Friday, October 7, 2016



ஜெயலலிதாவிற்கும் மட்டுமல்ல தமிழக அரசுக்கும்  அவசர சிகிச்சை  தேவை

உடல் நல குறைவு காரணமாக ஜெயலலிதா அவர்கள் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் அவர்கள் நலம் பெற வேண்டும் என்றுதான் பலருடையவிருப்பமாக இருக்கிறது ஆனால் அதற்கு இன்னும் அதிக நாட்கள் ஆகும் என மருத்துவமனை செய்திகள் தெரிவிக்கின்றன. அடே நேரத்தில் வதந்திகள் பலவும் உலாவி வருகின்றன இந்த வதந்திகள் உலாவ காரணம் சமுக வலைத்தளங்கைல் சில வக்கிர மனம் படைத்தவர்களின் செயல்பாடுகள்தான் காரணம்.இன்றைய நிலையில் ராகுல் காந்தியும் வந்து முதல்வரின் உடல்நிலையை பற்றி மருத்துவ மனைக்கு நேரில் வந்து விசாரித்து சென்று இருக்கிறார் அவர் ஜெயலலிதாவை நேரில் சந்திக்கவில்லை என்றாலும் மருத்துவமனைக்கு வந்து டாக்டர்களிடம் வந்து விசாரித்து சற்று தோலைவில் இருந்து ஜெயலலிதாவை பார்த்து செல்ல வாய்ப்புக்கள் மிக அதிகமாக இருந்திருக்கும் என்பதுதான் உண்மைநிலை. ஒரு மருத்துவமனை பொய்யை நீண்டகாலமாக கூறி செல்ல முடியாது அப்படி செய்தால் அது மிகப்பெரிய குற்றமாகி ஜெயலலிதாவிற்கு ஏதாவது நேர்ந்தால் பொதுமக்களிடம் இருந்து அந்த மருத்துவமனைக்கு பயங்கர எதிர்ப்பு ஏற்படுவதோடு சட்ட சிக்கல்களையும் சந்திக்க வேண்டி இருக்கும்.


இப்படி ஜெயலலிதா மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கும் நிலையில் ஜெயலலிதாவால் அரசுக்கு எந்த வித உத்தரவும் இடமுடியாத நிலையில்தான் இருக்கிறார். அவரால் உத்தரவு இடும் நிலையில் இருந்தால் மருத்துவமனையில் படுத்து கொண்டே அமைச்சர்களை சந்தித்து ஆலோசனை கூறி ஆட்சியை செயல்படுத்த முடியும் ஆனால் சசிகலா மட்டும்தான் அவர் அருகில் செல்ல முடியும் என்ற சூழ்னிலையில் சசிகலா மூலம் அவர் ஆலோசனை நடத்தினால் அது இந்திய சட்டத்திற்கு மிகவும் முரணானது. காரணம் சசிகலா அமைச்சரவையில் இடம் பெறாதவர்.

மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்பவர்தான் முதலமைச்சர். அவரின் ஆலோசனையின் கீழ்த்தான் முடிவுகள் எடுக்கப்படும். அவருக்கு கீழ் மற்ற இலாக்காக்களை ஏற்று நடத்த  அமைச்சர்களை நியமிப்பார். அந்த அமைச்சரகள் அந்த இலக்காக்களில்  எடுக்கப்படும் முடிவுகளை  முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு சென்று ஆவண செய்வார்கள். , ஆனால் ஜெயலலிதா ஆட்சியில்  அனைத்தும் ஜெயலலிதா அவர்களின்  ஏகோபித்த முடிவாகவே இருந்தது. மற்ற அமைச்சர்கள் செயல்படாத பொம்மைகளாக மட்டுமே இருந்துள்ளனர். அப்படிபட்ட சூழ்நிலையில் முக்கிய முடிவெடுக்கும் முதல்வர் , தனது செயல்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கும் சூழ் நிலையில்தான் இபோது இருக்கிறது .இந்த சூழ்நைலையில்  இந்த பொம்மை அமைச்சரவையை வைத்துக்கொண்டு நாடாள்வது என்பது பெரும் தீய விளைவையே உண்டாக்கும்.


இந்த அமைச்சர்கள் அல்லது ஜெயலிலிதாவை சுற்றி இருக்கும் பிணம்திண்னி கழுகுகள் சந்தர்ப்பம் கிடைத்தால் ,  தமிழகத்தை தலைகுப்புற கவிழ்த்துவிட முயற்சிப்பது நடைபெறக்கூடிய ஒன்று. மேலும் வலுமிக்க தலைமை , வலுவிழந்து இருக்கும்பொழுது, எதிர்க்கட்சிகள் அந்த பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக்கி, தங்களின் கையை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுகின்றன. அதே சமயம் ஆளுங்கட்சி எம் எல் ஏக்கள் ஆதாயத்துக்காக கட்சி மாறுவதும் நடைபெறும். இம்மாதிரி செயல்களை தடுத்து நிறுத்த  , முதல்வர் நலம் பெற்று , ஆட்சியை செய்ய வரும் வரை தற்காலிகமாக ஒத்திவைத்து நாட்டையும், கட்சி நிலைமையையும் காப்பாற்றுவது மட்டுமே சிறந்த செயலாக இருக்கும்.

இந்த நிலையில் தமிழக அரசு செயல்படுவது போன்ற நிலையில் தோன்றினாலும் அது ஜெயலலிதாவின் தற்போதைய நிலையைப் போலவே முடங்கிகிடக்கிறது என்பதுதான் உண்மை. இந்த நிலமை நீடிப்பது தமிழகத்திற்கு நல்லது இல்லைதான்.அதற்கு மாற்று முறைய செயல்படுத்த வேண்டும் இந்த மாற்று முறைப்படி சபாநாயகர் அமைச்சரவையை கூட்டி ஒரு தற்காலிக முதல்வரையோ அல்லது ஒரு துணை முதல்வரையோ தேர்ந்தெடுத்து ஜெயலலிதா குணமாகி வரும் வரை தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும். அல்லது ஜனாதிபதியின் நேரடிப்பார்வையில் கவர்ணர் மூலம் தற்காலிகமாக ஆட்சி செயல்படவேண்டும்.

இப்படி நான் நினைத்து இந்த பதிவை எழுதிக் கொண்டு இருக்கும் நேரத்தில் சுப்பிரமணிய சுவாமி ஒரு கடித்தை உள்துறை அமைச்சருக்கு எழுதி இருக்கிறார். அதை கிழே தந்து இருக்கிறேன். பல சமயங்களில் இவர அடவாடித்தனமாக பேசினாலும் அதை ஒதுக்கிவிட்டு மேலும் அவர்மீதுள்ள அரசியல் காழ்புணர்ச்சியையும் ஒதுக்கி பார்த்தோமானால் அது சரியாகத்தான்படுகிறது. ஆனால் இந்த கடிதத்தில் தமிழகத்தில் பயங்கரவாதிகளின் தலைதூக்கியுள்ளது என்ற தகவல்மட்டுமே தவறு.

புதுடில்லி: முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் தேறும் வரை, சட்டசபையை 6 மாதம் முடக்கி வைக்க வேண்டும் என பா.., எம்.பி., உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: முதல்வர் ஜெ., உடல்நலக்குறைவால், அரசில் ஒழுங்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் அரசை வழிநடத்துகிறார். இதுபோன்ற சூழ்நிலைகளில், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல் பிடிபட்டுள்ளது. விடுதலை புலிகள் மற்றும் நக்சலைட் ஆதரவு பெற்ற இயக்கங்கள் தலைதூக்கியுள்ளன. இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எனவே உள்துறை அமைச்சர் தமிழகத்தில், அரசியல் சட்டப்பிரிவு 356வது பிரிவை அமல்படுத்த வேண்டும். சட்டசபையை முடக்கி வைக்க வேண்டும். ஜெ., பதவிக்கு வரும் வரை ராணுவ சிறப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜெ., இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும் என அப்பல்லோ நிர்வாகம் கூறியுள்ளது. எனவே மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுப்பது அவசியம் மட்டுமல்லாமல் உடனடி தேவையாகும் எனக்கூறியுள்ளார்,


இந்த பதிவை எழுதும் போது ராகுல்காந்தி வந்து சென்ற பின் மேலும் பிரச்சனைகள் எழக்கூடும் என நினைத்து பன்னீர் செல்வம் தலைமையில் பல அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து அரசின் செயல்பாடுகளை விளக்க சென்று இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன.


அன்புடன்
மதுரைத்தமிழன்

6 comments:

  1. நீங்கள் சொல்வது போல தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமாகும் வரை தமிழக மந்திரிசபையை ’ சஸ்பெண்ட் ‘ செய்து வைப்பது நல்லதுதான். நானும் இதையேதான் சொல்ல நினைத்தேன். சுப்ரமண்ய சாமி சொல்வது போல ஜனாதிபதி ஆட்சி என்பது குழப்பத்தையே ஏற்படுத்தும். அப்புறம் தீபாவளி வியாபாரம், கொண்டாட்டம் என்பதெல்லாம் புஸ்வாணம் ஆகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. இப்படியே நிலமை நீட்டிப்பது நாட்டிற்கு நல்லதல்ல அதனால் ஜனாதிபதி ஆட்சியோ அல்லது தற்காலிக முதல்வர் ஆட்சியோதான் இப்போதைய தேவை...


      ***தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி..... திருத்திவிட்டேன்

      Delete
  2. தற்போதைய தேவை தமிழ்நாட்டில் முதல்வர் இருக்கிறார் என்று காட்ட பன்னீர் சொம்பை முன்னிறுத்துவதே....

    ReplyDelete
  3. நல்லதொரு எண்ணம். இப்படியே இருந்தால் பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு அதிகம்....

    ReplyDelete
  4. சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள் சகோ. இந்நிலை நீடிப்பது நல்லதல்ல. அதுவும் முதல்வர் இரு மாதங்களேனும் சிகிச்சையில் இருக்க வேண்டும் என்று செய்தியில் சொல்லப்பட்ட வேளையில் தற்காலிக முதல்வர் உடனடித் தேவை. அதற்குத்தான் இருக்கிறாரே ஒருவர் முன்பு போல அவரையே தேர்ந்தெடுக்கலாம் ...

    கீதா

    ReplyDelete
  5. உங்கள் கருத்து சரிதான். இது கடவுளாக அதிமுகவுக்குக் கொடுத்த வாய்ப்பு. யார் தற்காலிகத் தலைமை ஏற்கிறார்கள் என்று பார்க்கலாம். அனேகமாக ஓ.பிக்கு வாய்ப்பு குறைவு. சு.சாமிக்கு எப்படி சூழ்'நிலையைத் தனக்கு ஆதாயமாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்று எண்ணம்.. ராகுல்காந்தி அவர்கள் did the right thing at the right time. (ஆடுமேய்க்கப் போனமாதிரியும் ஆச்சு.. அண்ணன் பொண்ணுக்குப் பையன் பார்த்தமாதிரியும் ஆச்சு. அவர் கருணானிதிக்கு சிவப்பு விளக்கையும் அதிமுகவுக்குப் பச்சை விளக்கையும் காண்பிக்க 'நினைப்பதாகத் தோன்றுகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.