உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 14, 2014

காற்றில் கரைந்த காதல்....
காதலித்து கல்யாணம் பண்ணறது கூட கொடுமையல்ல ஆனா இந்த வேலண்டைன் தினத்துக்கு இவங்க போடுற பதிவுகளை படிப்பதுதான் கொடுமையிலும் கொடுமைடா...இந்த காதலர் தினத்தை காதலிப்பவனும் காதலித்து கல்யாணம் பண்ணுனவனும் கொண்டாடுறான். அது சரிதான். ஆனால் இப்ப காதலிக்காமல் கல்யாணம் பண்ணுனவனும் கொண்டாடுறான். கேட்ட நாங்க கல்யாணதிற்கு அப்புறம் காதலிக்கிறோம் என்று சொல்லுகிறார்கள். அதுவும் சரிதான் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அதை எல்லாம் கேட்டுகிட்டு பேசாம இருந்தா அவன் மதுரைத்தமிழன் கிடையாதே அதனால் இப்படி கல்யாணம் பண்ணியவர்களை ஊருக்குள் விசாரித்து பார்த்ததில் கல்யாணதிற்கு அப்புறம் அவங்க மனைவியை காதலிக்கவில்லையாம் வேறு பெண்களைத்தான் மறைமுகமாக காதலிக்கிறார்களாம். அப்படி போடு அருவாளை என்று சொல்லிவிட்டு நமக்கேன் இந்த வம்பு என்று வந்துவிட்டேன்


சரி இப்படி பதிவு அதாவது காதலர் தினம் பதிவு போடுவது கொடுமை என்றால் அப்ப நீங்கள் எதற்கு பதிவு போட்டீர்கள் என்றுதானே கேட்கீறிங்க ?..

நான் காதலித்தேன் கல்யாணம் பண்ணினேன் கொடுமையை அனுபவிக்கிறேன். அதனால் எனக்கு அதை பற்றி போடுவதற்கு உரிமை இருக்கிறது யாருக்கும் இல்லாத அந்த உரிமை உனக்கு எப்படி வந்தது என்று பராசக்தியில் வந்த வசனம் போல யாரும் கேட்க கூடாது. நான் மட்டும் கொடுமையை அனுபவிக்க வேண்டும் ஆனால் நீங்கள் மட்டும் எப்படி சந்தோஷமாக இருப்பது .அதனால் இந்த நாளில் நீங்களும் கஷ்டப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் இந்த பதிவு.


இது ஒரு அழகான காதல் கதை. என்ன மதுரைதமிழன் காதல் கதையெல்லாம் எழுத ஆரம்பித்துவிட்டானா ஏன் இந்த விபரிதம் என்று கேட்குறீங்களா?


அது ஒரு பெரிய கதைங்க.......உங்களுக்கு எல்லாம் தெரிந்த பதிவர் உஷா அன்பரசு இவர் சிறுகதை எல்லாம் மிக அருமையாக இருக்கும் தமிழகத்தில் இருந்து வரும் வார இதழ்களில் இவர் சிறுகதைகள் வெளிவரும் . அப்படி புகழ் பெற்றவர் சும்மா இருக்காமல் சில வாரங்களுக்கு முன்னால் எனக்கு போட்டியாக ஒரு மொக்கை பதிவை வெளியிட்டு இருக்கிறார். இப்படி சும்மா இருந்த மதுரைச் சிங்கத்தை அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.அதனால் அவருக்கு போட்டியாக நானும் சிறுகதையை எழுதி இருக்கிறேன்.


காற்றில் கரைந்த காதல்......ரத்னாவின் செல்போன் அதிகாலையில் சிணுங்கியது.. அதை எடுத்ததும் மறுமுனையில் மதுரைத்தமிழனின் இனிய குரல், "செல்லக் குட்டி குட்மார்னிங்க்" என்று சொல்லியது. அதை தொடர்ந்து காதலர் தின வாழ்த்துடன் சில முத்தங்களும் சேர்ந்து கிடைத்தன.அதன் பிறகு ரத்னா மதுரையிடம் இப்படி வாழ்த்து சொன்னா மட்டும் பத்தாது இன்று நீங்கள் நேரில் வந்து வாழ்த்து சொல்லனும் என்றாள்.அதற்கு மதுர, செல்லக்குட்டி நான் கண்டிப்பாக வரேண்டா ஆனால் இரவு ஏழு மணியளவில்தான் வரமுடியும் காரணம் இன்று வெளிநாட்டில் இருந்த வந்த ஆட்களோடு நாள் முழுவதும் மீட்டிங்க் இருக்கிறது என்றான்.அதற்கு ரத்னாவும் சரியென்று சம்மதித்துவிட்டு சொன்னாள்..என்னங்க இன்று இரவு சாப்பாடு என் கையால் சமைச்சதைதான் பறிமாறுவேன் அதிலும் நான் உங்களுக்கு பிடித்த உணவு வகைகளாக பார்த்து பார்த்து பண்ணி வைக்கிறேன். அதனால் கண்டிப்பாக சொன்ன நேரத்திற்கு வந்துவிடுங்கள் என்றாள்.அதன் பின் அன்று முழுவதும் சந்தோஷமாக பாட்டு பாடி வீட்டை சுத்தம் செய்து சமைக்க தொடங்கினாள்.மாலை நேரமும் வந்தது. அவனுக்கு பிடித்த மாம்பழக் கலர் புடவை அணிந்து அதற்கு பொருத்தமாக சிவப்பு கலர் சட்டை அணிந்து தலை நிறைய மல்லிகை பூ சூடி நெற்றியில் பொட்டு வைத்து சும்மா ஜக ஜக வென ஜொலித்தாள். மணி 7: 20 ஆகியும் அவன் வரவில்லை.அவனுக்கு போன் அடித்து அடித்து பார்த்தாள் அதையும் அவன் எடுக்கவில்லை. என்றுமே அவன் இப்படி நடந்தது கிடையாது சொன்னால் சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவான் ஒரு நொடி கூட தவறுவதில்லை சொன்ன வார்த்தைகளையும் மீறினது இல்லைஇறுதியாக 7;30 க்கு வந்தான்.. அவன் மிகவும் சோர்வாக வந்தான் . அதனைப் பார்த்ததும் ரத்னா டேய் என்னடா ஆச்சு ? நீ ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? ஆபிஸில் ஏதும் பிரச்சனையா என்றாள். அதற்கு அவன் அதெல்லாம் ஒன்றுமில்லை வர வழியில் ஒரு ஆக்ஸிடென்ட் அதனால் டிராபிக் ஜாம் ஆகிவிட்டது அதனால்தான் லேட்டு என்றான்.அப்போது ரத்னாவின் போன் மீண்டும் ஒலிக்க தொடங்கியது அதை எடுத்து பேசும் போது மறுமுனையில் மதுரையின் அம்மா போனில் வந்தார். அவரது குரலில் ஒரு நடுக்கமும் அழுகையும் இருந்தது. அவள் சொன்னாள் ரத்னா நம்ம மோசம் போய்விட்டோம் அம்மா நம்ம மதுர உன் வீட்டிற்கு வரும் வழியில் ஆக்ஸிடன்டில் அடிப்பட்டு ஹாஸ்பிடலுக்கு செல்லும் வழியில் இறந்துவிட்டானம்மா என்று சொல்லி கதறி அழுதார்கள்ரத்னா என்னம்மா சொல்லிறீங்க என்றவாறே குழப்பத்துடன் மதுரையை திரும்பி பார்த்தாள் அவனோ சிரித்தாவறே கையில் ஒரு மெழுகு வைத்தியை ஏற்றி வைத்து கொண்டு ரத்னா நான் என்றும் சொன்ன வார்ததை தவறியதில்லை அதனால் உன்னை பார்க்க வந்துவிட்டேன் என்று சொல்லி அந்த மெழுகு வர்த்தி கரைவது போல காற்றில் கரைந்து மறந்துவிட்டான்...The End..
டிஸ்கி: அப்ப இங்கு பதிவு எழுதும் இந்த மதுரைத்தமிழன் யாரு என்று கேட்கீறீங்களா.? இவந்தான் அந்த மதுர ..ஆமாங்க அந்த மதுரைதான் இப்ப பிசாசாக வந்து கல்யாணம் செய்து தினமும் பூரிக்கட்டையால் அடிவாங்கி கொண்டிருக்கிறான். ஹீ.ஹீ
கதையின் கரு ஆங்கிலத்தில் வந்த ஒரு சிறு காதல் துணுக்கை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது
மதுரைத்தமிழனும் காதலர் தின கொண்டாட்டமும்:இன்று காதலர் தினமாம் அதனால் நான் என் மனைவியின் காதில் வாழ்த்தை சொல்லிவிட்டு கன்னத்தில் சத்தமில்லாத ஒரு முத்தம் தந்தேன். பதிலுக்கு அவள் நச் என்ற சத்தத்துடன் எனக்கு திருப்பி தந்தாள் அது முத்தம் அல்ல வழக்கமாக தரும் பூரிக்கட்டை பூஜைதான்.சற்று நேரம் கழித்து வீட்டிற்கு போன் வந்தது அதை எடுத்த பேசிய அவளிடம் நம்ம பதிவர் ராஜி என்ன அண்ணி என் அண்ணனை இப்படி போட்டு அடிக்கிறீங்களே என்று கேட்டார்.அதற்கு என் மனைவி , நாத்தனாரே அடிக்கிற கைதான் அணைக்கும் என்று சொல்லி போனை அனைத்துவிட்டாள்.அதன் பின் என் மனைவி இந்த விஷயம் எப்படி உங்கள் தங்கைக்கு தெரியும் என்று முறைத்தாள். அவள் முறைப்புக்கு பயந்து நான் டிவியை ஆன் செய்தேன். அதில் அப்படி போடு போடு என்ற பாடல் ஒடிக் கொண்டிருந்தது. அதனால் அதை உடனே அணைக்க முயன்றேன். இருந்தாலும் அந்த பாடல் என் மனைவியின் காதில் விழுந்துவிட்டது. அதற்கு அப்புறம் என்ன நடந்து இருக்குமென்று நான் சொல்லிதான் தெரியவேண்டுமா என்ன?அட இந்த பதிவு போட்டதால் நீங்களும் என்னை தேடி அலையிறீங்களா....... மீ எஸ்கேப்..

அன்புடன்
மதுரைத்தமிழன்..

21 comments :

 1. நீங்க பூரிக்கட்டையால அடி வாங்குறது போதாதுன்னு என்னையும் உங்க லிஸ்ட்ல சேர்த்துக்க பார்க்குறீங்களா!? நடக்க்க்க்க்க்க்க்க்காது சகோ!! நான் அண்ணி செல்லமாக்கும்:-)

  ReplyDelete
  Replies
  1. இப்படியும் ஒரு தங்கச்சி.....ச்சே........

   Delete
  2. அடிக்கு பயந்து அண்ணி கட்சியா என்ன? கவலைப்பாடாதீங்க் அடி அண்ணணுக்கு மட்டும்தான்

   Delete
 2. இப்படியும் ஒரு தங்கச்சி..... ச்சே.....
  >>
  இதனால் அறியப்படும் நீதி நான் உங்களை விட வயசுல சின்னவ

  ReplyDelete
  Replies
  1. இது ரொம்ப முக்கியம் (அக்கா) சகோதரி...! ஹா... ஹா...

   Delete
 3. // கொடுமையை அனுபவிக்கிறேன் // ஹா... ஹா... ஆனால் இது சந்தோசமான கொடுமை... இப்படி வெளிப்படையாக சொல்பவர்களின் வாழ்வு தான், அப்படி இருக்காது...! பூரிக்கட்டை பூஜை சாட்சி...! ஹிஹி...

  ரத்னாவின் நிலை... கதையாகவே இருக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தன்பாலன் இது சந்தோசமான கொடுமைதான்.. அதாவது நான் அடிவாங்குவது உங்களுக்கு சந்தோசம் எனக்கு கொடுமை என்பதை இவ்வளவு நாசுக்காக சொல்லிட்டு போயிட்டீங்க

   Delete
 4. //காதில் வாழ்த்தை சொல்லிவிட்டு கன்னத்தில் சத்தமில்லாத ஒரு முத்தம் தந்தேன்//
  இதுக்கு பூரிக்கட்டை பூசை ரொம்ப கம்மி... அம்மிக்கல் பூசை போட்டிருக்கணும்...

  ReplyDelete
  Replies
  1. அப்படி என்ன என்மேல் உங்களுக்கு இப்படி ஒரு கொலைவெறி இப்படி அம்மிக்கல் ஜடியா எல்லாம் தரீங்க? ஏதோ நான் செஞ்ச புண்ணியம் என் மனைவி இந்த ஏரியாவிற்கு தலை வைக்க மாட்டாங்க இல்லைன்னா இந்நேரம் எனக்கு சங்குதான்

   Delete
 5. 10 கர்ச்சீப் நனைஞ்சு போச்சு உங்க சிறுகதை படிச்சி... அலுது.....வேண்டாம் பாஸ் இப்படி எல்லாம் எனக்கு போட்டியா வந்துடாதீங்க............ வேணும்னா உங்களுக்கு பூரிக்கட்டை அடில்லாம் கொடுக்கவேணாம்னு உங்க ஹவுஸ் பாஸ் கிட்ட ..' மதுரை ரொம்ப நல்லவரு... வல்லவரு..' அப்படின்னு ரெகமண்ட் பண்றேன்....!

  உங்க வீட்ல வெளுப்பது எப்படின்னு சொல்லிகொடுத்திட்டீங்க.... அதுக்கென்ன அன்பை அன்பா அடிச்சு துவைச்சி காயப்போட்டுடறேன்.... உங்களுக்கு ஒரு கம்பெனி வேணும்ல... ஹா... ஹா...!


  ReplyDelete
  Replies
  1. நீங்க விவரம் இல்லாதா ஆளா இருக்கீங்க 10 கர்ச்சிப்பா உபயோகிப்பாங்க. அதுக்கு பதிலா ஒரு பெட்சீட் உபஜோகித்து இருக்கலாம்தானே?


   ஹீ.ஹீ.ஹீ. இப்படிபயம் இருந்தா சரி... நான் போட்ட ஒரு கதைக்கே இப்படி அழுகுறீங்க சரி போனா போதுன்னு இந்த தடவை மன்னிச்சு விட்டுடுறேன் பொழைச்சுகிட்டு போங்க

   எங்க ஹவுஸ் பாஸ்கிட்ட மட்டும் வல்லவரு நல்லவரு என்று மட்டும் சொல்லீடாதீங்க. அப்புறும் அதுக்கும் சேர்த்து வைச்சு வட்டிக்கு முதலா கிடைக்கும் காரணம் வேறு எந்த பொண்ணும் தன் கணவரை வல்லவர் நல்லவர் என்று சொல்லிட்டா அப்படியே பொங்கிருவாங்க

   Delete
 6. உங்களை தொவைச்சதை பாராட்டி த.ம ஓட்டு போடனும் கொறைஞ்சது 10000 ஒட்டாவது.. .

  ReplyDelete
 7. காதலர்தினத்திலும் பூரிகட்டைதானா....... அய்யோ........பாவம்............!!!! இதைத்விர எனக்கு வேறு ஒன்றும் ரெியாது.

  ReplyDelete
 8. இந்த கதையை எங்கோ ஜோக் மாதிரி படித்த நியாபகம்! உங்க பாணியில் சிறப்பா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. திகில் கதை நல்லாவே இருக்கு. மதுரை தமின்தான் வித்தியாசமானவன்னா அவங்க அம்மாவும் அப்படித்தான் போல இருக்கு. பையனோட காதலி போன் நம்பர் எல்லாம் தெரிஞ்சு வச்சுருக்காங்களே!
  ==============================
  பல பெண்களோட உண்மையான ஆசையை படம் போட்டு காட்டிட்டீங்க. பெண்கள் ஒட்டு எல்லாம் உங்களுக்குத்தான்

  ReplyDelete
 10. "''காதலித்து கல்யாணம் பண்ணியவன் கொடுமையை அனுபவிக்கிறேன்//" - இதை படிச்சவுடனே, ஒரு ஜோக் தான் நியாபகம் வந்துச்சு.
  காதலிச்சு கல்யாணம் பன்றவன் தானே போய் கிணத்துல விழுந்து தற்கொலை பண்ணிக்கிறான். வீட்டுல பார்த்த பெண்ணை கல்யாணம் பண்ணிக்கிறவனை பத்து பேர் பிடிச்சு கிணத்துல தள்ளிவிடுறாங்க.
  ஆக மொத்தத்துல கல்யாணம் பண்ணிக்கிறவன் பாழுங் கிணத்துல போய் விழுறான். எப்படி போய் கிணத்துல விழுறான்.

  ReplyDelete
 11. நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கீங்கன்னு உங்க கதை சொல்லுது. ஆனா அது வெறும் கதையாகவே இருக்கட்டும்.

  ReplyDelete
 12. இங்கள் சிறுகதை மெழுகில் கரைந்து மதுர கரைந்தது போல மனதைக் கரைத்து விட்டது! பாராட்டுக்கள்!

  இன்று காதலர் தினமாம், மனைவியின் காதில்.............வழக்கமான பூரிக்கட்டை பூசைதான்......

  அதானே பார்த்தோம், எங்கே மதுரைத் தமிழனின் வழக்கமான லொள்ளு இல்லாம ஒரு கதையா.....னு..!

  ஒரு பூரிக்கட்டைய வைச்சே இப்படி சுழட்டோ சுழட்டுனு நகைச் சுவையில சுழட்டுரீங்களே! ரொம்...............ப வே ரசிக்கின்றோம்!!!!! உங்கள் கற்பனையை!

  ReplyDelete
 13. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
  காதலிச்சது ........கல்யாணம் பண்ணியது சரி.
  கல்யாணச் சீராக எவ்வளவு பூரிக்கட்டை தந்தாங்க?
  இது வரை எவ்வளவு யூஸ் பண்ணியிருக்காங்க?
  balance ஸ்டாக் எவ்வளவு ?

  ReplyDelete
 14. சூப்பருப்பா... ஆனா... நல்லா தொவச்சிக்கினாய்ங்கள்ல...? மானா தானா...!

  சலவைக்கு அப்பால கிளிப்பு போட்டு காய வச்சுக்கினாங்களா...? இல்ல கிழிச்சுப் போட்டு காய வச்சுக்கினாங்களா...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

  ReplyDelete
 15. :)))))

  காதலர் தினம் சிறப்பு பகிர்வு மிகவும் அருமை! அந்த கார்ட்டூன் செம!...... நான் சுட்டுக்கிட்டேன்!

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog