Monday, August 5, 2013




இப்தார் நோன்பு திறப்பு விழாவில் 'காமெடி சிங்கம் விஜயகாந்த்' சொற்பொழிவு


இன்று என்ன பதிவு எழுதலாம் என்று நினைத்த போது ஒரு விஷயமும் கிடைக்கவில்லை சரி நம்ம தமிழ் நாளிதழ்களை ஒரு முறை மேய்ந்து வந்தால் காமெடி பதிவு எழுத ஐடியா கிடைக்கும் என்று தினமலரை திறந்தால் முதல் பக்கத்தில் இந்த செய்தியை படித்தேன்.


நன்றி : தினமலர்

ஆல்கஹால் கலக்காத "பெர்பியூம்' பயன்படுத்துகிறேன்!': விஜயகாந்த் பேச்சு

சென்னை: ""எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு; அங்கிருந்து வாங்கி வரப்பட்ட, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் பயன்படுத்துகிறேன்; பேரீச்சம் பழம் சாப்பிடுகிறேன்,'' என, இப்தார் நோன்பு திறப்பு விழாவில், தே.மு.தி.., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

சென்னை கோயம்பேடு தே.மு.தி.., தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த, இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று, விஜயகாந்த் பேசியதாவது: இப்தார் நோன்பு பற்றி நிறைய பேசவேண்டும். இஸ்லாமியர்களுக்கு, ஐந்து விதமான விஷயங்கள் உண்டு. அதில் நோன்பு திறப்பது, ஒரு முக்கியமான விஷயம். சிறு வயதாக இருக்கும்போது, மதுரையில் பள்ளி வாசல்களுக்கு சென்று நோன்பு கஞ்சி வாங்கி குடித்திருக்கிறேன்; கஞ்சி அவ்வளவு ருசியாக இருக்கும். "இயன்றதை செய்வோம், இல்லாதவருக்கே' என்ற தே.மு.தி.., கொள்கையும், இஸ்லாமியர்களின் ஐந்து விதமான விஷயங்களும் ஒன்று தான். சில தலைவர்கள், தலையில் குல்லா போட்டு நோன்பு திறந்து படம் எடுத்து சென்று விடுவர். ஆனால், நான், 2005ல் கட்சி துவக்கியதில் இருந்து நோன்பு திறந்து வருகிறேன். கட்சி கொள்கைப்படி, பெண்களுக்காக பல உதவிகளை செய்திருக்கிறேன். என் கையை கட்டி போட்டாலும், தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன். இந்தியாவில் பிறந்த நாம், வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். மெக்காவில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தண்ணீர், என் வீட்டில் இருக்கிறது. பலருக்கும் கிடைக்காத அந்த தண்ணீரை குடிப்பதற்கு, நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும். எனக்கும், மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு. அங்கு வாங்கிய, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் நான் பயன்படுத்துகிறேன். என் அருகில் வந்து நுகர்ந்து பார்த்தால், அது தெரியும். அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுகிறேன். இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், தே.மு.தி.., மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, சந்திரக்குமார், சுதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


விஜயகாந்துக்கு  எப்பொழுதும் இடம் பொருள் ஏவல் என்பது தெரியாமல் உளறபவர்  என்பதை உலகமே அறியும் அதனால்தான் அவர் பேச்சுக்கள் சட்ட மன்ற புக்கில் இடம் பெற்று விடக் கூடாது என்றுதான் ஜெயலலிதா அவர்கள் அவரை ஓட ஒட விரட்டி அடிக்கிறார் அப்படியும் மனுஷன் திருந்துகிற மாதிரி இல்லை செத்த வீட்டிற்கு சென்றால் நன்றி சொல்லிவிட்டு வருகிறார்.

