உயிரே
பிழைக்க முடியாது என்றும் நினைத்தார்களாம், இப்படி ஒருத்தன் பிழைப்பதே மில்லியனில்
ஒருத்தர்தானாம்..
நல்லா படிச்சு புரிந்து கருத்து
சொல்லுங்க.. நான் ஒரு உயிர் பிறப்பதற்கு காரணமாக இருந்து இருக்கிறேன் ஆனால் என் மனைவியோ
உயிர் போவதற்கு காரணமாக இருந்திருக்கிறாள்
இப்ப சொல்லுங்க மக்களே தவறு
செய்தது நானா என் மனைவியா?
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி :இதை படித்து விட்டு சீரியஸா கருத்து போடுபவர்கள் இரத்தம் கக்கி சாவீர்கள்
அது சரி.. அது என்னா "பேய் அறைந்த மாதிரி"... அதை கொஞ்சம் விளக்கமா சொல்லுங்கோ..
ReplyDeleteநீங்க என் மனைவியிடம் 1000 கோடி வாங்கிட்டு அவர்கள் சார்பாக என் வாயை பிடுங்க வந்திருக்கிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது அதனால் பேயறைந்த மாதிரி என்பதை என் மனைவி அறைந்த மாதிரி என்று சொல்லி மாட்டிக் கொள்ள நான் என்ன மாங்க மடையனா என்ன?
Deleteஅந்த டாக்டர்ஸ்தான்..............
ReplyDeleteபேய் அறைந்த மாதிரி என்பது தெரியாதா? அந்தக் கதையை விசுவிற்கு இன்னொரு நாள் சொல்லச் சொல்கிறேன்.
ReplyDelete