Friday, October 21, 2016



அமைதி பூங்காவாக தமிழகம் மாறிவிட்டதா?


இரண்டு கண்டெயினர் நிறைய இருந்த பணத்திற்கு சொந்தகாரர்களை பிடிச்சாச்சி

ரயிலில் கொள்ளை அடித்த கொள்ளையர்களை கண்டுபிடிச்சாச்சி

சுவாதி கொலை வழக்கு முடிஞ்சு தீர்ப்பு சொல்லியச்சு

ராம்குமார் உடல் போஸ்ட்மார்ட்டம் பண்ணி தற்கொலைன்னு முடிவு பண்ணியாச்சி?


காவிரி பிரச்சனை தீர்ந்து போச்சி.

ஜெயலலிதா நல்ல குணமாகி ஹாஸ்பிடலில் ஜாலியாக இருக்கிறார்

இந்திய ராணுவத்தின் போட்டோ ஷாப் விளம்பரமும் பழைய விளம்பரமாகி போயாச்சு

சிவகார்த்திகேயன் அழுது படத்தை புரோமொட் செய்தாகிவிட்டது

கூடங்ககுளத்தில் மேலும் சில அணு உலைகள் நிறுவ ஒப்பந்தம் போட்டாகிவிட்டது

திமுகவில் வாரிசு யார் என்று அறிவித்துவிட்டாச்சு

எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க தமிழ்நாட்டில் நல்ல இடம் இல்லையென்று அறிவிச்சாசு

தடை பெற்ற தொகுதிக்கும் தேர்தல் தேதி அறிவிச்சாச்சு


ஆஹா மொத்தம்  தமிழகம் இப்போது எந்த வித பிரச்சனைகளும் இல்லாமல் அமைதி பூங்காவாக இருக்கிறது.

என்ன நான் சொல்பது சரிதானே?

இந்த பதிவை படித்து விட்டு நீங்கள் கருத்து சொல்லாமல் போனால் உங்களின் செல்போன் தொலைந்து போகும் உங்கள் பேஸ்பு அக்கவுண்ட் முடக்கப்படும் என சாமி என் கனவில் வந்து சொல்லிட்டு போய் இருக்கிறது சொல்லறதை சொல்லிட்டேன் அதன் பின் உங்கள்பாடு

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : அம்மா ஹாஸ்பிடலில் சிகிச்சை பெறும் போது எந்த அதிமுகவினரும் திருட்டுதனமாக கூட தீபாவளி பண்டிகை கொண்டாட மாட்டார்கள்தானே அதிலும் முக்கியமாக அமைச்சர்கள் எம் எல் ஏக்கள்

6 comments:

  1. இதுவும் நல்லா இருக்கு... (கருத்து போடாம போனா செல் போன் காணாம போயிடும்னு பயந்து வருது அதனால்தான்)

    ReplyDelete
  2. தீபாவளியை அவர்கள் கொண்டாடாவிட்டால் போகிறது ,கொண்டாடுகிற மக்களை கைது செய்யாமல் விட்டால் சரி
    :)

    ReplyDelete
  3. யோவ் தமிழா, இப்பத்தான் படிப்படியாக முன்னேறிக்கிட்டிருக்கோம்!, அதக்கூட கண் வக்கிறீறே நியாயமா?!

    ReplyDelete
  4. இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையே மறந்துட்டீங்களே. அப்போ அது solve ஆகிடுச்சா ?

    ReplyDelete
  5. ஆமாங்க தமிழகம் ரொமப்வே அமைதிப் பூங்கா. அதான் இன்னிக்குக் காலைல வாக்கிங்க் போகும் போது என் உறவினர் அழைக்க செல்ஃபோன் எடுத்துப் பேசிட்டு காத்லிருந்து எடுக்கும் சமயம் அதை பைக்கில் வந்த இருவரில் பின்னால் இருந்தவன் அதை அப்படியே லபக்கிட்டுப் போயிட்டான்..நான் ஓடினேன் அவன் வண்டியில் என்பதால் விரைவாகச் சென்றுவிட்டார்கள். .IMEI number கொடுத்து போலீசில் கம்ப்ளெயின்ட் கொடுத்திருக்கிறேன்...மகன் அமெரிக்கா சென்றதால் வாட்சப்பில் பேசுவதற்காக இதுதான் முதல் தடவையாக ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொடுத்துவிட்டுச் சென்றான் 6 மாதம் தான் ஆகிறது...

    அட! மதுரைத் தமிழா உங்களின் வாக்கு பலிச்சுருச்சோ லேட்டா வந்ததுனால...ஹஹஹஹஹஹஹ்...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.