ஜெயலலிதாவை செயல் இழக்க செய்த சதிதான் அவரின் உடல்நலக் குறைவிற்கு காரணமா?
doubt about jayalalitha's health issue
அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் தங்களின் செல்வாக்கை தக்க வைக்கவும்
, தாங்கள் செய்யும் செயல் திட்டங்களுக்கு எதிராக செயல்படும் மக்கள் தலைவரை செயல் இழக்க செய்யவும்
சதிகளில் ஈடுபடுவது காலகாலமாக உலகின் பல பகுதிகளில் நடைபெறும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது என்பதை வரலாற்று
செய்திகளை படிப்பவர்கள் நன்கு அறிவார்கள்.
இதை இங்கு நான் ஏன் சொல்லுகிறேன் என்றால் இது போல சிலர் செய்யும் சதியால்தான் ஜெயலலிதாவின்
உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்குமோ என நான் சந்தேகிக்கிறேன். எனது சந்தேகம் உண்மையாகவும் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம் அதற்கு
காலம்தான் பதில் சொல்லும்.
ஜெயலலிதா ஒரு நடிகையாக வாழ்க்கையை துவங்கினாலும் இன்றைய தேதி வரையில் யார் ஏற்றுக்
கொண்டாலும் இல்லையென்றாலும் அவர் மிகவும் பவர் புல்லாக உள்ள தலைவர்களில் ஒருவர். அதனால்தான் அலை
என்று ஒரு போலி அலையை உருவாக்கி அதிகாரத்தை பிடிக்க முயற்சி செய்த போது அந்த அலை தமிழகத்தில்
எந்த வித பாதிப்பும் ஏற்பாடமல் பார்த்து அந்த அலையை சுத்தமாக ஒன்றுமில்லாமல் செய்து,
தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்தினார். தனது அதிகாரப்
பசிக்காக குஜராத்தில் அவர் நடத்திய நிகழ்வுகளை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது அதுமட்டுமல்லாமல்
தனக்கு தலைவராக இருந்து வழிகாட்டிய
மற்றும் உதவிய பல தலைவர்களை ஓரம்கட்டி இப்போது கட்சியில் யாரும்
அசைக்கமுடியாதவாறு அமர்ந்துவிட்டார்.
இப்படி அதிகாரப் பதவியில் அமர்ந்துவிட்டாலும் தன் செயல் திட்டங்களை அவ்வளவு எளிதாக
பாராளுமன்றத்தில் நிறைவேற்ற அவரால் முடியவில்லை. அதற்கு
அவருக்கு ஜெயலலிதாவின் முழு ஆதரவு அவருக்கு தேவைப்படுகிறது ஆனால் அது அவருக்கு அவ்வளவு
எளிதில் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. தான் நினைத்ததை சாதிக்க
முடியவில்லையே என்ற அவரின் கோபமாக மாறி இருக்கலாம்.மேலும் தமிழகத்தில்
ஜெயலலிதா இருக்கும் வரை தனது கட்சிக்கு செல்வாக்கு வளர வாய்ப்பில்லை என்று அவரும் கட்சி
தலைவரும் கருதி இருக்கலாம்.அவர்கள் கட்சி வளர தமிழகத்தில் மத
துவேஷத்தை வளர்த்து தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சிதாலும் அதை ஜெயலலிதா மிக
எளிதாக அதை தகர்த்துவிடுகிறார்
அண்டை மாநிலமான கர்நாடகவில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்த முயற்சியிக்கும் போது
காவிரி பிரச்சனையில் கோர்ட் மூலம் தீர்வு காண முயற்சிப்பதன் மூலம் ஜெயலலிதா அவர்களுக்கு
தடைக் கல்லாக இருக்கிறார். இப்படி ஜெயலலிதா செயல்படுவதால் அங்கு வரும்
தேர்தலில் அந்த கட்சிக்கு பலத்த அடி ஏற்படும்.
