பயணங்கள் முடிவதில்லை
என்ற பயணத் தொடரை சகோ மைதிலி ஆரம்பித்து வைத்து
பலரை தொடர் பதிவாக எழுத சொல்லி அழைப்புவிடுவித்திருந்தார். அவர் அழைத்த நேரத்தில் எனது
வாழ்க்கை பயணமோ முடிந்துவிடுமோ என்ற நிலையில் இருந்ததால் அதை அப்போது தொடர முடியவில்லை.
ஆனால் பயயணங்கள் முடிவதில்லை என்று சகோ மைதிலி சொன்னது போல எனது வாழ்க்கை பயணம் முடியாமல்
இந்த பதிவை போல தொடர்கிறது, ஆனால் இதை படித்துவிட்டு உங்கள் பயணத்தை நீங்கள் முடித்து
கொண்டால் அதற்கு நான் பொறுப்பு அல்ல...
பயணங்களில் ரயில்
பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
அப்பா ரயில்வேயில்
டெலகிராப் இன்ஸ்பெக்டராக(போலீஸ் டிபார்ட்மெண்ட் அல்ல) மதுரையில் வேலை பார்த்ததால் அனைத்து
பயணங்களும் ரயிலில்தான்(கொல்லம் எக்ஸ்பிரஸ்) அதுவும் மதுரையில் இருந்து செங்கோட்டை(டெல்லி
செங்கோட்டை அல்ல குற்றாலாம் அருகில் உள்ள செங்கோட்டை) வரை மட்டும்தான். அந்த ரெயில்
அதிகாலை நாலு அல்லது ஐந்து மணியளவில் மதுரையில் இருந்து புறப்பட்டு ஒன்பது அல்லது பத்து
மணியளவில் செங்கோட்டையை சென்று அடையும். இப்போது நான் அமெரிக்காவில் சொந்த பந்தங்களை
எல்லாம் விட்டுவிட்டு தனியாக இருப்பது போலதான் அந்த கால எனது பெற்றோர்கள் அவர்களதுசொந்த
பந்தங்களை செங்கோட்டையில் விட்டு மதுரையில் வசித்தார்கள். அதனால் பாட்டி மற்றும் மற்ற
உறவினர்களை பார்க்க செங்கோட்டை செல்வதுண்டு.
2.மறக்கமுடியாத
மகிழ்ச்சியான பயணம் எது?
அந்த செங்கோட்டை பயணங்கள் மறக்க முடியாது காரணம் ரயிலில்
போகும் போது கொறிக்க திண்பண்டங்கள் கிடைக்கும் என்பதால். அப்படி பயணம் போது கொறிப்பதற்கு
முதல் நாளே கொக்கோ மிட்டாயை ஆளுக்கொரு பாக்கெட் வாங்கி வைத்து விடுவார்கள் அதை மதுரையில்
இருந்து விருதுநகர் போவதற்குள் சாப்பிட்டுவிடுவோம் அதன் பின் விருதுநகரில்தான் வண்டி
சற்று அதிக நேரம் நிற்கும் என்பதால் அங்கு நாங்கள் கொண்டு செல்லும் காலை உணவை முடுத்துவிடுவோம்
அதன் பின் அந்த ஸ்டேஷனில் ஒரு வயதான சற்று குண்டாண ஆள் ஒருவர் போளி செய்துவிற்பார்
அவர் எங்க கோச் பக்கம் வண்டி புறப்படுவதற்குள்
வர வேண்டும் என வேண்டிக் கொள்வோம் அப்பதான் எங்களுக்கு அந்த போளி கிடைக்கும். ராஜபாளையம்
வந்தால் கொய்யாப்பழமும் மணப்பாறை பக்கம் வரும் போது முறுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்டேஷன் வரும் போது பால்கோவாவும் கிடைக்கும் சங்கரன் கோவில் பக்கம் வரும் போகும் போது
அல்ல வரும் போது அந்த ஊரில் உள்ள சொந்தங்களுக்கு
தகவல் கொடுத்தால் பிரியாணி வாங்கி பாரசலாக தருவார்கள் அப்போது அந்த பிரியாணிதான் தமிழ்
நாட்டில் மிக பேமஷான பிரியாணி இப்படி பலதையும் வாங்கி கொறித்துவிட்டு வண்டி தென் காசிபக்கம்
வரும் போது எப்படா வண்டி சீக்கிரம் செங்கோட்டை வந்து சேரும் என நினைக்க தோன்றும் அப்போதுதான்
வண்டி ஸ்லோவாக போவது போல ஒரு பீலீங் தோன்றுவதால் நான் ஜன்னலை பிடித்து ரயில் போகும்
திசையை நோக்கி தள்ளுவேன் அப்போதாவது ரயில் சற்று வேகமாக போகுமே என்ற எண்ணம்தான்,,,,
3.எப்படி பயணிக்கப்
பிடிக்கும்?
எனது வேனில்
நீண்ட தூரம் பயணம் செல்ல பிடிக்கும் அதுவும் தமிழ் பேசும் குடும்பம் கூட வந்தால் மிக
சந்தோஷமாக இருக்கும். பகல் நேரப் பயணம் பிடித்த மானது காரணம் இயற்கை வளங்களை ரசித்து
செல்ல முடியும் இப்படி நீண்ட தூரம் பயணம் செய்யும் போது மூன்று மணிக்கொருதரம் ரெஸ்ட்
எடுத்துவிட்டுதான் பயணம் செய்வோம். இப்படி பயணம் செய்யும் போது இங்கு இரண்டுவகையான
ரெஸ்ட் ஏரியாக்கள் உண்டு ஒன்று நல்ல ரெஸ்ட் ரூம் அட்டாச்சுடன் கூடிய பலவிதமான உணவு
வகைகளுடன் உள்ள புட் கோர்ட்டு வசதியுடன் உள்ளது மற்றொன்று வெண்டிங்க் மிசினுடன் ரெஸ்ட்
ரூம் வசதியுடன் மிக பெரிய பார்க்கை போல உள்ள ரெஸ்ட் ஏரியா. இதை மாறி மாறி செலக்ட் செய்து
பயணம் மேற்கொள்வோம். பார்க் போல உள்ள ரெஸ்ட் ஏரியாவிற்கு போதும் போது நாங்கள் கொண்டு
செல்லும் உணவு வகைகளை மரத்துக்கு அடியில் உட்கார்ந்து சாப்பிட்டு சிறிது உண்டு உறங்கி மகிழ்வோம். இந்த
ஏரியா பகல் பொழுது மிகவும் பாதுகாப்பானது மற்ற ரெஸ்ட் ஏரியா இரவு நேரங்களில் பாதுகாப்பானது
4.பயணத்தில் கேட்க
விரும்பும் இசை ?
அப்படி ஏதும்
இல்லை அனேகமாக பயண நேரங்களில் நான் கேட்பது நீயூஸைத்தான்
5. விருப்பமான
பயண நேரம்
அதிக தூரத்தை
சீக்கிரமாக கடக்க வேண்டும் என்றால் அல்லது நாட்களை வேஸ்டாக்க வேண்டாம் என்றால் இரவு
நேரமும் உண்டு உறங்கி ரிலாக்ஸாக எஞ்சாய் பண்ண வேண்டும் என்றால் பகல் நேரம்.பயணம் எங்கே
எப்போது எதற்காக என்பதை பொறுத்து விருப்பமான பயண நேரம் மாறுபடும்
6,விருப்பமான பயணத்துணை.
பயணம் எப்படி
என்பதை பொறுத்தது. குடும்ப பயணம் என்றால் மனைவி குழந்தை மற்றும் எனது செல்ல நாய்க்குட்டியுடன்தான்
அப்படி இல்லையென்றால் சைனீஸ் அல்லது ஸ்பானிஸ் பெண்களுடன் பயணம் செல்லத்தான் ஆசை. ஆனால்
அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லை
7. பயணத்தில் படிக்கவிரும்பும்
புத்தகம்?
பயணம் செய்யும்
போது படித்தால் எனது வாழ்க்கை பயணம் முடிந்துவிடும் காரணம் பயணத்தின் போது வண்டி ஒட்டுவது
அநேகமாக நானாக இருப்பதால்
8. விருப்பமான
ரைட் அல்லது டிரைவ்?
அதை பற்றி இங்கு
சொல்ல முடியாது அப்படி சொன்னால் அடல்ட் ஒன்லி ,18 +. ஆண்களுக்கு மட்டும் படிக்க என்ற
எச்சரிக்கை வெளியிட வேண்டி இருக்கும் என்பதால் அது இங்கு சென்சர் செய்யப்பட்டுள்ளது
9. பயணத்தில் நீங்கள்
முணுமுணுக்கும் பாடல்?
ஓரம்போ ஒரம்போ
ருக்குமணி வண்டிவருது (பொண்ணு ஊருக்கு புதுசு)
ஆட்டுக்குட்டி
முட்டையிட்டு (16 வயதினிலே)
வாடி என் கப்பக்கிழங்கே
(அலைகள் ஓய்வதில்லை)
ஆகா வந்திருச்சு
ஆக கா ஓடி வந்தேன் (கல்யாணராமன்)
அப்பனே அப்பனே
புள்ளையாரப்பனே (அன்னை ஓர் ஆலயம்)
ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும் (முள்ளும் மலரும்)
உலகம் வெறும்
இருட்டு நீ உருப்படியா ஏத்திக்கடா (தியாகம்)
வெத்தலை வெத்தலை
வெத்தலையோ (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
கட்டவண்டி கட்டவண்டி
காப்பாத்த (சகலகலா வல்லவன்)
அண்ணே அண்ணே
சிப்பாயண்ணே (கோழி கூவுது)
சும்மா நிக்காதீங்க
(தூங்காதே தம்பி தூங்காதே)
வருது வருது
அட விலகு விலகு (தூங்காதே தம்பி தூங்காதே)
வாழவைக்கும்
காதலுக்கு ஜே (அபூர்வ சகோதரர்கள்)
தோளின்மேலே பாரம்
இல்லே (நினைவெல்லாம் நித்யா)
பேச்சி பேச்சி
பெருமையுள்ள பேச்சி (எ.ஊ.பாட்டுக்காரன்)
வேட்டிய மடிச்சுக்கட்டு
(ஜப்பானில் கல்யாணராமன்)
ஊரு விட்டு ஊரு
வந்து (கரகாட்டக்காரன்)
மாமா.. உன பொண்ணைக்கொடு
(ராஜாதி ராஜா)
மாமாவுக்கு குடுமா
குடுமா (புன்னகை மன்னன்)
உச்சந்தல உச்சியில
உள்ளிருக்கும் புத்தியில (சின்னதம்பி)
கும்தலக்கடி
கும்தலக்கடி பாட்டு (மன்னன்)
போடா போடா புண்ணாக்கு
(என் ராசாவின் மனசிலே)
மொட்டமாடி மொட்டமாடி
ஒரு லவ்ஜோடி லவ்ஜோடி (அஞ்சலி)
ஊரு சனம் தூங்கிருச்சு
ஊதக்காத்து அடிச்சிருச்சு பாவி மனம் தூங்கலியே அதுவும் ஏனோ தெரியலியே
( மெல்லத்திறந்தது
கதவு)
உச்சி வகுந்தெடுத்து
பிச்சிப்பூ வச்ச கிளி பச்சமலப்பக்கத்துல மேயிதுன்னு சொன்னாக (ரோசாப்பூ ரவிக்கைக்காரி)
10. கனவுப் பயணம்
ஏதாவது ?
நான் செத்து
நான் பிணமாக நாலு பேர் தூக்கி போவதை நானே பார்க்க
ஆசை
அன்புடன்
மதுரைத்தமிழன்
அட அட அட.. என்ன ஒரு அருமையான பயணம். அதுசரி.. அந்த பாடல்கள் அத்தனையையும் டைப் பண்ணீங்களா இல்லாட்டி கோப்பி அண்ட் பேஸ்ட் பண்ணினீங்களா.. ?
ReplyDeleteபத்தில் சொன்னது போல எனக்கும் பல வித்தியாச ஆசைகள் உண்டு. இந்தப் பதிவு கொஞ்சம் தெளிவாக வந்துருக்கே?
ReplyDeleteஅருமை
ReplyDeleteதங்களின் கனவுப்பயணம் அருமை.
ReplyDeleteசுவாரஸ்யம். ஏகப்பட்ட பாடல்களை லிஸ்ட் போட்டு விட்டீர்கள். ஆமாம், உடம்பு சரியில்லாமல் இருந்தீர்களோ? இப்போது நலமா?
ReplyDeleteகோகோ மிட்டாய் ஒரு பாக்கெட், காலை உணவு, போளி, கொய்யாபழம், பிரியாணி இன்னும் இன்னும் எல்லாவற்றையும் உள்ள அனுப்பிட்டு, ஏதோ கொறித்துவிட்டு என்று சொன்னால் இது கொஞ்சம் ஓவரா இல்ல,,,,
ReplyDeleteஅந்த ஆசை நிறைவேறனும் ,,அப்பவும் தங்கள் மனைவி,செல்ல நாய்குட்டியுடன் தானே
பாட்டெல்லாம் (நமக்கு கடைசியில் இருந்து) நல்லா இருக்கு,
இதற்கு வாய்ப்பே இல்லையே,,
அனைத்தும் அருமையாக இருக்கு,,
என்னைப்போலவே பயணத்தில் அடிக்கடி தீனி ஆசைகள் உள்ளவராகத் தெரிகிறீர்கள். மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவிருப்பமான பயணத்துணைகளில் சில நிறைவேறாக ஆசைகள் புலப்படுகின்றன. சீக்கரமாக அவையும் நிறைவேற என் ஆசிகள்.
பயணத்தில் தாங்கள் முணுமுணுக்கும் பாடல்களில் பல எனக்குப் பிடித்ததாக உள்ளன.
உங்களின் கனவுப்பயண ஆசை உங்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே நிறைவேறப்போவது இல்லை. ஏனெனில் அது பேராசையாக உள்ளது.
உங்கள் பாணியில் இந்தப்பகிர்வு அருமை. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
6) சைனீஸ் மற்றும் ஹிஸ்பானிக் சேச்சிகள்தான் பிடிக்குமா? ஆமா வைட் ச்சிக்ஸ்க்கு என்ன குறைச்சல்? :)) நம்மாளுக எல்லாம் தேசிப் பொண்ணுங்கதான் பேரழகிகள்னு பிகர் பிகருதான்னு சொல்லிக்கிட்டு அலையும்போது நீங்களாவது பராவாயில்லையே கொஞ்சம் அர்த்தமான ரசனையாத்தான் இருக்கு!:)))
ReplyDelete10) அதென்ன அப்படி ஒரு ஆசை? யாரு யாரு அழுகிறா? யாரு எவ்வளவு உங்களை மிஸ்ப் பண்ணி கண்ணீர் விடுறாங்கனு அளந்து பார்க்கவா? This is a bad idea, bro,! Never look back, always look ahead when you are leaving from here. This is an ugly world if you did not learn that yet and so it is not worth looking back once we are done here! :)
ReplyDeleteரசித்தேன்...
ReplyDeleteபயணங்கள் முடிவதில்லை - நல்ல பதில்கள்....
ReplyDeleteஅருமை
ReplyDeleteரசித்தேன் நண்பரே
cool answers ...
ReplyDeleteasking too many questions irritates anyone...
indeed
i understood when you answered for the tenth questions..
அட! இது மதுரைத் தமிழனா!!!! ரொம்பக் கருத்தா (சின்சியரா!!!) போட்டுருக்கீங்க! ச்சே நல்லா ஏதாவது கலாய்ச்சு எழுதுவீங்கனு நினைச்சு வந்தா ஏமாத்திட்டீங்க..இல்ல நாங்க ஏமாந்துட்டோம். அழகான பயண பதில்கள். அதுலயும் ஜன்னலைப் பிடிச்சு ரயிலைத் தள்ளி ஓட்டிருக்கீங்க பாருங்க....ஹஹ்ஹ....
ReplyDeleteஅழகான அனுபவங்கள் மதுரைத்தமிழன் சார்!தேர்த்தெடுத்த பாடலக்ள் நீங்கள் எக்காலத்தவர் என உணர்த்துகின்றது! 80- 90ல் வெளி வந்த பாடல்களை ரசிக்க நீங்கள் 40 ல் பிறந்திருப்பீர்களோ?
ReplyDeleteகட்ட வண்டி கட்ட வண்டி பாடல் வந்த சகலகலா வல்லவன் நான் ஊரில் இருக்கும் போது பார்த்த முதல் படம் என நினைக்கின்றேன்.
உச்சந்தலை உச்சியில பாடல் பார்க்க சுவிஸுக்கு வந்து விட்டேன்!