அலசி ஆராய்வது அப்பாடக்கர் : விஜய் விஷயத்துல மௌனமா இருந்துட்டேன்’
கமல்
அமைச்சர் ஆவதற்கு யாருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அவர்களைப் பற்றி எல்லாம் மொட்டைக் கடிதங்கள் அதிகமாக போயஸ் கார்டனுக்கு வர ஆரம்பித்துள்ளதால் அமைச்சரவை மாற்றம் பற்றி முதல்வருக்கே அதிக குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது என்று செய்திகள் வந்துள்ளன.
அம்மா உங்களுக்கு ஒரு நல்ல ஜடியா உங்க கட்சியில் உள்ளவர்களுக்கே அமைச்சர் பதவி தருவதற்கு பதிலாக விஜயகாந்த் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி தந்து எல்லோருக்கும் ஒரு ஷாக் தரலாம். இவர்கள் மேல் யாரும் குறை சொல்லி மொட்டை கடிதம் யாரும் எழுதமாட்டார்கள்தானே?
"நான் ஒரு முழு நேர அரசியல்வாதி':திருப்பதியில் விஜயகாந்த் பேட்டி.
விஜயகாந்த இதை நீங்க முழு சுயநினவோடுதான் சொல்லி இருக்கிங்களா அல்லது மஞ்சுளாவின் மரண தினத்தில் உளறியது போலதான் இதையும் சொல்லி இருக்கிறீர்களா என்பதை கொஞ்சம் விளக்க முடியுமோ
"கல்லூரி மாணவர்களின் கதாநாயகனாக, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி விளங்குகிறார்,'' என, தமிழக பாரதிய ஜனதா தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக மக்களின் கனவில் கூட அவர் பிரதமராக வர வாய்ப்பு இல்லை என்பதை இப்படி பொது வெளியில் போட்டு உடைக்கிறாரே
சமீபத்தில் முக்கியமான ஒரு சினிமா புள்ளியை சந்தித்த கமல், 'தமிழ் சினிமாவின் இளம் ஹீரோக்களில் விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும். கடந்த சில வருஷமா என்னோட ஒவ்வொரு பர்த்டே பார்ட்டிக்கும் அவருக்கு ஸ்பெஷலா இன்வைட் பண்ணுவேன். அவரும் குஷியா வந்து கலந்துகொள்வார். விஜய்யோட படத்துக்குப் பிரச்னை ஏற்பட்டபோது
மீடியாவை எல்லாம் அழைச்சு விஜய்க்கு ஆதரவா பேசணும்னு ஆவேசம் வந்துச்சு. பிறகு யோசிச்சுப் பார்த்தேன். என்னோட 'விஸ்வரூபம்’ படத்துக்கு பிரச்னை வந்தப்போ, எனக்கு ஆதரவா விஜய் ஒரு வார்த்தைக்கூட பேசலைனு ஆதங்கம் வந்துச்சு. அதனால் விஜய் விஷயத்துல மௌனமா இருந்துட்டேன்’ என்று மனம்விட்டு பேசி இருக்கிறார்
சரி கமல் சார் இனிம வரும் உங்கள் பிறந்த நாளுக்கு அவரை அழைப்பீர்களா இல்லையா என்பதை மனம் திறந்து சொல்லுங்களேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்
கமல் அவர்கள் ...உண்மையைத் தானே
ReplyDeleteகூறியுள்ளார் ?அதற்காக நீங்கள் இப்படி 'கொளுத்தி போடலாமா ?'
Deleteஒரு மூத்த கலைஞர் இப்படிதான் நடந்து கொள்வதா என்ன? அப்புறம் உலக நாயகனுக்கும் விஜய்க்கும் என்ன வித்தியாசம். விஜய் அவர் அப்பா சொன்னபடி ஆடுகிறார் ஆனால் நாயகன் சுயமாக சிந்திப்பவர்தானே இது அவரின் அறிவுக்கு எட்டவில்லையா என்ன?
அது சரி...!
ReplyDeleteகமலும் விஜயகாந்த் மாதிரி மப்புல இருந்துருப்பாரோ - டவுட்டு
ReplyDeleteஏகப்பட்ட எழுத்துப் பிழைகள் சரி செய்து கொள்ளுங்கள்.. :)
ReplyDeleteகமல் விஜய்க்கு அழைப்பு அனுப்பினா என்ன அனுப்பலைன்னா என்ன?! அவர் பொறந்த நாளுக்கு உங்களுக்கு ஒரு சாக்லேட் கூட கிடையாதுன்னு மறந்துட்டீங்களா?!
ReplyDeleteபிரச்சினைகள் பலவிதம்
ReplyDelete