Tuesday, February 23, 2016



தேர்தல் நேர அரசியல் கலாட்டா 2 (நையாண்டி) தொண்டர்களிடையே பந்தாடப்படும் தலைவர்கள்


தமிழகத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் இன்று காலை முதல் பக்கத்தை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. திமுக தரப்பில் இருந்து  கொடுக்கப்பட்ட இந்த விளம்பரம்  முதல்வர் ஜெயலலிதாவை கிண்டல் செய்யும் நோக்கதுடன் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்கு திமுக செலவிடப்பட்ட பணம் கோடிக் கணக்கில்.

தமிழகத்தில் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னரே திமுக விளம்பரங்களை தட்டி எறிய ஆரம்பித்திருக்கிறது. இப்போதே விளம்பரம் கொடுக்கப்பட்டால், அது தேர்தல் கணக்கு செலவில் வராது.



இது இப்படியிருக்க, இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட அடுத்த சில மணிநேரங்களிலேயே அதிமுகவினட் எந்தவித செலவையும் செய்யாமல் வாட்ஸ்அப்  மற்றும் பேஸ்புக் வழியாக திமுகவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டது.


திமுகவினர் பலகோடி செலவழித்து வெளியிடப்பட்ட போஸ்டர் தேர்தல் கமிஷன் வெளியிட்ட போஸ்டரின் காப்பி பேஸ்ட்தான். இதற்குதான் திமுக பல கோடி செலவிட்டிருக்கிறது.


Shajahan என்பவர் இதைப் பற்றி பேஸ்புக்கில் கூறி இருப்பது:
ஒரு விளம்பரத்தை கூட சுயமாக சிந்தித்து வெளியிட முடியாத
சிந்தனை திறனற்ற நிலையில் இன்றைய திமுக தலைமை.
இன்றைய நாளிதழ்களில் கொள்ளையடித்த பணத்தில் பல கோடிகளை கொட்டி திமுக வெளியிட்ட விளம்பரத்தின் ஒரிஜினல் இதுதான்.


Thippu Sulthan K என்பவர் இந்த போஸ்டருகான தனது கருத்தை வெளியிட்டது என்னை மிகவும் கவர்ந்தது அது இதுதான்

அவனவன் நம்ம ஒட்டு போட்ட வார்டு கவுன்சிலரையே காணோம்னு தேடிட்டு இருக்கான்...அம்மாவ பாத்துருகியான்னு கேக்குறாங்கே...

சந்திரசேகர் என்பவர் வெளியிட்ட படம் இது....




மாற்று சிந்தனையுள்ளவர்கள் வெளியிட்ட படம் இது



என்ன மக்களே கடந்த பல ஆண்டுகளாக நமது தவறான முடிவால் இப்படி இந்த இரண்டு கட்சிகளையும் தேர்ந்தெடுத்து அதன் பின் அழுது கொண்டிருக்கிறோம். இப்போதுதான் சிரிக்க ஆரம்பிக்கிறோம்....அதுமட்டும் போதாது......நீங்கள் சிந்திக்க ஆரம்பித்து உங்களின் வாய்ஸ் எனப்படும் வோட்டை சரியாகப் பயன்படுத்தி  ஒரு மாற்று கட்சியை அல்லது சரியான ஆளை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும். அது முடியுமா உங்களால்?



அன்புடன்
மதுரைத்தமிழன்,

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தமிழனின் பார்வையில் வரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள். இந்த தளம் எந்த்வொரு கட்சிக்கோ அல்லது தலைவருக்கோ ஆதரவாக செயல்படும் தளம் அல்ல.படித்ததில் இருந்து மனதில் பட்டதை அப்படியே யாருக்கும் அஞ்சாமல்  சொல்லி செல்லும் தளம் இது.

14 comments:

  1. டீவில பார்க்கற நகைச்சுவையை விட, சினிமாலபார்க்கற நகைச்சுவையை விட இந்தக் காமெடி நன்றாயிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் நம்மை சிரிக்க வைப்பது இவர்களின் கேலிக்கூத்துதான்

      Delete
  2. இரண்டும் சரியில்லை என்பதில்
    யாருக்கும் கருத்து வேறுபாடில்லை

    அடுத்து யார் என்பதை தேர்ந்தெடுப்பதில்தான் சிக்கல்

    நால்வர் கூட்டணியில் விஜயகாந்த சேர்ந்தால்
    அது மிகச் சரியானது இல்லையென்றாலும்
    ஜெயிக்க வாய்ப்பிருப்பது போல்
    ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும்

    அதன் முலம் இரண்டையும் வெறுக்கிறவர்கள்
    தங்கள் ஓட்டை அதற்குப் போட வாய்ப்புண்டு

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாறுதலுக்காகவது இந்த இரண்டு கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு வேறுயாருக்கவது வாய்ப்புக்கள் கொடுக்க வேண்டும் அது குப்பனாக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி

      Delete
  3. கட்சிகளின் அறிக்கைகளைப் பார்த்து தமிழ்நாடே சிரிக்கும். தமில்நாட்டப் பார்த்து இந்தியாவே சிரிக்கும். இதுதான் ஒவ்வொரு தேர்தலிலும் நடக்கிறது. இந்த முறை சினிமா பஞ்ச் டயலாக் சேர்ந்துக்கொண்டது. எப்படியோ இணையத்தில் மேய்பவர்களுக்கு நல்ல பொழுதுபோக்குதான்.

    ReplyDelete
    Replies
    1. இணையத்தில் சோர்ந்து போய்கிடந்த மக்களுக்கு இந்த தேர்தல் ஒரு வரப் பிரசாதம்

      Delete
  4. செம காமெடி தமிழா பேப்பர்ல பார்த்ததும் விழுந்து விழுந்து சிரித்தோம் என்றால் நீங்கள் இங்கு பகிர்ந்திருப்பவை செம!!! அது சரி எல்லா தேர்தலுமே நம்மூரில் காமெடிக் கலாட்டக்கள் நிறைந்தவைதானே!!

    எல்லாம் சரி தமிழா கடைசில சொன்னீங்க பாருங்க மாற்றுக் கட்சியை, சரியான ஆளைத் தேர்ந்தெடுக்க முடியுமானு......என்ன தமிழா நீங்களுமா? உங்களுக்குத் தெரியுமே!. நாங்க அப்படி ஒண்ணு இருக்கானு தேடிக்கிட்டுருக்கோம்....உங்கள் கண்ணுக்கு, மனசுக்கு அப்படி ஒரு கட்சியோ,தலைவரோ பட்டுச்சுனா சொல்லுங்க.....

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாறுதலுக்காகவது இந்த இரண்டு கட்சியையும் ஒதுக்கி வைத்துவிட்டு வேறுயாருக்கவது வாய்ப்புக்கள் கொடுக்க வேண்டும் அது குப்பனாக இருந்தாலும் சரி சுப்பனாக இருந்தாலும் சரி

      Delete
  5. ம்ம்..என்னத்த சொல்ல...கூத்தாடிக ரெண்டு பட்டாங்க....ஊரே கொண்டாட்டம் தான்

    ReplyDelete
    Replies
    1. இதை கொண்டாட்மாக எடுத்து கொண்டீர்களேயானால் தமிழர்களின் வாழ்வு திண்டாட்டம்தான் நண்பரே

      Delete
  6. செம்ம..காமெடி ....

    நம்ம நிலைமையும் ...

    ReplyDelete
    Replies
    1. நம்ம நிலமை தேர்தலை தவிர மற்ற நேரங்களில் கஷ்டம்தானுங்க

      Delete
  7. பேசாம நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி மொவ்மென்ட்.

    ReplyDelete
    Replies
    1. ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா?

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.