மேலும் நாடு முழுவதும் ஒரே வரிக் கொள்கையை ஏற்படுத்த தீர்மானம் கொண்டு வந்த போது
அதை எதிர்த்த ஒரே முதல்வர் ஜெயலலிதாதான்.
ஊடகங்களின் மூலம் ஜெயலலிதாவுடன்
நட்புடன் இருப்பதாக வெளிக்காட்டினாலும் உள்ளுக்குள் இருவரிடமும் புகைச்சல்தான் அதிகம்.
காங்கிரஸை மிக எளிதாக சமாளித்தாலும் இந்த ஜெயலலிதாவுடன் நட்புடன் இருப்பதாக
காட்டிக் கொண்டாலும் அவரை சமாளிக்க பெரும் கஷ்டப்படுகிறார் என்பதுதான் உண்மை.
மேலும் மேலை நாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக பல திட்டங்கள் தீட்டி செயல்படுத்த
நினைத்தாலும் அவர் முட்டுக்கட்டையாகவே இருக்கிறார். அதானல் அவரை
செயல் இழக்க செய்துவிட்டால் எல்லாம் மிக எளிதாக முடிந்துவிடும் அல்லவா? அதனால் அவர்கள் சதித்திட்டங்களை தீட்டி ஜெயலலிதாவை உடல் நிலையை குலைக்க செய்து இருக்கலாம்
என நான் சந்தேகப்படுகிறேன்
இந்த சதித்திட்டதின் படி ஜெயலலிதாவை நெருங்கி இருக்கும் குடும்பத்தாரை ஒரு பெரிய
விலைக்கு வாங்கி அவர்களுக்கு பல எதிர்கால வாக்க்குறுதிகள் கொடுத்து அவர்கள் மூலம் ஜெயலலிதாவிற்கு
வழக்கமாக கொடுக்கும் மருந்துகளுக்கிடையே அவரின் உடல்நிலைக்கு கேடுவிளைவிக்கும் மருந்துக்களை
கொடுத்து இருக்கலாம். அதன் பின் சாதாரண காய்ச்சல் காரணமாக ஹாஸ்பிடலில்
சேர்ந்தாக சொல்லி படிப்படியாக அவர் உடல்நிலை மிகவும் பாதித்து இருக்கிறது என்று மக்கள்
மனதில் விதைக்க செய்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவிற்கு உடனடியாக
ஏதாவது நேர்ந்தால் அது தங்களுக்கு எதிராக முடியும் என்பதால் இப்படி செய்வதாக நான் சந்தேக்கிறேன்..
இங்கு மிக முக்கியமாக ஒன்றை குறிப்பிடவிரும்புகிறேன். ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடல் சேர்ந்து சிகிச்சை பெற்று வருவதை
அறிந்த சு.சுவாமி உடனே ஜெயலலிதா சிங்கப்பூர் சென்று சிகிச்சை
பெற வேண்டும் என்று சொன்னார் அதை கேட்ட பலர் நகைத்தனர் சுவாமி சொல்கிறார் என்றால் அதில்
பல விஷயங்கள் உள்ளடங்கி இருக்கும். தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் என்று அது போலதான் என்னதான் ஜெயலலிதாவை எதிர்த்து
வந்தாலும் தன் இனத்தில் உள்ள ஒரு செல்வாக்கு உள்ள பெண்மணிக்கு ஏற்படும் தீங்கை அவரால்
அறிந்து பேசாமல் மனதில் வைக்க முடியாமல் இப்படி அவர் வெளிப்படுத்தி இருக்கலாமோ என சந்தேக்கிறேன்.இந்திய அதிகாரம் நினைத்தால் இங்குள்ள ஹாஸ்பிடல் மூலம் தாங்கள் நினைக்கும் காரியத்தை
சாதிக்க முடியும் ஆனால் சிங்கப்பூர் மற்றும் மேலை நாட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தால் இந்திய
அதிகாரத்திற்கு அந்த நாட்டு ஹாஸ்பிடல் அடி பணியாது என்பதால் ஜெயலலிதாவிற்கு இந்திய
ஹாஸ்பிடலில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது போலத்தான் தோன்றுகிறது இதற்கு சில வெளிநாட்டு
டாக்டர்களை வைத்து நாடகம் நடத்துவது போலத்தான் எனக்கு சந்தேகம் வருகிறது,
அதுமட்டுமல்லாமல் தாங்களுக்கு ஆதரவாக செயல்படும் கவர்னரை இந்த சமயத்தில் தற்காலிக
கவர்னராக அமர்த்தி இருப்பதும் சந்தேகமாகத்தான் உள்ளது
இப்படி பலரின் மனதில் சந்தேகங்கள் எழுந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் நடக்கும் நிகழ்வுகளை
பார்த்து கொண்டிருக்கிறார்கள் பல எதிர்கட்சி தலைவர்கள் காரணம் ஜெயலலிதாவிற்கு ஏது நடந்தாலும்
அதனால் தங்கள் கட்சிக்கு பலன் கிடைக்கும் என்பதால்தான். அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அவர் உடல் நிலை சரியில்லாத பொழுது அவரை பற்றி
விசாரிக்க தவறினால் மக்களிடம் எதிர்மறையான எண்ணம் ஏற்ப்பட்டுவிட்டு தங்க்ளை எந்த விதத்திலும்
பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்று எண்ணியே பல கட்சிதலைவர்களும் ஹாஸ்பிடல் சென்று
ஜெயலலிதாவை பார்க்க முடியாவிட்டாலும் அவரை பற்றி உடல் நலம் விசாரித்து வருகின்றார்கள்
மருத்துவமனை வெளியிடும் அறிக்கைகள் வெளிப்படையாக இல்லாததால் இப்படி மனதில் பல ஐயங்கள்
சந்தேகங்கள் பலரின் மனதில் எழுதுவது இயல்பே .இது
எல்லாம் என் மனதில் எழும் சந்தேகங்களே.. இந்த சந்தேகங்கள் சந்தேகமாகவே
இருந்துவிட்டு போகட்டும் ஆனால் அது உண்மையாக ஆகிவிடாமல் ஜெயலலிதா அவர்கள் பூரண குணம்
அடைந்து வழக்கம் போல சிங்கமாக உலா வர வாழ்த்தி பிரார்த்திக்கிறேன்.
விகடனில் வந்த இந்த செய்தியை படித்து பாருங்கள். தங்களுக்கு ஏற்றவாறு செயல்படுபவர்களை காப்பாற்ற அவர்கள் மீதே குற்றம் சாட்டுவது
போல செய்திகளை கசியவிட்டதை இதைதான் சதிதிட்டம் என்பது..... இங்கே
பலர் பலியாடுகளாக ஆக்கப்படுகிறார்கள்
.. |
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி : ஊடகங்களில் வரும் செய்திகளை , மற்றும் சமுக வலைத்தளங்களில் வந்த செய்திகளை படித்ததன் விளைவாக என் மனதில்
எழுந்த ஐயமே இந்த பதிவு. அவதூறு செய்திகளை பரப்புவது இதன் நோக்கமல்ல
பயங்கர சந்தேகமா இருக்கே.....!
ReplyDeleteஅப்படி இருக்காது என சொல்ல முடியாத சந்தர்ப்பங்களும் சூழ்னிலைகளும் இரத்த உறவென பதறித்துடித்து தட்டிக்கேட்க யாருமில்லாத நிலையுமாய் ஒரு இரும்புப்பெண்மணியின் சரித்திரம் இப்படியும் முடிய வேண்டுமா?
ReplyDeletebro
ReplyDeleteby this time central beurou of investigation .intel;ligence
would have knocked your doors for investigations....
என்னப்பா இது புதுசு புதுசா செய்தி வருது....பயங்கரமா இருக்குதே இந்த சந்தேகம்..
ReplyDeleteநல்ல சந்தேகம்தான்!
ReplyDelete