Monday, March 7, 2016


avargal unmaigal
பெண் ஒரு அழகிய தேவதையா? இல்லை சூனியக்காரக் கிழவியா? 'குட்டி'க்கதை (படித்ததில் பிடித்தது)

இரண்டு மன்னர்களுக்குள் சண்டை.தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்

”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”

கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?


(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சொன்னால் தான் நமக்கு திருமணம் என்று சொல்லியிருந்தாள்)

தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.

அவள் சொன்னாள் விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்;உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?

அவன் சொன்னான்,“என்ன கேட்டாலும் தருகிறேன்”

சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,'"தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”

இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல,அவன் தன் காதலியிடம் சொல்ல,அவர்கள் திருமணம் நடந்தது.இவனுக்கு நாடும் கிடைத்தது.

அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.அவள் கேட்டாள் "நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.

உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.

அவள் சொன்னாள்,”நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்; ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் போது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான்”இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்;முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்றுஅவள் சொன்னாள்”முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்
ஆம்!

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்..

அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!

எனக்கு பிடித்த இந்த கதையை பேஸ்புக்கில் பகிர்ந்தவர் ;விக்கியுலகம் வெங்கட். அவருக்கு எனது நன்றிகள்


----------------------

டி.வி.எஸ். சோமு பேஸ்புக்கில் பகிர்ந்தது :  எனது நன்றிகள்

அங்கே: அறிவிருக்கா சீக்கிரம் சாப்பாட்டை வை... டிரஸ்ஸ அயர்ன் பண்ணியா....
இங்கே: பெண்ணுரிமை போற்றுவோம். தோழிகளுக்கு இனிய மகளிர் தின வாழ்த்துகள்




மகளிர் தின நல்வாழ்த்துகள்
அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. நியாயம்தான். .அதை இவ்வளவு காலம் கழித்துச் சொல்கிறீர்களே.. இனிமேல் எப்படி இதை நடைமுறைப்படுத்துவது? இதையும் மனைவியிடம் கேட்கவேண்டியதுதான்.

    ReplyDelete
  2. ஆஹா இதுதான் அந்த ரகசியமா ? நோட்டட்.

    ReplyDelete
  3. நல்ல கதை கதையாகவே,,,

    ReplyDelete
  4. வாவ்!அவர்கள் உண்மைகள் சாருக்கு அரசியல் மட்டுமல்ல பெண் மனதும் புரிந்தே இருக்கின்றதே! பாராட்டுகளும் வாழ்த்துக்கு நன்றிகளும் சார்! கிட்டத்தட்ட என் இயல்பான சுபாவமும் இதுவே! எதையும் என் மேல் திணிக்க முற்பட்டால் நான் அவ்விடத்தை விட்டு அகன்றே விடுவேன், அதே நேரம்முடிவெடுக்கும் படியாய் என்னிடம் விட்டால் அவர்கள் சொல்வதில் நல்லதையெல்லாம் ஏற்பேன்!

    ReplyDelete
  5. அடடா...இந்த விஷயம் இன்னும்
    முப்பது ஆண்டுகளுக்கு முன்னால்
    தெரிந்திருந்தால் இன்னும் எவ்வளவு
    சந்தோஷமாய் இருந்திருப்போம்
    என நினைத்துக் கொண்டேன்

    விக்கி உலகமும் நீங்களும்
    ஜாலியாக இருக்கவும்
    சந்தோஷமாக பதிவு எழுத
    முடிவதன் இரகசியமும் இப்போதுதான்
    புரிகிறது

    வேறு இரகசியங்கள் ஏதும் இருந்தாலும்
    சொல்லிப் போடுங்கள்
    புண்ணியமாய்ப் போகும்....

    ReplyDelete
  6. நிதர்சனமான உண்மை....
    நன்றி சகோ

    ReplyDelete
  7. படித்திருக்கிறேன்! மீண்டும் ரசித்தேன்.

    ReplyDelete
  8. அருமையான கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழா....செம கதை! பெண்கள் தினத்தன்று..இந்தக் கதை ஏனோ "ஆவதும் பெண்ணாலே...அழிவதும் பெண்ணாலே" என்று சொல்லப்படுவதை நினைவுறுத்தியது..

    கீதா

    ReplyDelete
  9. நாங்க பதிவுலகப் பெண்கள் உங்கள் சகோதரிகள் எல்லோரும் எங்கள் சகோதரி உட்பட (அதான் மிஸஸ் மதுரைத் தமிழன்) தேவதைகளாக்கும்!!! ஹிஹிஹி..

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.