Wednesday, August 7, 2013நாளைய இந்தியா என்று பெருமை பேச ஏதாவது விஷயம் இருக்கிறதா ?

ஹலோ,

 நலமா? எனக்கொரு
 உதவி... " நாளைய
 இந்தியா" என்ற
 தலைப்பில் ஓவிய
 போட்டிக்காக
 இந்தியாவை பெருமித
 படுத்தும் படி எதாவது
 ஓவியம் இருந்தால் என்
 மெயிலுக்கு அனுப்பி
 வைங்க..  இரண்டு
 நாட்களுக்குள்..
 ப்ளீஸ்..!இப்படி எனக்கொரு வேண்டுகோள் இமெயில் நமது தமிழ்  பதிவரிடமிருந்து வந்தது. அதற்காக நான் தேடலை துவங்கிய போது என் மனதில் பல எண்ணங்கள் வந்து அலை போல மோதின.. அதன் விளைவே இந்த பதிவு

 நமது இந்திய நாட்டின் பெருமைகள் என்று பேசும் போது பல பெருமைகளை எடுத்து சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் அது எல்லாம் பழம் பெருமைகளாகவே இருக்கின்றன. ஆனால் இப்போது நாம் எதையாவது செய்தோ அல்லது எதிர்காலத்தில் நாம் இதை செய்து முடிப்போம் என்று சொல்லி பெருமைபட ஏதாவது ஒரு விஷயம் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லையெனவே சொல்ல எனக்கு தோன்றுகிறது( இப்படி எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா? அல்லது உங்களுக்கும் தானா?)

இங்கு நான் சொல்வது தனிப்பட்ட நபர் செய்த சாதனைகளை  பெருமையாக பேசுவதை சொல்லவில்லை. ஒரு சமுதாயம் செய்த சாதனைகளை பெருமையாக பேசுவது என்பது பற்றி சொல்லுகிறேன்

ஒரு காலத்தில் நமது இந்தியவில் கலாச்சாரம் என்பது பல மதங்களை உள்ளடக்கி மொழிகளை உள்ளடக்கி வேற்றுமையில் ஒற்றுமையாக இருந்து உலகமே வியக்கும் வண்ணம் வாழ்ந்து வந்தோம். ஆனால் இப்போதோ அப்படி இல்லை மத ரீதியாகவும் மொழி ரீதியாகவும் மக்கள் மனதில் விஷ விதைகள் விதைக்கப்பட்டு விரோத மனப்பான்மையோடு வாழ்ந்து வருகிறோம்.


தொழில் உற்பத்தி துறையில் புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கப்பட்டு அதை தரமாக செய்து உலக சந்தையில் இடத்தை பிடித்து இருக்கிறோமா என்று பார்த்தாலும் அதிலும் ஏமாற்றமே?

அல்லது விவசாய துறையில் தன்னிறவு அடைந்து விலை பொருட்கள் மிக குறைந்த விலையில் எல்லா மக்களையும் சென்று அடைகிறாதா என்று பார்த்தால்  அதிலும் ஏமாற்றமே?


நீர்வளத் துறையிலாவது ஏதாவது சாதித்துவிட்டார்களா என்று பார்த்தால்  அதிலும் ஏமாற்றமே?


சிலபேர் சொல்லலாம் நாம் தொழில்நுட்ப துறையில் சாதனை படைத்து இருக்கிறோம் என்று சொல்லலாம். நாம் தொழில் நுட்ப துறையில்  நாம் ஏதும் புதிதாக ஏதும் கண்டுபிடித்து சாதனை புரியவில்லை ஏற்கனவே மேலை நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டு அறிமுகப்படுத்த பட்டவை வைத்து அந்த மேலை நாட்டினற்கு அவுட் சோர்ஸிங்க் என்ற அடிமை வேலையை குறைந்த ஊதியம் பெற்றுக் கொண்டு செய்து வருகிறோம் என்பதுதான் உண்மை

எதிர்காலத்தில் இந்த துறையில் என்று குறிப்பிட்டு சொல்லும்படியாக ஏதாவது ஒரு துறையிலாவது நாம் மற்ற எல்லா நாடுகளை விட மிக உயர்ந்த அளவில் இருப்போம் என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா?


இந்த நாளைய என்ற பிரச்சனையை  நான் இந்தியாவிற்கு மட்டும் என்று குறிப்பிடவில்லை. உலகின் வல்லரசு நாடாக தன்னை நினைத்து கொள்ளும் அண்ணன் அமெரிக்காவிடமும் இந்த கேள்வியை கேட்கிறேன் காரணம் அமெரிக்காவிலும் எதிர்காலம் குறித்த கனவுகள் கூட தேக்க நிலையை அடைந்து விட்டது போலதான் தோன்றுகிறது

இதை படிப்பவர்களிடம் ஒரு கேள்வி இந்தியா வல்லரசு ஆகுமா அல்லது உலகமே வியக்கும் அளவிற்கு சாதனைகள் செய்து இந்தியன் என்று  சொல்லி பெருமை படும்  செயலை செய்யுமா? செய்ய முடியுமா என்று மனம் திறந்து பாசிடிவான கருத்துகளை சொல்லுங்களேன். முடியாது என்று நீங்கள் சொன்னால் ஏன் முடியாது? அல்லது எதை எப்படி செய்தால் முடியும் என்று சொல்லுங்களேன்.


நான் கிழ்கண்டவர்களிடம்  இருந்து இதற்கான நல்ல பதிலை அல்லது கருத்துக்களை இங்கு பின்னோட்டவாயிலாகவும் அல்லது "நாளைய இந்தியா' என்று பதிவாகவோ எழுதி வெளியிட்டு அதற்கான லிங்கை இங்கே இணைக்க வேண்டுகோள் விடுவிக்கிறேன் . உங்களுக்கு நேரம் இருந்தால் எழுதவும்இதில் குறிப்பிட்ட பெயர்கள் தவிர மற்றவர்களும் பதிவிடலாம் அல்லது கருத்து சொல்லாம். முடிந்த வரை பாசிடிவ்வாக எழுதுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் பிறந்தவர் என்கிற நிலையில்  இந்திய நாட்டின் வளர்ச்சியை பார்த்துக்கொண்டு வரும் திரு.பழனி.கந்தசாமி தன் அனுபவ கருத்தை எனது வேண்டுகோளை ஏற்று இங்கு பதிவாக வெளியிட்டு உள்ளார்
http://swamysmusings.blogspot.com/2013/08/blog-post_10.html இந்தியாவின் எதிர்காலம்

மிக சுருக்கமாக சொன்னாலும் நறுக்கென்று சொல்லி இருக்கிறார்


2. நண்பர் ஜோதிஜி அவர்கள் நான் இந்த பதிவின் இறுதியில் கேட்ட வேண்டுகோளின்படி தான் ஏற்கனவே எழுதி வெளியிட்டு இருந்த பதிவை இங்கு பகிர்வது  பொருத்தமாக இருக்கும் என்பதால் அதற்கான   இணைப்பை இங்கு தந்துள்ளேன்.
   
வணக்கம் நண்பா

நீங்க பதிவில் வேண்டுகோள் விடுத்த பதிவை யோசித்து பார்த்த போது ஏற்கனவே எழுதியுள்ளது தெரிந்தது.  நிச்சயம் உங்களால் ஒரு மணி நேரம் ஒதுக்க முடிந்தால் மட்டும் இந்த இணைப்புக்குள் செல்ல வேண்டும்.
ஆனால் சுவராசியம் இந்த விசயங்களை இப்படி கொண்டு போக முடியுமா? என்று ஆச்சரியப்படுவீங்க.
இது உறுதி. http://deviyar-illam.blogspot.in/2011/12/blog-post_11.html
 


 

25 comments:

 1. இந்தியா வல்லரசு ஆகும், எத்தனை விரைவில் சமுதாய மாற்றங்கள் ஏற்படுகின்றதோ அத்தனை விரைவில்...!

  சமுதாய மாற்றம் என நான் சொல்வது ஒவ்வொரு தனிமனித மாற்றங்களை...!

  நாளைய இந்தியா என்று நாம் பெருமை பேசிக்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என நான் கருதுகிறேன், பெருமை என்பது நாம் நம்மை பற்றி பேசிக்கொள்வதல்ல, பிறர் நம்மைப் பற்றி பேச வேண்டிய ஒன்று, பெருமை என்று நாம் பேசினாலும் பழைய பெருமைகளைத் தான் இன்னமும் பேசிக்கொள்கிறோம்...!

  உண்மையில், பெருமைபட வேண்டிய விஷயங்களை பற்றி நாம் பேசிக்கொள்வதே இல்லை, 1960-களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தை பெறுமை பேசும் யாரும், இலங்கைப் போர் குற்றத்தை எதிர்த்து இன்றைய மாணவர்கள் செய்த போராட்டத்தை பற்றி பெருமை பேசுவதில்லை.

  காலம் கடந்த போராட்டம் என்றே கொண்டாலும், அதில் வெற்றியும் அடையவில்லை என்றாலும் 60-களுக்கு பின் நடக்கும் மாணவர் போராட்டம் இது தான்(எனக்கு தெரிந்தவரையில்). ஆனாலும் இன்றைய மாணவர் மீது கூறப்படும் குறைகள் இன்னமும் குறைந்த பாடில்லை.

  இன்றைய இளைஞர் மீது இருக்கும் எண்ணங்களை முதலில் பெரியவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். சரியான வழிக்காட்டுதல் இருந்தால் இன்னும் பெறுமை படும் செயல்களை இளைஞர் செய்வார்கள். ஆனால் இங்கே வழிக்காட்ட ஆளுமில்லை, குறைச் சொல்பவர்களுக்கு பஞ்சமுமில்லை.

  என்னோடு தகவல் தொழில்நுட்பம் படித்து வந்த என் நண்பனுக்கு தொழில்நுட்பதிலுல்ல ஆர்வத்தைவிட விவசாயம் மீது ஆர்வம். ஆனால், அவனது உறவினர்களே விவசாயிகளாய் இருந்தும் அவனை விவசாயம் செய்ய அனுமதிப்பதில்லை. விவசாயம் செய்ய நினைக்கும் ஒரு இளைஞனால் தொழில்நுட்பதில் என்ன சாதனை செய்துவிட முடியும்...? விவசாயத்தின் அவசியம் உணர்ந்த ஒருவனை விவசாயம் செய்யவிடாமல் தடுப்பது போலவே இன்னும் நிறைய இளைஞர்களின் ஆசைகள் கலைக்கப்படுகின்றன.

  இப்படிப்பட்ட இளைஞர்கள் மீது பழி சுமத்த படுகிறதே ஒழிய உதவிகளும் கிடைப்பதில்லை, வழிக்காட்டுதலுமில்லை...!

  ஹாக்கியில் இந்திய இளம்பெண்கள் வெள்ளிப் பதக்கம் வென்றதை பற்றி பேச இங்கே யாரும் முன்வருவதில்லை, மட்டைப் பந்து சூதாட்டத்தைப் பற்றியே பேசி மேலும் அதற்கு விளம்பரம் தான் செய்கிறார்கள்.

  நாளைய இந்தியா என்ன ஆகுமோ என கேட்காமல், நாளைய இந்தியா என்ன ஆக வேண்டும் என இளைஞர்களுக்கு வழிக்காட்டுங்கள், நிச்சயம் இந்தியா தன் நாட்டை மட்டும் வளர்த்துக் கொள்ளும் அமெரிக்கா போல் இல்லாமல் பிற நாட்டையும் முன்னேற்ற வழிவகுக்கும்...!

  நிச்சயமாக அப்பொழுது பிற நாட்டவர்கள் நம்மை பற்றி பெறுமையாய் பேசிக்கொள்வார்கள்...!

  தமிழுக்கும், இந்தியாவுக்கும் ஏதாவது செய்யவேண்டும் என எண்ணினாலும் என்ன செய்வது என்பதை அறியாத இளைய சமுதாயத்தை சேர்ந்தவர்களில் நானும் ஒருவன் தான், வழிக்காட்டுங்கள். நீங்கள் நினைக்கும் நாளைய இந்தியாவை உருவாக்குகிறோம்,பெருமைப்பட செய்கிறோம்...!

  ReplyDelete
  Replies
  1. உங்களின் கருத்தில் இறுதியில் எழுப்பட்ட கேள்விதான் என் மனதிலும் எழுந்தது. அதனால்தான் இணையத்தில் வலம் வரும் இந்தியாவை நேசிக்கும் மிக சிறந்த சிந்தனையாளர்கள் 10 பேரை தேர்ந்தெடுத்து அதற்கு பதில் எழுதாமாறு கோரிக்கை வைத்திருக்கிறேன். பொருத்து இருந்து பார்ப்போம் அவர்கள் ஒரு நல்ல பதிலை தருவார்கள் என நினைக்கிறேன் சகோதரா

   Delete
  2. நாளைய இந்தியா பெருமைபட வேண்டும் என்று உங்களை போல சிந்திக்கும் இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதே மிக பெருமை பட வைக்கிறது உங்களின் இந்த எண்ணம் தீப்பொறியாகி எல்லா இளைஞர்கள் மத்தியில் பரவட்டும் அது தான் என் ஆசை

   Delete
 2. அழைப்பிற்கு நன்றி. அவசியம் என் கருத்துகளை பதிவு செய்கிறேன்.

  ReplyDelete
 3. நமது நாட்டில் பலர் தங்களுக்கும் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கும் தொடர்பேதுமில்லை என்று எண்ணி வாழ்கின்றார்கள். பல தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். எனவே ஒரு சமுதாயம் வளர வேண்டுமெனில், பல சமுதாயங்களை உள்ளடிக்கிய நாடு உயர வேண்டுமெனில், ஒவ்வொரு தனிமனிதனின் நிலையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும், செயலில் மாற்றம் ஏற்பட வேண்டும் அப்பொழுதுதான் நாளைய இந்தியா வல்லமையான இந்தியாவாக மாறும்.
  சிறு துளி பெரு வெள்ளம்
  சிறு துளி இல்லாமல் ஏது பெருவெள்ளம். நன்றி

  ReplyDelete
  Replies
  1. தனிமனிதனிடம் மாற்றம் ஏற்படவில்லையென்றால் சமுகத்திலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லைதான். தங்களின் கருத்திற்கு நன்றி

   Delete
 4. பக்கத்து வீட்டுக்காரனை ஜென்ம விரோதியாக பார்க்கும் எண்ணம் இன்னும் நமக்கு மாறவில்லை.

  முதலில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தன்னில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

  இந்தியா வல்லரசு பல்லரசு ஆவதற்கு இன்னும் எத்தனையோ வருஷம் இருக்கு.

  முப்பது கோடி மக்கள் இப்பவும் ஒருவேளை சாப்பாட்டுக்கு சிங்கி அடிப்பதாகதான் தகவல்கள் வந்துட்டு இருக்கு....!

  ReplyDelete
  Replies
  1. எனக்கு நம்பிக்கை இருக்கிறது நிச்சயம் இந்தியா ஒரு நாள் மாறும் என்று ஆனால் அப்படி மாறும் நேரத்தில் அதை காண நம்மை போல வயதுடையவர்கள் நிச்சயம் இருக்கமாட்டார்கள். காரணம் காலம் ஒரு சைக்கிள் அது மாறிக் கொண்டே இருக்கும் நம் கண்களுக்கு தெரியாமல்

   Delete
 5. இந்தியா வல்லரசு மட்டுமல்ல நல்லரசு ஆகவும் ஆகனும். ஆகும்..ஏன் முடியாது.. ? முடியனும்னுதான் நாங்க நினைக்கிறோம்... முதல்ல என்னிலிருந்தே நான் கை உயர்த்துகிறேன்..!
  முதலில் கருத்திட்ட மதியழகன் போன்ற இளைஞர்கள் ஆயிரமாயிரம் பேர் கை கோர்த்துக்கொள்ளுங்கள்..! நிச்சயம் முடியும்!

  என் சிந்தனை பற்றி நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். ஆகஸ்டு 15 க்கு அப்புறம் சந்திக்கிறேன்.

  மனோ அவங்க பதிலுக்கு....
  சுதந்திரம் கிடைக்குமோ கிடைக்காதோ எப்ப கிடைக்குமோன்னு அன்னிக்கு போராட்ட வீரர்கள் யோசிச்சிருந்தா... இன்னிக்கு சுதந்திர காற்றை சுவாசிச்சிகிட்டு இருந்திருப்போமா..? பல வருஷம் கூட ஆகட்டுமே... நம் அடுத்த சந்ததிகளுக்காவது நல்லதை விட்டு செல்வோம் அல்லவா!

  ReplyDelete
  Replies
  1. மிக நல்ல பதில் நம்பிக்கை உணர்வை தருகின்றன. எனது இந்த பதிவிற்கே மதியழகன் போன்ற இளைஞரும் உங்களை போன்ற யூவதியும் நம் நாடு முன்னேறும் என்று உறுதியாக சொல்வதே எனக்கு மிகவும் சந்தோசத்தை தருகிறது

   Delete
 6. ஊழல் என்ற கறை படிந்தாலும் அவ்வப்போது அதை விலக்க "சர்ப்" பவுடர் இளைஞர்கள் துடிப்புடன் இருக்கத்தான் செய்கிறார்கள்! இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இந்தியா வல்லரசாகும்! நம்புவோம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் உங்கள் நம்பிக்கை நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்

   Delete
 7. இந்த நிமிடம் தான் இணையத்திற்குள் வர முடிந்தது. இது குறித்து ஏற்கனவே கொஞ்சம் எழுதியே வைத்து விட்டேன். செப்பனிடல் வேண்டும். உங்கள் ஆக்கபூர்வமான செயலுக்கு என் பாராட்டுரைகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹலோ,

   நலமா? எனக்கொரு
   உதவி... " நாளைய
   இந்தியா" என்ற
   தலைப்பில் ஓவிய
   போட்டிக்காக
   இந்தியாவை பெருமித
   படுத்தும் படி எதாவது
   ஓவியம் இருந்தால் என்
   மெயிலுக்கு அனுப்பி
   வைங்க.. இரண்டு
   நாட்களுக்குள்..
   ப்ளீஸ்..!


   இப்படி எனக்கொரு வேண்டுகோள் இமெயில் நமது தமிழ் பதிவரிடமிருந்து வந்தது. அதற்காக நான் தேடலை துவங்கிய போது என் மனதில் பல எண்ணங்கள் வந்து அலை போல மோதின.. அதன் விளைவே இந்த பதிவு அந்த மெயிலை எழுதியவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும்

   Delete
 8. வரும்காலத்தில் இந்தியா வல்லரசாவதென்னவோ உண்மைதான்.. அதை மறுப்பதற்கில்லை! ஆனால், ஏழைகள், பிச்சைக்காரர்கள், ஜனத்தொகை பிரச்சினைகள், லஞ்ச ஊழல் பிரச்சினை, கலாச்சார கற்பழிப்புகள் (ஒருத்தனை லவ் பண்ணி அவனோட செக்ஸ் எல்லாம் துணிவா வச்சுட்டு அப்புறம் கவனமா அவனைத்தவிர இன்னொருவனை மணம் முடித்தல் -அப்பா அம்மாவை திருப்தி படுத்த, சாதி பார்த்து இத்யாதி இத்யாதி- எல்லாம் மோசமாகிக்கிட்டேதான் போகும்போல தோணுது. இந்தியாவிலேயே வாழ்ந்தால் இதுபோல் விசயங்கள் நமக்கு ஒண்ணும் பெருசாத் தெரியாது போல இருக்கு. You just become immune and insensitive to such..ஆனால் வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு இந்தியாவை (நம்மைப் போல) பார்த்தால் நிறைகள்கூட குறைகளாத்தான் தெரியுது.

  பொதுமக்கள் கொஞ்சம் நாளுக்கு நாள் தரமா, ரெஸ்பாண்ஸிபிளா, உண்மையா, பொறுப்புடன், விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் சந்தோஷம்தான்..I am not sure we ever get such attitude- not in my lifetime for sure!

  I am not too optimistic about the future India!

  ReplyDelete
  Replies
  1. நமக்கு இங்கு இருந்து பார்ப்பதால்தான் அப்படி தோன்றுகிறதோ என்னவோ? பொறுத்து இருந்து பார்ப்போம் இந்தியாவில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை. நான் கேட்டு கொண்டதற்கு இணங்க உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து தங்கள் கருத்தை இங்கு பதிவு செய்தற்கு என் மனம் மார்ந்த நன்றிகள் வருண்

   Delete

 9. விரிவாக எழுதப்படவேண்டிய பதிவு இது
  ஆயினும் பின்னூட்டம் என்பதால் சுருக்கமாக என் கருத்து

  இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள
  வீத்தியாசமாக எனக்கு ஒரு விஷயம் படுகிறது

  இங்கு கண்மூடித்தனமாக செம்மறி ஆட்டுத்தனமாக
  தனிமனிதர்களைத் தொடரும் வழக்கம் இரத்தத்தில்
  ஊறிப்போய் உள்ளது.

  எதிர்மறையாகத் தோன்றும்
  இந்தப் பழக்கம் நல்ல தலைவர்கள் யாரேனும்
  நமக்குக் கிடைக்கையில் சட்டென ஒட்டுமொத்தமாக
  ஒரு நல்ல திசையில் திரும்பி விடவும் வாய்ப்பிருக்கிறது

  அந்த வகையில் நிச்சயம் ஒரு தலைவன்
  சுதந்திரப் போராட்ட காலத்து காந்தி போல்
  மிசா காலத்து ஜெ பி போல நிச்சயம் வருவார்
  அதன் காரணமாகவே இந்தியா வல்லரச்சாக அதிக
  சாத்தியக் கூறு இருப்பதாக நான் நம்புகிறேன்

  இது குறித்து விரிவான பதிவு எழுத முயற்சிக்கிறேன்
  வாழ்த்துக்களுடன்....
  ReplyDelete
  Replies
  1. இதற்கான உங்கள் பதிவு நல்ல விஷயங்களை அள்ளித்தரும் என எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறேன்

   Delete
 10. என்னுடைய கருத்துகளை இன்று என் பதிவில் வெளியிட்டிருக்கிறேன்.
  சுட்டி: http://swamysmusings.blogspot.com/2013/08/blog-post_10.html

  ReplyDelete
 11. அழைப்பிற்கு நன்றி! ஏற்கனேவே பழைய draft இருக்கு. வட அமெரிகாவில் பல மாகணங்களில் வாழ்ந்தவன் மற்றும் இங்கிலாந்து சிங்கப்பூர் ஆகிய ஊர்களை நன்கு பார்த்தவன் என்று முறையில் தமிழ் நாடு எப்படி வல்லரசாகும் என்று வேண்டுமானால் எழுத முடியும். தமிழ்நாட்டை தவிர மற்றபடி இந்தியவையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது!

  மற்ற மாநிலங்கள் கலாசாரம் வடக்கத்திகாரன் பண்டிகை இதெல்லாம் ஒன்றும் தெரியாது. கடைசியாக வெளியிடுகிறேன். கொஞ்சம் சூடாக இருக்கும்; அதனால் தான் அப்பொழுதே நிறுத்தி விட்டேன்.

  வெளியிடுகிறேன் விரைவில்!

  ReplyDelete
 12. இணைய இணைப்பில் சிக்கல் காரணமாக வலைப்பக்கம் வர இயலவில்லை. தவறாக நினைக்க வேண்டாம் .நல்ல கேள்வி. பலரது சிந்தனையைத் நிச்சயம் தூண்டும் பதிவு இது. இதற்கான எனது கருத்தையும் அறிய விரும்பியதில் மிக்க மகிழ்ச்சி.. நாளைய இந்தியா குறித்த கவலை எனக்கு அவ்வப்போது வருவதுண்டு.இது குறித்த எனது கருத்தை தனி பதிவாக விரைவில் எழுதுகிறேன்..
  நன்றி மதுரை தமிழன்.

  ReplyDelete
 13. //என்னோடு தகவல் தொழில்நுட்பம் படித்து வந்த என் நண்பனுக்கு தொழில்நுட்பதிலுல்ல ஆர்வத்தைவிட விவசாயம் மீது ஆர்வம். ஆனால் அவனது உறவினர்களே விவசாயிகளாய் இருந்தும் அவனை விவசாயம் செய்ய அனுமதிப்பதில்லை. விவசாயம் செய்ய நினைக்கும் ஒரு இளைஞனால் தொழில்நுட்பதில் என்ன சாதனை செய்துவிட முடியும்...? விவசாயத்தின் அவசியம் உணர்ந்த ஒருவனை விவசாயம் செய்யவிடாமல் தடுப்பது போலவே இன்னும் நிறைய இளைஞர்களின் ஆசைகள் கலைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட இளைஞர்கள் மீது பழி சுமத்த படுகிறதே ஒழிய உதவிகளும் கிடைப்பதில்லை வழிக்காட்டுதலுமில்லை...! ஹாக்கியில் இந்திய இளம்பெண்கள் வெள்ளிப் பதக்கம் வென்றதை பற்றி பேச இங்கே யாரும் முன்வருவதில்லைஇ மட்டைப் பந்து சூதாட்டத்தைப் பற்றியே பேசி மேலும் அதற்கு விளம்பரம் தான் செய்கிறார்கள். நாளைய இந்தியா என்ன ஆகுமோ என கேட்காமல் நாளைய இந்தியா என்ன ஆக வேண்டும் என இளைஞர்களுக்கு வழிக்காட்டுங்கள்//

  மதியழகன் என்ற இந்திய இளைஞனின் நியாயமான வேண்டுதலுக்கு பெரியவங்க எல்லோரும் உடன்பட்டு வழிகாட்ட வேண்டும்.அவருக்கு எனது வாழ்துகளையும் மரியாதையும் தெரிவுச்சுகிறேன்.

  //1960-களில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு மாணவர் போராட்டத்தை பெறுமை பேசும் யாரும் இலங்கைப் போர் குற்றத்தை எதிர்த்து இன்றைய மாணவர்கள் செய்த போராட்டத்தை பற்றி பெருமை பேசுவதில்லை. காலம் கடந்த போராட்டம் என்றே கொண்டாலும் அதில் வெற்றியும் அடையவில்லை என்றாலும் 60-களுக்கு பின் நடக்கும் மாணவர் போராட்டம் இது தான்(எனக்கு தெரிந்தவரையில்). ஆனாலும் இன்றைய மாணவர் மீது கூறப்படும் குறைகள் இன்னமும் குறைந்த பாடில்லை. இன்றைய இளைஞர் மீது இருக்கும் எண்ணங்களை முதலில் பெரியவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும்//
  ஒரு சரியான வழிகாட்டல் இருந்தால் மதியழகன் இப்படியெல்லாம் சொல்லியிருக்க மாட்டார். பெரியவர்கள் தமிழகை இளைஞர்களுக்கு வழிக்காட்ட வேண்டும்.
  ஆனா இளைஞர்களுக்கு போதை ஊசி ஏத்திவிடுபவங்களாக பலர் இருப்பது தான் கொடுமை.

  ReplyDelete
 14. திருடாதே... பாப்பா திருடாதே....
  திருடாதே... பாப்பா திருடாதே....
  திருடாதே... பாப்பா திருடாதே....
  திருடாதே... பாப்பா திருடாதே....
  வறுமை நிலைக்கு பயந்துவிடாதே...
  வறுமை நிலைக்கு பயந்துவிடாதே....
  திறமை இருக்கு மறந்து விடாதே.....
  திருடாதே... பாப்பா திருடாதே....

  சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று...
  சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு....
  சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ...
  சிந்தித்துப் பார்த்து செய்கையை மாற்று...
  சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ தவறு...
  சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ...
  தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
  திரும்பவும் வராம பாத்துக்கோ...
  தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா அது
  திரும்பவும் வராம பாத்துக்கோ...

  திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்...
  திருடிக்கொண்டே இருக்குது...
  திட்டம் போட்டுத் திருடுற கூட்டம்...
  திருடிக்கொண்டே இருக்குது அதை
  சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம்
  தடுத்துக்கொண்டே இருக்குது..
  சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம்
  தடுத்துக்கொண்டே இருக்குது...
  திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
  திருட்டை ஒழிக்க முடியாது...
  திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
  திருட்டை ஒழிக்க முடியாது...!

  கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி
  எடுக்குற அவசியம் இருக்காது....
  கொடுக்குற காலம் நெருங்குவதால் இனி
  எடுக்குற அவசியம் இருக்காது இனி
  எடுக்குற அவசியம் இருக்காது...
  இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
  இருக்குறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
  பதுக்குற வேலையும் இருக்காது
  ஒதுக்குற வேலையும் இருக்காது
  உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா...........

  உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா.....................
  கெடுக்குற நோக்கம் வளராது மனம்
  கீழும் மேலும் புரளாது
  உழைக்குற நோக்கம் உறுதியாயிட்டா ஆஆஆஆஆஆஆ
  கெடுக்குற நோக்கம் வளராது,


  See also : Deviyar-illam.blogspot.in/2013/08/blog-post_18.html

  ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.