உங்களிடம் இருந்து விடை பெறுவது மதுரைத்தமிழன்
சென்னையில் நடக்கும் பதிவாளர்கள் திருவிழாவில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாததால் மனமுடைந்தார்
மதுரைத்தமிழன் .
அதனால் மனதில் அமைதியை ஏற்படுத்த ரதயாத்திரையை(வேனில்) ஞாயிறு காலையில் நீயூஜெர்ஸியில் தொடங்கி கேன்ஸாஸ் நகரம் நோக்கி செல்கிறார். அங்கு சென்று மனதில் அமைதியை ஏற்படுத்தி மீண்டும் வரும் ஞாயிறு அன்று திரும்புகிறார். தூரம் அதிகம் இல்லை ஒன்வே 1178 மைல்தான். இந்த மைல்கள் வழியை தவறவிடாமல் சென்றால்தான். வழியை தவறவிட்டால் மைல்கள் அதிகமாகும்.
யார் பேச்சையும் கேட்டு அதன்படி நடக்காத மதுரைத்தமிழன் இந்த பயணத்தில் மட்டும் ஒருவரின் பேச்சை மட்டும் மிக கவனமாக கேட்டு அதன் சொல்படி நடப்பார். அவர் சிறந்த பேச்சாளர் இல்லை என்றாலும் அவரது பேச்சை கேட்டு அதன்படி நடப்பது மதுரைதமிழன் செய்யும் நல்ல செயல்களில் ஒன்று அவர் வேறும் யாரும் அல்ல வழியை தெளிவாகா சொல்லிவரும் GPS சிஸ்டம்தானுங்க
நான் செல்லும் ரதத்தில் 8 சீட்டுகள் உண்டு அதில் முன் பக்கம் 2 சீட்டும் இடையில் 3 சீட்டும் கடைசியில் 3 சீட்டும் உள்ளது . இந்த ரதத்தை பயணம் முழுவது ஒட்டப் போவது மதுரைத்தமிழன்தான். மனைவி கடைசி ரோவில் உள்ள 3 சீட்டுகளை பெர்த்தாக உபயோகப்படுத்தி தூங்கி வருவார் குழந்தை 2 வது ரோவில் படுத்து உறங்கி அல்லது டிரைவர் சீட்டுக்கு அருகில் டாடிக்கு பக்கத்தில் உடகார்ந்து வருவார்.
நான் ரதயாத்திரை மேற்கொள்வதால் இந்த தளத்திற்கு விடுமுறை விடுவது என்று முடிவு செய்துள்ளேன் அதனால் மக்களே நீங்களும் சந்தோஷமாக ரெஸ்ட் எடுத்து பதிவர் திருவிழாவில் கலந்து எஞ்சாய் பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன்
தினம் தினம் என்பதிவை படித்து அதற்கு அடிமையானவர்கள்
எனது பழைய பதிவைகளை மீண்டும் படிக்கலாம் செல்லும் இடங்களில் நேரம் கிடைத்தால் பதிவுகள் போடுகிறேன்
அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது.
அன்புடன்
மதுரைத்தமிழன்
நல்லது...
ReplyDeleteஇப்படிக்கு அடிமையானவர்கள்...!
இந்த வண்டியின் (ரதத்தின்) பெயர்?
ReplyDeletetoyota sienna
DeleteHappy and safe trip ...
ReplyDeleteநன்றி நன்றி
Deleteஉங்களிடமிருந்து விடைப் பெறுவது
ReplyDelete>>
ச்சே! இப்படி ஆசைக்காட்டி மோசம் பண்ணுவதே பொழப்பா போச்சு!!
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஅவர்கள் உண்மைகள்
பதிவின் அடிமைகளில் தலையானவர்
நல்ல படியா போய்ட்டு வாங்க... ஆமா திரும்பி வர எத்தனை நாளாகும்?
ReplyDeleteமுன்பு எங்கோ ஒரு ட்ரிப் அடித்தீர்களே அதைப் பற்றிய பதிவு காணோமே!
ReplyDeleteGPS ஐ விட சிறந்த நடத்துனரான உங்கள் மனைவியின் பேச்சைக் கேட்கவும்.1178 மைல்களை அனாயாசமாக கடக்கவும். இனிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்
Madurai Kara Anna,
ReplyDeleteKeep some good speech CD like Vaariyar, Dharmapuram Swamynathan.
safe & keep open your Eyes.
unmaiyulla Muthu
வாழ்த்துகள். நல்லபடியாக போய் வாருங்கள்.
ReplyDeleteWishing You for Very Happy & Safe journey.
vgk
போய் வாங்க.ஹீ
ReplyDeleteவாழ்த்துக்கள்! சென்று வாருங்கள்! வந்ததும் அனுபவங்களைப் பதிவாகத் தாருங்கள்1
ReplyDeleteசுத்தி பார்க்க போகிறேன் என்று சொல்லுங்கள் , ரத யாத்திரை என்றெல்லாம் சொல்லாதிர்கள் ,
ReplyDeleteசந்தோஷமாக சென்று வாருங்கள் , வந்து அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . எங்கள் அன்பும் பாசமும் உங்களை பத்திரமா கொண்டு வந்து சேர்க்க வேண்டுகிறேன்
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteYou mean, Kansas City? I-70 all the way? I will say "hi" to you if I happen to see you in I70 or in a McDonalds when you are stopping and buying "happy meal" for your child! lol
ReplyDeleteEnjoy your trip!
Hi !!!!!Right now I am staying near by exit 54 on I70....lol
Deleteநீங்க ரெண்டு பெரும் சேந்து மைக்ரோ சந்திப்பு நடத்துங்கள் வாழ்த்துக்கள்
DeleteWishing You a Very Happy, Safe & Pleasant journey Madura. Enjoy trip with family.:))
ReplyDeletevazhthukkal......
ReplyDeleteநல்லது! அக்கம் பக்கம் பாத்து கவனமாக சென்று கவனமாக திரும்பி வருக!
ReplyDeleteஒரு விளம்பரம்....
ReplyDeleteசந்தோஷமா போய் வாங்க.. (ஆமா எல்லாம் பேக் பண்ணும் போது ஞாபகமா பூரிக்கட்டை எடுத்து வச்சிக்கிட்ட்டாங்களா?)
ReplyDeleteசுவாரஸ்யம்பா... எழுத்தில்... எங்களையும் கூடவே கூட்டிட்டு போய் உங்க கார், சீட், மனைவி, குழந்தை எல்லோரையும் அறிமுகப்படுத்தினமாதிரியே இருக்கு... அன்பு வணக்கங்கள் உங்கள் மனைவிக்கும் குழந்தைக்கும்..
ReplyDeleteஉங்கள் பயணம் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் அமைய மனம் நிறைந்த அன்பு பிரார்த்தனைகள்பா...
பத்திரமா சென்று பத்திரமா வாங்க....
ReplyDeletehappy journey
வீக் எண்டு வெளியில் போவதற்கு இந்த பில்ட் அப் கொஞ்சம் அதிகம் தான்! anyway, என்ஜாய்!
ReplyDelete