Tuesday, August 13, 2013




இந்தியாவின் சுதந்திர தினமும் மத்திய அரசாங்கத்தின் அதிரடி திட்டமும்.


இந்தியாவின் சுதந்திர தினத்தை ஒட்டி  மக்களை கவரும்  வகையில் மன்மோகன்சிங்க் அரசாங்கம் ஏதாவது ஒரு அதிரடி திட்டத்தை அறிவிக்க எண்ணியது. ஆனால் அதற்கான திட்டம் தீட்ட யாரை அணுகுவது என்று தெரியாமல் முழித்த போது இந்திய உளவுத்துறை  ஐடியாக்களை அள்ளிவழங்கும் பிரபலபதிவாளரான மதுரைத்தமிழன் பற்றிய  தகவலை சொன்னது.உடனே மன்மோகன்சிங்க் ஒரு போனை போட்டு மாண்புமிகு மதுரைத்தமிழா  மக்களை கவரும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்க வேண்டும் அதற்கு நீங்கள்தான் எங்களுக்கு உதவவேண்டும் . நீங்கள் பெரிய ஐடியா கிங் என்று சொன்னார்கள் அதனால்தான் உங்களை அணுகினேன். உங்களால் எனக்கு ஏதாவது நல்ல ஐடியா தரமுடியுமா என்று கேட்டார்.


இந்தியாவின் பிரதமரே நம்மிடம் இறங்கி வந்து கேட்கும் போது என்னால் உதவாமல் இருக்க முடியவில்லை. அதனால் நன் கு யோசித்து  சொன்னேன். ஐயா மன்மோகன் சிங் நீங்கள் உடனடியாக ரயில்வே கட்டணத்தை உடனடியாக 25 சதவிகிதம் குறைத்துவிடுங்கள் அது மட்டுமல்லாமல் இந்த குறைக்கப்பட்ட ரயில் பயணக் கட்டணம் அடுத்த 25 ஆண்டுகளூக்கு ஒரு பைசா கூட அதிகரிக்கப்படாது என்று அறிவியுங்கள் என்றேன். என்ன மதுரைத்தமிழா இதெல்லாம் நடக்க கூடிய விஷயமா என்ன இதெல்லாம் சாத்தியப்படாது என்று மறுத்தார். நான் சாத்தியபடும் என்று சொன்னேன் அது எப்படி என்று கேட்டார்.  அதற்கு நீங்கள் என்னை  பாராட்டி விழா எடுக்க வேண்டும் அதற்கு உத்திரவாதம் தந்தால் நான் எப்படி என்று விளக்குகிறேன் என்று சொன்னேன் அவரும் சரியென்று சொன்னார். அதன் பின் நான் சொன்ன விளக்கத்தை கேட்டதும் அசந்து போய் இப்பவே இந்த திட்டத்தை அறிவிக்கிறேன் என்று சொல்லி சந்தோஷமாக சென்றார்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி: என்னடா பதிவை பொசுக்குனு முடித்துவிட்டேன் என்று நினைக்கீறிர்களா? அப்பறம் என்ன அரசாங்க சீக்ரெட் எல்லாம் உங்களிடம் சொல்லிக்கிட்டு இருக்க முடியுமா என்ன? இந்த திட்டத்தினால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று கேட்கிறீர்களா? அதை நான் எப்படி சொல்ல முடியும்.

இந்த திட்டம் அமுலுக்கு வந்தததும் முதல் பயணியாளராக உலகம் சுற்றும் வாலிபன் என்ற பட்டத்தை பெற்று நம் இந்திய நாட்டை சுற்றி வரும் நமது பதிவாளர் திரு.வெங்கட் நாகராஜுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்தை விரைவில் வரும் பதிவில் பார்ப்போம

 

3 comments:

  1. சரி, இனிமே வெங்கட் அண்ணா பிளாக்குலயே போய் எல்லாத்தையும் படிச்சுக்குறோம். பை!! பை!!

    ReplyDelete
  2. ஆஹா சகோ ஐடியாத்திலகம் என்ற விருது உங்களுக்கு இன்று முதல் அளிக்கப்படுகிறது திரு மௌனமோகன் சாரிப்பா மன்மோகன்சிங் அவர்களால். இதைச்சொல்ல சொன்னார் உங்களிடம்.. உங்களைப்பற்றி தான் நலன் விசாரிக்க மன்மோகன்சிங் வீட்டிற்கு சென்றேன்.. அவர் சொன்னார்.. பாரும்மா மஞ்சு அந்தப்பிள்ளை நான் கொடுத்த ஐடியாத்திலகம் விருதை மறந்துவிட்டுட்டு போயிருச்சு.. கொண்டு கொடுத்துரும்மா அப்டின்னு சொன்னார்ப்பா.. அதான் கொண்டு வந்து உங்க வீட்டு ஹாலில் இருக்கும் ஷோ கேஸ்ல வெச்சுருக்கேன் எடுத்துக்கோங்கப்பா...

    அருமையான யோசனை தான்... அதை செயல்படுத்த எடுத்த நடவடிக்கை சீக்ரெட்டா இருந்தாலும் சரிப்பா மக்களுக்கு நல்லது நடக்கும்போது.. யாரால் எப்படி நடந்தது என்ற ஆராய்ச்சியில் கவனத்தை செலுத்தாமல்.. அட்லீஸ்ட் மக்களுக்கு உதவும் வகையில் ஒரு திட்டம் கொண்டு வந்ததற்கு நன்றிகள் தான் சொல்லவேண்டும்...

    அருமையான பகிர்வுப்பா...

    நானும் வெங்கட் ப்ளாக் போய் பார்க்கிறேன் சகோ..

    அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...

    ReplyDelete
  3. இதுக்காகவே ஒரு பயணம் போகணும் போலருக்கே.... சரிசரி வழிச்செலவுக்கு டாலர்ல பணம் அனுப்புங்க மதுரைத்தமிழன்!

    போய்ட்டு வந்து பதிவு போட்டுருவோம்! :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.