உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, November 10, 2011

எனக்காக நான் வாழ்வது எப்போது?


எனக்காக நான் வாழ்வது எப்போது?நான் இன்று வழக்கம் போல பதிவுகள் படித்துகொண்டிருந்தேன். அப்போது எனது பெரும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு.ரமணி சார் எழுதிய இந்த பதிவை படித்த பின் என் மனதில் தோன்றியதுதான் இந்த கிறுக்கல். ரமணிசார் அவர்களின் பதிவு எப்போதும் நம்மை சிந்திக்க தூண்டும். அவர் நல்ல குடும்பத்தலைவர் மட்டும் அல்ல எல்லோரையும் அன்போடு அணைத்து செல்வதில் ஒரு நல்ல மனிதர் கூட. நான் இந்தியா சென்ற போது அவரை சந்திக்க வேண்டுமென்று நினைத்து இருந்தேன் நேரம் இல்லாமையால் முடியாமல் போயிற்று. அப்போதுதான் நினைத்தேன் ஒரு நல்ல மனிதரை சந்திக்க முடியாமல் நாம் என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று?

மரணம் பற்றிய எனது எண்ணங்கள் :

ஓவ்வொரு மனிதனும் பிறக்கும் போதே அவனது மரண நாளும் குறிக்கப்படுகிறது. அதை மாற்ற எந்த ஆத்திக நாத்திக வாதிகளாலும் முடியாது. கடவுள் மீது தீராத பக்தி கொண்டவனும் அல்லது விஞ்ஞானத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டவானலும் கூட மாற்ற முடியாது.அப்படி இருக்கும் போது ஏன் இந்த மனிதர்கள்(தலைவர்கள்) இப்படி ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தால் மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.மரணத்தை கண்டு நான் அஞ்சுவதில்லை ஏனென்றால் நான் அதை நம்புவதில்லை.மரணம் என்பது நம்மை ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு அழைத்து செல்வதுதான். நான் எப்படி இந்தியாவில் இருந்து அமெரிக்கா வந்தேனோ அது போலத்தான் நான் இந்த உலகத்தில் இருந்து வேறு உலகத்திற்கு இடம் மாறுகிறேன். இதற்க்காக நான் சந்தோஷப்பட வேண்டுமே தவிர அழுதுவதில் எனக்கு இஷ்டம் இல்லை


இப்போது எனது தலைப்பிற்கு வருகிறேன்பிறக்கும் போதே எனது மரணநாள்  நிர்ணியக்கபடுவதால்

இந்த இடைப்பட்ட காலத்தில்


நான் எனது எண்ணப்படி வாழ விரும்பிகிறேன்.


ஆனால்

பிறந்தது முதல் இளைஞானாக இருக்கும் வரை பெற்றோரால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

வாலிப வயதில் காதலியால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

அதன் பின் மனைவியால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

பின் குழந்தைகளால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

இறுதியாக டாக்டரால் கட்டுபடுத்தப்பட்டு

எனது மரணநாளை சந்திக்கிறேன்.

இப்போது சொல்லுங்கள் நான் எனக்காக வாழ்வது எப்போது?

ஆனாலும் எனக்குள் ஒரு சந்தோஷம்

எனக்காக நான் வாழவில்லை என்றாலும்

மற்றவர்களுக்காக நான் வாழ்ந்ததில்

அதனால் நான் மரணத்தை கண்டு அஞ்சுவதில்லை.மரணம் என்பது பற்றி நான் சிறுவயதில் படித்ததை நான் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.

நாம் இறந்தவர்களுக்காக அழுவதில்லை ஆனால் அவர்களால் நாம் பெற வேண்டிய ஏராளமான சந்தோஷங்களை நாம் வீணாக இழக்கிறோம் என்ற சுயநல மனவருத்தத்தினால் மட்டும் நாம் அழுகிறோம்.( இதெல்லாம் சிறுவயதில் படித்தாயா என்று கேட்காதீர்கள். அப்போது ஒரு புத்தக புழுவாக நான் இருந்தேன் குறிப்பு : பள்ளி புக் அல்ல)

அதுதான் உண்மை இந்த கருத்துக்கு மாற்று கருத்து உண்டா? அமெரிக்காவில் ஒருத்தர் இறந்துவிட்டார் என்று நீங்கள் கேள்விபட்டால் நீங்கள் அழுவதுண்டா இல்லை ஆனால் உங்களுக்கு தெரிந்தவர் உறவினர் இறந்தால் நீங்கள் வருந்துவதுண்டு.

ஒரு நடிகர், இசை அமைப்பாளார், நல்ல தலைவர் அல்லது காமெடிதலைவர்கள் மற்றும் நமக்கு தெரிந்தவர்கள் மரணிக்கும் போது நாம் வருந்துவதுண்டு காரணம் அவர்களால் நாம் பெற்ற ஏராளமான அனுபவங்கள் அதை நாம் மேலும் பெற முடியாதால் நாம் வருந்துகிறோம்இறுதியாக நான் கூறுவது.

