உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, October 4, 2016

பொய் மூட்டை கவிஞர் சினேகன்பொய் மூட்டை கவிஞர் சினேகன் Snehan poetry about Jayalalitha's Health

முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலம் சரியில்லை  என்பதைவிட ஒரு பெண்ணிற்கு உடல் நலம் சரியில்லை என்ற முறையில் பார்க்கும் போதுதான் எனக்கு அது மிகவும் மனவருத்ததை தருகின்றது.காரணம் மிகவும் செல்வாக்கு பெற்ற பெண்மணியாக இருந்தாலும் உடல்நிலை சரியில்லாத போது அருகில் இருந்து கவனித்து கொள்ள ஆள் இல்லாத அனாதையாகவே அவர் இருக்கிறார் அவரை சுற்றி பிணம்திண்ணி கழுகுகள்தாம் இருக்கின்றன. அதனால்தான் என்னவோ ஜெயலலிதா மிகவிரைவில் குணமாகிவிட வேண்டும் என நினைக்கும் ஒருவரில் நானும் ஒருவனால இருக்கிறேன் அப்படி என்னைப் போல நினைப்பவர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.


ஆனால் எதிர்பார்ப்புகளை மனதில் வைத்து  தனக்கு கிடைத்த வரமாகிய தமிழை விபசாரத்திற்கு உடன்படுத்துவது போல இந்த கவிஞர் சினேகன் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிட்டு முகத்தை சோகமாக்கி ஒரு கவிதையை பாடி ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார்.


இந்த அம்மாவிற்க்காக இப்படி உருகுபவர் தன் சொந்த அம்மாவிற்க்காக இப்படி உருகி ஒரு கவிதை கூட எழுதி இருக்காமாட்டார் என்பது நிச்சயம்.

எனக்கு இந்த காணொளியை பார்க்கும் போது ஒரு வித அருவருப்புதான் வருகிறது இந்த கவிஞர் இப்படி வெளியிடுவதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைத்து இருக்கலாம் என என் மனம் கருதுகின்றது

இணைய வலம்  வரும் போது கண்ணில் பட்ட தகவல் :
ராம்குமார் பிரேதப் பரிசோதனைக்கு தனியார் மருத்துவரை அனுமதித்தால் அரசு மருத்துவர்களின் நம்பகத்தன்மை பாதிக்குமென வாதாடிய தமிழக அரசே... முதலமைச்சரை தனியார் மருத்துவமனையில்  அனுமதித்திருப்பது, அரசு மருத்துவர்களின் நம்பகத்தன்மையைப் பாதிக்கவில்லையா?


அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments :

 1. மிகவும் சரியாக எழுதியுள்ளீர்கள். எந்த மருத்துவமனை சென்றாலும், யார் நோயுற்றாலும் வருந்துகின்றோம். இது இயல்பு. அதீதமானவையெல்லாம், நடிப்போ, எதிர்ப்பார்ப்போ அல்லது ஏதோ ஒன்றே.

  ReplyDelete
 2. இதை நீங்க பாத்து - கேட்டு வேற தொலைச்சிங்களா ? போங்க.. டெட்டோல் போட்டு ஒரு குளியல் போடுங்க.

  ReplyDelete
 3. நல்லவேளை இந்த கருமத்தை நான் பாக்கலிங்கோ !!

  நன்றி
  M. செய்யது
  Dubai

  ReplyDelete
 4. ஆரம்பமே சரியில்லையே!!! அதான் அந்தக் கவிஞர்....கேவலமாக இருக்கிறது. ..

  இணைய வலச்செய்தி செம கேள்வி!!! நறுக்குனு கேட்டுருக்காங்க..
  கீதா

  ReplyDelete
 5. சரியாக சொல்லியிருக்கிறீர்கள்!

  ReplyDelete
 6. பாதிக்கப்பட்டவன் எதிரி என்றாலும் வருத்தப்படுவோம்...
  ஆனால் இப்படி நடிக்க மாட்டோம்....

  வைரமுத்து சொந்த தாய்க்கு பாடியது போல் இவர் இந்த தாய்க்கு பாடியிருக்கார்... இதில் சோகமாய் முகம் வேறு... எப்பா சாமிகளா நடிச்சது போதும்...

  ReplyDelete
 7. hi man snehans poem is appealing really

  ReplyDelete
 8. :( என்ன சொல்வது.... இப்படி நிறைய காணொளிகள் வருகிறது இப்போது - பார்க்கும்போதே வெறுப்பாக இருக்கிறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog