Friday, October 7, 2016



avargal unmaigal
நானும் எனது நிழலான சன்னி என்ற நாய்க்குட்டியும்


உயிரே உனக்காக



குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம். காரணம் உங்களுக்கு எதாவது விபத்து ஏற்பட்டு நீங்கள் உயிர் இழக்க நேரிட்டால் உங்களின் குடும்பத்தினருக்கு காரணம் தெரியும் ஆனால் நீங்கள் வளர்க்கும் செல்ல நாய் குட்டிகளுக்கு அது புரியாது. அதற்கு புரிவதெல்லாம் அதை விட்டு விட்டு நீங்கள் எங்கோ சென்று வீட்டீர்கள் என்று நினைத்து உருகி வருந்தி கொண்டிருக்க மட்டும்தான். அதுமட்டுமல்ல அந்த வாயில்லா பிராணிகளுக்கு ஆறுதல் சொல்லி தேற்ற  இந்த மனிதர்களால் முடியவே முடியாது.



என் வீட்டுக்கு வருபவர்கள் நாயை நேசிக்க தெரியாதவர்களாக இருந்தால் அவர்களை நான் நேசிப்பதில்லை. காரணம் இதயம் இல்லாதவர்களை நான் நேசிப்பது இல்லை

அன்புடன்
மதுரைத்தமிழன்


07 Oct 2016

8 comments:

  1. அனைத்து உயிர்களையும் நேசிப்போம்....

    ReplyDelete
  2. போற்றத்தக்கவேண்டிய அன்பு. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. உண்மையான எதிர்ப்பார்ப்பில்லாத அன்பை சிறுவயதில் நாங்கள் வளர்த்த செல்லங்களிடம் மட்டும் தான் கண்டுள்ளேன்.

    ReplyDelete
  4. சகோ என் பையனின் அதே வார்த்தைகள்...

    சன்னி செம க்யூட்..பதிவும் ! உங்கள் வார்த்தைகளை வழிமொழிகிறேன். எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாத அன்பு என்றால் அது இந்தச் செல்லங்கள் தான் சகோ. அதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. பதிவை ரொம்பவே ரசித்தேன்...

    சரி சரி மதுரைத்தமிழன் யாரென்று எல்லோருக்கும் தெரிந்துவிட்டதே!!!! உங்கள் புகைப்படத்தை வெளியிட்டு!!!!!! ஆனால் இங்கு வந்தவர்கள் யாருக்கும் தெரியவில்லை போலும்...இல்லை தெரிந்தும் தெரியாதது போல்!!!!!!!!!!

    கீதா

    ReplyDelete
  5. உங்க கண்ணைக் கட்டிக்கிட்டா யாருக்கும் உங்களைத் தெரியாதுன்னு (அவங்களுக்குக் கண் மறைஞ்சு) நினைப்போ??!!!!!!ஹஹஹஹ் சரி எது எப்படியோ நம்ம வலையுலகில் நிலவி வந்த மதுரைத் தமிழன் யாரென்பது ரிலீஸ்ட்...நவராத்திரி ரிலீஸ்னு வைச்சுக்கலாமா ஹஹஹஹ்ஹ

    ஒரு ஜோக் நினைவுக்கு வருது சரி அது இங்க வேண்டாம் விடுங்க..ஹிஹிஹி

    கீதா

    ReplyDelete
  6. இப்படித்தான் பெட் வளர்ப்பவர்கள் எல்லோரும் சொல்கிறார்கள். (மனுசங்கள்னால ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பார்களோ?). உங்க pet நல்லா இருக்கு. Teddy bear மாதிரி பொம்மையோ என்று சம்சயம்.

    ReplyDelete
  7. மதுர.. இடது தோள்பட்டையில் இருக்கும் தழும்பு.. விழுப்புண்ணோ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.