அமெரிக்காவில் இந்து வைதிக முறைப்படி நடந்த முதல் லெஸ்பியன் திருமணம்
திருமணம் என்றால் ஓர் ஆணும் பெண்ணும் இணைவது என்பதைத் தவிர்த்து நம்மால் வேறு விதமாக சிந்திக்கமுடிவதில்லை. ஓர் ஆணையும் பெண்ணையும் போலவே, ஓர் ஆணும் ஆணுமோ அல்லது ஒரு பெண்ணும் பெண்ணுமோ மணம் செய்துகொண்டு இணைந்து மகிழ்ச்சியாக வாழமுடியும் என்பதை நம்மால் கற்பனையாவது செய்யமுடியுமா? அவ்வாறு நிஜமாகவே நடந்தால் நம்மால் அதை இயல்பாக ஏற்றுக்கொள்ளமுடியுமா?
அதற்கு நமக்கு கிடைக்க கூடிய பதில் முடியும் முடியாது என்பதாகத்தான் இருக்கும். ஆனால் நம் பதில் எப்படி இருந்தாலும் வருங்காலங்களில் நாம் அதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும் காரணம் நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே அளவு அப்படி திருமணம் செய்து கொள்பவர்களுக்கும் இருக்கிறது அவர்களின் தனி மனித உரிமையில் தலையிட எவருக்கும் உரிமை இல்லை என்பதே உண்மையாகும்
இதோ அந்த கூற்றின்படி அமெரிக்காவில் இந்து வைதிக முறைப்படி நடந்த முதல் லெஸ்பியன் திருமணம் . இரு தரப்பு குடும்பங்களின் ஆதரவோடு நடந்த திருமணம். இது போல திருமணங்கள் வருங்காலங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகமே. காரணம் இந்த திருமணங்கள் இங்கு சட்டப்படி நடக்கின்றன.
மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்ததிரத்தை மதிக்கும் மனநிலை எனக்கு இருப்பதால் அவர்கள் நலமுடன் வாழ எனது தளம் சார்பாக நான் வாழ்த்துகிறேன்
இந்த திருமணத்தை போட்டோ எடுத்த போட்டோகிரபரின் வார்த்தைகள் இங்கே அப்படியே தரப்பட்டு இருக்கின்றன. போட்டோகிரபரின் கைவண்ணத்தில் போட்டோக்கள் மனதை கவருகின்றன
http://www.stephgrantphotography.com/blog/shannon-seema-indian-lesbian-wedding-los-angeles-ca/
இந்திய கலாச்சாரத்தில் வந்தவர்களுக்கு இது ஷாக்காக இருக்கலாம் ஆனால் இது ஏதோ முதல் முறையாக அமெரிக்காவில் மட்டும் நடக்கிறது என்று கருத வேண்டாம் . இந்தியாவிலும் இப்படிபட்ட திருமணங்கள் வெளியில் தெரிந்தும் தெரியாமலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அன்புடன்
மதுரைத்தமிழன்
வெளங்கிடும்..
ReplyDeleteமாமியார் வீடு, பிள்ளைப்பேறு, அதை கவனிக்குறது, ஆணாதிக்கம் போன்றவற்றிலிருந்து விடுதலை. அதே நேரத்தில் அங்கயும், ஈகோ, பொசசிவ், அதிகார, அலட்சியம் போன்ர விசயம்லம் இருக்கு. எது எப்படி இருந்தாலும் கல்யாணம்ன்னாலே பிரச்சனைதான்!!
ReplyDeleteஅதானே! மந்திரம் சொல்லாமே கல்யாணமா?
ReplyDeleteபூனைக்கும் எலிக்கும் கல்யாணம் நடந்தாலும்...மந்திரம் சொல்லணும். இல்லாட்டி ஆகாது! யாருக்கு?
மதத்தின் பெயராலும் இப்படி ஒரு அவலமா?
ReplyDelete