விஜய் முதலைமைச்சாராக வர ஆசைப்படலாமா? ( பருந்தாக மாற குருவிக்கு ஆசை )
தமிழகத்தில் நடிக்க வருகிறவர்களுக்கு அவர்களின் சில படங்கள் வெற்றி பெற்றதும் அவர்கள் தங்களை எம்ஜியாராக
கருதி கொண்டு தங்கள் மனதில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று கனவுகள் காண ஆரம்பித்துவிடுகின்றனர். ஆனால் அதில் தப்பு இல்லை காரணம் நமது நாடு ஒரு ஜனநாயகநாடு. இதில் விஜய் மட்டுமல்ல யாருக்குமே முதல்வராவது அல்லது பிரதமாரவது
எனும் பேராசை வருவது சட்டப்படி தவறொன்றும் இல்லை. ஆனால் தங்கள் தகுதிக்கு மீறி ஆசைப்படுவதால் இருப்பதும் போச்சு நொள்ளகண்ணுடா என்று இருப்பதையும் இழந்து கேலிக்குறியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.
எல்லோரும் எம்ஜியாராக கற்பனை பண்ணுகிறார்களே தவிர அவர் வந்த பாதைகளையும் அவருக்கு இருந்த பலத்தையும் நல்ல குணத்தையும் பார்க்க தவறவிடுகிறார்கள். எம்ஜியாருக்கு கலைஞருக்கு அடுத்தபடியாக கட்சியில் நல்ல செல்வாக்கு இருந்தது அதுமட்டுமல்லாமல் திரைப்படம் மூலம் மக்களை கவரும் திறமையும், தன்னை நம்பி வருபவர்களுக்கு உதவி செய்யும் குணமும் மக்களுக்காக போராடும் செயலும் இருந்தது.
அது போல ஜெயலிதா அவர்கள் நடிகையாக இருந்தாலும் அவர் நிழல் போல எம்ஜியார் அருகில் இருந்ததாலும்
எம்ஜியார் இல்லாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை தன்னுடைய தனித்திறமையால் தன் சுயபுத்தியை உபயோகபடுத்தி பதவியை கைபற்றினார்
கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆட்சியினால் வெறுப்படைந்த மக்கள் மாற்று ஆள் யார் என்று தேடிய போது அந்த இடத்திற்கு எம்ஜியாரைப் போலவே மக்களிடம் தனி செல்வாக்கு பெற்ற நடிகரான ரஜினிகாந்த் மக்களின் பார்வையில் பட்டார் ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டார்
ரஜினிவிட்ட இடத்தை கிராமப்புறங்களில் தனக்கு கிடைத்த செல்வாக்கை வைத்து அதை நிரப்ப முயற்சி செய்தார் விஜயகாந்த ஆனால் அவராலும் அதில் வெற்றிப் பெற முடியவில்லை காரணம் பேச்சில் ஒழுங்கினம் இல்லாததாலும் தன் குடும்பத்தையும் கட்சிக்குள் இழுத்து வந்ததாலும் அவரும் தனக்கு வந்த வாய்ப்பை இழந்து விட்டார்.
இதுவரை தமிழக முதல்வர் பதவிக்கு வந்தவர்களின் ஆரம்பகால நடவடிக்கைகளை பார்க்கும் போது முதல்வர் பதவிக்கு அவர்கள் முயற்சித்த போது அவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களையும் கட்சிக்குள் இழுத்து வராமலேதான் முயற்சி செய்தார்கள்
ஆனால் இப்போது வருபவர்களோ அப்படி எல்லாம் இல்லை அதுமட்டுமல்லாமல் அவர்கள் முதல்வர் பதவிக்கு வருவது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் தூண்டுதல்களால் மட்டுமே அதனால் அவர்களின் ஆசைகள் நிராசைகளாகின்றன
அதுமட்டுமல்லாமல்
காலமும் மாறிக் கொண்டு வருகின்றன அதனால் மக்களின் எண்ணங்களும் மாறிவருகின்றன இப்படி மாறிவரும் நேரத்தில்தான் விஜய் முதல்வராக வேண்டும் என்று அவர் தந்தை ஆசைப்படுகிறார் நன்றாக் கவனியுங்கள் விஜயின் அப்பாவிற்கு உள்ள ஆசையின் அளவில் மிக சிறிய அளவில்தான் விஜய்க்கு இருக்கிறது என்று சொன்னால் அதை யாரும் மறுக்க மாட்டார்கள்
ஒரு வேளை விஜய் முதலைமைச்சராக ஆட்சியை பிடித்தால் அது மன்மோகன் சிங்கின் ஆட்சி போலதான் இருக்கும் அதாவது சோனியாவின் கம்பிற்கு ஆடும் குரங்கு போல மன்மோகன் நடப்பது போல விஜயின் ஆட்சியும் அவரின் அப்பாவின் கம்பிற்கு பயந்து ஆடும் குரங்கு போலதான் இருக்கும் அதற்கு தமிழக மக்கள் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள்
தமிழக் முதல்வராக வர வேண்டுமானல் அதற்கு சில அடிப்படத்தகுதிகள் இருக்க வேண்டும் ஆனால் அதில் ஏதாவது இருக்கும் என்று பார்ப்போம்
விஜய்க்கு
நிஜத்தில் எந்தவொரு அரசியல் பிரச்சினை பற்றியும் உறுதியான நிலைப்பாடு இல்லை, அரசியல்வாதிகளை நேரடியாக எதிர் கொள்ளும் துணிச்சலும் இல்லை, பேச்சால் மக்களை கவரும் வசிகரமும் இல்லை. இது எதுவும் இல்லாமல் சினிமாவில் கிடைக்கும் கைதட்டுகளினாலும், தான் பிறந்த நாட்களில் மட்டும் மக்களுக்கு கொடுக்கும் இலவசங்களால் மட்டும் முதல்வராக ஆசைப்பட்டால் அது கேலிக்குரியதாகதான் இருக்கிறது
முதல்வராக ஆசைப்படும் விஜய்யிடம் சில கேள்விகள்?
