உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, March 3, 2016

சாணக்கியதனத்தில் கலைஞரை மிஞ்சுகிறாரா சபரிசன்சாணக்கியதனத்தில் கலைஞரை மிஞ்சுகிறாரா சபரிசன் 

(தேர்தல் நேர அரசியல் கலாட்டா (நையாண்டி) 4

கலைஞரிடம் அரசியல் பாடம் கற்ற ஸ்டாலின் கடந்த தேர்தலில் தோல்வியுற்றார்.இப்போது அரசியல் பாடம் கற்பது சபரிசனிடம். இந்த தேர்தலில் ஸ்டாலின் வெற்றி பெற்றால்..கலைஞரை விட சபரிசன் மிகப் பெரிய சாணக்கியவாதிதான்# என்ன நான் சொல்வது சரிதானேகடந்த சட்டசபை தேர்தலில் கலைஞர் ஆட்சி சரியில்லை என்பதால் திமுக தோல்வி அடையவில்லை கலைஞரின் பிள்ளைகள் சரியில்லாததால்தான் தோல்வி அடைந்தது.


கலைஞரிடம் அரசியல் பாடம் படித்த ஸ்டாலின் இப்போது சபரிசனிடம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறாரம்.ஆமாம் இப்படியே பாடம் படித்து கொண்டிருந்தால் எப்பொது ஸ்டாலின் வாத்தியாராவது?இந்திய அரசியல் சாசன சட்டத்தில் எருமைகளும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற மாற்றத்தை கொண்டு வந்தால் அதிமுக வேட்பாளர்கள் அனைத்தும் எருமைகளாகவே இருக்கும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments :

 1. தள்ளி நின்று இந்தக் கூத்துகளை ரசிப்பது ஒருவகை. ஓட்டுப் போட்டு (கடமை) ரசிப்பது ஒரு வகை!

  ReplyDelete
  Replies
  1. இந்தியாவில் ஓட்டுரிமை எனக்கு இல்லாத காரணத்தால் இப்படி கார்டூன் போட்டு ரசிப்பது & மற்றவர்களை ரசிக்க வைப்பது எனது கடமையாகிவிட்டது

   Delete
 2. எருமைகள்,, இது கொஞ்சம் ஓவரா இல்ல,,

  ReplyDelete
  Replies
  1. அதுதானே சூடு சுரணை இல்லாமல் இருக்கும் அதனாலதான்

   Delete
 3. நாய்கள் மாநாட்டில் ஒரு கண்டனத் தீர்மானம் வருகிறதாம். பெரும்பாலான நேரம் நாம்தான் காலடியில் கிடக்கிறோம். அப்படியிருக்க, சொன்னபடி கேட்காத எருமைகளைப் பெருமைப்படுத்த நினைக்கும் மதுரைத் தமிழனை வன்மையாகக் குரைத்துக் கண்டிக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. மனிதர்களைவிட நாய்கள் மேலானது இப்படி சொல்ல காரணம் நாயை நான் வளர்க்கிறேன் ஆனால் அதை நான் நாயாக நினைத்து வளர்க்கவில்லை அதை எனது பிள்ளையாகவே நினைத்து வளர்க்கிறோம். அது உறங்குவது எனது பெட்டில்தான். அதனால் நாயை நான் மனிதர்களைவிட ஒரு மடங்கு அதிகமாகவே நேசிக்கிறேன் & எனதுவீட்டில் உள்ள அனைவரும் நேசிக்கிறோம். அதனால்தான் நாயை உதாரணமாக காட்டாமல் எருமையை உதாரணமாக சொல்லி இருக்கிறேன்.

   அடுத்தாக ஜெயலலிதா எருமை நிப்பாட்டினாலும் அந்த எருமை ஜெயித்து வரக் கூடிய நிலமைதான் இன்னும் தமிழகத்டில் இருக்கிறது

   Delete
  2. சகோ! உங்கள் கமென்டை ரசித்தோம்...ஆனால் பாருங்க எல்லா நாலுகாலுமே இவர்களை விட மேல்தான். எருமைமாடு நல்லதுதான் செய்கிறது கேவலமான இவர்களைவிட...5 அறிவு, 4 அறிவு, 3 அறிவு, .நாலுகால், மற்ற எல்லா செல்லங்கள் கூட அவற்றின் விதிகளைக் காத்து நேர்மையாக இருக்கின்றன. அப்படினா இந்த வேட்பாளர்களுக்கு எத்தனை அறிவுனு நீங்களே முடிவு பண்ணிக்குங்க

   உங்கள் வீட்டு சன்னி போல்தான் எங்கள் வீட்டு கண்ணழகியும் ப்ரௌனியும். எங்களுடனேதான் படுப்பார்கள். எங்கள் குழந்தைகள். நான் என் பெண்கள் என்பேன்.

   கீதா

   Delete
 4. ரெண்டு கட்சியில எது ஜெயிச்சாலும் நீர் களி தின்னுட்டு கம்பி எண்ணுவது என்னமோ உண்மைதான்.

  ReplyDelete
  Replies

  1. இலவச களி சாப்பிட நான் தயார்........முடிந்தால் அவர்களை அமெரிக்கா வந்து அரஸ்ட் பண்ண சொல்லுங்கள். கருத்து சொல்ல உரிமையற்ற இந்திய குடிமகன் அல்ல நான். பேச்சுரிமை எழுத்து உரிமை அதிகம் கொண்ட அமெரிக்க குடிமகன் நான். நான் அமெரிக்க சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுகிறேன். அதனால் நான் திமுக அதிமுக பாமகார்களைப் பற்றி கவலைபடுவதில்லை

   Delete
  2. இங்கே நான் நாகரிகமாக நகைச்சுவை கருத்துகளைதான் சொல்லி செல்லுகிறேன் பேஸ்புக்கில் போய் பாருங்கள் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் மிகவும் கிழ்த்தரமாக படங்களையும் கருத்துக்களையும் அதுவும் இந்தியாவில் இருந்து பலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களே இன்னும் களி திங்க ஆரம்பிக்கவில்லை அதன் பிந்தானே நாமெல்லாம் வருவோம்

   Delete
 5. தமிழகத்தின் தலைவிதியை மாற்றவா முடியும்? மக்கள் தான் மறதி நோய்ல மயங்கி கிடக்காங்களே..ஏழாம் அறிவு சூர்யா போல. ஓட்டுப் போடும் போதாவது அந்த சில நிமிடங்கள் நல்ல நினைவு வந்தா நல்லாருக்கும்..

  கீதா

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog