வீட்டுல சும்மா இருக்கும் பெண்கள் My Wife DOES NOT WORK !!!
வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் மனைவியினால் மன உளைச்சல் கொண்ட ஒரு கணவன் இறுதியாக மனநல மருத்துவரிடம் போனான்
அவர்கள் இருவருக்குள் நடந்த சம்பாஷணை இதுதான்
மனநல மருத்துவர் : மிஸ்டர் விஷ்ணு நீங்க என்ன வேலை பார்க்கிறீங்க?
விஷ்ணு : நான் பேங்குல அக்கவுண்டெண்டா இருக்கேன்
மனநல மருத்துவர் : உங்க மனைவி?
விஷ்ணு : அவ ஒன்றும் வேலைக்கு போகலை ஹவுஸ் வொய்பாக வீட்டுல சும்மா இருக்குறா
மனநல மருத்துவர் : ஓ.அப்படியா ..ம்ம்ம் காலையில் டிபன் தயாரிப்பது யார்?
விஷ்ணு : என் மனைவிதாங்க. அவ வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பதால் அவள்தான் அதை செய்கிறாள்
மனநல மருத்துவர் : காலையில் எத்தனை மணிக்கு அவங்க எழுந்திருச்சி அதை பண்ணுவாங்க?
விஷ்ணு : அவ சீக்கிரமா காலையில் 5 மணிக்கு எல்லாம் எழுந்திருச்சு வீட்டை க்ளின் பண்ணிட்டுதான் சமையலறைக்கே போவாங்க .
மனநல மருத்துவர்: உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதா?
விஷ்ணு : எங்களுக்கு 2 குழந்தைகள இருக்கின்றன.
மனநல மருத்துவர் . அவங்க பள்ளிக்கு போவதற்கு யாரு உதவுவாங்க?
விஷ்ணு : என் மனைவி வீட்டில் சும்மா இருப்பதாலே அவங்கதான் குழந்தைகளை ரெடி பண்ணி பள்ளிக்கு சென்று விட்டுவருவாங்க
மனநல மருத்துவர் " அதுக்கு அப்புறம் என்ன பண்ணுவாங்க?
விஷ்ணு : அவ வேலைக்கு போகாததால் மார்கெட்டுக்கு போய் வீட்டிற்கு தேவையானதை வாங்கி வருவாங்க, பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங்க் போவாங்க பேங்குக்கு மற்றும் பில் கட்டப் போய்வருவாங்க, அவங்க வெளுத்த துணிகளை அயர்ன் கடையில் கொடுத்து வாங்கி வருவாங்க
மனநல மருத்துவர் . நீங்க ஈவினிங்க் வீட்டிற்கு வந்ததும் என்ன பண்ணுவீங்க?
விஷ்ணு : நான் வேலை செஞ்சுவிட்டு வந்த களைப்புல சோபாவில் உட்கார்ந்து காபி குடித்தவாறு டிவி பார்த்து கொண்டிருப்பேன்.
மனநல மருத்துவர் : அப்ப உங்க மனைவி என்ன செய்து கொண்டிருப்பாங்க?
விஷ்ணு : குழந்தைகளுக்கு பாடம் சொல்லி கொடுத்துவிட்டு இரவு உணவை தயாரித்து எல்லோருக்கும் உணவு பறிமாறிவிட்டு அதன் பின் குழந்தையை தூங்க வைத்துவிட்டு பின் பாத்திரங்களை கழுவி வைப்பாங்க
மனநல மருத்துவர் : இவ்வளவு நேரம் நீங்க சும்மா இருக்கும் உங்க மனைவி செய்வதையெல்லாம் இங்கே எழுதி இருக்கிறேன். அதை பார்த்துவிட்டு சொல்லுங்க அவங்க என்ன பண்ணுறாங்க என்று??
நல்லா பாருங்க காலையில் உங்களுக்கு முன்னால் எழுந்துவிட்டு இரவில் நீங்க படுத்த பின் எல்லா வேலையும் செய்துவிட்டு படுக்க போகும் அவங்களையா வேலைக்கு போகாமல் வீட்டில் சும்மா இருக்கிறாங்க என்று சொல்லுறீங்க?
வீட்டில் ஹவுஸ் வொய்ப்பாக இருப்பதற்கு எந்த காலேஜிலும் படித்து பட்டம் வாங்க தேவையில்லை.ஆனாலும் வாழ்க்கையில் அவங்க பங்கு/ பொறுப்பு படித்து பட்டம் பெற்றவர்களைவிட மிக அதிகம்
குடும்ப வாழ்க்கையில் அவங்க பண்ணும் தியாகம் அளவில் அடங்காது. அதனால் அவர்களை பாரட்டி தட்டி கொடுங்கள் அதன் பின் உங்களின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு உங்கள் மன உளைச்சல் எல்லாம் இருந்த இடம் இல்லாமல் போய்விடும்
All about
a WOMAN ....
When she
is quiet, millions of thingsare running in her mind.
When she
stares at you, she is wondering why she loves you so much in spite of being
taken for granted.
When she
says I will stand by you, she will stand by you like a rock.
Never
hurt her or take her wrong or for granted...
Forward
to every woman to make her smile and to every man to make him realize a woman's
worth...!!!
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : ஆங்கிலத்தில் படித்ததை எனது வழியில் மாற்றம் செய்து பதிவிடுகிறேன்.
இந்த பதிவு நான் மதிக்கும் இணைய பதிவாளர்களான ராஜி, சசி, மஞ்சு சுபாஷினி, சாகம்பரி, உஷாஅன்பரசு, அருணா செல்வம், முகுந்தம்மா, தியானா, அம்பாளடியாள், ஆச்சி ஆச்சி, அப்பாவி தங்கமணி, அகிலா மேடம், கோவை மு சரளா & மற்றும் பெயர்விட்டுப் போன மற்ற பெண்பதிவாளர்களுக்கு
சமர்ப்பணம்...
எம்புட்டு வேலையப்பா...
ReplyDeleteஇன்னும் நிறைய இருக்குங்க ஆனான் எழுத நேரம் இல்லைங்க
Deleteஇப்படிலாம் பேரு போட்டுட்டா மட்டும் இனி கலாய்க்க மாட்டோம்ன்னு நினைக்காதீங்கப்பு!! கலாய்ப்புகள் தொடரும்.
ReplyDeleteநீங்க தப்பா நினைச்சிட்டீங்க இங்க நான் பெயர் போட்டதன் காரணம் இவங்களை எல்லாம் இனிமேல் கலாய்க்க போறேன் என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கிறேன் அவ்வளவுதாங்க ஹீ.ஹீ
DeleteAN IMPORTANT THING IS OMITTED
Deleteவீட்டு நிர்வாகம் என்பது சாதாரணமானது அல்ல என்பதை உங்கள் பாணியில் சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteவிழாவில் பங்கேற்க முடியாவிட்டாலும் தளத்தின் முகப்பை அற்புத அழைப்பிதழாக மாற்றி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
ReplyDeleteவிழாவில் நான் பங்கேற்கவில்லை என்று யார் சொன்னது. விழாவில் நான் உங்களை நிழல் போல தொடர்வேன் நான் உங்களை பார்ப்பேன் ஆனால் உங்களால் என்னை பார்க்க முடியாது. காரணம் நான் ஒரு மாயாவி
DeleteSome fifteen years ago, in a research study conducted by an University at USA, the financial value of a housewife ( summa veetukkulle utkaarnthirukkum velai paarkaatha penkal) meaning thereby the annual fiduciary value of the services rendered by the homemaker/housewife was calculated to be around fourteen times the annual earnings of the husband.
ReplyDeleteThis is in conditions applicable to an american housewife, where the value systems are quite different.
From the yardstick applied to the rules regulations expectations and demands made of a homemaker in India, the value must be still higher.
Hopefully, all husbands realise this.
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
அதுதானே பார்த்தன் என் அன்புச் சகோதரன் இப்படித் தப்பாகப் பேச
ReplyDeleteமாட்டானே என்று .கண்களில் ஆந்தக் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து
ஓடுகின்றது .பெண்மைக்கே பெருமை சேர்த்த உண்மையான இதயம்
இங்கே குடிகொள்ள நான் என்ன புண்ணியம் செய்தனோ நெஞ்சமே !!!!!
வாழ்த்துக்கள் சகோதரா ........................அருமையான பகிர்வினை அனைவரும்
அறிந்திடப் பகிர்ந்துகொண்ட விதம் மனதை நெகிழ வைத்து .அந்த
வெள்ளைக் காரச் சகோதரதிற்க்கும் என் நன்றி கலந்த வணக்கங்கள்
உரித்தாகட்டும் .
இதே செய்தியையே மகளிர் தின சிறப்புப் பதிவாக மார்ச் மாதம் வெளியிட்டுள்ளேன்!பெண்மையைப் போற்றுவோம்!
ReplyDeletehttp://chennaipithan.blogspot.com/2013/03/blog-post_8.html
ஏற்கெனவே படித்ததுதான் என்றாலும் கடைசியில் சொல்லியுள்ள வரிகளை கண்டிப்பாக பகிர்கிறேன்...
ReplyDeletesuper, unmai.
ReplyDeleteஅருமை நன்றாகச் சொன்னீர்கள்
ReplyDeleteArumai Arumai!
ReplyDeleteEvery Husbands have read this and understand the woman struggles and sacrify.