தமிழ் பழமொழியும் மதுரைத்தமிழனின் நக்கல் மொழியும்
தமிழ் பழமொழி :'அக்காள் இருக்கிற வரை மைச்சான் உறவு'.
தமிழ் பழமொழி :அடக்கமே பெண்ணுக்கு அழகு
என்ன சொல்லுறங்க நம்ம பெரியவங்க பெண்கள் செத்தாதான் அழகுங்கிறாங்களா என்ன
தமிழ் பழமொழி : அடிக்கிற கைதான் அணைக்கும்
இதை எவன்டா சொன்னது இதை அறிந்துதான் பெண்கள் தங்கள் கைகளால் பூரிக்கட்டையால் அடிக்கிறார்களா
தமிழ் பழமொழி :அண்டை வீட்டை பார்ப்பான் சண்டை மூட்டி பார்ப்பான்
டேய் இப்ப உள்ள மக்களுக்கு தமிழ் புரியாதுடா நீங்க இப்படி சொல்லிப் போயிட்டா அவன் தப்பா அர்த்தம் புரிந்து கொள்வானடா
அண்டை வீட்டில் நடக்கிறவைகளை பார்த்து ஒட்டு கேட்டு, கோள் சொல்லும் பழக்கமுடையவன் சண்டையை மூட்டிப் பார்ப்பான் என்பது பொருள் ஆனால் அண்டைவீட்டை பார்ப்பான் சண்டை மூட்டி பார்ப்பான் என்று சொல்லி விட்டு சென்றால் பிராமினை பிடிக்காதவன் இதை தவறாக உபயோகப்படுத்துவான்
தமிழ் பழமொழி : அதிர்ஷம் வந்த்தால் கூரையை பிய்த்து கொண்டு வருமாம்/
டேய் நல்லா இருக்கிற கூரையை பிய்த்து கொண்டு வருவது அதிர்ஷம் இல்லைடா அது துரிதிருஷ்டமடா
தமிழ் பழமொழி : அப்பன் அருமை மாண்டால் தெரியும்
டேய் அப்பன் செத்தால் அருமை தெரியாதுடா அவன் வைத்து சென்ற கடன்தான் தெரியுமடா இதைதான் அருமைன்னு சொல்லுறீங்களா விளக்கெண்யகளா
தமிழ் பழமொழி : அரித்தால் அவன் தான் சொரிந்து கொள்ள வேண்டும்
டேய் நாங்ககெல்லாம் லாடு பரம்பரைடா அரிச்சா சொரிஞ்ச்சு விட ஆள் அவைத்து கொள்வோமடா
தமிழ் பழமொழி : அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்/
டேய் நீங்க சொன்னதை உண்மை என்று நினைத்து அதை சொல்லிப் பார்த்தேன் அது என் மனைவியின் காதில் விழுந்து நான் அவளை பேய் என்று சொன்னதாக நினைத்து பூரிக்கட்டடையால் அடிக்கிறாள்டா இதுக்குதாங்க பெரியவங்க சொல்லுறதை நான் கேட்குறதில்ல
தமிழ் பழமொழி : அவரசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில்
சங்கடப்படாதே
யோவ் பெரிசுங்களா சாவகசமாக கல்யாணம் பண்ணினாலும் கல்யாணத்திற்கு அப்புறம் சங்கடம் சங்கடம்தான்
தமிழ் பழமொழி : அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா
அப்ப இந்த காலத்தில் பாதி பெண்களுக்கு மேல் உள்ளவர்களை சித்தப்பாதான் என்று அழைக்க வேண்டும்
மதுரைதமிழனுக்கு எப்பவுமே நக்கலும் குறும்பும் அதிகம் என்பதாலும் மறந்து போன பழைய கால தமிழ் பழமொழிகள் நினைவுக்கு வந்ததால் வந்த விளைவே இந்த பதிவு
படித்து ரசியுங்கள் வேண்டுமானால் தலையிலும் அடித்து கொள்ளுங்கள் ஆனால் நாலு பேர் இருக்கும் போது அடித்து கொள்ளாதீர்கள் அப்புறம் பார்க்கிறவங்க உங்களை தப்பா நினைச்சுகுவங்க
இன்னும் நிறைய பழமொழிகள் நினைவுக்கு வந்து கொண்டிருப்பதால் அதை வருங்காலத்தில் இடுகிறேன்
இறுதியா ஒரு பழமொழியை சொல்லி பதிவை முடிக்கிறேன்
தமிழ் பழமொழி : இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்.
அதாவது இந்த பதிவை படித்து கமெண்ட் இட்டோர்
பெரியவர்கள் அப்படி இடாதவர்கள் இழி குலத்துதோர் என்று அந்த காலப் பெரியவங்க சொல்லிட்டு போயிருக்காங்க. நான் சொல்லலீங்க
ஹீ.ஹீ ஹீ
அன்புடன்
உங்களை கலாய்க்க என்று பிறந்தவன்
மதுரைத்தமிழன்
படிக்காதவர்கள் படிக்க
கலக்கல் புது மொழிகள்..... :))
ReplyDeleteபடித்து ரசித்தற்கு நன்றி வெங்கட்
Deleteஹாஹா அடேங்கப்பா...இவ்வளவு அர்த்தங்களா..பொதுவில் சொன்னா யாருப்ப தர்ம அடி வாங்குவது!
ReplyDeleteபொதுவில் சொன்னாதான் தர்ம அடி அதனால இணைய தளத்தில் சொல்லிவிட்டால் அடியில் இருந்து தப்பிக்கலாம்
Deleteஅய்யய்யோ, முதல்ல கமென்ட் போட்டுறனும்... இல்லேன்னா பழமொழி சொல்லியே கலாய்ச்சிருவாங்க...
ReplyDeleteகருத்து சொன்னாலும் விட மாட்டோமுல வெயிட் பண்ணுங்க அடுத்து வரும் பதிவுகளில் ஏதாவது உங்களை இணைத்து வைத்து கலாய்த்து பதிவு இடுவோம்ல
Deleteபழமொழிகளை விட நக்கல் மொழிகள் அருமை
ReplyDeleteமிகவும் ரசித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
நக்கலை புரிந்து ரசித்த மதுரக்காரரே மிகவும் நன்றி உங்கள் கருத்திற்கும் உங்களின் தமிழ்மண வோட்டிற்கும்
Deletetha.ma 1
ReplyDeleteஅடிக்கிற கைதான் அணைக்கும்
ReplyDelete>>
புது மொழிலாம் நல்லாதான் இருக்கு. எல்லாம் சரி, இம்புட்டு அடிவாங்கியும் இன்னும் குசும்பு போகலைன்னா அணைச்சுக்கிட்டே இருந்தா?!
மதுரக்காரணுக்கு என்றும் குசும்பு போகாதுங்கோ
Deleteசிலது மொக்கையா இருந்தாலும், ரசிக்கும்படியா இருந்துச்சு....
ReplyDeleteஇப்படி ஏதாவது பொழுது போக எழுதுவது பல சமயங்களில் மொக்கையாகதான் இருக்கிறது ஆனால் அது பலரையும் சில சம்யங்களில் ரசிக்க வைக்கிறது
Deleteஹா ஹா.. அடிச்சு ஆடுங்க பாசு...
ReplyDeleteஉங்கள் ஆதரவு இருந்தா நல்லாவே அடிச்சு விளையாடலாம் பாஸ்
Deleteஅய்யோ பாவம் உங்கூட்டும்மா..எத்தனை பூரிக்கட்டை வாங்கினீங்களோ...
ReplyDeleteஅய்யோ பாவம் என்று எனக்காக வருத்தப்படுவீர்கள் என்று நினைத்தால் நீங்கள் எங்க வூட்டுகாரம்மாவுக்காக வருத்தப்படுகிறீர்களே ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Deleteநக்கல் மொழிகள் அருமை
ReplyDeleteபடித்து ரசித்தற்கு நன்றி
Deleteபழமொழியும் உங்க நக்கல் மொழியும் சிறப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteரசித்து படித்தற்கு நன்றி
Deleteஹாஹா அருமையான விளக்கங்கள்
ReplyDeleteரசித்து படித்தற்கு நன்றி
Deleteஅருமை வாழ்த்துக்கள்
ReplyDeleteரசித்து படித்தற்கு நன்றி
Deleteவிளக்கங்கள் நல்லாத்தான் இருக்கு, ஆனால் எனக்கு பிடிக்கலை தங்கள் இந்த பதிவு...
ReplyDeleteவிளக்கம் நல்லா இல்லை அதனால் எனக்கு பிடிக்கவில்லை என்றால் சரி ஆனால் நீங்க மாத்தி சொல்லி என்னை குழப்புகிறீங்களே
Deleteஅப்ப உங்க வீட்டுக்கு வந்தா பழம் ஸ்வீட்னு வாங்கி வர்றதுக்கு பதில் பூரிக்கட்டை வாங்கிட்டு வந்து தரலாம்... நிறைய உபயோகப்படும் இல்ல...
ReplyDeleteஅடிபட்ட எனக்கு உடம்பு தேற்ற பழம் ஸ்வீட் வாங்கி வருவீங்க என்று நினைத்தால் நீங்க பூரிக்கட்டையைத்தான் வாங்கி வருவீங்க என்று அடம் புடிக்கிறீங்க. இப்படி எல்லோரும் வாங்கி கொடுப்பதினாலதான் தினம் தினம் நான் அதை ஒழித்து வைத்தாலும் புதுசு புதுசா கொண்டு வந்து அடிக்கிறாங்க
Deleteநல்லா இருங்கம்மா நல்லா இருங்க