Wednesday, October 5, 2016



கவிஞர் சினேகன் ஜெயலலிதா பற்றி எழுதிய கவிதைக்கு போட்டியாக  வந்த கவிதை  இது Eliud Rajkumar Simon poetry about jayalalithas health


அம்மா என்னம்மா ஆச்சு ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!

கண்ணுறங்க நேரமின்றி கணபொழுதும் சம்பாதிச்சீங்க,
எங்க தேவை என்னான்னு கேக்காம போனீங்க,
எப்போதும் மக்களதான் மாடாத்தான் மதிச்சீங்க,
உடல் நலம் பாக்காம ஏம்மா இப்படி சம்பாதிச்சீங்க?

அம்மா என்னம்மா ஆச்சு ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!


பொதுவாழ்வு போதுமுன்னு
சுயவாழ்வு வாழ்ந்தீங்க,
தமிழக நலனுக்கு டாஸ்மாக் தந்தீங்க,
எத்தனையோ போராட்டம்
எல்லாத்தையும் தோத்தீங்க,
காலத்தின் வெள்ளத்தில்
காகித கப்பலாய் ஆனீங்க,

அம்மா என்னம்மா ஆச்சு ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!

துஞ்சாமல் அஞ்சாமல்,
துணிவோடு கொள்ளையடிச்சீங்க,
இஷ்ட மக்களை தூசி போல் கடந்தீங்க,
அரசியல் போர்களத்தில் அற்பமாய் நின்னீங்க,
அகிலமே எதிர்த்தாலும் காசால
நீங்கதானே வென்றீங்க,

அம்மா என்னம்மா ஆச்சு ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!

பொய்யோடும்,புழுகோடும் அடியெடுத்து வச்சீங்க,
வெறுப்பு எனும் மந்திரத்தால் அனைவரையும் பகைச்சீங்க,
மறதி யின் பெண்ணுருவாய் ஊர்சிரிக்க பிறந்தீங்க,
உங்கள் நலம் பாதுகாக்க ஏம்மா நீங்க மறந்தீங்க?

அம்மா என்னம்மா ஆச்சு ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!

யார்யாரோ எதேதோ தகவல்கள் தாராங்க,
இருதயம் வெடிப்பது போல் பயமுறுத்தி போறாங்க,
நன்றியுள்ள உலகமெல்லாம் நக்கலா சிரிக்குதம்மா,
ஒவ்வொரு நாழிகையும் விலைவாசி குறையுதம்மா,

அம்மா என்னம்மா ஆச்ச் ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!

தலகோதி தட்டித் தர விந்தியா அம்மா இல்ல,
எத்தனையோ தெய்வங்கள் எதுக்குமே உயிரில்ல,
யார் கண்ணு பட்டுச்சோ யார நானும் குத்தஞ்சொல்ல?
ஆறுதலா ஒரு வார்த்தை
சொல்ல இங்க யாருமில்ல,

அம்மா என்னம்மா ஆச்சு ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!

நீங்க செஞ்ச பாவங்கள் உங்களுக்கு தெரியலயா?
நாங்க படும் பாடு அந்த கடவுளுக்கு தெரியலயா?
நீங்க மட்டும் எங்களுக்கு தீர்ப்புக்காக வேணுமம்மா,
நீங்க இல்லா உலகத்துல
உச்ச நீதி மன்ற தீர்ப்பு தருவது எப்படியம்மா?

அம்மா என்னம்மா ஆச்சு ஒங்களுக்கு?
நீங்க வேணும்மா எங்களுக்கு!

பயமாயிருக்குமா எங்களுக்கு,
சீக்கிரம் வாங்கம்மா கோர்ட்டுக்கு!

பேஸ்புக்கில் இதை பகிர்ந்தவர் Eliud Rajkumar Simon  

கவிஞர் சினேகன் எழுதிய கவிதையை படிக்காதவர் இந்த பதிவை பார்க்கவும்
பொய்மூட்டை கவிஞர் சினேகன்
http://avargal-unmaigal.blogspot.com/2016/10/snehan-poetry-about-jayalalithas-health.html

அன்புடன்
மதுரைத்தமிழன்

05 Oct 2016

7 comments:

  1. வணக்கம்.

    கவிஞருக்கு வாழ்த்துகள்

    உவகை அழுகை.

    நன்றி.

    ReplyDelete
  2. நல்ல கவிதை...
    முகநூலில் வாசித்தேன்... இங்கும் வாசித்தேன்...

    ReplyDelete
  3. hi man this one is not in good taste

    ReplyDelete
  4. hi man this one is not in good taste

    ReplyDelete
  5. ஹஹஹஹஹ் நல்ல நக்கல் கவிதை. ஏட்டிக்குப் போட்டி!! சபாஷ் சரியான போட்டினு சொல்லலாமோ....

    எங்கள் இருவரின் கருத்தும்,..

    ReplyDelete
  6. உண்மையை எடுத்துரைக்கும் நயமான கவிதை ...

    ReplyDelete
  7. நல்லதொரு போட்டி....

    ஆனா இன்னும் கொஞ்சம் நாளுக்கு இதே மாதிரி தான் இருக்கும்போல இருக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.