உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 14, 2016

காதலர் தினம் கண்ணிர் தினமாகிய கதை 
மதுரைத்தமிழனின் காதலர்தின பதிவுகள்
avargal unmaigal
காதலர் தினம் கண்ணிர் தினமாகியது...என் வாழ்க்கையில் இப்படி  ஒரு காதலர் தினத்தை கொண்டாடியதே இல்லை...அப்புறம் என்னங்க வார நாட்களில் வரும் காதலர் தினம் வீக்கெண்ட்ல் அதுவும் ஞாயிற்று கிழமையில் வந்து இருக்கிறது. அதனால் என் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்கள்தான் எத்தனை எத்தனை அப்பப்பா அதை எழுத்தில்தான் சொல்லிவிட முடியுமா என்ன.........


வழக்கமாக வார நாட்களில் காதலர் தினம் வரும் போது காலையில் சீக்கிரமாக எழுந்திருந்து குளித்துவிட்டு ஆபீஸுக்கு சிக்கிரமாக போக வேண்டும் என்று மனைவியிடம் சொல்லிவிட்டு அப்படி போகும் போது கடையில் இரண்டு பூங்கொத்துகளை வாங்கி அதுனுடன் வேண்டிய அளவு சாக்லேட்டுகளையும் வாங்கி கொண்டு இரண்டு பரிசுகளையும் வாங்கி கொண்டு ஆபிஸுக்கு மற்றவர்கள்  வரும் முன் நாம் முன்னதாக சென்று அங்குள்ள நம் காதலிகளின் மேஜையில் எல்லாவற்றையும் அவர்கள் வரும் முன் வைத்துவிட்டு அப்படா என்று நம் சீட்டில் உட்காரும் போது வரும் சுகம் இருக்கிறதே அதை எப்படிதான் விவரிப்பது

லேட்டாக வரும் என் காதலிகள் வந்து அந்த பரிசுகளை பார்த்துவிட்டு டெக்ஸ்ட்டில் யூ ஆர் ஸோ ஸ்வீட் ஐ லவ் யூ ஆல்வேய்ஸ் என்று ஒருவருகொருவர் தெரியாமல் அனுப்பும் போது மனம் பட்டாம் பூச்சி போல சிறகடித்து பறக்கும் மேலும் ஒரு காதலியை யாருக்கும் தெரியாமல் லஞ்சுக்கும் மற்றொரு காதலியை  ஏர்லி டின்னருக்கும் கூப்பிட்டு போய் ஆட்டம் போட்டுகிட்டு வுட்டுக்கு வரும் போது அங்கே மனைவி அழகாக சேலை கட்டி நிற்கும் போது ஒன்றும் தெரியாதது போல என்னம்ம என்று என்ன விசேஷம் இன்று என்ன வரலட்சுமி பூஜையா? எனக்காக கடவுளிடம் பூஜை ஏதும் பண்ணியா என்று கேட்கும் போது

என்னங்க நீங்க சரியான மக்கா இருக்கிறீங்க இன்று வாலண்டைன்ஸ் டேங்க் அதாவது காதலர் தினங்க என்று சொல்லும் போது ஓஓஓஓஓ அப்படியா அது எனக்கு மறந்தே போயிடுச்சே அது ஞாபகம் இருந்தா வரும் போது உனக்கு கிப்ட் வாங்கி வந்து இருப்பேன் என்று சொல்லும் போது கிப்ட் என்னங்க கிப்ட் உங்க லவ்வே என்றென்ரும் எனக்கு போது என்று சொல்லிவிட்டு சரிங்க இன்று நாம் டின்னருக்கு ஹோட்டலுக்கு போகலாமா என்று கேட்கும் போது.

என்னம்மா ஆபிஸில் கஷ்டப்பட்டு வேலை செய்து வந்து இருக்கிறேன் அதுவும் வார நாட்களில் ஹோட்டலுக்கு போய் லேட்டாக வந்தால் அடுத்தநாள் எப்படிம்மா ஆபிஸிற்கு சீக்கரமாக போவது அதனால் நாம வழக்கம் போல வார இறுதியில் ஹோட்டலுக்கு போகலாம் என்று சமாளித்து விடுவேன். அதை கேட்ட அப்பாவி மனைவியும் நீங்க சொன்னா சரிதான் என்று சொல்லி சென்றுவிடுவாள்


ஆனால் இந்த தடவை காதலர்தினம் ஞாயிற்றுகிழமை வந்து எல்லாவற்றையும் தலைகிழாக மாற்றிப் போட்டுவிட்டது. முக்கியமாக காதலர்களை பிரித்துவிட்டது. ஞாயிற்றுகிழமை என்பதால் ஆபிஸில் கேலை இருக்கிறது என்று சொல்லி போக முடியவில்லை. அந்த சோகத்தை நினைத்து சனிக்கிழமையே சரக்கை அடித்துவிட்டு தூங்கி எழுந்திருந்தால் என் மனைவி அழுது ஆர்பாட்டம் பண்ணி கொண்டிருக்கிறாள்.

என்னடா ஞாயிற்று கிழமை அதுவும் காலையில் இப்பை அழுது ஆட்டம் போடுகிறாளே என்று அருகில் சென்று விசாரித்தாள் நான் சீட் பண்ணிவிட்டதாக சொல்லி அழுகிறாள். என்னடா நம்ம காதல் விஷயம் அவளுக்கு தெரிந்துவிட்டதா என்று நான் பதறி விட்டேன் ஒருவேளை சரக்கு அடித்துவிட்டு உளறிதான் விட்டேனா என்று ஒரு கணம் நினைத்து பார்த்தேன் ஆனால் எவ்வளவு சரக்கு அடித்தாலும் நாம்தான் நிதானம் தவறுவதே இல்லையே என  என் மனம் சொல்லியது

இந்த நேரத்தில் இவள் அழுது ஆர்பாட்டம் பண்ணும் சத்ததை கேட்டு பக்கதுவீட்டில் இருந்த நண்பர்களும் என் வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அவர்களும் என்ன என்ற விசாரித்த போது நான் அவளை சீட்ட் பண்ணிவிட்டதாக சொல்லி அழுகிறாள்.  நண்பர்கள் இவன் உன்னை எப்ப சீட் பண்ணிணான் என்று கேட்டதற்கு நேற்று இரவு என்று சொன்னாள் நான் உடனே அடிப்பாவி நேற்று இரவு நான் உன் கூடத்தானே படுட்து இருந்தேன் அப்படி இருக்கையில் நான் எப்படி உன்னை சீட் பண்ணி இருக்க முடியும் என்ற போது. மீண்டும் நீ நேற்று இரவுதான் என்னை சீட் பண்ணினாய் என்ரு சொல்லி மீண்டு பெரும் குரலெடுத்து அழுகத் தொடங்கினாள்.

எங்கள் நண்பர்களும் சற்று குழம்பி அதன் பின் என் மனைவியை சற்று சமாதானப்படுத்தி விசாரித்த போதுதான் எங்களுக்கு புரிந்தது அவளுது இரவு நேர கனவில் நான் அவளை சீட் பண்ணுவது போல கனவு கண்டு இருக்கிறாள் அதுதான் இவ்வள்வு பிரச்சனைக்கும் காரணம் என்று தெரியவந்தது

அதன் பிந்தான் நாம மாட்டிக்கில்ல என்று அறிந்ததும் மனதிற்குள் ஒரு தெம்பு வந்து அவளின் கன்னத்தில் செல்லமாக ஒன்ரு கொடுத்துவிட்டு அடியே நீ கண்ட கனவு அதிகாலையில் இருந்திருந்தால் பலிக்க வாய்ப்புக்கள் இருந்திருக்கலாம் ஆனால் நீ கண்ட கனவோ இரவு நேரத்தில் அதனால் பலிக்கவே பலிக்காது என்று சொல்லிவிட்டு சரி சரி குளித்துவிடு ரெடியாக இரு நாம லஞ்சுக்கு ஹோட்டலில் போய் சாப்பிடுவோம் என்று சொன்னேன்.

அப்ப்டி சொல்லி முடித்த போது தலையில் நச் என்று ஏதோ அடிப்பது போல இருந்தது. பார்த்தால் என் மனைவிதான் பூரிக்கட்டையால் என் தலையில் அடித்துவிட்டு என்னய்யா பகல் நேரத்தில் இப்படி ஒரு தூக்கம் அதுவும் தூக்கத்தில் கனவு கண்டு ஏதேதோ உளறிகிறாய். சரி சரி சிக்கிரம் கிளம்பு ஹோட்டலுக்கு போகணும் நேரம் ஆகிவிட்டது காதலர்தினம் அன்று பூரிக்கட்டைக்கு வேலை கொடுக்க வேண்டாம் என்றால் அதுக்கு வேலை கொடுக்க வச்சுட்டீயே என்று சொல்லி சென்றாள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : மக்களே காதலிங்க ஆனால்  காதலித்தவளை கல்யாணம் மட்டும் பண்ணிக்காதீங்க.அப்படி பண்ணின்னா மதுரைத்தமிழன் மாதிரி பூரிக்கட்டையால் அடிவாங்கி கொண்டு இப்படி பதிவுகள் எழுதி மற்ற்வர்களை சாக அடித்து கொண்டுதான் இருப்பீர்கள் அந்த நிலமை இனிமேல் யாருக்கும் வர வேண்டாம் என்று காதலர்களுக்கு என் வாழ்த்துகளை சொல்லி செல்லுகிறேன்

avargal unmaigal

என்னங்க இன்று என்ன Dayங்க என்று உங்களுக்கு தெரியுமா?
ஒ எனக்கு நல்லா தெரியும் இன்று சட்டர்டேய் தான்.
உங்கள்கிட்ட்டே கேட்டேன் பாருங்க.. போங்க போய் காலண்டரை பார்த்துவிட்டு சொல்லுங்க?
அடியே காலண்டரை பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் இன்று சனிக்கிழமைதாண்டி
உங்களை போய் கல்யாணம் பண்ணினேன் பாருங்க அதுக்கு என் தலையில் நானே அடிச்சிகிடனும்
இது என்னடி புதுப்பழக்கமா இருக்கு வழக்கமாக என் தலையில் தான் பூரிக்கட்டையால் நீ அடிப்பே ஆனால் இன்று மாற்றி சொல்லுகிறாயே  இரு இரு ஏதுக்கும் காலண்டரை பார்க்கிறேன் இன்று பெளர்ணமியா என்று..

என்ன நக்கலா நல்லா பாருங்க இன்று காதலர் தினம் என்று போட்டு இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?

ச்சே அதைப் போய் மறந்துட்டேனே சரி சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு வா நாம பீச்சுக்கு அல்லது பார்க்கிற்கு போய்விட்டு வருவோம்.

அங்க ஏதுக்குங்க போகனும்?

ஏய் அங்கதாண்டி இலவச அடல்ட் லைவ் ஷோ நடக்கும்.

அடக் கருமமே இந்த வயசுல புத்தி போகிறத பாரேன் நீ எல்லாம் ஒரு மனுஷனாய்யா?


அது சரி காதலர் தினத்திற்கு எல்லா காதலனும் தன் காதலிக்கு flower வாங்கி தருகிறார்கள் அதையாவது நீங்கள் வாங்கி வந்தீர்களா?

அடி செல்லம் நீ இப்படி கேட்பேன் என்று தெரிஞ்ச்சுதான் நான் நேற்றே flower வாங்கி அது வாடாமல் இருக்க ப்ரிஜ்ஜில் வைத்திருக்கிறேன் போ போ அதை போய் நீயே எடுத்துக்கோ அதைப்பார்த்ததும் நீ உன்னையே மறந்துடுவாய்..


சரி மக்களே என் மனைவி கிச்சனில் போய் flower யை எடுப்பதற்கு முன்னால் நான் எஸ்கேப் பண்ணிக்கிறேன் இல்லை என்றால் நான் பதிவு எழுத உயிரோட இருக்கமாட்டேன்

என்ன காரணம் என்று கேட்கிறீங்களா? அதை என்னான்னு சொல்லுறது.. நான் நேற்று சரக்கு அடிச்ச மயக்கதில் என் மனைவிக்கு flower வாங்குகிறேன் என்று காலிப்பளவர் வாங்கி வைச்சது எனக்கு இப்ப ஞாபகம் வந்திடுச்சே

அப்ப நான் வாரேன் முடிஞ்சா நீங்களும் ஒடிப் போயிடுங்க இல்லைன்னா பூரிக்கட்டையை எடுத்து வரும் மனைவி என்னக் காணாத கோபத்தில் உங்களை அடித்துவிடப் போகிறாள்

காதலர் தினத்தை ஒட்டி நான் பேஸ்புக்கில் கிறுக்கியவை

காதலிச்சேன்
கல்யாணம் பண்ணிகிட்டேன்
அழகான பெண்னை பெத்துகிட்டேன்
இப்பவும் காதலிக்கிறேன்
ஆனா அது யாரு என்று மட்டும் எங்கிட்டே கேட்காதீங்க நான் சொல்லமாட்டேன்
சொன்ன  பூரிக்கட்டையால் அடி வாங்கிறது நாந்தானே

'கிப்ட்' இல்லாமல் சொல்லப்படும் காதல் இன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

தமிழக காதலர்களே உங்கள் காதலை ரிஜிஸ்டர் ஆபிஸில் ரிஜிஸ்டர் பண்ணி வைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் அமெரிக்க மாப்பிள்ளை வந்து உங்கள் காதலியை கல்யாணம் பண்ணி தூக்கி கொண்டு போய்விடுவார்கள். ஜாக்கிரதை.....


காதலித்து கல்யாணம் பண்ணியவர்களை ஒடிப் போயிட்டாங்க என்று நம் சமுகம் சொல்கிறது. ஆனால் காதலித்து கல்யாணம் பண்ணிய நான் சொல்லுகிறேன் ஒடுகிற சக்தி எல்லாம் எங்ககிட்ட இல்லை அதுனால நாங்க ஆட்டோ பிடிச்சுதான் போனோமுங்க #நான் காதலிச்சது நிறைய பொண்ணுங்களை ஆனா கல்யாணம் பண்ணியது ஒரே ஒரு பொண்ணைதானுங்க அதை நினைச்சா இப்ப வருத்தமா இருக்குங்க


காதல் பூக்களை போலத்தான் அது மலர்ந்து மகிழ்ச்சியை தந்து அதன் பிறகு வாடி உயிரைவிட்டுவிடும்

கலாச்சார காவலர்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களாம் முடிஞ்சா காதல் கவிதை எழுதுறவங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிங்கப்பா

முந்தையகாதலர் தின பதிவுகள் படிக்காதவர்கள் படித்து ரசிக்க


http://avargal-unmaigal.blogspot.com/2014/02/touching-love-story.html காற்றில் கரைந்த காதல்

http://avargal-unmaigal.blogspot.com/2013/02/blog-post_2489.html காதலை களங்கப்படுத்தும் இந்தகால இளைய சமுதாயம்


http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_15.html காதலிப்பவர்களுக்கு வரும் ஹார்ட் அட்டாக்

http://avargal-unmaigal.blogspot.com/2011/02/blog-post_14.html இதுதான் காதல் என்பதா?
அன்புடன்
மதுரைத்தமிழன்

3

12 comments :

 1. அந்த பூரிக்கட்டையைத்தான் ஒளித்து வையுங்களேன்..எத்தனைதடவைதான் வாங்குறது? நானெல்லாம் பூரி ஓவர் ஆயில்ன்னு சொல்லி ரொம்பநாள் முன்னாடியே ஒளிச்சுட்டேன்...இப்பெல்லாம் கையாலதான்..ஹி..

  ReplyDelete
  Replies
  1. ஆயில் அதிகம் என்றாலும் பூரி சுவையாகத்தான் இருக்கிறது அன்பு உள்ளவர்கள் பூரிக்கட்டையால் அடித்தாலும் வாங்குவதற்கு சுகமாகவே இருக்கிறது நண்பரே

   Delete
 2. ஹா ஹா :) காலிப்ளவர் வாங்கி வச்சிங்களா !அது edible flower என்று சொல்லி சமாளிச்சுக்க வேண்டியதுதானே :)
  best friends forever /never failing friend எல்லாமே உங்களுக்கு பூரிகட்டைத்தான் :) அந்த அப்பாவி பிள்ளையை இன்னிக்குமா சீண்டனும் ?

  அந்த அப்பாவி பிள்ளை= திருமதி மதுரை தமிழன்

  ReplyDelete
  Replies
  1. இந்த அப்பாவி கிழவன் மீது இரக்கமில்லையா உங்களுக்கு.ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்

   Delete
 3. ஹஹஹ்ஹ காலிஃப்ளவர்!!! ம்ம்ம் பூரிக்கட்டையால் வரும் சோதனைகள்!! இன்னிக்கும் பூரிக்கட்டை எடுக்கவைக்கிறதுக்கு நீங்கதானே காரணம்,,ஹஹஹ் பின்ன இப்படி உண்மையைக் கக்கிப் பதிவு போட்டா அடி கிடைக்காமலா போகும்ம்..ஞாயிறு அன்று வந்துருக்கே..இன்னைக்காவது அடிச்சு அடிச்சு வலிக்கும் கைகளுக்கு லீவு கொடுத்துக் கவனிக்கறத விட்டுப்புட்டு இப்படி சேட்டை பண்ணும் மதுரைத் தமிழனுக்குக் கண்டனம்.!!!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. என்னது மதுரைத்தமிழன் சேட்டைக்காரனா? நீங்கள் மதுரைத்தமிழனை நேரில் பார்த்தாக சொல்லுகிறீர்களே அவனைப் பார்த்தால் சேட்டைக்காரனாகவா உங்கள் மனதிற்கு தோன்றுகிறது?

   Delete
 4. ஐய்யோ ஐய்ய்ய்ய்ய்ய்யோ உங்களை நம்பி காதலித்து கல்யாணமும் கட்டி கிட்டதே ஒரு பெண்! அதனால் தான் அவரை தவிர ஊரில் இருக்கும் பெண்ணுங்களை எல்லாம் காதலிக்கின்றேன் என நிரம்பவும் தைரியமாக சொல்கின்றீர்கள் போல!

  காதலர் தினத்துக்கு காலி பிளவர்பழைய ஜோக்காக்கும்!

  கல்யாணம் செய்தால் காதல் போயிரும் என யாருப்பா சொன்னது?

  ReplyDelete
  Replies
  1. அவள் என்னை நம்பி காதலிக்கவில்லை நாந்தான் அவளை நம்பி காதலித்து இருக்கிறேன்.

   ஊரில் உள்ள அனைத்து பெண்ணை காதலித்தாலும் கல்யாணம் பண்ணி பூரிக்கட்டையால் அடி வாங்குவது மட்டும் அவளிடம் என்பதால் அவள் கவலை ஏதும் படுவதில்லை

   Delete
 5. காலி பிளவர்.... ஹஹஹாஹா
  ஓடுங்க ஓடுங்க திரும்பி வீட்டுக்குத் தானே வரணும்? காத்துகிட்டு இருப்பாங்க :))

  ReplyDelete
  Replies
  1. ரோஜாப்பூ வாங்கிட்டு போனாலும் காசை ஏன் இப்படி வேஸ்ட் ஆக்குறீங்க என அடிதான் கிடைக்கும் அதனால்தான் காசு வேஸ்ட் ஆக கூடாதுன்னு காபிபிளவர் வாங்கிட்டு போனேன் அப்பவும் அடிதான் கிடைக்கிறது என்னத்த சொல்ல

   Delete
 6. காதலிச்ச எல்லாத்தையும் பண்ணியிருந்தா எல்லார்கிட்டயும் வாங்க வேண்டியதிருக்கும்.. அய்யோ.. மிஸ்ஸிங்..............

  ReplyDelete
  Replies
  1. என்ன சொல்லுறீங்க அப்ப உலகத்தில் ஒரு பெண்கூட காதலித்தவனை அடிக்காமல் விடுவதில்லையா? ஒரு நல்ல இரக்க மனது கொண்ட அப்பாவி பெண் இந்த உலகத்தில் இல்லவே இல்லையா?

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog