மரியாதைக்குரிய
முத்து நிலவன் ஒரு தொடர் பதிவை ஆரம்பித்து வைத்து அதில் பல பதிவர்களை அறிமுகம் செய்து.
வைத்து இதுபோல நீங்களும் பல பதிவர்களை அறிமுகப்படுத்துங்கள் என்று சொல்லி சிலருக்கு
வேண்டுகோள் விடுவித்தார்...அப்படி அவர் வேண்டுகோள்விடுவித்தவர்களில் ஒருவர் நிஷா. அவர்
சும்மா இருக்காமல் அதில் என்னையும் இழுத்து விட்டிருந்தார்.
அவரின் அந்த
பதிவிற்கு வழக்கம் போல கிண்டலாக ஒரு கருத்தை போட்டு அப்படியே எஸ்கேப் ஆகிடலாம் என நினைத்திருந்தால் அடிக்காத குறையாக பதிவு போட சொன்னார் கமெண்ட் மட்டும் போட்டு போறியே என்று பேட்டை ரவுடி
போல மிரட்டி சென்றார். அவர் மிரட்ட்லுக்கு பயந்த நான் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் என்று
கேட்டுக் கொண்டேன்.
என் ராசி என்னவோ
மனைவிகிட்ட மட்டுமில்ல அம்மாவாக தோழிகளாக சகோதரிகளாக பிள்ளைகளாக என்னிடம் பழகும் அனைவரும்
உரிமையோட அடிக்கதான் நினைக்கிறார்கள் ...
அப்படி அம்மாவாக
தோழிகளாக சகோதரிகளாக பிள்ளைகளாக பழகும் நான் தொடரும் பெண் பதிவர்களை இன்று மகளிர் தினம்
என்பதால் இங்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.
1. ஜோஸபின் பாபா: தன்னை சுற்றி நடக்கும் சமுக விஷயங்களை நம் கண் முன்னால்
தமது எழுத்தால் அப்படியே காட்டும் திறமை இவருக்கு இருக்கிறது, இவரின் எழுத்து நடைதான்
எனக்கு மிகவும் பிடித்தது. தெளிவாக சொல்ல வந்த விஷயங்களை கூட்டி குறைத்து சொல்லாமல்
மிக எளிமையான நடையில் சொல்லிச் செல்லும் பாங்கு... வாய்ப்பு கிடைத்தால் சிறந்த ஜர்னலிஸ்டாக
வரும் திறமை இருக்கிறது. இவரது கணவர் கடந்த மாதம் ஆக்ஸிடென்டில் இறந்து போனார். இவரை
பற்றி இப்போது உள்ள பல பதிவர்களுக்கு தெரியவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சிரியம் அளிக்கிறது.முடிந்தால்
இவரது தளத்திற்கு சென்று இவருக்கு ஆதரவு கொடுத்து ஆறுதல் தாருங்கள்
2. உஷா அன்பரசு
: இவர் சிறந்த கதை கவிதை கட்டுரைகள் எழுதும் சிறந்த எழுத்தாளர், இவரது படைப்புகளை தினமலர்-பெண்கள்மலர்,
வாரமலர் ,பாக்யா.தேவதை.காலைக்கதிர்,ராணி,கல்கி,தங்கமங்கை போன்ற வார இதழ்களிலும் வெளிவந்தது
& வந்தும் கொண்டிருக்கிறது. இவரது கதைகள் வள வளா கொள கொளா என்று இருக்காது. மிக
அடக்கமான பெண்மணி.பதிவர் பலருக்கும் இவரை தெரியும். இப்போது இவர் தளத்தில் பதிவுகள்
வருவது குறைந்து போய்விட்டது. ஒரு வேளை இதை படித்துவிட்டு நல்ல எழுத்துக்களை படிக்க
நினைப்பவர்கள் ஆதரவு கொடுத்தால் மீண்டும் நிறைய படைப்புகளை படைக்க வாய்ப்புண்டு.
3. மைதிலி. இவரும் ஒரு சிறந்த படைப்பாளி. இவர் ஒரு பெண்ணாகவும்
டீச்சராகவும் பொறுப்புள்ள குடும்பதலைவியாகவும் இருப்பதால் மிக அடக்கி வாசிக்கிறார்.
அரசியல் பதிவுகளுக்கு ஒரு பெண்மணி தைரியமாக கருத்து சொல்லுகிறார் என்றால் அது இவராகத்தான்
இருக்கும் இவர் எல்லாம் மூழுவிச்சில் எழுத ஆரம்பித்தால் என்னை போல உள்ளவர்கள் மட்டுமல்ல
பிரபலமானவர்களும் துண்டைக்காணும் துணியைக்காணும் என்று ஒட வேண்டியதுதான்
4. கிரேஸ் : மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து
இப்பொழுது அமெரிக்காவில் குடும்பத்தலைவியாய் இருந்து கொண்டு கணவரை மட்டுமல்லாமல் தன்
சிறுவயதில் காதல் கொண்ட தமிழை இன்னும் மறக்காமல் காதலித்து கொண்டு தமிழ் இலக்கியம்
கதை கவிதை கட்டுரை என்று கலக்கி கொண்டிருக்கிறார். சங்க இலக்கியங்களை பாக்களால் வடிக்கும்
இவர் கட்டுரைகளை எழுதும் போது ஏனோ தானோ என்று அந்த நேரத்திற்கு ஏற்ப எழுதாமல் தமிழில்
படிப்பவர்கள் பயன் பெற வேண்டும் என்று முழு முயற்சி செய்து தன் நேரத்தையும் செலவழித்து
பதிவுகள் எழுதி பதிவிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி பிரபலமானவரை என் தளப்பக்கம் இழுக்க
முயற்சி செய்கிறேன் அது மிக கடினமாகத்தான் இருக்கிறது .காரணம் நான் அரசியல் சார்ந்த
பதிவுகள் பகிர்வதால் அது ஒன்றுக்கும் உபயோகமாகதா சாக்கடை என்று கருதுகிறார். இவரை போல
உள்ளவர்களுக்காக கவிதை கதை எழுதலாம் என்று பார்த்தால் நமக்கு தமிழ் சரியாக வராது ஹும்ம்
5. அகிலா புகழ் : இவர்களை நான் அறிமுகப்படுத்திதான் இந்த இணைய உலகத்திற்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.
இவர்களை அறிமுகப்படுத்துவதினால் இவர்களின் எழுத்தை நானும் படித்துவருகிறேன் என்ற பெருமைதான்
எனக்கு..இவருக்குள் ஒரு எரிமலை கனன்று கொண்டிருக்கிறது ஆனால் அது வெடித்து சிதறாமல் பக்குவமாக வார்தைகளால் வந்து கொண்டிருக்கிறது. அது வெடித்து சிதறாமல் இருப்பதற்கு
அவர் உறவுகளுக்கு ஒரு மரியாதையை கொடுத்து அது சிதைந்துவிடாமல் இருப்பதுதான் காரணம்.
இவரைப்பற்றி
ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு புயல் பெண்ணாக மாறி அமைதி கொண்டிருக்கிறது எனலாம்
6. சாகம்பரி இவர் ஒரு பேராசிரியர்.. இவரின் எழுத்துகள்
மிக அருமையாகவும் எளிமையாகவும் இருக்கும். குடும்ப சூழ்நிலை காரணமாக எழுதுவதை நிறுத்திவிட்டார் போல
7. ராஜி
இவர் என்னை போல எழுத்தாளர் இல்லை . ஆனால் பல செய்திகளை தகவல்களை கோவில் பற்றிய பயணப்பதிவுகளை
மேலும் பல தகவல்களை சுவைபட சொல்லி செல்லுவார். இவர் தளத்தை அறியாதவர்கள் புதியவர்கள்
யாராக இருந்தாலும் கண்டிப்பாக செல்லுங்கள். இவரிடம் அன்பாக பேசினால் அழகிய கைவேலைப்பாடுகளுடன்
கூடிய சேலை இலவசமாக கிடைக்க வாய்ப்புக்கள் உண்டு.
8. தென்றல் சசி. பலபேர் கவிதை எழுதுவார்கள் அதை பலமுறை
படித்தால் கூட அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது கூட புரியாது. ஆனால் இவர் எழுதும்
கிராமியப் பாணியில் எழுதும் கவிதைகள் மனதை கொள்ளை அடித்துவிடும். திறமை இருந்தும் நல்ல
வாய்ப்புக்கள் கிடைக்காததால் பிரகாசிக்க முடியாமல் இருப்பவர்களில் இவரும் ஒருவர்
9. சுமித்தா ரமேஷ் இணைய வானொலியில் ஆர்.ஜே இருக்கும்
இவர் பதிவுகளை சுவைபட எழுதி வருகிறார். முக்கியமாக திருமாலைக்காண்போமா என்ற ஆன்மிக இலக்கிய பதிவையும் எழுதிவருகிறார்
10. அருணா செல்வம் பாண்டிச்சேரியில் பிறந்து பிரஞ்சு
நாட்டில் வசித்து வந்தாலும் தமிழை மறக்காமல் கவிதைகளால் பிளந்துகட்டும் வல்லமை உடையவர்
11. கீதா. இவர் தன் நண்பருடன் இணைந்து பதிவுகளை
வழங்கிவருகிறார். மிக நல்ல பதிவர். நல்ல சிந்தனை வளம் கொண்டவர். பண்பாளர். வலையுலக
பெண்களிலேயே என்னை நேரில் சந்தித்த ஒருவர் இவர்தான் என்று சொல்லி வருகிறார். அவர் என்னை
அல்ல என்னுடைய டூப்பைதான் சந்தித்து இருக்கிறார் என்றால் நம்பமாட்டேங்கிறார்..ஹீஹீ
13. முகுந்தம்மா எங்கள் ஊர்காரர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அமெரிக்க நடப்புகளை பற்றி இவர் தளங்களில் அறிந்து கொள்ளலாம். யாரையும் காயப்படுத்தாமல்
மிக நாசுவாக எழுதுவார்
14. ஆதிவெங்கட் இவரும் மிக அருமையான பதிவுகளை பதிந்து
வருகிறார்
16. மஞ்சுபாஷினி இவரும் மிக அருமையான பதிவுகளை பதிந்து
வருகிறார்
17.
