முதல் பதிவின் சந்தோசம் - தொடர்பதிவு...!
சகோ ராஜி அவர்கள் என்னை தொடர்பதிவிற்கு அழைத்தார் சரி பாசத்தால் அழைத்தாரே என்று அவருக்காக அதை எழுதி வெளியிட்டேன் ஆனால் அந்த பதிவின் இறுதியில் இனிமேல் யாரும் என்னை அழைத்தால் அவர்கள் 500 டாலர் தர வேண்டும் இல்லையென்றால் தொலைச்சு புடுவேன் தொலைச்சு என்று எச்சரிக்கை கொடுத்து இருந்தேன்.
ஆனா இந்த மதுரைத்தமிழன் சொன்னதை வடிவேல் விடுவித்த எச்சரிக்கை மாதிரி எண்ணி இந்த மனோ என்னை இந்த பதிவை எழுத அழைப்பு விடுவித்து இருக்கிறார். அவரிடம் என்ன நைனா நான் விட்ட எச்சரிக்கைய பார்க்கவில்லையா என்ன? உங்களுக்கு எல்லாம் என்ன தைரியம் நைனா என்றுதான் கேட்டேன் அதற்கு அவர் ஏலே மதுர நான் சொன்னபடி ஒழுங்கா பதிவு எழுதி வெளியிடுறியா இல்ல நல்ல தரமான பூரிக்கட்டைக்கு ஆர்டர் கொடுத்து உன் மனைவிக்கு அனுப்பி வைக்கவா என்று என் வீக்பாயிண்டை பார்த்து அடித்து விட்டார்.
அவருக்கு தைரியம் இருந்தா அருவா தூக்கி ஒத்தைக்கு ஒத்தை வந்திருக்கனும் ஆனா இப்படி பூரிக்கட்டையை வைத்து ப்ளாக் மெயில் பண்ணுவது அழகா...இனிம எத்தனை பேர் என்னை இப்படி பளாக் மெயில் பண்ணுவார்களோ தெரியவில்லை.
என்னால் இனிமேல் இதை வேடிக்கை பார்த்து கொண்டு இருக்க முடியாது அதனால் அமெரிக்க தலைவரான ஒபாமாவுக்கு கடிதம் எழுதி பூரிகட்டை வைத்திருப்பதற்கு அமெரிக்காவில் தடை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுவிக்க போறேன்
சரி மனோ பூரிக்கட்டைக்கு ஆர்டர் பண்ணுவதற்குள் இந்த பதிவை எழுதி விடுகிறேன்
1997 ஆமாங்க அப்பதான் இந்த மதுரைத்தமிழன் தமிழ்நாட்டில் பண்ணிய அட்டுழியம் தாங்காம நாடு கடத்தினாங்க..நாடு கடத்தியும் இந்த மதுரைத்தமிழன் அட்டுழியம் பண்ணுவதை நிறுத்தவில்லை அமெரிக்கா வந்த ஒரு மாதத்தில் டெஸ்க்டாப் கம்பியூட்டர் வாங்கி அதற்கு அமெரிக்கா ஆன்லைன்(AOL) இணைப்பையும் வாங்கி அவர்கள் தந்த இலவச இடத்தில் வெப்சைட் ஆரம்பித்தான். அதன் பின் XOOM என்ற் நிறுவனம் மிக அதிக அளவு இலவச இடம் தந்ததால் அதில் Microsoft Frontpage என்ற சாப்ட்வேர் கொண்டு டிசைன் பண்ணி பல தகவல்கலை தர ஆரம்பித்தான். அந்த நேரத்தில் அமெரிக்கா வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்த நேரம் அதனால் அங்கு வரும் இந்தியர்களுக்கு உபயோகமான பல தகவல்களை தர ஆரம்பித்தான் ஆனால் அதெல்லாம் ஆங்கிலத்தில் வந்தது..
அப்போது நான் அந்த வலைத்தளத்தை நடத்தி வந்த போது அதில் About me என்ற பக்கத்தில் நான் யார் எந்த மதம் நான் எந்த மத பெண்ணை கல்யாணம் பண்ணிக் கொண்டேன் என்றும் அதில் நான் மதங்களை நேசிப்பதை விட மனிதனையே அதிகம் நேசிக்கிறேன் என்றும் சொல்லி இருந்தேன்.
அதை படித்த இங்கிலாந்தில் வசிக்கும் என் மதத்தை சார்ந்த பலர் எனக்கு மிரட்டல் கடிதங்களையும் கமெண்ட்களையும் போட ஆரம்பித்தனர் அப்போது கமெண்ட் காலம் Guest Book என்று அழைக்கப்படும். அவர்கள் எனக்கு விடுவித்த எச்சரிக்கையில் எனது About me என்ற பக்கத்தை நீக்க வேண்டும் அல்லது அதில் நான் எந்த மதம் என்று குறிப்பிட்டு இருப்பதை நீக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். நான் அதற்கு எல்லாம் கவலைபடாமல் தொடர்ந்து எழுதி வந்தேன்.
அப்போதுதான் என் வெப்சைட்டிற்கு தொடர்ந்து வரும் என் மதத்தை சார்ந்த ஒருவர் அன்போடு சகோதாரா உங்கள் பரந்த மன்ப்பான்மையை நான் அறிவேன் ஆனால் அது இங்குள்ள நம் மதவாதிகளுக்கு அது புரிவதில்லை முடிந்தால் அந்த எந்த மதம் என்பதையாவது நீங்கள் நீக்கிவிடுங்களேன் என்று அன்போடு சொன்னார். அன்போடு அவர் சொன்னதால் அதை ஏற்றுக் கொண்டு நீக்கினேன். அந்த தளம் 2002 வரை இருந்தது. அதன் பின் அந்த இலவச இடத்தை தந்தவர்கள் அதை நிறுத்திவிட்டதால் நானும் வெப்சைட் நடத்துவதை நிறுத்திவிட்டேன்.
அதன் பின் நெட்டில் யாகூசாட்டில் அமெரிக்க பெண்களோடு கடலை போட்டு கொண்டு இருந்ததேன்( அது யாருப்பா சாட்டு மட்டும்தான் பண்ணினீங்களா என்று கேட்பது?) சாட் மட்டும்தான் பண்ணினேன் என்று நான் சொன்னால் நீங்களும் அப்படியே நம்பிவிட வேண்டும் அதற்கு மேல் கேள்வி எல்லாம் கேட்கபடக் கூடாது)
கொஞ்ச நாள் அதுவும் போரடித்துவிட்டதால் தமிழ்தளங்களை தேடிபடிக்க ஆரம்பித்தேன் 2005 க்கு அப்புறம் தமிழில் எழுதுபவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தார்கள்
2010 எனது மாமியாரும் மாமனாரும் வெகேஷனுக்காக
இங்கு மீண்டும் வருவதாக செய்தி வந்தது. நானும் வேலையில் இருந்து சீக்கிரம் வந்துவிடுவதால் அவர்கள் என்னிடம் பேசியே கொன்றுவிடுவார்கள் என்பதால் பேசாமல் நாமும் ப்ளாக் ஆரம்பித்து அதில் ஒளிந்து கொள்வோம் என்று எண்ணிதான் இந்த தளத்தை ஆரம்பித்தேன்.
http://avargal-unmaigal.blogspot.com/2013/07/94694400.html எனது மாமியாரும் கதை எழுதி விகடன் குமுதம் போன்றவைகளுக்கு அனுப்புவார் என்று கேள்விபட்டு இருக்கிறேன். ஆனால் அதெல்லாம் வெளிவந்ததா என்ரு தெரியவில்லை. அவரையும் இதில் எழுத சொல்லலாம் என்று நினைத்து அவரிடம் சொல்லி கதைகள் எழுதுங்கள் அதை நான் இதில் வெளியிடுகிறேன் என்ரு சொல்லி இருந்தேன் நான் சொல்லிய நேரம் ஏதுவோ இதுவரை அவரால் கதை எழுத நேரம் கிடைக்கவில்லை
எனது முதல் பதிவு ஜுலை 15 2010ல் வெளிவந்தது. அதுவும் நமது அரசியல் கோமாளியான ராம்தாஸ் அவர்களை வைத்து நான் வெளியிட்ட துணுக்குதான். அதை வெளியிட்டு விட்டு அதில் ஹிட் கவுண்டரையும் இணைத்துவிட்டு ஒரு மணிநேரத்திற்கு ஒரு தடவை வந்து பார்ப்பேன் அன்று இரவு மொத்தம் எத்தனை ஹிட் வந்திருக்கிறது என்று பார்த்தால் 10 க்கும் மேல் ஹிட் வந்து இருந்தது மனதில் சின்ன சந்தோஷம் ஆரம்பித்த முதல் நாளே 10 ஹிட் என்றால் எதிர்காலத்தில் எவ்வளவு வரும் என்று கற்பனையில் ஆழ்ந்து இருந்தேன். அப்படியே கற்பனை பண்ணி இருக்க கூடாதா விதி அங்க வந்து விளையாடிச்சு என் மன ரூபத்தில், என் மனசு சொல்லுச்சு மதுரைத்தமிழா உனக்கு வந்த ஹிட் எங்க இருந்து வந்துச்சு என்று பார் என்று சொல்லியது அது சொல்லியபடி வந்த ஹிட்டுக்களின் IP அட்ரசை தேடி பார்த்த போது அது எல்லாம் ஒரே IP அட்ரசாக இருந்தது அதையும் சோதித்து பார்த்த போது அது என் IP அட்ரசாக இருந்தது. அதன் பின் நாம் பார்க்கும் போது அது ஹிட்கவுண்டில் வராமல் இருப்பது என்பதை அறிந்து அதை முதலில் சரி செய்தேன்.
இப்ப சொல்லுங்க முதல் பதிவு வெளியிட்ட எனக்கு சந்தோஷமாக இருந்திருக்குமா இல்லையா என்று?
அதன் பின் ஸ்லோவாக ஹிட் எண்ணிக்கை வர ஆரம்பித்தது.. இபோது பதிவு எழுதாவிட்டால் கூட மிக குறைந்தது 1000 க்கு மேல் page view வருகிறது
எனக்கு உண்மையான சந்தோஷம் முதலில் தந்தது மதுரை பெண்பேராசிரியர் சாகம்பரி அவர்கள் அவர் தளத்தில் என்னைப்பற்றி இப்படி குறிப்பிட்ட வரிகள்தான் ""காரச்சாரமான விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன் அவர்களுக்கு,"" என்று எழுதியது http://avargal-unmaigal.blogspot.com/2012/02/blog-post_10.html
அதற்கு அடுத்ததாக ரமணி சார் தரும் கமெண்டுகள் .என் மனைவி எப்போதாவது என் பதிவிற்கு வந்தால் என் பதிவை முதலில் பார்ப்பதைவிட அந்த பதிவிற்கு ரமணி சார் கமெண்டு ஏதும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுதான் பதிவையே படிப்பாள். அதுவும் எனக்கு சந்தோஷம் தருகிறது
மனதில் நேசத்தையும் வார்த்தைகளில் அன்பையும் குழைத்து வாஞ்சையோடு தரும் நம் மஞ்சு சுபாஷினி அவர்கள் இடும் ஒவ்வொரு கமெண்ட்டும் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் கண்டிப்பாக அளவிட முடியாத சந்தோஷம் தரும்
அது போல நான் பதிவிடும்போது அதற்கு ஏற்று நான் இடும் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன் அதை உற்று நோக்கி சீனு அவர்கள் என்னைப்பாரட்டிய போது மீண்டும் எனக்குள் ஒரு சந்தோஷம் கிடைத்தது.
என் குரலை பதிவுலகில் கேட்டது 2 பேர் ஒன்று பால கணேஷ் மற்றொன்று ஜோதிஜி இருவர் தரும் கமெண்டுககளும் சந்தோஷம் தரும்
2 வாரங்களுக்கு முன்பு ஜோதிஜியிடம் பேசும் எனது பதிவுகள் பற்றி பேச்சு வந்த போது நான் சொன்னேன் ஜோதிஜி நான் பதிவு எழுதுவது பொழுதுபோக்கிற்காக அதுவும் என் மனதிற்கு தோன்றுவதை கிறுக்குவேன் என்று சொன்னேன் அதற்கு அவர் நீங்கள் கிறுக்கி இருந்தாலும் பல பதிவுகளில் நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி எழுதுங்கள் என்றார் நான் போங்க ஜோதிஜி உங்களுக்கு கிண்டல் பண்ண இன்று ஆள் கிடைத்தானா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லையா நீர் இட்ட பல படங்களை கண்டு நான் அசந்து இருக்கிறேன் உனக்கும் மூளை இருக்கு ஐயா என்று சொன்னார். அப்ப வந்தது பாருங்க எனக்கு சந்தோஷம் அந்த சந்தோஷம் என் பதிவை பாரட்டியதற்கு அல்ல என் மனைவி என்னிடம் முளையே இல்லை என்று நினைக்கிறாள் அவள் இல்லை என்று சொன்ன மூளை எனக்கு இருப்பதாக என்னிடம் சொன்னதால்தான் எனக்கு அவ்வளவு மகிழ்ச்சிங்க
அவரிடம் பேசிய சிறிது நேரத்தில் அவரிடம் இருந்த ஒரு கெட்ட குணத்தை அறிந்து கொண்டேன் அது என்ன சொல்லட்டா? சொல்லுறேன் ஆனா அந்த மனுஷங்கிட்ட மட்டும் சொல்லாதீங்க..
அவரிடம் உள்ள கெட்ட குணம் எதிரில் இருப்பவரை நன்றாக புகழ்ந்து பேசுவதுதான்
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : இனிமே யாரவது தொடர்பதிவு எழுத கூப்பிடுவாங்களா என்ன? யாரவது இனி கூப்பிட்ட இதைவிட பெரிய சுயபுராணம் எழுதி கொன்றுவிடமாட்டேனா என்ன
இந்த பதிவை போல தொடர் பதிவு எழுத ஆட்களை இறுதியில் அடையாளம் காட்டணும் என்று மனோ மிரட்டி சென்றதால் நான் எனது பதிவிற்கெல்லாம் கருத்துகள் வழங்கிய அனைவரையும் தொடர்பதிவு எழுத அழைக்கிறேன். மக்கா எழுதுங்க நாட்டுல இனிமேல் யாரும் வலைப்பக்கமே எட்டிபார்க்க கூடாது என்பதை மனதில் நிறுத்தி எழுதுங்கள்
உங்க ஸ்டைல்ல முதல் பதிவின் சந்தோஷம்... நானும் எழுதியிருக்கிறேன், உங்க பேரையும் சொல்லியிருக்கிறேன்... நன்றி...
ReplyDeleteஎனது தளத்தை உங்களது தளத்தில் அறிமுகப்படுத்தி கெளரவித்தற்கு மிகவும் நன்றி ஸ்கூல் பையன்
Deleteநான் ஸ்பெஷல் அருவாளுக்குல்லா ஆர்டர் பண்ணனும்னு இருந்தேன்...ஒ பூரிக்கட்டைதான் உங்க வீக்னெசா ஓகே ஓகே...
ReplyDeleteபூரிக்கட்டை வீக்னஸ் அல்ல எனது மனைவிதானுங்க
Deleteசாட் மட்டும்தான் பண்ணினேன்னு நான் சொன்னாலும் நம்ப மாட்டேங்குராயிங்க.
ReplyDeleteஹீ.ஹீ நாம யோக்கியனும் சொன்ன எவனும் நம்ம மாட்டேங்கிறங்க...காரணம் எல்லா அயோக்கியனும் நம்பளை அவர்கள் மாதிரியே நினைத்து கொள்கிறார்கள்
Deleteமிக்க நன்றி நண்பா....
ReplyDeleteநன்றி என்ற மூன்று வார்த்தை சொல்லி கை கழுவி விடாதீர்கள் நமக்கு 'சரக்கு' என்ற நான்கு வார்த்தையை கண்ணில் காட்டுங்க
Deleteவலையுலகில் நீங்கள் ரொம்ப அனுபவசாலி என்று புரிந்தது.....
ReplyDeleteதொடர்பதிவு மூலம் சில தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது!......
நீங்க ஸ்மார்ட்டுங்க என்னைப் பற்றிய பல தகவல்களை அறிந்து இருப்பீர்கள் பதிவின் மூலமே அதை ரகசியமாக் வைத்து கொள்ளுங்கள்
Deleteஆகா இருவரில் நானும் ஒரு பாக்கியவானா? புத்திசாலிகளை திறமைசாலி என்று சொல்வது புகழ்ச்சி அல்ல. அது கடமை.
ReplyDeleteவீணா போனவன் கூட பேசினால் பாக்கியவான் என்றால் நீங்களும் பாக்கியவான்தான்
Deleteஉண்மையிலேயே ஜோதிஜி கூறிய கருத்துக்கள் மிக உண்மை என்பது தான் எனது கருத்தும்.. சிறந்த படகலவையுடன் சிரிப்பாக தரும் சில விசயங்களை சீரியசாக தந்தால் விகடன் போன்ற ஒரு பத்திரிக்கைத் தரம் உங்கள் வலைபூவிற்கும் கிடைக்கும்
ReplyDelete(உங்களுக்கு விகடன் பிடிக்காது என்று தெரியும், இங்கு தரம் என்று சொன்னது செய்திகளையும் தாண்டிய ஒரு நேர்த்தி)
எனக்கு விகடன் பிடிக்காது என்று எங்கும் சொல்லவில்லை ஆனால் அதன் தரம் பழையபடி இல்லை குறைந்து கொண்டே வருகிறது என்றுதான் சொல்லி வருகிறேன்
Deleteநானும் வலைப்பக்கம் தொடங்குவதற்கு முன் உங்க பதிவுகளை பார்த்து அசந்ததுண்டு... உங்களை மாதிரி வாசிப்பவரை கவர்வது போல் எழுத முடியுமா என்று கூட நினைச்சேன்...!
ReplyDeleteபல பதிவர்கள் மிக அருமையாக எழுதுகிறார்கள் அவர்களை கண்டு நான் அசந்து போய் கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் மிக நன்றாக எழுதுவதில் கவனம் செலுத்தினாலும் வலைதள வடிவமைப்பிலும் எப்படி மக்களிடம் எடுத்து செல்வதில் தவற விடுகிறார்கள் என்பதே உண்மை
Deleteவிகடன் போன்ற ஒரு பத்திரிக்கைத் தரம் உங்கள் வலைபூவிற்கும் கிடைக்கும்
ReplyDeleteஅது ரொம்ப அதிகம் அல்லவா...ஆனாலும் உங்கள் வாக்கு பலிக்க விரும்புகிறேன்
Deleteமுதல் பதிவின் மகிழ்ச்சி மறக்க முடியாதது! முதல் பதிவிலிருந்தே உங்கள் பதிவுகளில் ஒரு நேர்த்தி காணப்படுவது உண்மை! இதை வளரும் பதிவர்கள் அனைவரும் கற்றிட வேண்டியது நன்மை! அழகாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஉங்களின் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றிகள்
Deleteமுதல் பதிவின் சந்தோஷத்தை மிகவும் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஜோதிஜியிடமிருந்து பாராட்டு என்பது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் போல அல்லவா?
பாராட்டுக்கள்.