உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 10, 2012

மல்லிகை மணம் போல வலைத்தளத்தில் மணக்கும் வலைப்பூக்கள்மல்லிகை மணம் போல வலைத்தளத்தில் மணக்கும் வலைப்பூக்கள்

எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என்ற பெருமையுடன் வழங்கப்படும் இந்த விருது எனக்கு நான் மிகவும் மதிக்கும் சாகம்பரி அவர்களால் அவர்கள்...உண்மைகள் என்ற எனது வலைத்தலத்திற்கு வழங்கப்பட்டது. இவர் மற்றும் ரமணி சாரை தவிர வேறுயாரவது தந்திருந்தால் அன்பாக மறுத்து இருப்பேன். ஆனால் தந்தவர் எனது பெரும் மதிப்பிற்குரியவர் என்பதால் இதை பணிவன்புடன் ஏற்று கொள்கிறேன். சாகம்பரி அவர்களே மிக நன்றி.

இந்த விருது அவருக்கு திருமதி. கீதமஞ்சரி வழங்கியுள்ளார்கள். வலைப்பதிவை தொடர்பவர்கள் எண்ணிக்கை 200க்குள் இருக்கும் இளம் பதிவர்களுக்கு இந்த விருதை வழங்க வேண்டும்.

இந்த விருதை எனக்கு மிகவும் பிடித்த வலைத்தளங்களுக்கு வழங்கயோசித்தால் பாதிக்கும் மேற்பட்டோர் இந்த விருதுவை பெற்று உள்ளனர். அதனால் இந்த விருதுவை இதுவரை பெறாதவர்களாக இருக்கும்  ஐந்து  "மிகச்சிறந்த" வலைப்பதிவர்களுக்கு இந்த விருதினை வழங்குகிறேன். அவர்களும் இதுபோல பிரியமானவ்ரகளுக்கு இதனை வழங்கி மகிழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

1. கவிதையாகட்டும் கட்டுரையாகட்டும் அல்லது விமர்சனமாகட்டும் சூர்ய ஜீவா எழுதினால் அது நம் மனதை தொட்டு செல்லும் .  அவரின் எழுத்துக்கு இது ஒரு சாம்பிள்

தன வீட்டு அடுப்பு எரிய
அவள் எரிந்தாள்,
சிகப்பு விளக்காக.. 

2. தன்னை சுற்றி நடக்கும்  சமுக விஷயங்களை  நம் கண் முன்னால் தமது எழுத்தால் அப்படியே காட்டும் திறமை இந்த இளம் பெண் ஜோஸபின் பாபா அவர்களுக்கு உள்ளது. இவரிடம் பிடித்தது இவரின் எழுத்து நடையே இவர் சற்று முயற்சித்தால் இந்தியாவில் பெயர் சொல்லும்  ஒரு ஜர்னலிஸ்டாக வரும் அளவுக்கு மிக திறமையுள்ளது .


3. ஆங்கிலத்தில், ஆலயம் கண்டேன் என்ற பெயரில், இவர் தரிசித்த சில சிறப்பான ஆலயங்களை பற்றி எழுதி வந்தவர் அதையே தமிழில் எழுதும் படி பல பேர் கேட்டு கொண்டதால் தமிழிலும்  முயற்சி எடுத்து எழுதி வருபவர்  ப்ரியா என்ற இளம் மங்கை. எனக்கு பிடித்த இவர் எழுத்து உங்களுக்கும் பிடிக்கும்.

4.  ஊசி போட தெரியாத ஆனால் டாக்டர் பட்டம் பெற்ற திருமதி.முகுந்த் அம்மா

5. மனம் தொடும் எழுத்துக்களால் நிறைந்த பூச்சரம் மணக்கிறது இந்த பூங்குழலியின் கையால்.


மேலே உள்ள விருதுவைவிட சாகம்பரி அவரின் வலைத்தளத்தில் என்னை கிழ்கண்டவாறு அறிமுகப்படுத்தியுள்ளார்.அதுதான் எனக்கு கிடைத்த மிக பெரிய விருதுவாக கருதுகிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்


காரச்சாரமான விவாதங்கள், அரசியல் அலசல்கள் என முறுக்கு மீசை பாரதியை தலைப்பில் கொண்டிருக்கும் அவர்கள் உண்மைகள்  மதுரைத் தமிழன் அவர்களுக்கு,


சாகம்பரி அவர்கள் சொன்னதுபடி "இது போன்ற விருதுகள் நாம் ஒரு குடும்பம் என்பதை குறிக்கும் என்பதால், விருதை பெற்றுக் கொண்டு பதிவுலக குடும்பத்தை பெரிதுபடுத்தி மகிழ வேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பிட்ட லோகோக்களை தங்களுடைய வலைப்பூவில் பதிந்து கொள்ளுங்கள்.

13 comments :

 1. உங்களுக்கு இந்த விருது கிடைத்திருப்பதில் எனக்கு
  மிக்க மகிழ்ச்சி. உங்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும்
  அந்த ஐவரணிக்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள் கூறி
  அவர்கள் தளமும் விரைவில் சென்று பார்வை இடுகிறேன்.
  நன்றி !

  ReplyDelete
 2. பூங்குழலியும், சூர்யஜீவாவும் நானறிந்தவர்கள். மற்றவர்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. விருது பெற்றதற்கும் தகுதியானவர்களுக்கு வழங்கியதற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மிக்க நன்றி என்னை தேர்ந்தெடுத்தமைக்கு ...நான் வாங்கும் முதல் விருது இதுதான் .சிறகுகள் பெற்றது போல் உணர்கிறேன் .நன்றி

  ReplyDelete
 4. தங்களுக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். பாராட்டுக்கள். vgk

  ReplyDelete
 5. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. அன்பு நண்பருக்கு,
  ஆங்கிலத்தில் ஆலயம் கண்டேன் பல விருதுகளை பெற்றிருந்தாலும் தமிழில் இதுவே முதல் விருது. அதை தங்களிடமிருந்து பெறுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் ! பாராட்டுக்கள் விருது பெற்ற அனைவருக்கும்! நன்றி!
  பிரியா

  ReplyDelete
 8. நண்பா தங்கள் கையால் கிடைத்த விருதுக்கு பெருமிதம் கொள்கின்றேன். நன்றி வணக்கங்கள். என் வாழ்வில் நான் பெற்ற மகிழ்ச்சி!.

  ReplyDelete
 9. விருதுபெற்ற உங்களுக்கும் உங்களால் விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 10. விருதினை ஏற்றுக் கொண்டமைக்கும்
  சரியான பதிவர்களுக்கு பகிர்ந்தளித்ததன் மூலம்
  அவர்களை அனைவருக்கும் அறிமுகம் செய்தமைக்கும்
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 11. @ஸ்ரவாணி
  @கணேஷ்
  @பூங்ககுழலி
  @வை.கோபாலகிருஷ்ணன்
  @ இராஜராஜேஸ்வரி
  @விமலன்
  @ப்ரியா
  @ஜோஸபின்
  @துரைடேனியல்
  @ரமணி சார்

  அனைவருக்கும் எனது வாழ்த்துகளும், நன்றிகளும்.... வாழ்க வளமுடன்

  ReplyDelete
 12. இங்கு வருகைதந்து கருத்துக்களையும் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்தையும் வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்

  ReplyDelete
 13. Thanks for the wonderful award to me sir. Thanks for introducing me in your blog.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog