Friday, August 2, 2013




 வெட்கப்படு தமிழனே வெட்கப்படு


இந்த பதிவை தமிழை உயிர் மூச்சாக நினைத்து வாழும் நண்பர் ஜோதிஜி அவர்களுக்காக வெளியிடுகிறேன்.


வீட்டில் மம்மி டாடி என்று தமிழ் நாட்டில்  சொல்லித் தர ஆரம்பிக்கும் தமிழனே நீ வெட்கப்படு!!

வருங்காலத்தில் இவர்களிடம் இருந்துதான் நீ தமிழ் கற்றுக் கொள்ள வேண்டிருக்கும் என்பதை மறந்துவிடாதே

தமிழ் நாட்டில் சாகும் தமிழ் வெளிநாடுகளில் உயிர்த்து வர ஆரம்பிக்கிறதா? இதை பார்த்த பின் ஆமாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது எனக்கு அப்ப உங்களுக்கு



China girl talking in tamil



Tamil route to China


Aaron from New York ( USA ) studied Tamil in American College, Madurai . He speaks /reads /writes Tamil very fluently


Chinese Boy singing tamil song-Vasantham Star 2009



Thai manne vanakkam song performed by Chinese Artist





Little China at Tamil university


Chinese Reporter Speaks Tamil


White Girl singing Tamil song




German Girl Singing Indian Song



american university students singing tamil song



Americans Singing Tamil Song



Chinese Guy singing Tamil song


Ayan tamil song American singing




ஒரே மாதிரியான செய்திகளை பகிர்ந்து படிப்பவர்களை போராடிக்காமல் ஒவ்வொரு பதிவிலும் வித்தியாசமான தகவலை தருவது அவர்கள்...உண்மைகள் வலைத்தளம். இது உங்களின்  பொழுது போக்கிற்கான தளம்..


அன்புடன்
மதுரைத்தமிழன்

16 comments:

  1. வெளி நாட்டில் வாழும் தமிழ் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. ஆனால் உள் நாட்டில் வருத்தம்தான் மிஞ்சும்.

    ReplyDelete
  2. என் உயிர் தமிழை யார் பேசினாலும் அது அமுதம்தான் இல்லையா ?

    ReplyDelete
  3. முதல் காணொளியில் அந்த பெண்மணி பேசும் பேச்சைக் கேட்கும் போது ஆச்சரியமாக அழகாக இருந்தது. வந்தே மாதரம் குழுவினர் பாடிய பாடலைத்தவிர மற்ற அத்தனையும் இப்போது தான் உங்கள் மூலம் பார்க்க முடிந்தது. நன்றி. சீன தமிழ் வானொலி சேவை இணைப்பையும் கொடுத்து இருக்கலாமே?

    ReplyDelete
  4. எல்லாம் பெற்றோர் கையில் உள்ளது நண்பரே! கணவன் மனைவி இருவரும் ஐ.டி. துறையில் கைநிறைய சம்பளமும் ஏ.சி.அறையின் குளிரும் வேளைக்கு ஓ.சி.யில் உணவும் பானங்களும் என்று பழகி விட்ட பிறகு, குழந்தைகளோடு செலவிட நேரம் இன்மையால், குற்ற உணர்வோடு அவர்கள் இஷ்டப்படி நடமாட விட்டுவிடும் அபாயம் இந்தியாவில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆங்கில மீடியத்தில் படித்தாலும் அவர்களுக்கு வீட்டில் யாராவது தாய்மொழியைச் சொல்லிக்கொடுக்க முடிந்தால் நிச்சயம் குழந்தைகள் மறுக்க மாட்டார்கள் என்பது உறுதி. லண்டனிலிருந்து வந்த என் பேரக்குழந்தைகள் இரண்டே மாதத்தில் தமிழில் நல்ல தேர்ச்சி பெற முடிந்தது, என்னுடைய முயற்சியால். நம்மவர்கள் மனம்வைக்க வேண்டுமே! –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  5. நம் மக்கள் உணர வேண்டும்...@

    ReplyDelete
  6. நம்ம ஆளுங்க எப்போதான் திருந்த போறாங்களோ தெரியலை. அம்மா, அப்பா என அழைப்பதில அப்படி என்ன அவமானம் நேர்ந்து விடப்போகிறதுன்னு தெரியலை. தூயா தன் பணியிலும், தங்குமிடத்திலும் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசினாலும் அதன் சாயல் கலக்காம சுத்த தமிழில் பேசுவா.

    சின்ன பொண்ணு, அக்கா! என்கிட்டயும் ஆங்கிலத்தில் பேசினா எனக்கும் பழகுமில்ல கேட்டாலும், அதுலாம் ஸ்கூல்ல தானா வரும். வீட்டுக்கு வந்துட்டா தமிழ்லதான் பேசுவேன்னு அச்சர சுத்தமா பேசுவா!!

    ReplyDelete
  7. நம்மவர்கள் கடித்து துப்பும் தமிழை விட அன்னியர் குரலில் அழகாக ஒலிக்கிறது தமிழ்
    .உண்மையில் தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம்தான்.
    இனிக்கத் தமிழ் மொழி எமது எமக்கு இன்பம் தரும்படி வாய்த்த நல் அமுது என்பதை எப்போது

    ReplyDelete
  8. பெருமைப்பட வேண்டிய விஷயம்..

    ReplyDelete
  9. வித்யாசமான செய்திகள் காணொளிகள் - பகிர்வுக்கு நன்றி.
    தொடருங்கள் .

    ReplyDelete

  10. பிறமொழியினர் தமிழ் பேசும்போது கேட்க மகிழ்ச்சிதான். நம்மவர் பலரும் அந்நிய மொழி பேசுவதும் நடக்கும் நிகழ்வுதானே. அதற்காக நாம் நம் மொழியை விடக் கூடாதுதான். அது உணர்வில் வர வேண்டியது.

    ReplyDelete
  11. தமிழக டிவி நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்களின் தமிழை கேட்டு நொந்துபோனவங்களுக்கு இது தான் ஆறுதல்.

    ReplyDelete
  12. சிறப்பான பகிர்வு மதுரை தமிழன். இவர்களுக்கு இருக்கும் ஆர்வம் கூட நம் மக்களிடம் இல்லையே.....

    தில்லியில் கூட தமிழ்ச் சிறுவர்கள் தனது மொழியை விட வேற்று மொழி மீது தான் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள்....

    ReplyDelete
  13. வெளிநாட்டவர் நம் தமிழ்ப்பாடல்களைப் பாடுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை.
    ஆனால் பேசுவதைப் பார்க்கும் பொழுது தான் மெய் சிலிர்க்கிறது.
    நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள் மதுரைத் தமிழன்.

    (ஆமாம்... உங்களின் பிள்ளைகள் உங்களை “அப்பா“ என்று அழைக்கிறார்களா...?)

    ReplyDelete
  14. இந்த வார இறுதியில் என்ன செய்வது என தவித்த பல தமிழ் உள்ளங்களுக்கு நல்ல யோசனை சொல்லியிருக்கீங்க...வெட்கப்படு தமிழா!

    ReplyDelete
  15. நல்லா உரைச்சீங்க..!

    ReplyDelete
  16. தமிழன் உணரவேண்டிய உண்மைகள்
    -Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.