Wednesday, February 10, 2016



மதுரைத்தமிழனின் நிர்வாண புகைப்படம் செல்ஃபி Selfie

எனது பதிவுகளை படித்து வரும் பலருக்கும் நான் பார்ப்பதற்கு எப்படி இருப்பேன் என்ற க்யூரியாசிட்டி அதிகம். பலரும் என்ன சார் நீங்க முகம் கூட காட்டாமல் இருக்குகிறீர்கள் .தயவு செய்து உங்கள் போட்டோ ஒன்றையாவது ஒரு தடவையாவது போடுங்களேன் என்றும் சிலர் சார் நீங்க பவர் ஸ்டார் மாதிரி இருப்பீங்களா அல்லது வடிவேலு  மாதிரி இருப்பீங்களா  அல்லது செந்தில்  மாதிரி இருப்பீங்களா  அல்லது கவுண்டமணி  மாதிரி இருப்பீங்களா  என்று கேள்விகள் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள் . ஆனால் அப்படி கேட்கும் பயபுள்ளைகளில் ஒன்று கூட நீங்க ரஜினி மாதிரியா கமல் மாதிரியா  அஜீத் மாதிரியா அல்லது சூர்யா மாதிரியா என்று ஒருத்தரும் கேட்கவில்லை. ஏய்யா உங்களுக்கெல்லாம் என்னை பார்த்தா காமெடி பீஸு மாதிரியா இருக்குது?


சரி விடுங்க..... ஒரு  சில பதிவர்கள் நீண்ட நாளா என் போட்டோவை கேட்டதால் அவர்களுக்கு  என் முகம் தெரியும்படி ஒரு போட்டோ அனுப்பிச்சு வைச்சேன் அதை பார்த்துவிட்டு சார் உங்க முழு உருவப்படம் அனுப்புங்க அப்பதான் நீங்க் நெட்டை குட்டையா ஒல்லியா குண்டா என்று கேள்விமேல் கேள்வி கேட்கிறார்கள்..

சரி அவர்கள் கேட்டதற்கு இணங்க முழு உருவப்படத்தை அனுப்பினால் நீங்க வேட்டி கட்டினால் எப்படி இருப்பீங்க அல்லது பேண்ட் சர்ட் போட்டால் எப்படி இருப்பீங்க அல்லது ஜிப்பா போட்டால் எப்படி இருப்பீங்க கைலி கட்டினால் எப்படி இருப்பீங்க என்று மீண்டும் கேட்பார்கள் என்பதால்.. நான் இப்பொழுது எனது முழு நிர்வாணத்தை போட்டோவாக எடுத்து இங்கே வெளியிட்டு இருக்கிறேன். இனிம இந்த போட்டோவை பார்த்துவிட்டு வேறு ஏதும் கேள்விகள் கேட்கமாட்டார்கள் என நினைக்கிறேன்...

எனது முழு நிர்வாணப்படம் கிழே உங்களுக்காக... தயவு செய்து வயது வந்தவர்கள் மட்டும் கிழே சென்று பார்க்கவும்




























அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : படம் பிடித்து இருந்தால் நான் காமெடி நடிகன் மாதிரி இருக்கிறேனா அல்லது ஹிரோ மாதிரி இருக்கிறேனா என்று சொல்லி செல்லவும்


10 Feb 2016

14 comments:

  1. ஒரே கருப்பா இருக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. ஹீஹீ உங்களுக்கு கண்பார்வையில் பிரச்சனை இருக்கிறது போல..கூடிய சீக்கிரம் கண் டாக்டரிடம் பரிசோதியுங்கள்..

      Delete
  2. ஹா.... ஹா... ஹா...

    நான் டார்ச் லைட் அடித்துப் பார்த்து விட்டேன்.

    :))

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டீங்களா உண்மையிலே நீங்க பார்த்திட்டீங்களா? பார்த்ததுதான் பார்த்தீங்க பார்த்துபுட்டு சும்மா இருக்காம இப்படி டார்ஸ் அடிச்சு பார்த்தேன் என்று சொல்லிட்டீங்க...இப்ப பாருங்க டார்ச்சு இல்லாததால் எல்லோரும் டார்ஸ் வாங்க கிளம்பிட்டாங்க...இப்ப டார்ச்சுக்கு திடிரென்று டிமாண்ட் கூடி போச்சு அதனால வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பண்ண மோடி உத்தரவு போட்டு இருக்கிறாரம்

      Delete
  3. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஹீரோ தானுங்க சார் நீங்க!

    என்னைப்பொறுத்த வரை எவர எழுத்தையும் அவர் உருவம் கொண்டு மதிப்பிட பிடிக்காது என்பதனால் புகைப்படம் இன்றி தொடர்தல் தான் நல்லது,எழுத்துக்கள் தொடரட்டும், முகம் தெரியா மனங்கள் புரிதலை தரட்டும்,

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி நன்றி ஆமாம் சிக்கிரம் எனக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க மறந்துடாதீங்க.....என்ன ஜிரோ என்று சொல்லும் என் ஆத்துகாரியிடம் நீங்கள் சொன்ன ஹீரோ வார்த்தையை பொன் எழுத்துகளால் எழுதி காண்பிக்க வேண்டும்

      Delete
  4. எனக்கும் கண்ணு சரியா தெரியலை,, டாக்டரிடம் போய்ட்டு பரிசோதித்து வந்து பார்க்கிறேன்,,,

    ReplyDelete
    Replies
    1. டாக்டரிடம் போவதற்கு முன்னால் நீங்கள் போகும் டாக்டருக்கு நல்லா கண்ணு தெரியுமா என்று நன் கு விசாரித்து செல்லுங்கள்

      Delete
  5. ஆமா நீங்க இவ்வளளளளளளவ்வ்வ்வ்வ்வ்வூவூ கருப்பாவா இருப்பீங்க... நாங்கூட சும்மா எம்ஜியாரு மாதிரி... இல்லயில்ல அஜீத் மாதிரி சும்மா தகதகன்னு இருப்பீங்கன்னு பார்த்தேன்....

    கருப்பும் அழகுதான் போங்க...

    ReplyDelete
    Replies
    1. பகல் நேரத்தில் மட்டும் நான் போட்டோ எடுத்திருந்தேனா சும்மா தகதகவென ஜொலித்து இருப்பேன்.அப்படி நான் எடுத்து போட்டிருந்தால் எல்லோரும் எம்ஜியார் அஜீத் போன்றவர்களை மறந்து என்னைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள் அதனால்தான் அப்படி செய்யவில்லை

      Delete
  6. மெழுவர்த்தி வெளிச்சத்தில்...... கலக்குறீங்க தமிழா...இங்க இந்த கம்ப்யூட்டர் ரூமில் மட்டும் கரன்ட் இல்லை... அதனால் மெழுவர்த்தி....ஹிஹிஹி உங்க லொள்ளு தாங்கலப்பா...நாங்கதான் நேர்லயே பார்த்துட்டோமே அப்படினு எல்லாம் இங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம்...அதுக்கு விசுவும், முத்துநிலவன் அண்ணாவும் சாட்சிகள்!!! ஹஹஹ்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. விசுவும் முத்துநிலவனுக்கு மதுரைத்தமிழன் யார் என்றே தெரியாது ஏமாந்து இருக்கிறார்கள் இதுல அவர்களை வேற சாட்சியாய் அழைக்கிறீர்கள் ஹஹாஹஹஹஹா

      Delete
  7. இது சிதம்பர ரகசியம் மாதிரில்ல இருக்கு!! அந்த ரகசியத்துல பெரிய தத்துவமே அடங்கியிருக்காம்...அது போல லொள்ளு மதுரைத் தமிழன் எப்போ இப்படி தத்துவ ஞானியானார்??!!!

    கீதா

    ReplyDelete
  8. நான் பாத்துட்டேன். என் கண்ணுக்கு எல்லாமே தெரியுது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.