தேர்தல் நேர அரசியல் கலாட்டா
3 (நையாண்டி ) பாஜகவையும் கொஞ்சம் கலாய்க்கலாமே
தமிழக தேர்தல் வருவதை ஒட்டி
திமுகவையும் அதிமுகவையும் மட்டும் எவ்வளவு நாள்தான் கலாய்ப்பது. அப்படி அவர்கள் இருவரையும்
கலாய்த்து கொண்டே இருந்தால் மக்களுக்கு போரடித்து விடும் என்பதால் மாற்றுக்கு பாஜகவையும்
கொஞ்சம் கலாய்க்கலாமே என்ற முயற்சிதான் இந்த பதிவு
தமிழக பிஜேபி சட்டசபையில்
சில சீட்டுகளையாவது பெற மோடியை நம்புவதை விட காமெடியை(விஜயகாந்தை)தான் இன்னும் நம்புகிறது.
மோடி நல்லாட்சிதான் செய்கிறார்
என்றால் தமிழகத்திற்கு வந்து தன் நல்லாட்சியைப் பற்றி சொல்லி தமிழிசையை தமிழக முதல்வராக்க
முயற்சி செய்வதுதானே?
மற்ற மாநிலத்தில் தேர்தல்
நடக்கும் போது பிரச்சாரம் செய்யும் மோடி தமிழக தேர்தலுக்கு மட்டும் வரமாட்டார். காரணம்
அப்படி வந்தால் அவர் ஜெயலலிதாவிற்கு ஆதரவா பிரச்சாரம் பண்ணுவாரா அல்லது தமிழிசைக்கு
ஆதரவா பிரச்சாரம் பண்ணுவாரா என்ற குழப்பம்தான்.
விவசாயிகளுக்கு
தேவையான மின்சார வசதி, நீர் வசதி,மலிவு விலையில் உர போன்ற வசதிகளை மோடி அரசு செய்துதராமல்
நாட்டு மக்களுக்கு ரயில்வே நிலையங்களில் இலவச வைபை வசதிகளை செய்து தருகின்றது....அதன்
பின் உணவு பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்ட பின் வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்களை
இறக்குமதி செய்துவிட்டு # மேக் இன் இண்டியா கோஷத்தை எழுப்புகிறது
தமிழிசை வீட்டுத் திருமணத்தில்தான் கூட்டணி முடிவாகுமோ! பின்னர்தான் மோடி என்ன பேசுவார் என்று தெரியும்!
ReplyDelete:))))
தமிழகத்தை பற்றி மோடிக்கு கவலை இல்லை அவர் நம்மை தண்ணி தெளித்துவிட்டுவிட்டார்
Deleteஎந்த கட்சியும் மக்களுக்கு நன்மை செய்ய முயல்வதில்லை! தங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்றவகையில்தான் தேர்தலை எதிர்கொள்கின்றது. ஒட்டுமொத்தமாக கட்சிகளை புறக்கணித்து நல்லவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்? பூனைக்கு யார் மணிக்கட்டுவது?
ReplyDeleteபூனைக்கு யார் மணிகட்டுவது என்று சொல்லிக் கொண்டு இருக்காமல் அனைவரும் முயற்சி செய்யவேண்டும்
Deleteஇங்கு ஆட்சிக்கு வரும் எந்த கட்சியும் அரசியல்வாதியும் உற்பத்தி பற்றி பேசுவார்கள் பணவீக்கம் பற்றியும் பேசுவார்கள், ஆனால் விவசடபற்றி பேச துப்பில்லாத அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமைகள் தம் மக்களையும் அவ்வனே செய்ய அயராது போராடுகிறார்கள் இந்தப் புழுக்கள்.
ReplyDeleteநாட்டை கூறு போடும் தலைவர்களாகவே இந்திய நாட்டு தலைவர்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது?
Deleteகலாய்ப்பு சூப்பர்
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்
தலைவரின் வாழ்த்திற்கு நன்றி
Deleteநையாண்டி நல்லாத்தான் இருக்கு....
ReplyDeleteநையாண்டியில் உண்மைகள் ஒளிந்து இருக்கிறதே அதனால் நன்றாகத்தான் இருக்கும்
Delete