Friday, August 23, 2013




 
வெளிநாட்டில் இருக்கும் கணவனுக்கு  மனைவி எழுத மறந்த கடிதம்


தாலி கட்டியவன் தான்
கணவன் என்றால் நீயும்
எனக்கு கணவன்தான்.


திருமணம் முடிந்த மூன்றாம் வாரம்
பறந்து விட்டாய் அயல்தேசம்...
அதனால் உன்மேல்
எனக்கு  வரவில்லை நேசம்


என் மெழுகு உடலில்
நீ காமத்தீ ஏற்றி விட்டு
சென்று விட்டாய்....
வருடம் பலவும்  ஓடி விட்டது

நீ ஏற்றிவிட்ட காமத்தீயில்
என் மனம் அழிந்து விட்டது
அதனால் என் உடல் இப்போ
துணையை தேடுகிறது


இப்படி தேடுவது தவறு என்று
என் மனம் உறுத்தவில்லை
ஆனால் நீ என் கட்டிய
தாலிதான் என் கழுத்தை உறுத்துகிறது


நீ பற்ற வைத்த தீயை
அணைக்க நீ இல்லாததால்
அந்த தீ அருகில் உள்ளவர் மீது
பற்றி பரவுகிறது


காமத்தீயில் கரியாகும் நான்
நீ கொண்டுவரும் பணத்தில்
மீண்டும் திரியாக மாறமுடியாது


நீ பற்ற வைத்த தீயில் என் மனம் மட்டுமல்ல
என் உடலும்தான் கரிகிப் போனது
என்பதை நீ எப்படி அறிவாய் கணவனே

அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இது கவிதை அல்ல எனது கிறுக்கல்கள்

7 comments:

  1. அண்ணே கவிதை அருமை ஆனாலும் கணவன் அப்படி செல்வது அவனது மனைவி மக்களை பொருளாதாரத்தில் சந்தோஷமாக வைக்கவே என்ட்ரி மனைவிமார்கள் சிந்திக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. இதை கவிதை என்று கூறக் கூடாது என்று டிஸ்கியில் சொல்லி இருக்கிறேன். காரணம் நான் வரிகளை உடைத்து போட்டு எழுதி இருக்கிறேன் அதனால் நீங்கள் இதை கவிதை என்று அழைத்தால் கவிஞர்களை கிண்டல் பண்ணியது போல இருக்கிறது

      Delete
  2. வணக்கம்
    அருமையான கிறுக்கல் எழுத மறந்த கடிதம் மிக நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி ரூபன்

      Delete
  3. ஆஹா கவிதை நல்லா எழுதறிங்க .. ஆனா தீ கணவனுக்கு பத்தாதாமா? ஒழுக்கம் கணவன், மனைவி இரண்டு பேருக்குமே அவசியம். வறுமைக்காகவும், நாட்டுக்காகவும் கணவனை வெளி நாட்டுக்கோ, ராணுவத்துக்கோ போன பிறகு தங்கள் சின்ன சின்ன ஆசைகளை கூட ஒரு ஒரு நிமிட போன் பேச்சில் அவர்களோடு வாழ்ந்து குடும்பத்தை தாங்கி கொண்டிருக்கும் தியாக பெண்மணிகள்தாம் நிறைய எம் நாட்டில்..!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க நீங்களும் கவிஞர்களை கிண்டல் பண்ணுறீங்க... ஒழுக்கம் என்பது அனைவருக்கும் சமம் அதில் எனக்கு கருத்து வேறுபாடு இல்லை. இது தியாகப் பெண்மணிகளை பற்றிய பதிவு அல்ல.


      இது இந்தகால புதுமைப் பெண்களை பற்றியது. இப்படிபட்ட பெண்கள் அல்லது ஆண்கள் யாருக்காவும் தங்கள் வாழ்க்கையை தியாகம் பண்ணி தங்களை கஷ்டத்திற்குள் இட்டுச் செல்ல விரும்பாதவர்கள். அப்படி பட்ட நபர்களை பற்றி சொல்வதுதான் இந்த பதிவு. இப்படிபட்ட ஆட்களே இல்லவே இல்லை என்றும் யாரும் மறுக்க முடியாது. என்பது உண்மையே

      Delete
  4. ஒழுக்கம் என்பது பொதுவில் வைக்கப்பட வேண்டியது

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.