வரம்பு மீறாதவரை மட்டுமே நட்புக்கு உரிமை அதிகம் (பதிவர்களின் இணைய நட்புக்கள்)
பதிவில் ஆரம்பித்து நம் இதயத்தில் சிம்மாசனமிட்டுற்றிருக்கும் இந்த நட்பிற்கு இணை ஏதும்மில்லை. இவர்களின் நிஜ முகங்களை நாம் பார்த்ததில்லை ஆனால் இவர்களின் இதயங்களோடு
நாம்
இதமாய் உறவாடியதுண்டு..
இவர்கள் அன்பால் அரவணைக்கும் உள்ளங்கள், கைகளால் அல்ல கண்ணீர் துயர் துடைக்கும் கைகள் இவர்களுடையது. இவர்கள் தன்னம்பிக்கை தரும் நட்சத்திரங்கள் & துன்பங்களை இறக்கி வைக்க உதவும் சுமைதாங்கிகள். இப்படி பலவற்றை இவர்களைப் பற்றி இங்கு சொல்லிக் கொண்டே போகலாம்
இந்த நட்புக்கள் இணையத்தில் தொடங்கி இதயத்தில் முடியும் நட்புக்கள். எல்லா இணைய நட்புக்களும் இப்படி இருப்பதில்லை. ஆனால் இப்படி இருக்கும் நட்புக்களை தேர்ந்தெடுத்து பழகி வந்தால் நம் நிஜ வாழ்வில் பிரச்சனைகள் இல்லை என்பதே உண்மை
ஆண் பெண் நட்பு கொள்வதில் தவறு இல்லை , ஆனால் இருவரும் தங்களுக்கு என்று சில எல்லைகளை வகுத்து கொண்டு அதன்படி நடப்பது மிகவும் நல்லது. இப்படிபட்ட நட்பு முகம் அறியாத நட்புதானே என்று நாம் கவனக்குறைவாக இல்லாமல் நமது எண்ணங்களை வார்த்தைகளாக பரிமாறிக் கொள்ளும் போது மிகவும் கவனம் தேவை. அதுபோல. எந்தவொரு சிறு சலனமும் நம் மனதிற்குள் நுழைய இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் .
நான் எனது முகத்தை இணையத்தில் மறைத்தாலும் என் மனத்தை இணையத்தில் மறைக்காமல் என் மனதில் பட்டதை முடிந்த வரை அடுத்தவர்களை காயப்படுத்தாமல்
சொல்ல முயற்சித்து
வருகிறேன்
என்னை தொடரும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் இந்த பதிவின் மூலமாக எனது அன்பையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : ஏதோ என் மனதில் தோன்றியதை இங்கே கொட்டணும் என்று தோணிச்சுங்க..
எதுக்கு இந்த மாதிரி திடீர்ன்னு?
ReplyDeleteஏதோ மனசில் தோன்றியை அப்படியே சொல்லனும்னு தோணிச்சி அப்படியே கொட்டிடேன் அவ்ளவுதாங்க
Delete/// இணையத்தில் தொடங்கி இதயத்தில் முடியும் நட்புக்கள் /// உண்மை... முன் பின் தெரியாத பல நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ளும் போது... அதுவும் நாம் துன்பத்தில் இருக்கும் போது - அவர்களின் ஆறுதல் பேச்சு, பல மடங்கு நம்பிக்கையை தருகிறது...
ReplyDeleteஎப்போது மதுரைக்கு வருவீர்கள்...?
நான் எப்ப வருவேன் என்று எனக்கே தெரியாது ஆனால் ஒரு நாள் கண்டிப்பாக வருவேன் (ரஜினி பேசறதுமாதிரி இதை படிக்கவும்)
Deleteஎனக்கு இந்தியா வரணும் என்கிற ஆசையெல்லாம் இல்லைங்க... ஆனால் உங்களை போல உள்ள பதிவாளர்களை சந்தித்து பேசணும் என்ற ஆசை மட்டும் இருக்கிறது என்பது மட்டும்தான் உண்மைங்க அதை தவிர வேறும் எதிலும் பிடிப்பு இல்லை. வாழ்க்கை ஒடுகிற பாதையில் நானும் ஒடிக் கொண்டு இருக்கிறேன் தனபாலன்
ஜூன் ஜூலை மாதங்களில் நான் அமெரிக்காவில் இருந்தபொழுது
ReplyDeleteஎனது பதிவுக்கு பின்னூட்டம் இட்டு இருந்தீர்கள்.
உங்களை ஒரு நாள் பார்க்கலாம் அல்லது பேசலாம் என்று இருந்தேன்.
உங்களைப் போல் முகம் அறியாத பல நண்பர்கள்:எனக்கு நூறு பேருக்கு மேல் இருக்கின்றனர். இதை ஒரு பெருமையாக சொல்லவில்லை. அவர்களது சொல்லும் எழுத்தும் என்னை கவருவதால் நான் தொடர்ந்து 15 ஆண்டுகளாக வலையில் எழுதுகிறேன்.
மனம் அறிய வாய்ப்பு இருக்கையிலே முகம் அறிவது அவ்வளவு தேவையா ?
சுப்பு தாத்தா.
www.Sury-healthiswealth.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
நானும்தான் உங்களை பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நேரம் காலம் அமையவில்லை. காரணம் மற்றவர்களுக்கு கிடைக்கும் நேரத்தில் எனக்கு வேலை இருக்கும் எல்லோருக்கும் விடுமுறை என்றால் அந்த நேரத்தில் எனக்கு கண்டிப்பாக வேலைக்கு போக வேண்டியதிருக்கும் அதனால் ப்ரி பளான் பண்னுவது கடினம் இதனால் உங்களைப் போல இந்தியாவில் இருந்து வந்திருக்கும் சிலரை என்னால் இன்று வரை மீட் பண்ண முடியவில்லை அது மட்டுமல்ல அமெரிக்காவிலே இருக்கும் சில பதிவர்கள் என்னை வந்து சந்திக்க விரும்பிய போதும் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஒரு வேளை அவர்கள் என்னை தப்பாக கூட நினைத்து இருக்கலாம் ஆனால் அவர்கள் என்னை சந்தித்தித்தால் எல்லா எண்ணங்களையும் மாற்றிக் கொள்வார்கள்
Deleteநட்புடன் பழகுவதற்கு முகம் அறிய தேவையில்லை குணம் மட்டும் அறிந்தால் போதும்
கொட்டியாச்சா?! சரி நாங்க அள்ளி வெளிய போட்டுடுறோம்!!
ReplyDeleteஅள்ளிப் போட போட நாங்க கொட்டிகிட்டே இருப்போம்ல....
Deleteஏன் என்னாச்சு நண்பா...
ReplyDeleteஎனக்கு ஒன்றும் ஆகவில்லை நண்பரே பல நாட்களாக இணைய நட்பு பற்றி எழுத நினைத்து இருந்தேன் இன்று பதிவு எழுத விஷயம் கிடைக்காததால் நட்பு பற்றி எழுதிவிட்டேன் அவ்வளவுதாங்க
Deleteஉங்களது அக்கறையான விசாரிப்பு மனதை தொட்டது நன்றி
ReplyDeleteஒரு வேளை முகம் தெரியாதவரைதான் இந்த நட்புகளோ.?முகம் தெரிந்து விட்டால் ஓ இவ்வளவுதானா என்ற எண்ணம் வந்து விடுமோ. ? ஏதோ சொல்ல வேண்டும்போல் தோன்றியது சொல்லிவிட்டேன்.
நீங்கள் சொல்வது எதையாவது எதிர்பார்த்து பழகுபவர்களுக்கு பொருந்தும் என நினைக்கிறேன் . மனதில் பட்டதை பட்டென்று சொல்லதான் வலைத்தளமே உள்ளது
Deleteகொட்டுங்க எஜமான் கொட்டுங்க
ReplyDeleteஉங்க தலையை காண்பிங்க நல்லா கொட்டுறேன்
Deleteசென்னையில் சந்திக்கமுடியுமாயின்
ReplyDeleteஅதிக மகிழ்ச்சி கொள்வேன்
வாழ்த்துக்களுடன்....
இந்தியா வரும் போது கண்டிப்பாக சந்திக்கிறேன்..
Deletetha.ma 3
ReplyDeleteநன்றி ரமணி சார்
Deleteமனசுல தோணியதை சொன்னாலும் நல்லதைத்தான் சொல்லியிருக்கிங்க..!
ReplyDeleteபுரிந்து பாராட்டியதற்கு நன்றி உஷா. இதை முக்கியமாக இணையம் வரும் பெண்கள் கவனிக்க வேண்டும்
Deleteஉங்க பதிவுகளிலேயே இது எனக்கு மிகவும் பிடித்த பதிவுங்க ....மிக அழகா சொல்லியிருக்கீங்க ..
ReplyDeleteடோன்ட் கிராஸ் தி லைன் ...இது ..ஆண் பெண்ணுக்கு மட்டுமல்ல ....அனைவருக்குமே பொருந்தும் ..
எதுவும் எந்த நட்பும் ஒரு அளவுடன் இருந்தால் நல்லது ..
Angelin.
என் பதிவுகளை தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி
Deleteஉஷா சொல்லியிருப்பதுதான் எந்தன் கருத்தும்.....
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteமுக நக நட்பது நட்பன்று நெஞ்சத்து
ReplyDeleteஅகநக நட்பதே நட்பு
என்பார் வள்ளுவர்.
எதிர்பார்ப்புகள் இல்லாத நட்பு என்றும் நிலைக்கும்,
எல்லாவற்றிலும் எல்லையை மீறாமல் இருப்பது நல்லதுதான்.
ReplyDelete