Wednesday, February 15, 2012


என் மகள் டீச்சருக்கு கொடுத்த காதலர் தின வாழ்த்து கார்டு (படம் உதவி மதுரைத்தமிழன்)

காதலிப்பவர்களூக்கு வரும் ஹார்ட் அட்டாக் -காதலர் தின பதிவு


பஸ் ஸ்டாப்ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்அது உன் பக்கத்துல வரும்உனக்கு வியர்த்து கொட்டும்அவ தன்னோட அழகான உதட்டை திறந்து  இந்த லவ் லெட்டர்ஐ உங்க நண்பர்  கிட்ட கொடுத்துடுங்கன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாருங்க அது தான் மச்சி காதலிப்பவனுக்கு வரும்  ஹார்ட் அட்டாக்……

காதலர் தினபதிவை ஜோக் "ஜொள்ளி" ஆரம்பிக்கதான் நான் மேலே படித்த ஜோக். இப்ப என்னுடைய வாழ்க்கை அனுபவத்தில்  நான் நான் அறிந்த காதலை உங்களுக்கு சொல்லும்  பதிவுதான் இது.
என் மகள் டீச்சருக்கு கொடுத்த காதலர் தின வாழ்த்து கார்டு (படம் உதவி மதுரைத்தமிழன்)



காதல் என்பது மனங்களைக் கோர்த்து இணைவதுதான் கைகளைக் கோர்த்து இணைவதல்ல அது   கனவு  மாளிகையும் அல்ல 
புரிந்து  கொள்ளடி என் தோழியே . இளமையில் அரும்பும் காதல் இனிய உணர்வு மட்டும்தான் ஆனால் அது உண்மையாக மாறும் போது அது  முதுமை வரை வரக்கூடிய ஓரு இனிமையான  நிரந்தர பந்தமாகிவிடுகிறது. இனிய உணர்வாக ஆரம்பித்த காதல் விரைவிலேயே பலருக்கு ஒரு கசப்பான அனுபவமாகி விடுகிறது. அதன் பின் உண்மை  காதலை  நான்  தேடி  பார்கிறேன் அதை காணவில்லையே  என்று புலம்பாதே என் தோழியே

என் மகள் தோழிகளுக்கு கொடுத்த காதலர் தின வாழ்த்து கார்டு

இப்படி புலம்புவதற்கும் கசப்பான அனுபவத்திற்கும்  காரணம் கண்ணை மூடிக்கொண்டு காதலிப்பதும் , கல்யாணத்தோடு காதல் முடிவடைந்து விடுகிறது என்று நம் மனதில் மீடியாக்கள் மூலம்  விதைக்கபடுவதும்தான். அதனால் காதலிக்கும் போது கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு காதலியுங்கள், புரிந்து கொண்டு காதலியுங்கள். சிறிது யோசித்து பார்த்தால் "புரிந்து கொள்ளுதல்" என்கிற அம்சம் இல்லாமல் போவதால்தான் காதல் கல்யாணம் ஒரு  கசப்பான அனுபவமாகவே முடிகிறது.
என் மகள் தோழர்களுக்கு கொடுத்த காதலர் தின வாழ்த்து கார்டு

காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியாது. ஆனால் குறைகள் இல்லாத மனிதர்கள் என்று யாரும் கிடையாது. அதனால் நிறைய கவனியுங்கள் நிறைய கேளுங்கள் அவர்களின் குறைகளையும்  பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவைகள் நம்மால் பொறுத்து சகித்து கொள்ளகூடியவைதானா என்று  நன்றாக சிந்தித்து பாருங்கள். அதை ஏன் சொல்லிகிறேன் என்றால் அவைகள்  தினம் தோறும்  நீங்கள் சந்திக்கக்கூடியவை . அதனால் முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். அதன் பின் திருமணம் என்ற பந்தத்தில்  நுழையுங்கள் எதற்கு இதை சொல்லிகிறேன் என்றால் திருமணம் என்பது காதலின் முடிவு அல்ல அது ஒரு ஆரம்பமே என்பதை தெரிந்து கொள்ளத்தான்

காதலில் இருக்கும் போது குறைகளையும் பலவீனங்களையும் மாற்றுவது எளிது அந்த நேரத்தில் நம்மால் மாற்ற முடியவில்லை என்றால் கல்யாணத்திற்கு அப்புறம் மாற்ற முடியாது. அப்படி உங்களால் முடியாது என்றால் திருமண பந்தத்தில் நுழைந்து வாழ்க்கை முழுவதும் கண்ணிர் விட்டு கொண்டு இருப்பதைவிட அந்த காதலுக்கு அப்போதே குட்பை சொல்லி அழுதுவிட்டு புதிய வாழ்க்கை தொடங்கலாம்

வாழ்க்கை என்பது நீங்கள் பார்க்கும் சில மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை போககூடியது. அதனால் சினிமாவில் வரும் கற்பனை காதலை போல் இல்லாமல் உண்மையாக "புரிந்து கொண்டு" காதலித்து வாழ்க்கையில் வெற்றி பெற உங்கள் அனைவரையும் இந்த காதலர் தினத்தில், காதலில் விழுந்து வாழ்க்கை என்னும் பந்த கடலில் நீந்தி கொண்டிருக்கும்  மதுரைத்தமிழன் உங்களை வாழ்த்துகிறான்.
நான் உங்களுக்கு வழங்கும் காதலர் தின வாழ்த்து கார்டூ


நான் என்ன ரொம்ப கடிச்சுட்டேனா? அழுகாதீங்க இந்த ஜோக்கை படித்து சிரித்து விட்டு போங்க...

காதலி :வாழ்க்கையில சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்!"
காதலன் :  "நாம காதலிச்சதைச் சொல்றியா?" இல்லே! நம்ம கலியாணம் நடக்கப் போறதை பற்றி சொல்றியா?
!

காதலி: "நாம எப்பவும் சண்டை போடாம சந்தோஷமா ஒத்துமையா இருக்கணும்..."
காதலன்: அப்ப... கல்யாணம்... செய்துக்க வேண்டாம்ங்கிறே! உன் விருப்பம்!"

டிஸ்கி : இங்கு பள்ளி குழந்தைகள் தங்கள் டீச்சருக்கும் கூடப்படிக்கும் நண்பர்களுக்கும் அன்பை பகிர்ந்து கொள்ள வாழ்த்து அட்டைகளை பறிமாறிக் கொள்வார்கள். எனது மகளுக்காக நான் தயாரித்த கொடுத்த அட்டைகள்தான் மேலே படங்களாக நான் போட்டுள்ளது. முதல் 2 படத்தில் இருப்பது என் குழந்தை அவள் பெண் குழந்தையாக இருப்பதால்தான் அவள் கண்களை மறைத்துள்ளேன்.

3 comments:

  1. நீங்க உங்க மகளுக்கு தயாரிச்சு குடுத்த வாழ்த்து அட்டையிலே உங்க பக்குவம் தெரியுது சகோ. காதல்ன்னா அன்புதானே அந்த அன்பை யார்மீது வேண்டுமானாலும் காடாலாம் தராதரம் அறிந்து...
    ஆகவே உங்களுக்கும் என் அன்பர்கள் தின வாழ்த்துகள் சகோ

    ReplyDelete
  2. காதல் என்பது அன்புடன் சம்பத்தப்பட்டது என்பது போய்
    வெகு நாளாகிவிட்டது
    அதை மிக அழகாக ஞாபகப் படுத்திப் போகுது உங்கள் பதிவு
    பகிர்வுக்கு நன்றி
    காதல் தம்பதிகளுக்கு என் இனிய
    காதலர் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உங்களுக்கும் உங்கள் அன்பு மகளுக்கும்
    என் கனிவான வாழ்த்துக்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.