உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, October 1, 2016

நாட்டு நிலவரம் : இங்கே அடித்து துவைத்து காயவைக்கப்படுகிறது

நாட்டு நிலவரம் :  இங்கே அடித்து துவைத்து காயவைக்கப்படுகிறது
ஜெயலலிதா :

பேசாமல் அப்போலோ மருத்துவமனையை தலைமை செயலகமாக மாற்றிவிட்டால் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துவிடலாம்தானே

அப்போலோவில் நல்ல உடல்நிலையோடு இருக்கும் ஜெயலலிதாவை  பார்க்க  லண்டனில் இருந்து டாக்டர் வருவதுதான் சந்தேகத்திற்கு இடம் அளிக்கிறது!!


இந்திய தலைவர்களின் சிகிச்சைக்கு வெளிநாட்டில் இருந்து மருத்துவர்களை வரவழைப்பதற்கு காரணம் மருத்துவ சீட்டிற்கு பணம் கொடுத்து சேர்ந்த டாக்டர்களின் லட்சணம் தலைவர்களுக்கு மிக நன்றாகவே தெரிந்திருப்பதுதான்,#அப்பலோ டாக்டர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல


அப்போலோ:

அப்போலோ ஹாஸ்பிடலுக்கு லண்டன் டாக்டர் வந்திருப்பது முதல்வருக்கு சிகிச்சை அளிக்கவா அல்லது அங்குள்ள டாக்டர்களுக்கு டிரெய்னிங்க் கொடுக்கவா?


அப்போலோ ஹாஸ்பிடலில் தலைவர்களுக்கு சிகிச்சை அளிக்க சரியான டாக்டர்கள் இல்லாதது கேவலமாகத்தான் இருக்கிறது


மோடி :

வழக்கமான ராணுவ நடவடிக்கையைதான் இந்த மோடி அரசு விளம்பரங்கள் மூலம் மாபெரும் போர் வெற்றி என பிரகடனம் செய்து இருக்கிறது!

பாகிஸ்தான் நம்மிடம் ஆக்கிரமித்த பகுதிக்குள் போய் அங்கிருந்த தீவிரவாதிகள் இருக்கும் பகுதியை அழித்த நம்ம ராணுவம் அந்த பகுதியை மீட்டு நம் பகுதிதான் என அறிவிக்காமல் பாகிஸ்தானியர்களிடமே விட்டு விட்டு வந்தது எதனால்


மோடிஜி நாங்கள் மூஸ்லீம் தீவிர வாதிகளை அனுப்பினால் நீங்கள் பதிலுக்கு இந்து தீவிரவாதிகளைத்தான் அனுப்பனும் ஆனால் நீங்கள் அதற்கு பயந்து இராணுத்தை அனுப்புவது எல்லாம் மிக தவறு #நவாஸ்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்வு''
பாகிஸ்தான் மீது நடத்திய அட்டாக் செலவை சாமாளிக்க பெட்ரோல் விலையை உயர்த்தி இருப்பார்களோ என்னவோ


இந்திய சட்டம் :

அளவா குடிங்க: இந்திய சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்'
இப்படி அட்வைஸ் பண்ணுவதால்தான் கர்நாடகா அரசு கோர்ட் சொல்லுவதை ஏதும் கேட்கமாட்டேங்கிறார்கள்


கலைஞர்:


ஜெயலலிதா சிகிச்சை பெறும் படத்தை வெளியிட வேண்டும் : கலைஞர் வேண்டுகோள்
முதலில் ஸ்டாலினுக்கு லண்டனில் நடந்த சிகிச்சைகளை ஒரு விடியோ பதிவாக வெளியிடுங்கள் அதன் பின் முதலமைச்சரின் படத்தை வெளியிட ஏற்பாடு செய்ய்லாம்


ஜெயலலிதா உடல்நிலை பற்றி அறிய கலைஞர் துடிப்பது அவர் இன்னும் எவ்வளவு நாள் வாழ்வார் அதன்பின் மீண்டும் நமக்கு முதல்வராக வாய்ப்பு கிடைக்குமா என்று தெரிந்து கொள்ளும் ஆசையில்தான்.

ஜெயலலிதா உடல் நலம் தேறி வருகின்றார் என்றால் வருத்தப்படும் முதல் ஆட்கள் கலைஞரும் ஸ்டாலினும்தான்-


ஸ்டாலின் தலமையில் மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைப்பதற்கு காரணம் திமுகவில் இருந்த பலர்  சத்தம் இல்லாமல் ஆளுங்கட்சிக்கு போய் சேர்ந்ததுதான் காரணமோ

உள்ளாட்சி தேர்தலில் என் தலைமையில் அதிக இடம் ஜெயித்துவிடுவேன் என்பதை தடுக்கவே கலைஞர் ஜெயலலிதா உடல் நலம் குறைவு பற்றிய படத்தை வெளியிட சொல்லி வற்புறுத்துகிறாரோ? அம்மாவின் ஒரு  படம் வந்தால் போதுமே தமிழகம் முழுவதும் அவர்கள் எளிதாக ஜெயிக்க.


சினிமா:
இந்தியப்படங்களுக்கு மொத்தமாக தடை: பாகிஸ்தான் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு! - செய்தி
என்ன பாகிஸ்தான் மக்கள் இந்திய படங்களை திரையரங்கில் போய் பார்க்கிறார்களா என்ன ? அவர்களுக்கு  திருட்டு டிவிடி பற்றி தெரியாதா என்ன? அடப்பாவமே இவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்களே

பெண்ணாக நடித்ததில் பெருமை: சிவகார்த்திகேயன்
பெண்ணாக  நடிப்பதை விட வாழ்ந்து பாரு அப்போது தெரியும் அவர்களின் தியாகம்

ஒரு நடிகனுக்கு அரசு செலவில் சீக்கிரம் மணிமண்டபம் கட்டவேண்டும் என்று சொல்லுபவர்கள் ஒரு நல்லவனுக்கு மணிமண்டபம் கட்டுங்கள் என்று குரல் கொடுக்காத மோசமான நாடு தமிழகமாகத்தான் இருக்க வேண்டும்


பாகிஸ்தான்

மோடிஜி நாங்கள் மூஸ்லீம் தீவிர வாதிகளை அனுப்பினால் நீங்கள் பதிலுக்கு இந்து தீவிரவாதிகளைத்தான் அனுப்பனும் ஆனால் நீங்கள் அதற்கு பயந்து இராணுத்தை அனுப்புவது எல்லாம் மிக தவறு #நவாஸ்

பாகிஸ்தான் பதுங்குவது பயத்தால் அல்ல ப்ளான் பண்ணி பதில் தாக்கு தாக்குவதற்காகத்தான் அவர்கள் கிறுக்கர்கள் அதனால் அவர்கள் செய்யும் டேமேஜ் மிக அதிகமாகத்தான் இருக்கும்

அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments :

 1. நிஜமாவே துவைச்சு நார் நாரா கிழ்சிசிட்டீங்க

  ReplyDelete
 2. நாட்டு நிலவரம் ரொம்பவே க்ளீன்...அதாங்க நல்லாவே அடிச்சு துவைச்சு நாராக்கிட்டீங்க...!!! ஜெஜெ பற்றி இங்கு பல வதந்திகள் உலவி வருகின்றன. இன்டெர்னாஷனல் லெவலில் கூட.

  போர் கொஞ்சம் பயமுறுத்தத்தான் செய்கிறது. தலைநகரில் பதட்டம் நிறுவுவதாக எனது உறவினர்கள் தெரிவித்தார்கள். எல்லோருமே பீதியில் இருப்பதாகவும் சொன்னார்கள்.போர் என்றால்எல்லையோடு முடியாதே... உயிர்ச்சேதம் முதல் அனைத்துச் சேதங்களும் இரு தரப்பினருக்கும் ஏற்படும். யார் வென்றால் என்ன தோற்றால் என்ன சேதம் சேதம்தானே மதுர சகோ..அப்படி எதுவும் நடக்காமல் பேச்சுவார்த்தையில் முடிந்தால் நல்லது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதான் ம.துர தமிழனே சொல்லிட்டாரே அவனுங்க கிறுக்கனுங்கன்னு. அவனுங்க கிட்ட என்ன பேசி புரிய வக்க

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog