Monday, February 8, 2016



மதுரைத்தமிழனின் உளறல்கள்










உலக நாடுகள் பயங்கரவாதிகளை கண்டு பயந்தால் தமிழகம் ஜெயலலிதாவை கண்டு பயப்படுகிறது.

ஜெயலலிதாவை பார்த்து எதிர்கட்சிகள் பயப்படுவதே ஜெயலலிதாவின் வெற்றி


உலகத்தில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்லப்படும் இந்தியாவில்தான் சர்வதிகாரியின் ஆட்சி தமிழகத்தில் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது

பொதுமக்களின் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் இவர்கள்தான் என கண்கூடாக தெரிந்தும் அவர்களை கண்மூடிக் கொண்டு தலைவர்களாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை இந்தியர்களிடம் மட்டுமே உள்ளது

பெண்களை தாயாக சகோதரியாக மதிக்கும் இந்திய நாட்டில்தான் குருப்பாக சேர்ந்து பெண்களை பலாத்காரம் செய்வதும் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது

மக்களுக்கு இலவசமாக தரக் கூடிய கல்வியை விற்பனை செய்வதும் இந்தியாவில்தான் அரசாங்க உதவியுடன் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது

ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக அவதூறு வழக்கு பதியப்படுவதும் இந்தியாவில்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


தனது கருவரையில் பிள்ளைகளை வளர்த்து பாதுகாத்த கடவுளுக்கு சமமான பெண்ணிற்கு கோயில் கருவரையில் இடம் இல்லை என்று சொல்லுகிறது நம்ம சமுகம் நல்ல நியாயதியப்பா

பள்ளிக்கூட சாலைகளில் மெதுவாக செல்லவும் எனறு போர்டு வைப்பதற்கு பதில் சில அழகான பெண்களை அரசு நிற்க வைத்தால்  நம்ம ஆளுங்க  மெதுவா பார்த்து செல்லுவாங்கதானே?



மக்கள் நலக் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்வியை ஊடகங்கள் சில  விஷமமான நோக்கத்தோடும் கேட்டு வருகின்றன. அவர்கள் ஏன் திமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் கலைஞரா ஸ்டாலினா என்று அதே விஷமதனத்துடன் கேட்க கூடாது?

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. "அவர்களின் " உண்மைகளை உளறலெனத்
    தந்தது மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்களுடன்....

    ReplyDelete
  2. அமெரிக்காவில் இருந்து இப்படியா தமிழகத்தின் மானத்தை வாங்குவது.?

    ReplyDelete
  3. உண்மைகளை உளறல்கள் என்று நீங்கள் சொன்னாதால்
    நம்மவர்கள் இதை உளறல்களாகவே எடுத்துக்கொள்வார்கள் தமிழரே....

    ReplyDelete
  4. எல்லாவற்றையும் ரசித்தோம் நம் தமிழ்நாட்டின் மானம் ஃப்ளைட்டில் பறக்கிறது என்பதைவிட நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால் ராக்கெட்டில் பறக்கிறது....செவ்வாயில் கூட ..
    மனதை மிகவும் வருந்த வைப்பது மக்களுக்கு இலவசமாகத் தர வேண்டிய கல்வியை அரசு உடன்பட வியாபாரமாக்கியதுதான்...ஹும் என்ன சொல்ல...

    ReplyDelete
  5. உளறல்கள் அனைத்தும் நிதானமாகத்தானே,, ஏனா??? உண்மையாக எல்லாம் வருதே அதனால்,,,

    ReplyDelete
  6. உண்மையில் இவை உளறல்கள் என்று எடுக்க முடியாதவை .அத்துடன் தி.மு.க பற்றிய கருது அருமை .மோடியின் படத்தை பார்த்தபோது பன்றியோடு சேர்ந்து குட்டியும் .........கதைதான் நினைவுக்கு வருகிறது .தொடருங்கள்

    ReplyDelete
  7. உளறல்களாய் சொன்னாலும் உண்மையைத்தான் சொன்னீர்கள் அவர்கள் உண்மைகள் சார்!

    பள்ளிக்கூடம் இருக்கும் தெருவில் உங்கள் ஐடியா சும்மா நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சுன்னு இருந்தாலும் செம்ம ஐடியா அதன் சுவர்களில் கவர்ச்சிப்பெண்கள் படங்களை ஒட்டி வைப்பது, பள்ளிக்கு வர விரும்பாத பசங்களையும் தினம் வரவைக்கலாம். வண்டி ஓட்டுவோர் வேகத்தையும் மட்டுப்படித்தலாம், இது எப்படி?

    ReplyDelete
  8. நல்லாத்தான் உளறறீங்க....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.