அன்பை வெளிபடுத்த காலம் தாழ்த்தாதீர்கள் ஏனென்றால் அவர்கள் போன பிறகு நீங்கள் எப்படிதான் கத்தி கதறி அழுதாலும் அவர்களின் காதில் விழுவதில்லை. அதனால் மனதில் இருக்கும் அன்பை அவர்களின் நலத்தை எந்த அளவிற்கு விரும்புகிறிர்கள் என்பதை காலம் தாழ்த்தாமல் உடனே வெளிப்படுத்துங்கள்.இந்த உளரல் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலும் இல்லையென்றாலும் அந்த பெருமை  இதை எழுத தூண்டிய ரமணி சார் பதிவுக்கு தான் சேரும். அப்பாடி எப்படியோ ரமணி சார் பெயரை இங்கே இழுத்துவிட்டாச்சு ஒரு பயலும் இனிமேல் குறை சொல்லமாட்டார்கள்
எனது முந்தைய பதிவுகள் படிக்காதவர்களுக்கு ஒரு அறிமுகம்

2. மௌனமாக ஒரு அலறல்..
3. கருக்கலைப்பு (Abortion) பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது
  

நான் எப்போதும் பின்னுட்டங்கள் எதிர்பார்த்து பதிவுகள் போடுவதில்லை. அதே நேரத்தில் தரமான பின்னுட்டங்கள் வந்தால் சந்தோசப்படுவேன். எனது வலைப்பதிவை வந்து படிப்பவர்களுக்கும் ரெகுலராக வருபவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எனது பதிவை படிப்பதினால் பின்னூட்டம் போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு நேரமும், மனதும் ,சொல்ல நல்ல கருத்துகள் இருந்தால் மட்டும் போடுங்கள். அது போல நான் உங்கள் பதிவுகளில் வந்து கருத்து போடுவதனால் நீங்களும் பதிலுக்கு வந்து கருத்து சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. நட்புடன் மதுரைத் தமிழன்

12 comments :

 1. ஒரு வார்த்தை மனதில் உறைக்கும்போது வெளிக்கிளம்பும் சிந்தனைகளின் பதிவாக இருக்கிறது. ஒரு விசயம் மட்டும் குறைகிறது. ஒருவர் இறந்தபின் அழும்போது நாம் அவர்களுக்கு செய்ய நினைத்ததை செய்யாமல் விட்டுவிட்ட ஏக்கம்தான் அதிகம் இருக்கும். நல்ல பகிர்வு.

  ReplyDelete
 2. அருமையான தெளிவான அவசியமான பதிவு
  நாடுவிட்டு நாடு போவதைப் போல என்கிற உதாரணம்
  மிக அருமையான உதாரணம்
  ஆயினும் அந்த பக்குவத்தை அவ்வளவு எளிதில்
  அனைவரும் அடைதல் என்பது மிகக் கடினமே
  நான் அந்த அந்த நொடியில் வாழ்தல் என்று சொன்னதைவிட
  அன்பு செய்து வாழுதல் என நீங்கள் சொல்லிப் போனது அருமை
  அடுத்து பதிவுகள் செய்கையில் இதைக் கவனத்தில் கொள்வேன்
  என்னைப் பற்றி குறிப்பிட்டிருப்பதை கொஞ்சம் குறைத்திருந்தால்
  தங்கள் கருத்து இன்னும் மிகச் சிறப்பாக படிப்பவர்களைப் போய்ச்
  சேர்ந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து
  அருமையான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்
  தொடர்ந்து சந்திப்போம்

  ReplyDelete
 3. @சாகம்பரி அவர்களுக்கு இந்த அதிகாலையில் நேரம் ஒதுக்கி என் பதிவை படித்ததும் அல்லாமல் நல்ல சிந்திக்க கூடிய கருத்தாக சொன்னதற்கு மிக நன்றி.

  ReplyDelete
 4. @ரமணி சார்

  ///என்னைப் பற்றி குறிப்பிட்டிருப்பதை கொஞ்சம் குறைத்திருந்தால் தங்கள் கருத்து இன்னும் மிகச் சிறப்பாக படிப்பவர்களைப் போய்ச்
  சேர்ந்திருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து///
  உங்களைப் பற்றியும் சேர்த்து சொன்னதால் நான் சொன்னகருத்துக்கு இன்னும் அதிக அளவு வலு சேர்த்தாக நான் கருதுகிறேன்

  //அருமையான பதிவைத் தந்தமைக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து சந்திப்போம் //
  என்னை சிந்திக்க வைத்து இந்த பதிவை போட தூண்டிய உங்களுக்கும் உங்கள் பதிவுக்கும்தான் நான் நன்றி சொல்ல வேண்டும்.

  அதிகாலையில் நேரம் ஒதுக்கி என் பதிவை படித்தது மட்டுமல்லாமல் விரிவான பின்னுட்டம் தந்த உங்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றிகள்

  ReplyDelete
 5. அன்பின் மதுரை தமிழன் ( த் போட வேண்டாமா ) - என்னபடி (எண்ணப்படி) வாழ்வதுதான் சிறந்தது. வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக வாழ்வது சிறந்த செயல். தத்துவம் அருமை - இடம் மாறுகிறோம் - உடை மாற்றுகிறோம் - உடல் மாறுகிறோம் - அவ்வளவு தான் மரணம் - சிந்தனை நன்று - இருக்கும் வரை அன்பினை அனைவருக்கும் கொடுக்க வேண்டும். அறிவுரை - சிந்தனை நன்று. நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா.

  ReplyDelete
 6. சீனா ஐயா அவர்களுக்கு நன்றியும் வணக்கங்களும்

  பிழைத் தவறை சூட்டிகாட்டியதற்கு மிகவும் நன்றி! சிறந்த கருத்தை வழங்கியதற்கும் மிகவும் நன்றி


  எனக்கு இது போன்ற நல்ல கருத்து பின்னோட்டங்கள்தான் தேவை அதை இன்று தெரிவித்த மூவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 7. பாண்டியராஜன் கூறியதை இங்கு நினைவு கூறுகிறேன்
  சில நாட்கள் மட்டுமே வாழும் தென்னம் மட்டை தன் இருப்பை மரத்தில் வடுக்களாய் பதிவு செய்து செல்வது போல் மனிதன் வாழ வேண்டும்..
  இதை என் வார்த்தைகளில் நான் சொல்வது...
  வாழ்வதற்காக சாகும் நாம், செத்த பிறகும் வாழ வேண்டும்...
  உடை மாற்றுவது எல்லாம் சமாதானமே...
  இந்த உலகில் அழிவே இல்லாத ஒன்று அணு மட்டுமே...

  ReplyDelete
 8. //அன்பை வெளிபடுத்த காலம் தாழ்த்தாதீர்கள் ஏனென்றால் அவர்கள் போன பிறகு நீங்கள் எப்படிதான் கத்தி கதறி அழுதாலும் அவர்களின் காதில் விழுவதில்லை. //

  இதை படிக்கும்போது ஓராயிரம், எண்ணம் மனதில் தோன்றுகிறது .
  காலம் கடந்து எதை செய்தாலும் பயனில்லை

  ReplyDelete
 9. அன்பை வெளிபடுத்த காலம் தாழ்த்தாதீர்கள் ஏனென்றால் அவர்கள் போன பிறகு நீங்கள் எப்படிதான் கத்தி கதறி அழுதாலும் அவர்களின் காதில் விழுவதில்லை.//

  சூப்பரா சொன்னீர்கள் அதை உடனே செய்துவிடுவது நன்று...

  ReplyDelete
 10. @மதுரைத்தமிழன்
  நமக்கு தான் இந்த வாழ்நாள் காலம் நீண்டதாகதெரியும். இறைவனுக்கு எல்லாமே ஒரு புள்ளி தான். எவன் உயிரை கொடுத்தானோ அவனே எடுத்துக்கொள்வான் என்று நாட்களை நகர்த்தினால் மரண வேதனை எவருக்கும் இருக்காது. மரணபயம் இருந்தால் தான் இறைபயமும் இருக்கும் என்பது என் கருத்து :-)

  ReplyDelete
 11. //பிறந்தது முதல் இளைஞானாக இருக்கும் வரை பெற்றோரால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

  வாலிப வயதில் காதலியால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

  அதன் பின் மனைவியால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

  பின் குழந்தைகளால் கட்டுப்படுத்தப்படுகிறேன்.

  இறுதியாக டாக்டரால் கட்டுபடுத்தப்பட்டு

  எனது மரணநாளை சந்திக்கிறேன்//

  நீங்கள் குறிபிட்டது போல்
  நமக்காக வாழ நாம் மறந்து விடுகிறோம் ...
  மரணம் என்பது நம் உடல் மட்டும் அல்ல ..
  நம்முடைய நினைவுகள் பூமியில் யாரோ ஒருவரின் சிந்தையில் இருக்கும் வரை
  நாம் வாழ்ந்து கொண்டிருகிறோம் ..
  நம் மூதாதையர்களை
  நாம் நினைவு கோலும் போது அவர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருகிறார்கள் ...
  உயிரோடு இருக்கும் போது மறத்தல் என்பது மரணித்து விடுவதை விட மோசமானது

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog