சீனாவுக்கு
ராணுவ பலத்தை
காட்ட லடாக்கில் "ஹெர்குலிஸ்'
விமானம்
புதுடில்லி:
சீனாவுக்கு, நம் ராணுவ
பலத்தை காட்டும் வகையில்,
லடாக் பகுதியில்
அமைக்கப்பட்டுள்ள விமான
தளத்தில், இந்திய விமானப்
படைக்கு சொந்தமான, "சூப்பர்
ஹெர்குலிஸ் விமானம்' நேற்று
தரையிறக்கப்பட்டது.
காஷ்மீரின்
லடாக் பகுதியை ஒட்டியுள்ள,
எல்லை கட்டுப்பாட்டு
கோட்டு பகுதியில், சீன
ராணுவத்தினர், அடிக்கடி
ஊடுருவுகின்றனர். இந்திய
எல்லைக்குள் அத்துமீறி
ஊடுருவும், சீன வீரர்கள்,
அங்கு முகாம்களையும்
அமைத்து வருகின்றனர். இதையடுத்து,
சீனாவுக்கு, ராணுவ பலத்தை
காட்டுவதற்கான
நடவடிக்கையில், நம்
ராணுவம் ஈடுபட்டது. எல்லை
கட்டுப்பாட்டு கோட்டை
ஒட்டிய பகுதியில்
அமைக்கப்பட்டுள்ள விமான
தளத்துக்கு, நம் விமானப்
படைக்கு சொந்தமான, சூப்பர்
ஹெர்குலிஸ் விமானம், நேற்று
அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விமானம்,
திட்டமிட்டபடி, அந்த விமான
தளத்தில் தரையிறங்கியது.
உலகிலேயே, மிக உயரமான
இடத்தில்
அமைக்கப்பட்டுள்ள இந்த
விமான தளத்தில், இந்திய
விமானப் படை விமானம், தரை
இறக்கப்பட்டது, முக்கியமான
நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த விமானத்தில்,
காமாண்டிங் அதிகாரி
கேப்டன், தேஜ்பிர் சிங்
மற்றும் வீரர்கள் சென்றனர்.
"இந்த விமானத்தின் மூலம்,
லடாக்கை ஒட்டியுள்ள எல்லை
கட்டுப்பாட்டு கோட்டு
பகுதியில், பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டிருக்கும்,
நம் வீரர்களுக்கு தேவையான
பொருட்கள் மற்றும்
தளவாடங்களை, எளிதாக கொண்டு
செல்ல முடியும்' என, இந்திய
ராணுவ வட்டாரங்கள்
தெரிவித்தன.
|
IAF C 130J-30 Super Hercules makes a historic landing at Daulat Beg Oldi in Ladakh on Tuesday. (PTI photo) |
|
|
அவர்கள்..உண்மைகள்
செய்தி
:
இந்தியாவின்
நடவடிக்கையால்
சீன மக்கள்
பீதி.
பீஜீங்க்
: நேற்று
சீனாவுக்கு, ராணுவ
பலத்தை காட்டும் வகையில்,
லடாக் பகுதியில்
அமைக்கப்பட்டுள்ள விமான
தளத்தில், இந்திய
விமானப் படைக்கு சொந்தமான,
"சூப்பர்
ஹெர்குலிஸ் விமானம்'
நேற்று
தரையிறக்கப்பட்டது
என்ற செய்தியை
கேட்டதும்
சீன அரசாங்கமும்
மக்களும்
பீதியில்
உறைந்து
போயினர்.
அரசாங்கமும்
மக்களும்
தூக்கத்தையும்
உணவையும்
மறந்து
கவலையில்
ஆழ்ந்தனர்.
லட்சக்கணக்கில்
மக்கள்
கூட்டம்
கூட்டமாக
நாட்டை
விட்டு
அண்டைய
நாட்டிற்கு
அகதிகளாக
செல்லத்
தொடங்கினர்.
சீனா அரசாங்கம்
இந்த பிரச்சனையை
தீர்க்க
அமெரிக்க
நாட்டின்
உதவியை
நாடியுள்ளது.
இதை அறிந்த
உலக நாடுகள்
இந்தியாவிடம்
இப்படி
விமானத்தை
கொண்டு
வந்து
பக்கத்து
நாடுகளை
பயமுறுத்த
கூடாது
என்று
கேட்டுக்
கொண்டனர்.
இதை
அறிந்த
இந்திய
அரசாங்கம்
அவசரமாக
வெளியிட்ட
அறிக்கையில்
அது உண்மையான
விமானம்
அல்ல அது
கட் அவுட்
மாடல்
விமானம்தான்
அதை அங்கு
நிறுத்தி
வைக்க
காரணம்
அங்குள்ள
இந்தியராணுவ
வீரர்களுக்கு
ராணுவ
விமானம்
என்றால்
எப்படி
இருக்கும்
என்று
காண்பிப்பதற்குதான்
அவ்வளவுதாங்க
அடுத்தாக
பாகிஸ்தானிடம்
பலத்தை
காட்ட
பாகிஸ்தான்
பார்டரில்
பவர்ஸ்டார்
ஜீப்பில்
உட்கார்ந்து
இருப்பதை
போலவும்
இலங்கைகாரனை
பயமுறுத்த
தலைவா
புகழ்
விஜய்யை
படகில்
உட்கார்ந்து
இருப்பதை
போல இராமேஸ்வரம்
கடற்கரை
அருகில்
கட் அவுட்
வைக்கலாம்
என்ரு
இந்திய
நாடாளுமன்றத்தில்
இரு மனதாக
முடிவு
எடுக்கப்பட்டது
அன்புடன்
மதுரைத்தமிழன்.
டிஸ்கி
: இந்திய
ராணுவவீரர்கள்
மிகவும்
வீரம்
மிக்கவர்கள்
அவர்கள்
யாருக்கும்
கொஞ்சம்
கூட சலைத்தவர்கள்
அல்ல ஆனால்
இந்திய
தலைவர்கள்தான்
முதுகெலும்பில்லாத
கோழைகள்
|
ஹி...ஹி...ஹி....
ReplyDeleteSuperb!!!
Dislaimer is true.
டிஸ்கி நல்லா சொன்னீங்க!
ReplyDeleteyes it is TRUE,china vacating it's head quarters and shifting to Arunachaal Pradesh....ha...haa
ReplyDeleteதிட்டலாம்னு பார்த்தேன்....டிஸ்கி போட்டு தப்பிச்சிட்டீங்க.....
ReplyDelete//இலங்கைகாரனை பயமுறுத்த//
ReplyDeleteயோவ் தமாஷ் பண்ணதுக்கு ஒரு அளவில்லையா.
சிலோன்ல இத பாத்துட்டு எல்லாரும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்காங்களாம்.