ஹுசைனம்மா இஸ்லாமிய பெண்ணாக இருந்து கொண்டு பலருடன் மிக நட்பாக
பழகிவருபவர். நல்ல பதிவுகளையும் பகிர்பவர்.
18,
சுவாதி. இவர் பதிவுகளை சமீபத்தில்தான் படித்து
வருகிறேன், அனைத்தும் அருமையாக இருக்கிறது. 28 புத்தகங்கள் இவர் வெளியிட்டு இருக்கிறார்
என்று அறிந்த போது ஆச்சிரியத்தின் எல்லைக்கே போனேன்
19. நிஷா. நீண்ட காலமாக பல இணையதளங்கில்
எழுதி வருபவர் ஆனால் இப்போதுதான் தனக்கென்று ஒரு தளம் அமைத்து மிக அருமையாக பதிவுகளை
எழுதிவருகிறார். என் அருகில் இவர் வசிக்கவில்லை அப்படி வசித்து இருந்தால் இந்நேரம்
இவரிடம் அடிவாங்கி இருப்பேன்
இந்த பதிவு எழுத
காரணமானவர் இவர்தான் அதனால் என்னை இந்த பதிவிற்காக
யாரவது திட்ட வேண்டுமென்றால் இவரை திட்டவும் பாராட்ட வேண்டுமென்றால் என்னை பாராட்டவும்
குறைஒன்றுமில்லை லஷ்மி அம்மா. வலையுலகில் அம்மா என்று அன்போடு அழைக்கும் இவர் மிக அருமையான
பதிவுகளை இட்டு வந்தார் . ஆனால் 2013 க்கு அப்புறம் இவர் என்னவானார் ஏன் எழுதுவதில்லை என்பது தெரியாமல் மர்மாக இருக்கிறது,
இவர் பதிவுகளை இட்ட போது ஆர்வமாக இவருக்கு கருத்துக்கள் சொன்ன அனைவரும் இவர் எழுதவில்லை
என்றதும் அமைதியாகிவிட்டனர். இந்த பதிவை படித்துவிட்டு அவரோ அவர் குடும்பத்தினரோ அல்லது
அவரை அறிந்த தொடர்பு கொள்ளும் எந்த பதிவரும் அவருக்கு என்ன ஆச்சு அவர் நலமுடன் இருக்கிறார்
என்று சொன்னால் நான் மிக மகிழ்ச்சி கொள்வேன்
இங்கு நான் தொடரும்
பல பெண் பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் நேரமின்மையால் சிலர் இதில் விடுபட்டு
போயிருக்கலாம்.அதற்காக மன்னிக்கவும்
இங்கு நான் அறிமுகப்படுத்தி
இருக்கும் பதிவர்கள் எல்லாம் தங்களுக்குள் ஒரு கட்டுபாட்டையும் வரைமுறைகளையும் வகுத்து
கொண்டு எழுதிவருகிறார்கள். இவர்களுக்கு ஆண்களை போல கட்டுபாடு ஏதும் இல்லாமல் இருந்தால் உலகில் மிகவும் புகழ் பெற்றவர்களின் லிஸ்டில் இவர்களின்
பெயர்களும் வந்திருக்க கூடும் என்பது நிச்சயம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதுல நிறையப்பேர் யாருன்னே தெரியலையே ?
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நீங்கதான் பேஸ்புக் பக்கம் போயிட்டீங்க.... உங்களைப் போல ஆட்கள் மீண்டும் வலைத்தளம் பக்கம் வந்தால் மீண்டும் சூடுபிடிக்கும்
Deleteஅடேங்கப்பா!பதிவைப்படித்து அப்படியே மலைத்து போய் நிற்கின்றேன்! எழுத்து நடையும் அதில் இருக்கும் நகைச்சுவையும் ஒவ்வொரு வரியைப்படிக்கும் நொடியிலும் சிரிப்பை தந்தது! தொடரும் தொடர் பதிவர்கள் வரிசையில் வித்தியாசமாய் மகளிர் தினத்தில் வலைத்தளத்தில் எழுதும் பெண்களை குறித்த அறிமுகம் அருமையோ அருமை அவர்கள் உண்மைகள் சார்!
ReplyDelete
Deleteஆமாம் நீங்க பாராட்டுறீங்களா இல்லை கிண்டல் பண்ணிறீங்களா? எனது எழுத்துநடையைப் பற்றி நீங்க சொல்லி இருப்பதை படித்ததும் எனக்கு சந்தேகம் வந்துவிட்டது
நிஜமாகவே பாராட்டினேன் சார்!கிண்டலெல்லாம் இல்லை என நம்புங்கள்!ரசிக்க சிரிக்க எழுதுகின்றீர்கள் என்பது நிஜம் தானே?அரசியலை மட்டும் எழுதாமல் அவ்வப்போது இப்படி ஏதேனும் எழுதுங்கள்!