தமிழக முதல்வாரக வர ஆசைப்படும் விஜயே நீங்கள் தமிழக மக்களை பாதிக்கும் சமுகப்பிரச்சனைகளில் எத்தனை பிரச்சனைகளுக்காக நீங்கள் வீதியில் இறங்கி போராடி இருக்கிறிர்கள்?
கூடங்குளம் அணை உலை பிரச்சனைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ களம் இறங்கி போராடினீர்களா அல்லது அதற்காக குரலாவது கொடுத்தீர்களா?
தண்ணிர் பிரச்சனைக்காக கர்நாடாகத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ களம் இறங்கி போராடினீர்களா அல்லது அதற்காக குரலாவது கொடுத்தீர்களா?
கல்வி நிலையங்களில் அடிக்கப்படும் கொள்ளைகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ களம் இறங்கி போராடினீர்களா அல்லது அதற்காக குரலாவது கொடுத்தீர்களா?
இலங்கை தமிழர் பிரச்சனைகளுக்காக ஆதரவாகவோ அல்லது எதிராகவோ களம் இறங்கி போராடினீர்களா அல்லது அதற்காக குரலாவது கொடுத்தீர்களா?
முல்லை பெரியார் அணைக்கட்டு பிரச்சனைக்காக கேரளா அரசாங்கத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ களம் இறங்கி போராடினீர்களா அல்லது அதற்காக குரலாவது கொடுத்தீர்களா?
உங்களை சார்ந்த திரைப்பட தொழிலாளர்கள் பிரச்சனைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ களம் இறங்கி போராடினீர்களா அல்லது அதற்காக குரலாவது கொடுத்தீர்களா?
மணல். கிரானைட் கொள்ளைகளுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ களம் இறங்கி போராடினீர்களா அல்லது அதற்காக குரலாவது கொடுத்தீர்களா?
இப்படி பல சமுகப்பிரச்சனைகளை குறிப்பிட்டு சொல்லாம். இப்படி எந்த வித பிரச்சனைகளிலும் கருத்து சொல்லக் கூட தைரியம் இல்லாத நீங்கள் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாமப்பா?
இனிமேல் சினிமாக்களின் மூலம் மட்டும் இமேஜ் பில்டப் பண்ணியும், பிறந்தநாள் அன்று சில இலவசங்களை அள்ளித்தருவதன் மூலம் முதல்வர் பதவியை பிடித்துவிடலாம் என்று கனவு காணாமல் மக்களோடு மக்களாக இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுங்கள் அதன் பின் கனவுகாணுங்கள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
சினிமால ஒரு ஷாட்டு சரியில்லன்னா மாத்திக்க முடியும் நெசத்துல முடியாது...ஹாஹா ஒரு எண்டர்டெயினர் பலிவாங்கப்படுகிறார்...உசாரா இரு ராசா நெஜார உருவிடுவாங்க...
ReplyDeleteசரியான பார்வை.....
ReplyDeleteநடிகர்கள் பின்னாடி ஓடும் கூட்டம் இருக்கும்வரை இவர்களுக்குக் கொண்டாட்டம் தான்....
அருமையான பதிவு... வெறும் சினிமா பப்ளிசிட்டி-யை வைத்து கொண்டு அரசியல் பண்ண முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்..
ReplyDeleteசரியான கேள்வி கேட்டு இருக்கீங்க சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினால் அவர் உருப்புடுவார் இல்லையே கோவிந்தா கோவிந்தா
ReplyDeleteரஜினி வாராமல் விட்டது ரசிகனாக சந்தோசம்..
ReplyDeleteவிஜய் வந்தால் டோட்டல் தமிழ்நாட்டிற்கே தோஷம்
பாஸ் இம்புட்டு கேள்வி கேட்டு ஏன் பாஸ் உங்க டைம வேஸ்ட் பண்றீங்க?? அதுக்கு பதில் நாலு ஜாலி பதிவு போட்டு இருக்கலாம்..
அருமையான பதிவு. நீங்கள் மேற்கூறிய பிரச்சினைகள் எல்லாம் அவருக்கு தெரிந்திருக்குமா என்பதே பெரிய கேள்விகுறி?
ReplyDelete
ReplyDeleteவிஜய் முதல்வராக வரவேண்டும் என்று எப்போதாவது சொன்னாரா.?