ஹார்ட் அட்டாக் பைபாஸ் சர்ஜரி (by bass surgery ) - இளகிய மனதுள்ளவர்கள் பார்க்க வேண்டாம்
இந்தியாவில் பலர் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் தாக்கி உயிரை இழந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நல்ல உணவு பழக்க வழக்கம் இல்லாமல் இருப்பதும், சிகரெட் புகைப்பதும் , வேலையில் அதிக மன அழுத்தம் மற்றும் சரியான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பதும் ( அழகான சேலை கட்டிய பெண்களை அடிக்கடி பார்ப்பதும் )ஆகும்.
முன்பு எல்லாம் வெளியில் சாப்பிடும் பழக்கம் மிக குறைவாகவே இருக்கும் ஆனால் இப்போது வீட்டில் சாப்பிட்டால் கூட அந்த உணவு ஹோட்டலில் இருந்து வாங்கி வந்ததாகவே இருக்கிறது. அதுவும் பிரியாணி அல்லது எண்ணெய் அல்லது டால்டா. நெய்யில் பொரித்த உணவு வகைகளாகவே இருக்கிறது அதுவும் ஹோட்டலில் மீண்டும் மீண்டும் எண்ணெயை சுட வைத்து உபயோகப்படுத்துவது மிகவும் டேஞ்சர் அது புரியாமல் வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று வாங்கி சாப்பிடுபவர்கள் அதிகம் அதனால் இளம் வயதில் மரணத்தை தொடுபவர்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றனர்.
அப்படிபட்டவர்கள் நிச்சயம் கிழ்கண்ட வீடியோவை பார்க்க வேண்டும் ( இளகிய மனதுடையவர்கள் பார்க்க வேண்டாம்)
அட்டாக் பற்றி கவலை இல்லை என்பவர்கள் இதை பார்த்த பின் உடல் நிலையில் கொஞ்சமாவது அக்கறை கொள்வார்கள் என்பது நிச்சயம்
Bypass Surgery on a Beating Heart. Arie Blitz, MD,
FACC
நமது சகபதிவாளர் உயர்திரு. தருமி சார் மரணத்துடன் விளையாடி வென்றவர் அவரது அனுபவத்தை இங்கு சென்று படியுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
விழிப்புணர்வு பதிவு. வருமுன் காப்பதே சிறந்தது அல்லவா?
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. !
’அறிமுகத்திற்கு’ நன்றி.
ReplyDeleteமுதல் காணொளி வரவில்லையே .. கத்தி .. கபடாவோடு உள்ள காணொளி காண ஆசை!!
முற்றிலும் உண்மை தற்போது ஹோட்டலில் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. எந்த ஹோட்டலுக்கு சென்றாலும் கூட்டத்திற்கு குறைவில்லை.உண்மையில் வீட்டில் சமைக்கிரார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது.
ReplyDelete*****************
இணைப்பில் உள்ள தருமி அவர்களின் பதிவை இப்போதுதான் படித்தேன். தனக்கு நடந்த இருதய சிகிச்சை பற்றி விரிவாக தனக்கே உரிய பாணியில் அற்புதமாக எழுதி இருக்கிறார். அதைவிட ஆச்சர்யம் 2005 இல அந்தப் பதிவு எழுதி இருப்பதுதான்.அப்போது இணையம் பற்றியே நான் அதிகமாக அறிந்திருக்கவில்லை.
******************
தங்களுக்கு யாஹூ முகவரியில் தங்கள் பதிவு பற்றிய ஒரு தகவல் மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். நேரம் இருந்தால் பதிலஞ்சல் அனுப்பவும் .
நிச்சயம் வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்....
ReplyDeleteகாணொளி மாலையில் வந்து பார்த்து விடுகிறேன்....
Thank you for sharing this avesome clips
ReplyDelete