உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 14, 2015

காதலர் தின கிறுக்கல்கள்
காதலர் தின கிறுக்கல்கள்

என்னங்க இன்று என்ன Dayங்க என்று உங்களுக்கு தெரியுமா?
ஒ எனக்கு நல்லா தெரியும் இன்று சட்டர்டேய் தான்.
உங்கள்கிட்ட்டே கேட்டேன் பாருங்க.. போங்க போய் காலண்டரை பார்த்துவிட்டு சொல்லுங்க?
அடியே காலண்டரை பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் இன்று சனிக்கிழமைதாண்டி
உங்களை போய் கல்யாணம் பண்ணினேன் பாருங்க அதுக்கு என் தலையில் நானே அடிச்சிகிடனும்
இது என்னடி புதுப்பழக்கமா இருக்கு வழக்கமாக என் தலையில் தான் பூரிக்கட்டையால் நீ அடிப்பே ஆனால் இன்று மாற்றி சொல்லுகிறாயே  இரு இரு ஏதுக்கும் காலண்டரை பார்க்கிறேன் இன்று பெளர்ணமியா என்று..


என்ன நக்கலா நல்லா பாருங்க இன்று காதலர் தினம் என்று போட்டு இருப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா என்ன?

ச்சே அதைப் போய் மறந்துட்டேனே சரி சட்டுபுட்டுன்னு குளிச்சிட்டு வா நாம பீச்சுக்கு அல்லது பார்க்கிற்கு போய்விட்டு வருவோம்.

அங்க ஏதுக்குங்க போகனும்?

ஏய் அங்கதாண்டி இலவச அடல்ட் லைவ் ஷோ நடக்கும்.

அடக் கருமமே இந்த வயசுல புத்தி போகிறத பாரேன் நீ எல்லாம் ஒரு மனுஷனாய்யா?


அது சரி காதலர் தினத்திற்கு எல்லா காதலனும் தன் காதலிக்கு flower வாங்கி தருகிறார்கள் அதையாவது நீங்கள் வாங்கி வந்தீர்களா?

அடி செல்லம் நீ இப்படி கேட்பேன் என்று தெரிஞ்ச்சுதான் நான் நேற்றே flower வாங்கி அது வாடாமல் இருக்க ப்ரிஜ்ஜில் வைத்திருக்கிறேன் போ போ அதை போய் நீயே எடுத்துக்கோ அதைப்பார்த்ததும் நீ உன்னையே மறந்துடுவாய்..


சரி மக்களே என் மனைவி கிச்சனில் போய் flower யை எடுப்பதற்கு முன்னால் நான் எஸ்கேப் பண்ணிக்கிறேன் இல்லை என்றால் நான் பதிவு எழுத உயிரோட இருக்கமாட்டேன்

என்ன காரணம் என்று கேட்கிறீங்களா? அதை என்னான்னு சொல்லுறது.. நான் நேற்று சரக்கு அடிச்ச மயக்கதில் என் மனைவிக்கு flower வாங்குகிறேன் என்று காலிப்பளவர் வாங்கி வைச்சது எனக்கு இப்ப ஞாபகம் வந்திடுச்சே

அப்ப நான் வாரேன் முடிஞ்சா நீங்களும் ஒடிப் போயிடுங்க இல்லைன்னா பூரிக்கட்டையை எடுத்து வரும் மனைவி என்னக் காணாத கோபத்தில் உங்களை அடித்துவிடப் போகிறாள்காதலர் தினத்தை ஒட்டி நான் பேஸ்புக்கில் கிறுக்கியவை

காதலிச்சேன்
கல்யாணம் பண்ணிகிட்டேன்
அழகான பெண்னை பெத்துகிட்டேன்
இப்பவும் காதலிக்கிறேன்
ஆனா அது யாரு என்று மட்டும் எங்கிட்டே கேட்காதீங்க நான் சொல்லமாட்டேன்
சொன்ன  பூரிக்கட்டையால் அடி வாங்கிறது நாந்தானே

'கிப்ட்' இல்லாமல் சொல்லப்படும் காதல் இன்று ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை

தமிழக காதலர்களே உங்கள் காதலை ரிஜிஸ்டர் ஆபிஸில் ரிஜிஸ்டர் பண்ணி வைத்து கொள்ளுங்கள் இல்லையென்றால் அமெரிக்க மாப்பிள்ளை வந்து உங்கள் காதலியை கல்யாணம் பண்ணி தூக்கி கொண்டு போய்விடுவார்கள். ஜாக்கிரதை.....


காதலித்து கல்யாணம் பண்ணியவர்களை ஒடிப் போயிட்டாங்க என்று நம் சமுகம் சொல்கிறது. ஆனால் காதலித்து கல்யாணம் பண்ணிய நான் சொல்லுகிறேன் ஒடுகிற சக்தி எல்லாம் எங்ககிட்ட இல்லை அதுனால நாங்க ஆட்டோ பிடிச்சுதான் போனோமுங்க #நான் காதலிச்சது நிறைய பொண்ணுங்களை ஆனா கல்யாணம் பண்ணியது ஒரே ஒரு பொண்ணைதானுங்க அதை நினைச்சா இப்ப வருத்தமா இருக்குங்க


காதல் பூக்களை போலத்தான் அது மலர்ந்து மகிழ்ச்சியை தந்து அதன் பிறகு வாடி உயிரைவிட்டுவிடும்

கலாச்சார காவலர்கள் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களாம் முடிஞ்சா காதல் கவிதை எழுதுறவங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிங்கப்பா

அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments :

 1. உங்கள் கிறுக்கல் நல்லா இருக்கு...பகிர்வுக்கு நன்றி...
  மலர்

  ReplyDelete
 2. தமிழ் சினிமாவில அமெரிக்க மாப்பிள்ளைகள் திரும்பிப் போவதற்காகவே வருபவர்கள்.நிசத்தில் நேர் எதிரோ

  ReplyDelete
 3. நாளுக்கு ஏற்ற பதிவு.

  ரசித்தேன் மதுரைத் தமிழா.

  ReplyDelete
 4. காலிப்பிளவர்...... சே.... இந்த அமேரிக்க மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்ட மாமீ பாவம் தான்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog