ஜெ..,வை சந்திக்க மோடி வருகை?
மோடி அப்போலோவிற்கு
வந்து ஜெயலலிதாவின் உடல் நலத்தை விசாரித்து சென்றது இப்படிதான்
அப்போலோ வாசல் வரை சென்று தமிழக முதல்வரின் உடல் நலத்தை விசாரிக்காத ரஜினிகாந்த, கமலஹாசன் மற்றும் நடிகர் சங்கத்திற்கு கடும் கண்டணங்கள்
ரஜினி ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க லண்டன் சென்றார் #ரஜினி வழி தனி வழி
ஜெயலலிதாவின் உடல் நிலைபற்றி விசாரிக்க அப்போலோவில் தனி தளம் ஒன்று திறந்துவிடப்பட்டிருக்கிறது. இங்கு அப்போலோ டாக்டர்கள் 24 மணிநேரமும் அமர்ந்து அங்கு
வரும் தலைவர்களுக்கு விளக்கம் அளிப்பதோடு அவர்களூக்கு ஜெயலலிதா படத்துடன் அவர்கள் அளித்து
வரும் சிகிச்சை பற்றிய அட்டவனையும் தரப்பப்டுகிறது அது மட்டுமல்லாமல் அங்கு வரும் தலைவர்களின்
உடல்நிலையை பரிசோதித்து தேவைப்பட்டால் அவர்களுக்கும் சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
ஜெயலலிதாவை பார்க்க அனுமதி கிடைக்காததால் ஸ்டாலின் ,
துரைமுருகன், பொன்முடி அவர்கள் அப்போலோ ஹாஸ்பிடலில்
இருந்து இன்று வெளிநடப்பு செய்தார்கள்.
கலைஞர் ஜெயலலிதாவை பார்க்க வரத்தான் முயற்சித்தார் ஆனால் அப்போலோவில் வீல் சேர்
வந்து போக தனி வசதி செய்யவில்லை
என்பதால் அவர் வரவில்லை
பன்னீர் செல்வம் கவர்னரை சந்தித்தபோது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அனைத்து
அமைச்சர்கள் எம்.எல்,ஏக்கள் ,தொண்டர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த தடவை தீபாவளி கொண்டாடப்
போவதில்லை என்று உறுதி மொழி எடுத்திருப்பதாக அறிக்கையை சமர்பித்தார்
சாதாரண காய்ச்சலை லண்டனில் இருந்து டாக்டரை வரவழைத்து நுரையீரல் பிரச்சனையாக மாற்றி
சாதித்துகாட்டியதில் அப்போலோ ஹாஸ்பிடலின் சாதனை போற்றதக்கது
இந்திய நீதிபதிகளின் தவறான தீர்ப்பால் வெளிவந்த ஜெயலலிதாவை தனிமை சிறையில்
சிறைபிடித்து வைத்திருக்கும் அப்போலோ டாக்டர்கள் மிக சிறந்தவர்கள்தான்
இதுதாண்டா அப்பல்லோ ஹாஸ்பிடல். சிறந்த ஹாஸ்பிடல்
என்று சொல்லிக்கொண்டாலும் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க லண்டனில் இருந்துதான் டாக்டரை வர வழைப்பானுங்க
அன்புடன்
மதுரைத்தமிழன்
இதில் அப்பல்லோவின் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்.நெருக்கடி காரணமாகவே லண்டன் டாக்டர் வரவழைக்கப் பட்டிருப்பார்.ஒரு வகையில் அப்பல்லோவுக்கு மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். ஏனென்றால் நடக்கக் கூடாத சம்பவம் ஏதேனும் நடந்தால் லண்டன் டாக்டர்கள்தான் சிகிச்சை அளித்தார்கள் என்று சொல்லி விடலாம்.
ReplyDeleteஹஹஹஹ் செம.. எல்லா கருத்துகளும் ரசனை...
ReplyDeleteஅதிலும் என்னவோ சென்னை மருத்துவ உலகம் பன்னாட்டு மருத்துவ உலகம் என்றும் ஹாஸ்பிட்டல் டூரிசம் என்றும் கூட கட்டுரைகள் எழுதினார்கள். அதாவது சென்னை மருத்துவ உலகம் அத்தனை இன்டெர்நாஷனல் லெவலுக்கு அமெரிக்க, ஐரோப்பிய சிங்கப்பூட் நாடுகளுக்கு நிகரானது என்று. அதாவது அங்கு ஆகும் மருத்துவச் செலவுகளை விட இங்கு ஃப்ளைட் டிக்கெட் கொடுத்தும் வந்தாலும் குறைவு என்றும் நல்ல மருத்துவம் என்றும் நிபுணர்கள் என்றும் சொல்லி எழுதப்பட்டது.
ஆனால் இப்போது முதல்வருக்கு லண்டனி இருந்து மருத்துவர்!!! உங்கள் கருத்துதான் எனக்கும் தோன்றியது. சரி அந்த மருத்துவருக்கு ஃபீஸ் குறைவாகவா இருக்கும்? மருத்துவச் செலவு யாருடையது??!!!
இங்குள்ள மருத்துவர்களின் நிபுணத்துவம் கேள்விக்குறியாகும் போது நம்மைப் போன்ற சாதாரண மக்கள் இந்த மருத்துவர்களிடம் தானே மருத்துவம் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்போ நம்மளையும் லண்டன், அமெரிக்கா சிங்கப்பூர் போய் சிகிச்சை செய்துக்கோங்கனு அர்த்தமா இல்லை நமக்கும் இப்படி வெளிநாட்டு நிபுணர்கள் வருவார்களா??!! எனன்வோ போங்க...
கீதா
இந்த ஆஸ்பத்திரி வருகைலாம் கொஞ்சம் விநோதமா இருக்கு. எல்லோரும் 2ம் ஃப்ளோர் போயிட்டு வர்றதையும், அமைச்சர்கள் சொல்வதைக் கேட்டுவிட்டு வர்றதையும் பார்த்து கொஞ்சம் வித்யாசமா இருக்கு. 'என்னவோ நடக்குது.. மர்மமா இருக்குது.. ஒண்ணுமே புரியல உலகத்துல'
ReplyDeleteயப்பா ஆள வுடுங்க. அய்யா மதுரை தமிழா நான் ஆள விடுங்கன்னு சொல்லலை. அதனால தயவுசெஞ்சி ஆள வுடுங்க
ReplyDeleteஹா...ஹா... செம...
ReplyDeleteஆளை விடுங்க... அம்மா குத்தமாயிடும்... அப்புறம் மன்னை சாதிக் ஆத்தா, அம்மான்னு திட்டி காருக்குள்ள இருந்து பேசி முகநூலில் போடுவார்....