இப்தார் நோன்பு திறப்பு விழாவில் வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருக்கிறார்கள் இவரை எல்லாம் எப்படி அப்பா இந்த விழாவிற்கு அழைக்கிறார்கள் சரி அப்படி அழைத்தால் வந்தமோ நோன்பு கஞ்சியை வாங்கி குடித்தமா என்று இருக்காமல் எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு என்று முதல் உளரலை ஆரம்பித்து இருக்கிறார் அது எப்படியா இருக்க முடியும் மெக்கா என்றால் மதுரையில் தெற்குவாசலில் இருக்கும் தர்கா என்று நினைத்து இருக்கிறார் போல இருக்கிறது பாருங்கய்யா இவரின் அறிவின் விசாலத்தை சரி அடுத்து என்ன சொல்லி இருக்கிறார் நோன்பு திறப்பதுமுக்கியமான விஷயமாம் அட அட என்ன புத்திசாலியா இவர். நோன்பு வைப்பவர்தான் அதை திறக்க முடியும் ஏதோ ஈவினிங்க் ஓசியில நோன்பு கஞ்சி வாங்கி குடிப்பதுதான் முக்கியமாம் இவருக்கு

சரி அடுத்து இவர் சொல்வது என்னவென்று பார்ப்போம்  தே.மு.தி.., கொள்கையும், இஸ்லாமியர்களின் ஐந்து விதமான விஷயங்களும் ஒன்று தான் இவர் சொல்லுவதன் மூலம் இஸ்லாத்தை இழிவு படுத்துவதாகவே எனக்கு தோன்றுகிறது

சரி அடுத்து  இவர் சொல்வது  சில தலைவர்கள், தலையில் குல்லா போட்டு நோன்பு திறந்து படம் எடுத்து சென்று விடுவர்.  அது நல்லதுதானே  அதுக்காக இவரைப் போல எல்லா தலைவர்களும் லூசு தனமாக பேசி காமெடி பண்ண சொல்லுகிறாரா அடுத்து  என் கையை கட்டி போட்டாலும், தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன் அட தமிழ்நாட்டுல யாருடா அவர் கையை கட்டிப் போட்டது அவர் வாயையும் கொஞ்சம் கட்டிப் போடுங்கடா முதலில்


ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் நான் பயன்படுத்துகிறேன். அது என்ன சாதனையா என்ன என் அருகில் வந்து நுகர்ந்து பார்த்தால், அது தெரியும். அது என்றால் என்ன சாரயமா?

///அங்கிருந்து கொண்டு வரப்பட்ட பேரீச்சம் பழத்தை சாப்பிடுகிறேன். /// பழைய இரும்பு கடையில் ஓசிக்கு கொடுத்தை யாரோ அரபியாவில் இருந்து வந்ததுன்னு சொல்லி கொடுத்துட்டாங்க போல இருக்காங்க போல் இருக்கிறது

ஆனால் இப்படி விஜயகாந்த்  அவர்கள் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் காமெடி சொற்பொழிவை ஆற்றும் போது மது அருந்தி இருந்தாரா இல்லையா ? நான் சொல்ல மாட்டேன் .நான் சொல்ல மாட்டேன்



அன்புடன்
மதுரைத்தமிழன்








12 comments:

  1. பட கமெண்ட் சூப்பர்... ஹா.. ஹா.. உளறுவதே வேலையா போச்சு...!

    ReplyDelete
    Replies
    1. உளறுவதோ வேலை என்ரு விஜயகாந்தை சொல்லிகிறிர்களா இல்லை சந்ததி சாக்கில் என்னை கால் வாருகிறீர்களா?

      Delete
  2. ஹாஹா இப்போ அவரு காமெடி பீசா வருங்கள முதலமைச்சரை பார்த்து என்ன சொல்லிபுட்டிங்க அண்ணே

    ReplyDelete
    Replies
    1. அவர் வருங்கால முதலைமைச்சாரக வர வேண்டும் அப்பதான் நாட்டு மக்கள கவலையை மரந்து சிரித்து கொண்டிருக்க முடியும்

      Delete
  3. ஆல்ஹகாலை வாயில் ஊத்திக்கினு
    அது கலக்காக பெர்ஃபூமை நான் பயன்படுத்தினால்
    நான் மது ஆதரவாளனா எதிர்பாளனா
    ஒரே குழப்பமாய் இருக்கிறது
    விளக்குங்களேன் பிளீஸ்

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு ஆல்ஹகாலுக்கும் சரக்கும் வித்தியாசம் தெரியல ஏதோ உளறிட்டாருங்க பேசாம அவரை விட்டுருவோமுங்க

      Delete
  4. அவர் காமெடி பீசு ஆகி ரொம்ப நாள் ஆச்சு

    ReplyDelete
  5. அவர் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கில் அப்படி பேசினார்.நீங்க தான் தப்பா புரிஞ்சுகிட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. அவரை மாதிரியே நீங்களும் நகைச்சுவையாக பேசுறீங்க

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.