Thursday, February 18, 2016



ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இப்படி எல்லாம் கண்டிப்பாக நடக்கும்

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பதவியேற்ற ஒரு சில மாதங்களுக்குள் பால் விலை ராக்கெட் போல உயரும்.

பஸ் கட்டணங்கள் உயரும். பஸ் தரம் குறையும்.

எலைட் ஒயின் ஷாப் தமிழகமெங்கும் திறக்கப்படும். பெண்கள் சரக்கு வாங்கினால் 10 சதவிகிதம் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் உண்டு


மின்சார கட்டணங்கள் உயர்த்தப்படும்.மின்சாரகட் அதிகரிக்கும்

தாமிரபரணி தண்ணிரை மிக குறைந்த விலையில் பெப்சிக்கு கொடுத்ததைப் போல சிறுவாணி தண்ணிரை மிக மிக மலிவு விலையில் கோக் கம்பெனிக்கு கொடுக்கப்படும்

கொடநாடு தமிழக அரசு செயலகமாக மாறி முதலமைச்சர் ஒய்வு எடுக்க போயஸ் தோட்டம் வருவார்.

பன்னீர் செல்வம் மீண்டும் இடைக்கால முதல்வாரக பதவி ஏற்பார்

அப்படி பதவி ஏற்கும் போது பொண்டாட்டி புள்ளைகள் தன்னை பெற்ற எடுத்த அம்மா செத்தாலும் அழுகாத அமைச்சர்கள் தேம்பி தேம்பி பொதுமக்கள் முன்னிலையில் அழுவார்கள்

அரசு பஸ்ஸில் பயணம் செய்பவர்களின் நெற்றியில் அம்மா ஸ்டிக்கர் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் அரசு பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.


அம்மாவை சந்திக்கும் அமைச்சர்கள் அம்மா காலில் விழுந்து வணங்கினால் மட்டும் போதாது அவர்களின் காலை முத்தமிட்டு அதன் பின் அவர்களின் காலை கழுவி அந்த தண்ணிரை தீர்த்தமாக குடிக்க வேண்டும்.

எக்ஸ்பிரஸ் மால்-யை ஜெயாவும் சசிகாலவும் சேர்ந்து வாங்குவார்கள்

மாதம் மாதம் புதிய புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள்

அதிமுகவில் சேரும் நாஞ்சில் சம்பத்திற்கு ஐபோன் வழங்கப்படும்

அதிக அளவு அவதூறு வழக்குகளை போட்ட ஒரே பெண்மணி என்று கின்னஸ் புக்கில் ஜெயலலிதாவின் பியர் வரும்

மாண்பு மிக அம்மாவின் ஆணைப்படி இலவச வாய்க்கரிசி ஏழை குடும்பங்களுக்கு தரப்படும்.


தமிழகத்தில் அழிவை ஏற்படுத்த  பல இடங்களில் குண்டுகளை வைத்த தீவிர வாதிகளை கைது செய்யவும் அந்த குண்டுகளை வெடிக்காமல் செய்ய மாண்பு மிகு அம்மாவின் உத்தரவை எதிர்பார்த்து போலீஸ் துறை காத்திருக்கும்


அப்படி உத்தரவிற்கு காத்து இருக்கும் சமயத்தில் தமிழகத்தில் பல இடங்களில் குண்டு வெடித்து மக்கள் செத்து மடியும் போது அரசாங்க செயல்படாமல் இருக்கும் அப்போது பொதுமக்கள் தன்னார்வதுடன் உதவிகள் வழங்கும் போது அந்த உதவிகளை வழி மறித்து அதில் எல்லாம் அம்மா ஸ்டிக்கர் எல்லாம் ஒட்டிய பின்தான் சவப் பெட்டிகள் கூட நகர ஆரம்பிக்கும்..

தீபாவளி சமயத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் ஏற்படுவது மாதிரி கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடியும் போது நிவாரண நிதிகோரி ஜெயலலிதா மோடிக்கு கடிதம் எழுவார்.

வழக்கம் போல சட்டசபை கூடும் போது ஸ்டாலின் வெளிநடப்பு செய்வார்.

http://avargal-unmaigal.blogspot.com/2013/02/blog-post_18.html தமிழக அரசின் அதிரடி சலுகைகள்( சந்தோஷத்தில் தமிழகம்) படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

இப்படியெல்லாம் நிச்சயம் நடக்கும் அப்போது யாரும் பொங்கி எழக் கூடாது அப்படி எழுந்தால் உங்கள் குஞ்சுகள் காயடிக்கப்படும். காரணம் நீங்கள்தான் இது எல்லாம் நடக்கும் என்று தெரிந்தும் ஜெயலலிதாவிற்கு வோட்டு போட்டு தேர்ந்தெடுத்தீர்கள். அப்படி தேர்ந்தெடுத்த நீங்கள் ஜெயலலிதா அரசை கண்டு பொங்கி எழலாமா என்ன?

டிஸ்கி : சொல்லுறதை சொல்லிட்டேன் இதை படித்த பின் வோட்டு யாருக்கு போடுவது என்று நன்றாக யோசியுங்கள் உங்கள் வோட்டு உங்கள் வாய்ஸ் அதை மட்டும் மறந்துவிட வேண்டாம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது நடிகர் ரஜினிகாந்த் அன்று சொன்னது  இன்று நிச்சயம் நடக்கும் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால்

ரஜினி சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது- ராமதாஸ்

ராமதாஸ் சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது-ஸ்டாலின்

ஸ்டாலின் சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது- வைகோ

வைகோ சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது-விஜயகாந்த்

விஜயகாந்த் சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது-  தமிழிசை

தமிழிசை சொன்னதையே நானும் சொல்கிறேன்... ஜெ. மீண்டும் வந்தால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது- சீமான்

8 comments:

  1. தாங்கள் சொன்ன அனைத்திலும் உடன் படுகின்றேன் ஒன்றைத் தவிற
    அது பன்னீர் செல்வம் முதல்வராவது காரணம் அதற்கு வேறு நபர் தயார். (பெண்பால்)

    ReplyDelete
  2. ஏன்..ஏன்...இத்தனை ஆவேசம்....மிக மோசமான பின்விளைவுகளைத்தான் எதிர்நோக்க வேண்டியிருக்கும் தமிழகம்,... அதில் சந்தேகமில்லை..
    ஆனால் உங்கள் வேகத்தை கொஞ்சம் மட்டுப்படுத்துங்கள்...
    என்ன நடக்கப்போகிறது .பார்க்கலாம்.

    ReplyDelete
  3. dmk vandha idha vida innum kodoorama irukkum. nila abagarippu pazhaya padi thalai virithu aadum.sabareesan kaiyil tamilnadu maatikitu muzhikkum. rowdy rajyam thuvangum. kudumba aatchi uruvaagum. express maal mattum illa. tamilnadu full aah dmk vaangidu vaanga. so kandippa dmk ku namma vote poga koodadhu. adha dhan cho um sonnar. admk aatchiye parava illa.

    ReplyDelete
  4. நீங்கள் சொன்னது சற்று மிகையாக தெரிந்தாலும் அனைத்தும் உண்மையே!
    த ம 3

    ReplyDelete
  5. இன்னும் குனிந்த தமிழனை கூனலாக்கி கோடிகளில் கடனை ஏற்றி... கொடநாட்டு ராணியாய் சுகம் அனுபவிக்கும் அம்மாவை...

    வேலு நாச்சியார் என்றும்...
    ஜான்ஸிராணி என்றும்...
    அன்னை தெரசா என்றும்...
    மதுரை மீனாட்சியே என்றும்...
    மகாமகத்த்தாயே என்றும்...
    பலப்பல பேனர்களை ரோட்டை அடைத்து வைப்பவர்களுக்கு
    எல்லாமே ஆயுட்கால இலவசம் ஆக்கப்படும்...
    அருமை...

    ReplyDelete
  6. ஆழம் தெரிந்தே காலை விடுவார்களா?

    என்னமோ போங்க...
    நமக்கு வாய்த்த இரண்டு கண்களும் நொள்ளை கண்களாக இருக்கிறதே.
    இதில் எதைத் தோண்டினால் என்ன?
    எது இருந்தால் என்ன?
    குருட்டு மனிதர்களாக ஆகிவிட்டோம்.... ம் ம் ம்...

    ReplyDelete


  7. ///

    மோடி பிரதமராக வந்தால்....
    இந்திய ராணுவத்தில் மிக அதிகாரம் மிக்க வீரர்களாக ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் நியமிக்கபடுவார்கள்.

    காவி உடைதான் இந்திய தேசிய உடையாக அறிவிக்கப்படும்.

    கல்யாணம் செய்த ஆண்கள் எந்த நேரத்திலும் மனைவியை விட்டு பிரிந்து கொள்ளலாம்.விவாகரத்து செய்ய தேவையில்லை. பிரிய நீங்கள் சொல்லும் காரணம் நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன் என்று சொன்னால் மட்டும் போதும்

    நித்தியானந்தா இந்திய மகளிர் துறை அமைச்சராக நியமிக்கபடுவார்.

    ரஜினிகாந்த் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

    விஜயகாந்த் விளையாட்டு துறை அமைச்சராக ஆக்கப்படுவார்.

    அன்புமணி விவசாய மற்றும் சமுகத்துறை அமைச்சராக ஆக்கப்படுவார்.

    வைகோ இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனராக நியமிக்கப்படுவார்.

    அத்வானிக்கு தமிழக பா.ஜ தலைவர் பதவி அளிக்கப்படும்.

    பாரதிய மூத்த கட்சி தலைவர்கள் காங்கிரஸில் சேர்ந்து இருப்பார்கள் அல்லது மறுமலர்ச்சி பா.ஜ என்ற கட்சியை ஆரம்பித்து இருப்பார்கள்

    மாற்று மதத்தினர்களுக்கு ஒர் ஆண்டு அவகாசம் தரப்படும் அதற்குள் அவர்கள் இந்து மதத்தை அதிலும் ராமர் கிருஷ்ணர் என்ற கடவுளை ஏற்று வழிபட வேண்டும் இல்லெயெனில் அவரவர்கள் அவர்கள் மதம் சார்ந்த நாடுகளுக்கு சென்று விட வேண்டும்


    வெளிநாட்டு முதலீடுகளுக்கு தடையில்லா மின்சாரமும் மற்ற வசதிகளும் அவர்கள் வேண்டிய இடங்களில் இட வசதியும் செய்து தரப்படும். மூதலீடு செய்பவர்கள் இந்திய வளங்களை மிக குறைந்த விலையில் வாங்கி அதை மக்கள் உபயோகத்திற்கான பொருளாக மாற்றி மிக அதிக விலைக்கு விற்க வசதி செய்து தரப்படும்.

    குஜராத்திகள் மட்டும்தான் பிஸினஸில் முதலிடு செய்ய முடியும்.

    குஜராத்திகள் மட்டும்தான் உயர்தரக் குடிமகனாக கருதப்படுவார்கள்.


    சரி நான் எனக்கு தெரிஞ்சதை சொல்லிவிட்டேன்.....நீங்களும் உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லி செல்லுங்கள்
    ///
    இதைப் பாத்த போல இருக்கா?? "மோடி பிரதமராக வந்தால்...." என்ற தலைப்பில் நீங்க எழுதினதுதான்
    அப்படியா நடக்குது.


    இப்போ ஜெயல்லிதாவா???

    சும்மா உதார் விடாதீங்க பாஸ்

    ReplyDelete
  8. தமிழா ஏம்பா இப்படி வாய் வைக்கறீங்க....

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.