Deleteமகளிர் தினம் கொண்டாடும் நேரத்தில் தமிழ் பெண்வலைப்பதிவர்களை அறிமுகம் செய்துள்ளமைக்கு மிக்க நன்றி....அனைவருக்கும் வாழ்த்துகள்..
ReplyDeleteநன்றி உங்களது தளமும் இதில் வந்து இருக்க வேண்டும் நேரமின்மையால் பல பேர் விடுபட்டுவிட்டது மன்னிக்கவும்
Deleteஆஹா.. எதேச்சையாக படிக்க வந்தேன் ! நன்றி !! :) மகிழ்ச்சி ! அனைவருக்கும் வாழ்த்துகள் !
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteபேட்டை ரவுடி?யாருங்க சார்? என்னை பார்த்தால் அப்படியா தெரியிது?
ReplyDeleteபதிவில் நிரம்ப பெண் பதிவர்கள் மிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்சிங்காக்கும்,ஆனால் இந்த பதிவு வலைத்தள பெண் பதிவர்களில் நான் அறியாத பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளது! பகிர்ந்த பதிவர்களை குறித்த புரிதல் அசத்தல்!
அரசியலுடன் அவ்வப்போது இப்படி பொதுப்பதிவுகள் எழுதினால் எல்லோரும் தான் உங்கள் பக்கம் வருவார்கள் சார்!
நீங்கள் கேட்டு கொண்டதிற்குஇணங்க அவசர அவசரமாக எழுதி பதிவிட்டது அதனால் சில பேர் மிஸ்ஸிங்க்.
Deleteஇப்படி எழுதினால் வலைத்தள பதிவர்கள் மட்டுமே வருவார்கள் & கருத்து சொல்லுவார்கள் ஆனால் என்னை தொடரும் சைலண்ட் ரீடர்கள் எட்டிப் பார்க்கமாட்டார்கள்
அதெல்லாம் எல்லோரும் எட்டிப்பார்ப்பார்கள் சார்!உங்களுக்கு நீங்களே ஒரு வட்டம் போட்டு அதனுள் சுற்றினால் எப்படியாம்?அரசியல் வம்பு தும்பு மட்டும் இல்லாவிட்டால் அத்தனை பெண் பதிவர்களும் உங்கள் எழுத்துக்கும் அதில் இருக்கும் நகைச்சுவைக்கும் ரசிகை ஆகி விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயமாக்கும், ஹாஹா!
Deleteஎங்க வீட்டாம்மாவிடம் நான் அடி வாங்கி அழுவது வெளியே தெரியாமல் நான் சிரிப்பது உங்களுக்கு பிடிச்சிருக்கு போல......நல்லா இருங்கம்மா. நல்லா இருங்க
Deleteஅனைவரும் சிறந்த பெண்புலி பதிவர்களே வாழ்த்துகள்
ReplyDeleteதமிழ் மணம் 1
ஆமாம் நண்பரே இவர்கள் புலிகள்தான் நாம் ஜாக்கிரைதையாக இல்லையென்றால் மேலேபாய்ந்துவிடுவார்கள்
DeleteThanks for mentioning about me and my blog in your blog. Nandri
ReplyDeleteநன்றாக எழுதுபவர்களையும் நான் தொடர்பவர்களையும் நான் சொல்லி பாராட்டுதானே ஆக வேண்டும்
Deleteஅனைவரும் நான் விரும்பித் தொடரும்
ReplyDeleteஅற்புதமானப் பதிவர்கள்
மகளிர் தின நாளில் வெளியிட்டுச்
சிறப்பித்தது மகிழ்வளிக்கிறது
வாழ்த்துக்கள்
உங்களின் வாழ்த்துக்கள் என்னைமட்டுமல்ல எல்லோரையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது
Deleteஇந்த ஆதரவை வரப்போற தேர்தல்ல கொடுக்கிறோம்னு சொல்லியிருந்தா ஒரு கட்சி ஆரம்பித்திருப்பேன் இல்ல...
ReplyDelete
Deleteஎனக்கு தெரியும் நான் ஆதரவு அளித்திருந்தால் நீங்கள் கட்சி ஆரம்பித்து இருப்பீர்கள் என்று. ஆனால் அப்படி நடந்து இருந்தால் கலைஞர் விஜயகாந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டு உங்களுக்காக அல்வா காத்து இருப்பார். அப்படி செய்தால் எங்க ஊர்காரர் விஜயகாந்திற்கு துரோகம் செய்தவானாகிவிடுவேன் அதனால்தான் செய்யவில்லை
பலரும் நான் அறியாதவர்கள். அறிய தந்தமைக்கு நன்றிகள்!
ReplyDeleteஇதற்கு காரணம் முத்துநிலவனும் நிஷாவும்தான்
Deleteஅருமை தமிழரே...இப்படி பெண்களுக்கு ஆதரவாய் இருக்கும் போதே..பிரச்சனையா?
ReplyDeleteஉங்களை தொடர்பில் இணைத்த நிசாவிற்கு நன்றிகள்..
சுவாதியின் சார்பில் என் நன்றிகளும் கூட..அம்மா இப்ப பிஸியா இருக்காங்க...
ஷ்..அப்பா..எப்படியெல்லாம் நல்லபேர் எடுக்க வேண்டியிருக்கு...
நான் என்னை சொன்னேன்..
அம்மாக்கள் எப்போதும் பிஸிதான்.... ஆண்கள் நல்ல பெயர் எடுக்க முயற்சிப்பது வீண் காரணம் என்னதான் நல்லது செய்தாலும் பெண்களிடம் பேர் எடுப்பது கடினம் அதுவும் வீட்டம்மாவிடம்
Deleteஅனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!
ReplyDelete
Deleteஎனது சார்பிலும் மற்றும் அனைவரின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
திட்டு எனக்கு? பாராட்டு உங்களுக்கா சார்?இதெல்லாம் எந்தூரு வழக்கம் சார்?
ReplyDeleteமதுரைத்தமிழனுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் என்பது பூரிக்கட்டையால் கிடைப்பதுதான். அதுதான் உங்களுக்கு வேண்டுமா என்ன?
Deleteநான் பதிவர் கீதா மேடம் பற்றி ஒரு பதிவே போட்டிருக்கிறேன்.பார்க்கவும்.http://abayaaruna.blogspot.in/2016/03/blog-post.html?showComment=1457530446628#c8891361169543761143
ReplyDeleteநான் அதை எனது வேலையில் இருக்கும் போது ஐபோன் மூலம் படித்தேன் ஆனால் ஐபோன்மூலம் கருத்துக்கள் இடுவது கடினம் என்பதால் வீட்டிற்கு வந்தததும் படித்து போடலாம் என நினைத்தேன். ஆனால் வீட்டிற்கு வந்த பின் தேடினால் அந்த பதிவை காணமுடியவில்லை. ஒரு வேளை அதை நீக்கிவிட்டீர்களோ என நினைத்தேன்
Deleteநான் நீக்கவில்லை . எப்படி ஆனது என்று தெரியவில்லை. என் தோழியர் இருவர் பதிவைக் காணவில்லைஎன என்னிடம் போன்செய்து சொன்னார்கள் என்னடாது கிணத்தைக் காணோம் மாதிரிக் கதை ஆயிடுச்சே என்று மறுபடியும் பதிவிட்டு விட்டேன்.
Deleteஉங்களுக்கும் கீதா மேடத்திற்கும் இடையே பார்த்தோமா பார்க்கவில்லையா என்ற நீயா நானா முடிவு எப்படி ஆனாலும் சரி .ஒன்று மட்டும் சொல்வேன். நீங்கள் பார்க்க மிஸ் பண்ணக்கூடாத ஒரு பெர்சனாலிட்டி கீதா மேடம்.
புதிய பதிவர்கள் பலரை இன்று தங்களால் அறிந்தேன்
ReplyDeleteநன்றி நண்பரே
where is thulasidhalam ? my favourite and i think first of the list
ReplyDeleteஇந்த பதிவு அவசர அவசரமாக எழுதி இட்டது. இது அனைத்து பெண்பதிவர்களின் தொகுப்பு அல்ல. நான் அடிக்கடி விசிட் செய்யும் தளங்கள். அதனால் இவர்களின் பெயர்கள் உடனே நினைவிற்கு வந்துவிட்டது.. துளசி மேடம் கீதா மஞ்சரி அபயா அருணா போன்றவர்களின் பெயர்கள் விடுபட்டு போய்விட்டது. அபய அருணா மேடம் பதிவில் பல சமயங்களில் கலாய்த்து கருத்து சொல்லுவேன் ஆனால் துளசிமேடம் கீதாமஞ்சரி போன்றவர்களின் தளத்தில் அப்படிபோட்டால் அவர்களுக்க பிடிக்குமா என்பது தெரியவில்லை என்பதால் சில சம்யங்களில் படித்தாலும் கருத்து சொல்லாமல் வந்துவிடுவேன். எனக்கு உரிமையோடு கலாய்ப்பது பிடிக்கும் ஆனால் அது எல்லோருக்கும் பிடிக்காது என்பதால் சில சமயங்களில் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்
Deleteதமிழா முதலில் பெண்கள் தினத்தன்று இத்தனைப் பெண் பதிவர்களை வெளியிட்டுச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி. நல்ல பதிவு. இத்தனைப் பிரபலமான அழகாக எழுதும் பதிவர்களுடன் என்னையும் சேர்த்திருக்கின்றீர்களே. ஒரு புறம் மகிழ்ச்சி மறுபுறம் கூச்சம். நாம் அப்படியா என்று. வடிவேலு ஸ்டைலில் ..அவ்வ்வ்வ்வ் என்னையும் நல்ல பதிவர்னு சொல்லிட்டாரு
ReplyDeleteநிஷாவுக்கு நன்றி உங்களையும் இழுத்து எழுதவைத்தமைக்கு.
வழக்கமான நகைச்சுவை, கிண்டல்...ம்ம்ம் அது இல்லைனா அப்புறம் மதுரைத் தமிழனா இதுனு எல்லாரும் கேட்டுருவோம்ல...
வாழ்த்துகளுக்கு நன்றி தமிழா...
கீதா
நிஷா அவர்களுக்கு நேரில் நன்றி சொல்லத்தான் நானும் ஆசைப்படுகிறேன் யாராவது ஸ்பன்சர் செய்தால் நேரில் போய் நல்லா கொடு கொடு என்று கொடுத்துவருவேன். நல்லவேளை மகளிர்தினம் வந்ததால் பெண் பதிவர்களை வைத்து பதிவை ஒப்பேத்திவிட்டேன் இல்லையென்றால் யாரை சொல்லுவது யாரைவிடுவது என்று பெரிய பிரச்சனையாகி இருக்கும்...
Deleteஐய்ய்ய்ய்ய்ய்யோடா! என் மேல் இத்தனை பாசமா அவர்கள் உண்மைகள் சார்!இனி எவரேனும் தொடர் பதிவு தொடர்ந்தால் அதில் உங்களை இணைக்க வேண்டும் எனும் சபதம் எடுத்துக்கொண்டேன் சார்!
Deleteகொடு கொடு என்றால் அடி உதைதான் பாராட்டு அல்ல
Deleteசரிப்பா நான் உங்களைச் சந்திக்கவில்லை...போதுமா....ஆதாரம் இருந்தாலும் நீங்கள் அதையும் டூப் என்று சொல்லுவீர்கள் என்பது தெரியாதா என்ன...ஹஹஹ் சரி பரவாயில்லை விடுங்கள். அதனால் என்ன.....எங்கள் எல்லோருக்கும் சகோதரன் நீங்கள் உங்களைத் தெரியாது என்று சொன்னால் நன்றாக இருக்குமா சொல்லுங்கள்!!! ஹிஹிஹி எப்படியாவது உங்களை மாட்ட முடியுமா என்று பார்த்தால்...ஹும்...
ReplyDeleteகீதா
இவர்களில் ஒரிருவரைத் தவிர மற்றவர்களின் பதிவுகளை வாசித்திருக்கிறேன்.
ReplyDeleteநிஷாவுக்கு பாராட்டு, மதரை தமிழனுக்கும் பாராட்டு. நல்ல அறிமுகங்களுக்கு
Deleteஅது என்ன எல்லோரும் நிஷாவிற்கு பாராட்டு & நன்றி என்று சொல்லிக்கிட்டே போறீங்க... இந்த மதுரை தமிழன் பட்ட பாட்டிற்கு யாரும் வருத்தம் தெரிவிக்கலையே..ஹும்ம்ம்ம்ம்ம்
ஹாஹா!முடியல்லப்பா!நீங்கள் அப்படி என்ன பாடு பட்டீர்கள் என்பதையும் ஒரு பதிவாக்கி விடுங்கள் சார்!
Deleteஹ்ம்ம்.. என்னடா ஒரு பொம்பளையா பொறக்காம போயிட்டேன்னு இன்னைக்கு என்ன ரொம்ப பீல் பண்ண வச்சிடிங்க. .
ReplyDeleteஹாஹா!
Deleteபொம்பளையா பிறக்கலைன்னா என்ன பொம்பளை பேரில் ஒரு பேக் ஐடி வைச்சுக்க தெரியாதா அப்பாவியா இருக்குறீங்களே
DeleteThis comment has been removed by the author.
Deleteஎன்ன தான் பெயர் வைத்துக்கொண்டாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல் ஒரே பதிவில் அகப்படவும் வாய்ப்பு இருக்கும் சார்! அதனால் இந்த மாதிரி ஐடியாவையெல்லாம் தூக்கிப்போட்டிருங்க!
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஇந்த லிஸ்ட்ல ஹன்சிகா, ஆண்ட்ரியா எல்லாம் வர மாட்டாங்களா? அவங்களும் தானே தமிழ்ல கலக்குறாங்க?!
நான் சொன்னவங்க எல்லாம் எழுத்தில கலக்குறவங்க நீங்க சொன்னவங்க எல்லாம் மனதை கலக்குறவங்க நீங்க சொன்னவங்களுக்கு நான் இடம் கொடுத்தா அப்புறம் எங்க வீட்டுல கஞ்சி தண்ணி கூட தரமாட்டாங்க
Deleteஇதில் சிலர் எங்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் மட்டுமல்ல நல்ல தோழிகள். இவர்களில் நால்வர் நேரில் அறிமுகம் உண்டு. நாங்கள் டூப்பு என்று சொல்லமாட்டார்கள். ஹஹஹஹஹ....எல்லாரும் ரொம்ப தோஸ்துங்கோ. சிலர் அறிமுகம் இல்லை. அவர்களையும் தொடர வேண்டும்.
ReplyDeleteகீதா
Deleteநான் என்ன சொல்லுறேன்னா நான் உங்களை பார்த்து இருக்கிறேன் மற்ற பதிவர்களையும் பார்த்து இருக்கிறேன் ஆனால் நீங்கள் பார்த்தது எல்லாம் என்னுடைய டூப்புதான்
நிச்சயமாக ஜோசஃபின் பாபா அவர்களைத் தொடர்கின்றோம் தமிழா..
ReplyDeleteகீதா
நன்றி
Deleteநானும் அவர்கள் பதிவை படிக்கின்றேன்பா!தொடர்கின்றோம்!
Deleteஅனைவர் பதிவையும் படிக்கவும் தொடரவும் தான் விருப்பம்,
நேரத்தில் இன்னும் 24 மணி நேரத்தை கூட்டி ஒரு நாள் ஆக்க சொல்லுங்கள்,
ஹை! //வலையுலகப் பெண் பதிவர்களிலேயே என்னை நேரில் சந்தித்தவர் இவர் ஒருவர்தான் என்று சொல்லி வருகிறார்...டூப் என்றாலும் நம்ப மறுக்கிறார்// அஹஹஹ் அது சரி பெண் பதிவர் ஒருவர் சரி நம்பவில்லை...சரி அப்போ உங்களைச் சந்தித்த மற்ற ஆண் பதிவர்கள் முத்துநிலவன் அண்ணா, முரளிதரன் உட்பட....அதுவும் ராயசெல்லப்பா சார், முரளிதரன் இருவரும் உங்களுடன் சென்னைக்குப் பயணித்தனரே..அப்போ அவர்கள் எல்லோருமே உங்களை நம்ப மறுக்கின்றனரா டூப் என்றால்...அவர்கள் உங்களை டூப் என்றால் நானும் டூப் என்று ஒத்துக் கொள்கின்றேன்!!! ஹஹஹஹ இது எப்புடீ???!!!!!
ReplyDeleteநீங்கள் அவரை சந்தித்த போது அவர் சுய நினைவில் இல்லாததால் மறந்துபோய் விட்டாரோ என்னமோ கீதாமேம்!ஆனால் மேலே பதிவில் உங்களை குறித்து எழுதி அதையும் டூப் என சொல்லும் போதே அவருக்கு அப்பப்ப இந்த அம்னீசியா எனும் மறதி நோய் வரும் என நிச்சயமாய் புரிந்து போய் விட்டது! அதனால் நீங்கள் சொல்வதை நாங்கள் நம்பிவிட்டோம் என நீங்களும் நம்புங்க கீதாமா!
Deleteநீங்க எல்லோரும் பார்த்தது என்னை அல்ல நான் அனுப்பிவைத்த டூப்பைதான்
Deleteஉங்க பாணியே தனீ தான் தலைவா! அருமைக்கும் பெருமைக்கும் உரிய நம் சகோதரிகளின் பதிவுகள் அறிமுகம் அருமை! இதில் பலரும் எனக்கு அறிமுகமானவர்களே என்றாலும், இன்னும் அறிந்திராத சகோதரிகளின் சில வலைப்பக்க அறிமுகத்திற்கு நன்றி நண்பா! என்னையும் இதில் குறிப்பிட்டதற்கும் தனி நன்றி. நம் நோக்கமே புதியவர்களின் அறிமுகம் எல்லார்க்கும் கிடைக்கவேண்டும் என்பதுதானே? அதை அருமையாகச் செய்துவிட்டீர்கள். நன்றி நன்றி
ReplyDeleteஎங்க வீட்டுல தலைவி ஆட்சிதான் அடிமையாக இருந்த என்னை நீங்கள் தலைவா என்று அழைத்தும் மிக மகிழ்ச்சியில் குதித்தேன். அதுக்கு அப்புறம் நடுவீட்டுல ஏன் குதிக்கிறீங்க என்று பூரிக்கட்டையால் அடித்ததும்தான் என் குதியாட்டம் அடங்கியது. சும்மா இருந்தவனை இப்படியா குதிக்க வைத்து அடிவாங்க வைப்பது. ஹும்ம்ம்
Deleteநன்றி சகோதரரே....பதிவின் கடைசி வரிகளில் மயங்கி விழுந்துட்டேன்.பெண் பதிவர்கள் என்ற தலைப்பு போட்ருக்காரே என்ன கலாய்த்திருப்பாரென்று பார்க்கலாம்னு வந்தேன்.நானும் கூட்டு நரியும் கூட்டு என்பது போல(நரி யாருனு கேக்கப்பிடாது) சிறந்த பெண் பதிவர்களுடன் என் பெயரும் உங்கள் மனதில் இடம் பெற்றதில் மகிழ்கின்றேன்.
ReplyDeleteஇராஜராஜேஸ்வரி மேம் நிகழ்வில் பயந்து அடுத்து காணாமல் போன லஷ்மி அம்மாவைத்தான் தேடுகின்றோம்.
