Monday, February 1, 2016



ரசிக்க சிரிக்க சிந்திக்க மதுரைத்தமிழனின் உளறல்கள்






இந்தியாவில் அதிகாரப்பதவியில் உள்ளவர்கள் யாரையாவது கொலை செய்தால் அதை தற்கொலைன்னுதான் சொல்லனும் என்ற புதிய சட்டம் ஏதும் வந்திருக்கிறதா?

பேஸ்புக்கில் எங்களுக்கு திருமணமாகி இன்றோடு 5  அல்லது  10, 20 ,25 ஆண்டு ஆகிவிட்டது. எனது கணவர்/மனைவிதான் எனது பெஸ்ட் பார்ட்டனர் என சொல்லி பதிவிட்டு எங்களை வாழ்த்துங்கள் என்று சொல்லும் போது உண்மையிலே அவர்களை வாழ்த்துவதா வேண்டாமா என சந்தேகம் எனக்கு நேருகிறது காரணம் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் போது அல்லது பேசும் போது இன்னும் எத்தனை நாளுக்குதான் இவரோட/இவளோட குப்பை கொட்டுகிறததோ என்று கரித்து கொட்டுகிறார்கள் பல பேர். அவர்களிடம் நீங்கள் நீண்ட நாட்கள் இது போல வாழுங்கள் என்று வாழ்த்தி அவர்கள் வாழ்ந்தால் அபோது அவர்கள் நம்மை அல்லவா சாபம்மிடுவார்கள்?# இப்ப நான் என்ன செய்வது

பேஸ்புக்கில் விதவிதமாக தங்கள் போட்டோக்களை புரொபைல் பிக்சராக போடும் பெண்கள் உண்மையில் பார்ப்பதற்கு அழகாக இல்லை என்றாலும் அவர்கள் மிக அழகாக இருக்கிறார்கள் என்று ஆண்கள் மிகையாக சொல்லுவதும் ஒரு அழகுதான்

தமிழகத்தில் தற்கொலைக்கு முயற்சி பண்ணும் ஒருவனை காப்பாற்ற வேண்டும் என்ற மனநிலை கொஞ்சம்கூட இல்லாமல், வேடிக்கை பார்க்கும் மனநிலையில்தான் தமிழக மக்கள் இருக்கிறார்கள் #நடிகர் விஜய் திமுகவிற்கு ஆதரவாக களம் இறங்குவதாக செய்திகள் வந்து இருக்கின்றன.

சினிமாத்துறையில் உச்சகட்ட புகழில் இருக்கும் ஒருவனை ஒழித்து கட்டமிக எளிதான வழி அவனை திமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல வழி வகைகள் செய்து கொடுப்பதுதான் மிக சிறப்பான செயல்



ஜெயலலிதாவை விமர்சித்தால் அவரது கட்சி ஆட்கள் தாக்குதல் நடத்துவார்கள் ஆனால் விஜயகாந்த கேள்வி கேட்கும் நபர்களை,விமர்சிப்பவர்களை துாக்கி அடிச்சிடுவேன்னு எகிறுவதும், 'த்துா'ன்னு காறித் துப்புத்துறது மாதிரியான தாக்குதல்களில் தானே இறங்கிவிடுவார்


தப்பு செய்துவிட்டு தப்பிக்க முடியாதவர்கள் ஜெயில் இருக்கிறார்கள். ஆனால் தப்பிக்க தெரிந்தவர்கள் தமிழக முதல்வர்களாகவும் தலைவர்களாகவும் வலம் வருகிறார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்.

டிஸ்கி : பிரபல நகைச்சுவை பதிவர் விசு தனது தளத்தில் படங்களை இட்டு கருத்து சொல்லிவந்த ஐடியாவை பின்பற்றி நானும் எனது கருத்துக்களை இங்கே பதிந்து இருக்கிறேன். பிடிச்சிருக்கா?

01 Feb 2016

9 comments:

  1. அருமை.. அருமை.. அருமை.. நல்ல கலாய்ப்புகள். அது சரி.. பிரபல பத்வியர் விசு ? டிஸ்கி போட்டு அதுலையும் ஒரு களைப்புஉங்கள் வழி தனி வழி நண்பரே.

    ReplyDelete
  2. தப்பிக்க முடியாதவர்கள்,, தப்பிக்க முடிந்தவர்கள்,,,

    உண்மைதான்.

    ReplyDelete
  3. என்ன ஆச்சு தலைவா? ரொம்ப நாளா ஆளையே காணோம்? நான், நம்ம தமிழ்நாட்டுல தேர்தல் வர்ர நேரம்ங்கிறதால ஆளுங்கட்சிக்காரங்கதான் கடத்திட்டாங்களோன்னு கவலைப்பட்டேன்... அப்பறம்தான் தெரிஞ்சது, உங்க பதிவுகளைப் பாத்துக் குழம்பிப் போய் எதிர்க்கட்சிக்கும் எதிரா ஓட்டுப்போட்டுடுவாங்களோன்னு அவங்கதான் கடத்தி வச்சிருக்காங்கன்னு... உண்மையச் சொல்லுங்க சாமி...யாரு கடத்தி வச்சிருந்தது? (தலைக்கு 10,00,000ரூபாய் தருவதாக அறிவிச்சிருக்காங்களாம்... உங்க தலை எங்க கிடைக்கும்?)

    ReplyDelete
  4. ரசிக்கும்படியாகவே இருக்கின்றன....!
    தொடருங்கள்....!
    தொடர்கிறேன்....!

    ReplyDelete
  5. மீண்டும் ரசித்தேன்!

    ReplyDelete
  6. வடகிழக்கும் தென்மேற்கும் போட்டிபோட்டுக்கொண்டு படங்களும் கலாய்ப்புகளும்! :)

    ReplyDelete
  7. நல்லாவே கலாய்ச்சுருக்கீங்க தமிழா கலக்குங்க!

    ReplyDelete
  8. இந்த போட்டோ கமெண்ட் அருமை. அதைவிட இவரை பார்த்து முயற்சி செய்தேன் என்று சொல்லும் இந்த நேர்மை அருமையோ, அருமை:)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.