கலைஞர் தாத்தாவும் விகடன் தாத்தாவும் அண்ணன் தம்பிகள்தானா? vikatan-90
கலைஞர் தாத்தாவைப் பின்பற்றி விகடன் தாத்தாவும் தொண்ணூறு வயதில் அடி எடுத்து வைக்கிறார். தொண்ணூறு வயதில் அடி எடுத்து வைக்கும் விகடன் தாத்தாவிற்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இந்த இரண்டு தாத்தாக்களையும் நான் கலாய்த்தும் , கழுவிக் கொட்டியும் பதிவுகள் எழுதிய போதிலும் இவர்கள் இருவரும் எனது சிறு வயதில் மனசு பூரா நிறைந்து , சந்தோஷங்களை அள்ளி அள்ளிக கொடுத்தனர் என்பதை என்னால் மறக்க முடியாது
என்னை பொறுத்த வரையில் கலைஞரும் விகடனும் அண்ணன் தம்பி மாதிரிதான். இருவரும் இளம் வயதில் மிகத் தனித்தன்மையோடு உலா வந்து தமிழ் அறிந்தவர்கள் அனைவரின் மனதில் இடம் பிடித்தனர். இவர்கள் இருவருமே கிண்டல், கேலி, இலக்கியம் ,கதை ,கவிதை என்று பலதுறைகளில் கலக்கி வந்தனர்..
எனது இளம் வயதில் எனது குடும்பத்தினர், நண்பர்கள் தவிர எனக்கு மிகவும் அதிகம் பிடித்தவர்கள் இவர்கள் இருவரும்தான்.இவர்கள் இருவர் மீதும் எனக்கு ஒருவிதமான வெறி இருந்தது. ஆனால், அது ஆண்டுகள் பல கடந்ததும் அவர்களின் செயல்பாடுகளின் காரணமாக அவர்களை விட்டு விலகிவிட்டேன் .காரணம் இந்த இருவர்களின் செயல்பாடுகள் என்பது ஆண்டுக்கு அப்புறம் வெகு வேகமாக மாறின. முன்பு மக்களை கவர வேண்டும் என நினைத்துச் செயல்பட்டவர்கள், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, மக்களை கவர்வதற்கு பதிலாக மக்களிடம் இரூக்கும் பணத்தை கவரவே பல திட்டங்களைத் தீட்டி செயல்பட்டார்கள்.

அதனால்தான் விகடன் குழுமத்தில் இருந்து பல வெளியிடுகள் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் வந்ததால் அதன் தரம் குறைந்து போனது .அது போல கலைஞருக்கும் மக்களுக்கு செய்த தொண்டுகள் போது என்று நினைத்து, தன் மக்களுக்காகப் பணம் சம்பாதிக்க ஆரம்பித்தபோது அவரின் தலைமை மீது இருந்த கவர்ச்சியும் குறைந்து போனது. இருவரும் பணத்தைக் கவரவே பல திட்டங்களைத் தீட்டிச் செயல்பட்டார்கள்.
|
விகடன் வெளியிடு= கலைஞர் வெளியிடு
ஜுவி
= ஸ்டாலின்
டைம்பாஸ்=அழகிரி
அவள்விகடன் =கனிமொழி
சக்திவிகடன்=செல்வி
பசுமைவிகடன்=முத்து
நாணயம்விகடன்=தமிழரசு
சுட்டிவிகடன்=உதயநிதி
மோட்டார்விகடன்=துரைதயாநிதி
|
மக்கள் இவர்கள் இருவரையும் பழையபடி செயல்பட வேண்டுமென்றுதான் விரும்புகிறார்கள். ஆனால், வயதின் காரணமாக அவர்களுக்குள் இருந்த வீரியமும் முன்பு போல இல்லாமல் குறைந்து போய்விட்டதால், இப்போது தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்கள்
சரி, இவர்களுக்குதான் வயசாகிவிட்டதே, அதனால் இவர்களின் வாரிசுகளாவது ஊக்கமாகச் செயல்பட்டு மக்களை கவர்வார்கள் என நினைத்தால், அவர்கள் இன்னும் மோசமாக அதை வழி நடத்துகிறார்கள்
எனக்கு கொஞ்சம் தமிழும், கிண்டல் மற்றும் நையாண்டியும் வருகிறது என்றால், அதற்கு இந்த இருவரும் மட்டுமே . மேலும் எனது இளமைக் பருவத்தில் இருந்து நான் அமெரிக்கா வரும் வரை எனக்குச் சந்தோஷம் தந்ததும் இவர்கள் இரண்டு பேர்தான்.. அதனால் இந்த இருவருக்கும் வயதான போதிலும் எனது வாழ்த்துகள் இவர்களுக்கு என்றும் உண்டு. இரண்டு தாத்தாக்களும் நம் தாத்தாக்கள்தான்.
90 - வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஆனந்த விகடனுக்கு எனது வாழ்த்துகள். விகடன் பழைய விகடனாக மீண்டும் வர என்பதுதான் எனது ஆசைகள்

டிஸ்கி: சிறு வயதில் கலைஞரின் பேச்சுகளையும் அவரின் எழுத்துக்களையும் ஒரு வெறியோடு படிப்பேன். அதுபோல, அண்ணாவின் மறைவின்போது அவர் எழுதிப் பேசிய அஞ்சலிக் கவிதையாகிய "அன்புக்கு மூன்று எழுத்து, அறிவுக்கு மூன்று எழுத்து" என்று அவர் எழுதிய கவிதையை அவர் குரலிலேயே பேசி மகிழ்வேன். அதுபோலத்தான் விகடனையும், ஜூனியர் விகடனையும் (ஜூவியையும்) வெளிவரும் அன்றே வெறியுடன் வாங்கிப் படிப்பேன். நான் வழக்கமாகச் செல்லும் கடைக்காரரிடம், அவர் கடைக்கு இரண்டு (2) அல்லது மூன்று தடவையாவது சென்று புத்தகம் வந்துவிட்டதா என்று கேட்டுச் செல்வேன். பொறுமை இல்லாமல், புத்தகம் கிடைக்கும் வரை ரெஸ்ட்லெஸ்ஸாக (Restless) இருப்பேன். ஆனால், இப்ப? என்னத்த சொல்ல......
சில ஆண்டுகளுக்கு முன்பு எனது வலைத்தளத்தையும் எனது பதிவையும் அறிமுகப்படுத்திய விகடனாருக்கு எனது நன்றிகள்
சில ஆண்டுகளுக்கு முன்பு எனது வலைத்தளத்தையும் எனது பதிவையும் அறிமுகப்படுத்திய விகடனாருக்கு எனது நன்றிகள்
அன்புடன்
மதுரைத்தமிழன்
#கலைஞர்விகடன் #90வதுஆண்டு #விகடன்பாரம்பரியம் #பழையவிகடன்வேண்டும் #அண்ணன்தம்பிதாத்தாக்கள் #90வதுஆண்டு #விகடன்பாரம்பரியம்
#தலைவர்களின்தரம் #மதுரைதமிழன் #மீடியாமோகம் #பழையவிகடன்வேண்டும் #தமிழ்ஊடகம் #அவர்களின்உண்மைகள் #பணம்கவர்ச்சி #அரசியல்கிண்டல்
#தமிழ்மீடியா #KarunanidhiVikatan #90YearsOfVikatan #AvargalUnmaigal #TamilBloggers #PoliticalSatire
#MaduraiThamizhan #TamilMedia
#TamilMedia #90YearsOfVikatan #PoliticalSatire #MediaVsPolitics #AvargalUnmaigal #MaduraiThamizhan #TamilNaduLegacy #TheMoneyGame #OldIsGold #TamilBloggers #JournalismVsMoney

in the present political concious tamilnadu.. very few magazines daily newspapers are not partyoriented...
ReplyDeleteananda vikatan could not maintain the neutral attitude
fallen into the trap of dmk
still many believe that the management /propreitorship is with dmk A.V had nurtured good writers sociologists from other than brahmin communities...
and the GREAT THING DONE BY THE PROPRIETOR THIRU BALASUBBRAMANYAN was
HE HAD DONATED HIS BODY TO THE GOVT HOSPITAL AFTER HIS DEATH..
NO RITUALS...NOKARYAMS...NO RELIGIOUS CASTE ORIENTED RITUALS WERE DONE AT THE TIME OF HIS DEATH
THE SO CALLED DRAVIDIAN LEADERS COULD NEVER ASK OR DECIDE THEIR DEAD BODIES BE HANDED TO HOSPITAL....I CHALLENGE BRO...
அன்றைய காலங்களில் புகைவண்டி நிலையங்களில் பளீச்சென்று கண்ணில் படுவது.. "வாங்கி விட்டீர்களா..வாசித்து விட்டீர்களா".. இந்த வார ஆனந்தவிகடன் என்கிற விளம்பர பலகைகளில் அந்த தாத்தா சிரித்தபடி கேட்பது வழக்கம்..உடனே வாங்கி வாசிக்க தாேணும் ஆனால் தற்பாேது விகடன்கைமாறிய பிறகு வாங்க ....?
ReplyDelete