பிஸி பிஸி என்று சொல்லி எழுதாமல் இருக்காமல் வாரம் ஒரு பதிவாவது போடுங்கள்
Deleteஹா நான் படித்தேனே,, அப்ப என் பின்னூட்டம் எங்கே, எனக்கு எதுவும் அம்னீசியா இல்லையே,,, சூப்பர் பதிவு தான்,, என் தளமும் இருக்கு,, நன்றி நன்றி,, நீங்க எங்கள் அனைவரையும் பார்த்து இருக்கீங்களா, இது தான் டூப்,,, சரி சரி
ReplyDeleteநீங்கள் விசு சாரின் புத்தக வெளியிட்டிற்கு வந்து இருந்தால் நான் உங்களை கண்டிப்பாக பார்த்து இருப்பேன். ஆனால் அங்கு வந்தவர்கள் என்னை பார்த்து இருக்க முடியாது. அப்படி என்னை பார்த்து இருக்கிறேன் என்ற சொன்னவர்கள் என் டூப்பை பார்த்து அதுநாந்தான் என்று கருதி கொண்டிருக்கிறார்கள்
Deleteஅருமையான தொகுப்பு.....வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி
Deleteவாவ் ! சூப்பர்ப் அனைவருமே நான் அறிந்த பெண் புலிகள் நிஷா புலி பக்கம் சென்று தொடர்கிறேன் ..அவங்க தொடர் கமெண்ட்ஸ் பார்த்திருக்கேன் அசர அடிப்பாங்க :)
ReplyDeleteகுறையொன்றுமில்லை லக்ஷ்மி அம்மாவை தேடினோம் தேடிகொண்டிருக்கிறோம் .அவர் ப்ளாக்கில் பார்த்திங்கனா அடிக்கடி கமெண்ட்ஸ் மட்டும் பப்ளிஷ் பண்றாக ..காத்திருப்போம் ..
என்னையும் குறிப்பிட்டதற்கு நன்றி ..
ஐயோம்மா! தானே!நான் அடுத்த விடுமுறையில் இலங்கைக்கு போக திட்டம் இட்டிருக்கின்றேன்மா!என்னை புலிஎலி என சொல்லி வயிற்றில் கிலியை கிளப்பாதிங்க மேடம்! நிஷா புலியெல்லாம் இல்லை,எலிதானாக்கும்!
Deleteஅவ்வ் இதை யோசிக்கலை நான் ..நிஷா பெண் சிங்கம் ..இது ஓகேவா :)
Deleteஎன்னாது மேடமா !! நோ நோ :) கால் மி ஏஞ்சல்
சிங்கமா? அம்மாடியோவ் உங்களுக்கு அந்த சேதியும் தெரியாதா?அந்தப்பக்கம் சிங்கமும், புலியும் தான் அதிகமா இருக்கின்றார்கள் என நான் இந்தப்பக்கம் மனிதர்கள் தேடிவந்தால் இங்கும் அதே சிங்கங்களும்,புலிகளுமாய்,தடம் மாறி தடுமாறி வனம் தேடி வந்து விட்டேனோ என என்னை கலங்க வைத்து விட்டீர்களே ஏஞ்சலின்!பாவம் காட்டு ஜீவன்கள் நிம்மதியா இருக்கட்டும் இந்த மதுரைத்தமிழன் போல் ஆட்களை அந்தப்பக்கம் அனுப்பி காட்டையும் கோட்டை விட்டிராதிங்கம்மே!
Deleteதேவதையை மேடம் என்றா கூப்பிடுவது நோ நோ நோ.....
Deleteஆமாம் இந்த அப்பாவி மதுரைத்தமிழனை காட்டுக்கு அனுப்பிடாதீங்க...இந்த தமிழன் காலை சுற்றிவரும் நாய்க்குட்டி...காட்டில் சிங்கம் (நிஷா) புலி எல்லாம நிறைய இருக்குதுங்க
Deleteசகா! லேட் ரிப்ளை. but நீங்க என்ன மன்னிபீங்க:) எவ்ளோ பெரிய ஆட்களோடு என்னையும் சேர்த்து அறிமுகம் செய்திருகிறீர்கள்!!! அப்டியே கலாய்ச்சு வேற விட்டுருக்கீங்க;) உங்க அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி சகா:)
ReplyDeleteமன்னிப்பா உங்களுக்கா உஹும் அது கிடையவே கிடையாது வெயிட் பண்ணுங்க சீக்கிரம் உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைக்கிறேன்
Deleteஆஹா...அருமையான பதிவு மகளீர் தினத்திற்கு. என்னை அமைதி புயலாய் அறிமுகப்படுத்தியதற்கு மதுரை தமிழனுக்கு நன்றி.
ReplyDeleteஆச்சி சொல்லி அன்றே பார்த்துவிட்டேன் உங்க பதிவை. ஆனால் பதில் எழுத இப்போதான் நேரம் கிடைத்தது. அவ்வ்வளவு புயல் (!)
இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கும் என் பதிவுலக தோழிகளுக்கும் என் மகளீர் தின வாழ்த்துகள்.
இந்தப் பதிவினை வாசிக்கத் தவறியிருக்கிறேன். நல்லதொரு பதிவு. எங்கள் வீட்டுப் பதிவரையும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.
ReplyDelete